நெருப்பு நரி 3.5 வெளியாகிவிட்டது

நாள்தோறும் உலகெங்கும் உள்ள பல கோடி கணினிகளில் பயன்படுத்தப்படும் நெருப்பு நரி @ Firefox உலவியானது தனது புதிய பதிப்பான 3.5 ஐ வெளியிட்டுள்ளது. இதன் கடந்த பதிப்பு 3.0.11.

இதன் 2.0 பதிப்பில் ஒரு இணையப் பக்கத்தை திரையில் காண்பிப்பதற்கு 18,148 மிசெ ஆனதாம். ஆனால் 3.5 பதிப்பில் அதே பக்கத்தை திரையில் தோற்றுவிப்பதற்கு 1,524 மிசெ போதுமானதாம்.

கூகிள் குரோமில் (Google Chrome) அறிமுகப்படுத்தப்பட்ட 'யாருக்கும் தெரியாமல் ரகசிய உலவல்' @ Incognito என்கிற வசதியை இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரில் ப்ரைவேட் ப்ரவுசிங் மோட் @ Private Browsing Mode என கொண்டு வந்தனர். அதே வசதி 3.5ல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை மூலம் கணினிப் பயனரின் எந்த குக்கீஸ், வரலாறு, பயனர்பெயர், கடவுச்சொல் எதையுமே உலவியானது கணினியின் வன்வட்டில் பதிந்திடாது -
உலவியின் பக்கங்களை மூடியவுடன், தானாக அனைத்து குக்கிஸ், பாஸ்வேர்ட் எல்லாம் அழிக்கப்பட்டுவிடும்.



டேப் (Tab) வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 3.0 பதிப்பின் Javascript வேகத்தைக் காட்டிலும் 8 மடங்கு அதிகரிக்கப்பட்ட வேகத்தில் இயங்குமாம். மால்வேர், ஸ்பைவேர் (Malware, Spyware) - இவை போன்ற தீங்குகளைப் பரப்பும் தளங்களை நெருப்பு நரி 3.5 மூலம் திறந்தால் கண்ணெதிரே எச்சரிக்கைச் செய்தியைக் (warning message) காண்பிக்கும். இதன் மூலம் கணினியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

இணையம் மூலம் பணப் பரிவர்த்தனை (online money transaction) செய்பவர்கள் அடிக்கடி ஏதேனும் தவறான தளங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு பண இழப்பைச் சந்தித்திருப்பார்கள். நம்பிக்கையான தளத்தைப் போல காட்சியளிக்கும், போலியான தளங்களை இனம் கண்டறிந்து ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு முறை நெருப்பு நரி சங்கத்து ஆட்கள் இதன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். ஒரு நாளைக்கு 48 முறை இந்த மேம்படுத்துதல் நடந்துகொண்டிருக்கும்.

யூட்யூப் வீடியோக்களைப் பார்வையிடுவதற்காக Adobe Flash Palyer நிறுவி அதன் மூலம் பார்வையிட்டு வந்திருந்தோம். நெருப்புநரி 3.5 ஆனது புதிய HTML 5.0 பதிப்பை ஆதரிப்பதால், அதற்குரிய புதிய வீடியோ டேக்ஸ் சேர்க்கப்பட்டிருப்பதால் - எந்த ப்ளேயரும் நிறுவப்படாமல் யூட்யூப் போன்ற வீடியோக்களை உலவியில் நேரடியாகப் பார்வையிடலாம்.

Firefox browser's latest version 3.5 is released today. Its has lots of new features.



Private Browsing
Password Manager
Awesome Bar
Super Speed
Anti-Phishing & Anti-Malware
Session Restore
One-Click Bookmarking
Easy Customization
Tabs
Instant Web Site ID

Download Link : Click here to download Firefox 3.5

உண்மை கண்டறிதல் சோதனை : Skype உரையாடலில்

Skype மென்பொருளைப் பயன்படுத்தி உலகெங்கும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், நாள் தோறும் இலவச இணைய அரட்டை (Voice conference) அடிக்கிறார்கள். அதில் எத்தனை பேர் உண்மை பேசுகிறார்கள்? என்பது கேள்விக்குறியே.

பொய் பேசுபவர்கள் யார்? என்பதை அறிவதற்கு ராணுவம், காவல்துறையினர் லைடிடக்டர் @ Lie Detector என்கிற கருவியைப் பயன்படுத்துவார்கள். பொய் பேசுபவர்களுக்கு இயல்பாகவே மன அழுத்தம் @ Stress அதிகமாக இருக்கும். அவர்களுடைய ஸ்ட்ரெஸ் அதிகரித்து நாடித்துடிப்பிலிருந்து, இதயத்துடிப்பு (heart beat) வரை அதிகரித்திருக்கும். அதன் அலைவரிசையை ஒரு படமாக (chart) வரைந்தால் அது காட்டிக்கொடுத்துவிடும்.

குரல் நாண்களில் இருந்து வெளிப்படும் ஒலியை இந்த மென்பொருள் கண்டறிந்து ஒருவர் பொய் பேசுகிறாரா? என்பதை அறியத் தருகிறது.

Skype மென்பொருளையும் , இந்த உண்மை கண்டறிவதற்கான மென்பொருளையும் நிறுவிவிட வேண்டும்.

ஸ்கைப் வாயிலாக உரையாடல் நிகழும்போது, முதல் 10 வினாடிகளில் இந்த மென்பொருள் சில நடவடிக்கைகளை எடுக்கும். எதிர்முனையில் இருந்து பேசுபவரின் மன அழுத்தம் @ Stressஸை கணக்கில் கொண்டு கணினியின் திரையில் ஒரு மீட்டர் காண்பிக்கப்படும். அதில் தெரியும் Pointer ஆனது ஒருவர் பொய் பேசுகிறாரா? உண்மை பேசுகிறாரா? என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.

Voice Stress Analyser for Detecting Lies Download Now

மறைபொருள் : வித்தியாசமான முடிவு - குறும்படம்

மறைபொருள் : வித்தியாசமான முடிவு - குறும்படம் -
maraiporul updated - tamil short film


Via : http://www.youtube.com/user/worldpeace1947

இது போன்ற 275+ தமிழ் குறும்படங்களைக் காண இங்கே வாருங்கள் :
http://sfintamil.blogspot.com

மைகேல் ஜாக்சன் - குழந்தைகளின் படங்கள்

மைகேல் ஜாக்சன் இவரது குழந்தைகளின் படங்கள்.
சிறுவயது படங்கள். கலைக்குடும்ப படங்கள்

மேலதிக படங்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்.

கெட்டுப்போன பிளாப்பி டிஸ்க்குகளை எப்படியெல்லாம் பயன்படுத்துறாங்க

Creativity in Floppy Diskettes




உங்கள் வலைப்பூ எந்த அளவுக்கு பிரபலமானது?

வலையுலகம் என்பது நமது தமிழ் மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகமானது. 2008,2009ம் ஆண்டுகளில் வலைப்பூக்களின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பெரும்பாலானோர் ப்ளாக்கர், வேர்ட்ப்ரஸின் (Blogger, Wordpress) இலவச சேவையைப் பயன் படுத்துகிறோம். ஒரு சிலர் தனியாக டொமைன் @ Domain வைத்திருக்கிறோம்.

பலர் பின்னூட்டத்திற்கு (comments) அடிமைகளாகவும் ஆக்கப்பட்டு இருக்கிறோம். புதிய நண்பர்கள் நாள் தோறும் வலைப்பூக்கள் மூலம் கிடைக்கின்றார்கள். நமது வலைப்பூவை ஒவ்வொரு நாளும் பல்வேறு நபர்கள் பார்வையிடுகின்றனர் (visit). ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளைப் போடுபவர்களும் வலையுலகில் உண்டு. வலைப்பூ ஆரம்பித்து பதிவே போடாமல், பின்னூட்டங்கள் மட்டுமே இடும் பின்னூட்டப் புயல்களும் உண்டு. பின்னூட்டம், வலைப்பூ இரண்டும் இல்லாமல் - வலையுலகை வலம் வரும் மேய்ச்சல் மன்னர்களும் உண்டு.

How Popular your web site / Blog?

இவர்கள் மத்தியில் நமது வலைப்பூவின் செல்வாக்கை எதை வைத்து நிர்ணயிப்பது? நமது வலைப்பூ எந்த அளவுக்குப் பிரபலமாக உள்ளது. பிரபலபதிவர்கள் பட்டியலில் நாம் உள்ளோமா? இதை எப்படி அறிவது?

http://www.popuri.us தளத்தைத் திறந்து அதில் உங்கள் வலைப்பூவின் முகவரியை உள்ளீடு செய்யவும். அதில் 12 விதமான புள்ளிவிவர அறிக்கைகள் நொடியினில் கிடைக்கும். கூகிள் பேஜ் ரேங்க், அலெக்ஸா ரேங்க் (Google Page Rank, Alexa Rank) இது மாதிரி மொத்தம் 12 அறிக்கைகள் (Reports). ஒரு பிரபல பதிவரின் வலைப்பூ முகவரியை உள்ளீடு செய்து அந்த ரிப்போர்ட்டை மாதிரியாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வலைப்பூவின் முகவரியையும் உள்ளிட்டு அதன் அறிக்கையை ஒப்பிட்டு பாருங்கள். கூகிள் பேஜ் ரேங்க் (Google Page Rank) ஆனது 0 ஆக இருந்தால் அது புதிய வலைப்பூ எனக் கருதப்படும்.


http://www.popuri.us is web site is used to check the popularity of your blog / web site.
Factors Considered in PopURI.US are
  • Google Page rank
  • Alexa Rank
  • Compete Rank
  • Google Back links
  • Yahoo Back links
  • MSN Back links
  • Technorati Links
  • Delicious Bookmarks
  • Bloglines Subscribers

1000 முறை பார்த்தாலும் சிரிச்சுகிட்டே இருப்பீங்க

1000 முறை பார்த்தாலும் சிரிச்சுகிட்டே இருப்பீங்க -
14 கலக்கல் காமெடி வீடியோக்கள் -
The 14 Funniest clippings just Less Than half minute long





























Michael Jackson Dangerous

பாக்யராஜுக்குப் பிடித்த இணையதளம் எது தெரியுமா?


Do you want to become Celebrity of a popular magazine?

ராசுக்குட்டி - இந்த படத்தில் பாக்யராஜ் படிக்காதவராக இருப்பார். ஆனால் விதவிதமான உடையலங்காரம் செய்து வகைவகையாக புகைப்படம் எடுத்துக்கொள்வார். எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான் (curiosity)

உலகின் புகழ் வாய்ந்த வார / மாத இதழின் (magazine) அட்டைப்படத்தில் நமது புகைப்படத்தைப் போட்டு ஒரு கலக்கு கலக்குவோமா?

இது போல பல்வேறு இதழ்களின் அட்டையில் நம் புகைப்படத்தைப் போட்டு ஒரு பிரிண்டவுட்டும் (print out) எடுத்துக்கொள்ளலாம். சும்மா ஜாலிக்காகத்தான்.

http://www.magmypic.com/ தளத்தின் நம் புகைப்படத்தை ஏற்றி, எந்த இதழ் என்பதை தேர்வு செய்யவும் (மொத்தம் 33 இதழ்கள்).Save and Continue கொடுத்தால் போதும். அடுத்த பக்கத்தில் உங்கள் புகைப்படமானது, நீங்கள் தேர்வு செய்த பத்திரிகையின் அட்டையில் தயாராக வந்திருக்கும்.


அதை வலது சொடுக்கி (Right click) , கணினியில் பதிந்துகொள்ளலாம். அச்சுப்பொறியில் (Printer) அச்சடித்து வீட்டை அலங்கரிக்கலாம்.

Web site address is here : http://www.magmypic.com/

Michael Jackson Dangerous

எஸ்.எம்.எஸ். மொழி மாற்றி

உலகம் முழுவதும் எஸ்.எம்.எஸ். (SMS - Short Message Service) எனப்படும் குறுந்தகவல் பறிமாற்றம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 140 எழுத்துகள் மூலம் உலகையே திரும்பிப்பார்க்க வைத்த ட்விட்டரில் (Twitter) எஸ்.எம்.எஸ். மொழி தெரிந்தால் இன்னும் அதிக தகவலைச் சொல்ல முடியும்.

வழமையாக ஆங்கிலத்தில் நாம் தட்டெழுதும் வாக்கியங்களில் எல்லா வார்த்தைகளும் முழுமையாக சரியான ஸ்பெல்லிங் (Spelling) உடன், எல்லா எழுத்துக்களுடன் இருக்கும். ஒரு மிகப் பெரிய பத்தியை (paragraph) 140 எழுத்துகளுக்குள் சுருக்கிவிட முடியுமா?

இந்த நேரத்தில் நமக்கு உதவி செய்வதற்காக Transl8it தளம் உள்ளது. இதில் முழு நீள ஆங்கிலத்தில் அமைந்த வரிகளைக் கொடுத்து Transl8it என அழுத்தினால் அது அனைத்து வார்த்தைகளையும் எஸ்.எம்.எஸ் மொழிக்கு மாற்றிக்கொடுத்துவிடுகிறது.



இதை டிவிட்டர் (Twitter) பயன்படுத்துவபர்களும், அதிகமாக ஆன்லைன் (online) மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். வடிவில் கிடைத்த தகவல்களை உள்ளிட்டு,lingo to english எனத் தேர்வு செய்தால் முழு நீள ஆங்கில வரிகளாகவும் மாற்றிவிடுகிறது. சுருக்கெழுத்து அதாவது எஸ்.எம்.எஸ் மொழியை கற்றுக்கொள்வதற்கு இந்த தளம் பேருதவியாக உள்ளது. மேலும் பிள்ளைகளின் குறுந்தகவல் மொழியை பெற்றோர்கள் அறிந்திடவும் தளம் உதவுகிறது. இதில் இரண்டு செயலிகள் உள்ளன.

அவை. lingo to english & english to lingo

Web site address is here : http://www.transl8it.com/cgi-win/index.pl

17 வயது பெண்ணின் உயிரைப் பறித்த டிவிட்டர்

ரொமேனியா தேசத்தைச் சேர்ந்த 17 வயது பெண் Flavia Boricea. இவளுக்கு இரவு பகல் எந்த நேரமும் twitter @ டிவிட்டரில் ஆன்லைனில் இருப்பதே வேலை. டிவிட்டருக்கு அடிமையானவள் இவள். தனது குளியலறையின் பாத்டப்பில் குளித்துக்கொண்டே மடிக்கணினி @ laptop வாயிலாக தொடர்ந்து டிவிட்டரைப் பயன்படுத்தி வந்தாள். கைகளில் ஈரம் பரவி இருந்தது. லாப்டாப்பின் மின் இணைப்பும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது.

ஈரக்கையால் செல்போனைப் பயன்படுத்துவதே தவறு. பலர் இரவு முழுவதும் சார்ஜரை (charger) உபயோகித்து செல்பேசியில் சார்ஜ் ஏற்றுவார்கள். இதுவும் தவறுதான் இப்படி தொடர்ந்து தேவையில்லாமல் இரவு முழுவதும் செல்பேசியை சார்ஜில் போட்டால் அது வெடிக்கவும் செய்யும். பார்க்க படங்கள்.


செல்பேசியே @ mobile phone வெடிக்கும் என்றால் - மின் இணைப்புடன் ஈரக்கையால் கையாளப்பட்ட லாப்டாப் சும்மா இருக்குமா? தொடர்ச்சியான டிவிட்டர் பயன்பாடு - அதுவும் குளியலறைக்குள். மின்கசிவை (electric leakage) ஏற்படுத்தி இவளது உயிரைப் பறித்துவிட்டது.



இந்தப் பெண்ணின் இறப்பு குறித்த அறிக்கையில் லாப்டாப்பின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவாலோ அல்லது லாப்டாப் ஆனது பாத்டப்பில் மின் இணைப்புடன் விழுந்துவிட்ட காரணத்தாலோ - மின் பாதிப்பு ஏற்பட்டு அதனாலே இவள் இறந்துவிட்டாள் என்று கூறப்பட்டுள்ளது. ரொமேனியா மாகாண தொலைக்காட்சியிலும் இவளது இறப்பு குறித்த செய்தி ஒளிபரப்பப்பட்டது. குளியலறைத் தொட்டியில் அவள் இறந்து கிடந்ததாகவும், அருகில் லாப்டாப்பும் கிடந்ததாகவும் பெண்ணின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

நீதி :
டிவிட்டரைப் பயன்படுத்துங்கள் - தவறில்லை. ஆனால் குளித்து முடித்து ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்தவும். இதைச் செய்யுங்கள் / அல்லது அதைச் செய்யுங்கள். குளியலையும், டிவிட்டரையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டாம்.

தொடர்புடைய மற்றும் ஒரு பதிவு from Cybersimman's Blog : உயிர் காத்த டிவிட்டர்.

Source : inquisitr.com

லக்கிலுக்கின் சாதனையைத் தொடர்ந்து...

லக்கிலுக்கின் சாதனையைத் தொடர்ந்து...

Luckylook ஒரு இமயமலை. அவரது சாம்ராஜ்யம் விரிந்து பரந்து கிடக்கிறது. 2006ம் ஆண்டு ஏப்ரலில் இருந்து எழுதி எழுத்துலகின் இமயமலையாகத் திகழ்கிறார். 12 லட்சம் Impression களைக் கடந்து பெடல் எடுக்கிறார். 300 follower களைத் தொடவிருக்கிறார்.அலெக்சாவில் (Alexa Rank) தனது ரேன்கினை ஒரு லட்சத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்.

இரண்டு நூல்கள் எழுதி இருக்கிறார் (இது வெளியே தெரிந்தது). தெரியாமல் அவர் செய்த சாதனைகளுக்குப் பஞ்சமில்லை.

வலையுலக லினக்ஸ் பிரியர் shirdi.saidasan@gmail.com கடந்த மாதம் தனது பதிவில் Top 10 தமிழ் InfoTech வலைப்பூக்கள் - என அலெக்சாவின் ரேன்க்கை (Alexa Rank) மையமாக வைத்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

அதில் நம்ம வலையுலக ஜாம்பவான் அருமை நண்பர் திரு. பிகேபிக்கு அடுத்து எனது தமிழ்நெஞ்சம் தளத்தை அவர் குறிப்பிட்டிருக்கிறார். இரண்டாவது இடத்தில் தமிழ்நெஞ்சமாம்.

சில நாட்களுக்கு முன்னர் அலெக்சாவின் ரேன்கின் அடிப்படையில் பதிவுலக நண்பர் லக்கியார் அவர்கள் ஒரு லட்சம் என்கிற எண்ணிக்கைக்கு உள்ளே ரேன்க் எடுத்திருக்கிறார்.. நான்கு ஆண்டுகளாகப் பதிவெழுதி வரும் அவருக்கு எனது வாழ்த்துகள்.

தமிழ்நெஞ்சம் தளத்தை செதுக்கி வந்தேன். ஆதலால் எனது தமிழ்நெஞ்சம் தளமும், இப்போது டாப் 10ல் இரண்டாவது இடத்தைத் தொட்டிருக்கிறது. லக்கியாருக்கு இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன்.

எனது ஆங்கில வலைப்பூ - புகைப்படத்தொகுப்பு - மின்னஞ்சலில் பெற்ற படங்கள் - http://amazingphotos4all.blogspot.com ஆனது அடுத்த 10 நாட்களுக்குள் / ஒரு மாதத்திற்குள் (!.!!.!!!) அலெக்சாவின் முதல் ஒரு லட்சத்தைத் தொடவிருக்கிறது என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

Current Rank for Amazingphotos4all blog is 100,666

http://alexa.com/siteinfo/amazingphotos4all.blogspot.com -- 100,666


குறிப்பு1 :

இந்த வெற்றியை லக்கிலுக் மற்றும் அதிஷா இருவருடன் பகிர்ந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன்.

குறிப்பு2 :
நான் எழுதி வரும் சில பதிவுகள் சென்னையைச் சேர்ந்த வளர்தொழில் பதிப்பகத்தாரின் 'தமிழ்கம்ப்யூட்டர்' இதழில் கடந்த நான்கு இதழ்களில் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் நமது வலையுலக இன்போடெக் எழுத்தர்களான மு. கார்த்திகேயன், வேலன்.ஜி, ஆர்.வடிவேலன், சூர்யா கண்ணன், கார்த்திக்பாபு ஆகியோரின் பல பதிவுகளும் தமிழ்கம்ப்யூட்டர் இதழில் வெளியாகி வருகிறது. அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இணைய உளவாளி @ ஒற்றன் @ Spy

இணைய உளவாளி

இணையம் என்னும் கடலில் எத்தனையோ இணையதளங்கள் (web sites). ஒவ்வொரு இணையதளத்துக்கும் தனித்தனி உரிமையாளர்கள் (owner). ஒரு உரிமையாளருக்கு பல்வேறு இணையதளங்கள். இதில் பலர் கூகிள் நிறுவனத்தின் ஆட்சென்ஸ் மற்றும் கூகிள் அனலிடிக்ஸ் (Google Adsense, Google Analytics) உரிமமும் பெற்றிருப்பர். அதற்குரிய நிரல்களை தத்தமது தளங்களில் இணைத்துப் பயன்பெறுவர். நானும் கூகிள் அனலிடிக்ஸ், அட்சென்ஸ் இவற்றின் ஜாவாஸ்க்ரிப்ட் (Javascript) நிரல்களை எனது வலைப்பூக்களில் இணைத்து அதன் முடிவுகளை அறிந்துகொண்டிருக்கிறேன்.

http://spyonweb.com/

இணையத்தில் உளவாளி @ ஒற்றன் @ Spy - இந்த தளத்தில் ஒருவருடைய வலைப்பூ / இணையதள முகவரி / ஆட்சென்ஸின் கணக்கீட்டு எண் (Google Adsense Publisher Id) / அனலிட்டிக்ஸின் கணக்கீட்டு எண் - இவற்றில் ஏதேனும் ஒன்றை உள்ளிட்டால், ஒருவருக்குத் தொடர்புடைய பிற இணையதள / வலைப்பூக்களின் முகவரிகளை அறியலாம்.

ஒருவர் தனக்குச் சொந்தமான ஆட்சென்ஸ் கணக்கை, எத்தனை தளத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இது கூகிள் அனுமதித்த விதி. இந்த தளங்களின் செயல்பாடுகள் ஆட்சென்ஸின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டிருத்தல் வேண்டும். (Terms and Conditions) ஒரு தள முகவரியை உள்ளிட்டால், அந்த தளத்தின் உரிமையாளருக்குச் சொந்தமான பிற தளங்களை / வலைப்பூக்களை அறிந்திட இந்த ஒற்றன் @ உளவாளி @ Spy :
http://spyonweb.com/தளம் மூலம் இயலும்

அங்கே இப்போ என்ன நேரம்?

உலகின் ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒவ்வொரு நேர வித்தியாசம் (time difference) உண்டு. இங்கே எனது மாநிலத் தலைநகரில் என்ன நேரம் என்பது எனக்குத் தெரியும்.

இது போல உலகின் ஒவ்வொரு பெருநகரம், மாநிலத் தலைநகரங்களில் என்ன நேரம் ஆகிறது - என்பதை அறிவதற்கு ஒரு இணையதளம் @ web site உள்ளது. உலக நேர எந்திரம் என்பது தளத்தின் பெயர்.

தளத்தில் நுழைந்து இங்கே ஊரின் பெயரை உள்ளிட்டு, Get Time எனக் கொடுத்தால் அங்கே இப்போ என்ன நேரம் ஆகிறது என்பதை அறியலாம். மேப் @ Map போட்டும் காட்டுகிறது. நமது இருப்பிடத்தையும், வேறு இடத்தையும் கொடுத்து இரண்டு இடங்களுக்கும் இடைப்பட்ட நேரவித்தியாசத்தை @ time difference அறிவதற்கும் இந்த தளம் உதவியாக உள்ளது.



Do you want to check 'what time is it?' in a any place in the Earth, just visit http://worldtimeengine.com

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 : ஒரு முன்னோட்டம்



What if Microsoft Office... was a summer blockbuster action movie?
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 : ஒரு முன்னோட்டம்

Via : http://www.youtube.com/user/dennisaliu

Microsoft Bing தேடுபொறிக்கான விளம்பரம்

Microsoft Bing TV Commercial Ad : Microsoft Bing தேடுபொறிக்கான விளம்பரம்

இணைஞரின் வினோத அறிவிப்பு - வீட்டைக் காணவில்லை

ஒரு இணையத்தில் மேய்பவரின் வீட்டைக் காணவில்லையாம். வினோதமான அறிவிப்பு.
Building Not found : 404 Error Message

வலைப்பூவில் குறியீடுகளைக் காப்பி,பேஸ்ட்ட

வலைப்பூவில் குறியீடுகளைக் காப்பி,பேஸ்ட்ட
Inserting Special symbols into blog post - Made easy

மின்னஞ்சல் தட்டெழுதும்போதோ, வலைப்பூவில் எழுதும்போதோ சில நேரங்களில் சிறப்புக் குறியீடுகள் - அதாவது சில special symbols - இவற்றை தட்டெழுதும் அவசியம் ஏற்படும். இந்த நேரத்தில் ஏதேனும் ஒரு word processor ஐத் துணைக்கு அழைத்து அங்கே குறியீடுகளை உருவாக்கி, அதை copy செய்து வலைப்பூவின் எடிட்டரில், மின்னஞ்சலுக்கான எடிட்டரில் paste செய்வோம்.

சிறப்புக் குறியீடுகளுக்காகவே ஒரு தனி இணையதளம் உள்ளது. அங்கே நாம் அடிக்கடி பயன்படுத்தும் குறியீடுகளை அட்டவணை போட்டு பட்டியலிட்டிருக்கிறார்கள். தளத்தை திறந்து அடையாளக் குறியில் ஒரு முறை அழுத்தினாலே, குறியீடுகள் Clipboardல் ஐக்கியமாகிவிடும். மின்னஞ்சல் / வலைப்பூவிற்கான எடிட்டரில் Paste அழுத்தினால் - அது உடனே பேஸ்ட் ஆகிவிடுகிறது.

இப்போது தேவைப்படாவிட்டாலும், எப்போதாவது தேவைப்படக்கூடிய ஒரு வித்தியாசமான இணையதளம் (web site) இது.



உக்காந்து யோசிச்சு கண்டுபிடிச்ச அறிவியல் சாதனங்கள்

இவங்களுடைய புத்தாக்க சாதனைகளுக்கு அளவே இல்லைங்க.
Futuristics innovative inventions















Zip, RAR கோப்பினுள்ளே என்ன உள்ளது? ஆன்லைனின் சோதிக்க

Zip, RAR கோப்பினுள்ளே என்ன உள்ளது? ஆன்லைனின் சோதிக்க
Do you want to see what is in on the compressed file
which you want to download?


தினம்தோறும் எத்தனையோ சுருக்கப்பட்ட கோப்புகளை (compressed files) இணையம் வாயிலாக download செய்கிறோம். தரவிறக்கம் செய்தபிறகு அதை விரிப்பதற்கான (extract) சிறப்பு மென்பொருட்களைக் கொண்டு extract செய்கிறோம். இது வழக்கமாக நாம் செய்யும் ஒரு தொடர் நிகழ்வு.


இந்த சுருக்கப்பட்ட கோப்பின் உள்ளே என்ன இருக்கிறது? - என்பதை தரவிறக்கம் செய்தபிறகு பார்ப்பதனால் பல நேரங்களில் தேவையில்லாத கோப்புகளையும் தரவிறக்கிவிடும் அபாயம் உள்ளது.

ஆன்லைனில் இருந்தபடி zip,RAR கோப்பினை தரவிறக்கம் செய்யாமலேயே, நேரடியாக சோதித்து அறிவதற்காக நெருப்பு நரி(Firefox) உலாவிக்கான இந்த நீட்சியைப் (addon) பயன்படுத்தலாம். இதன் மூலம் தேவையற்ற கோப்புகளை தரவிறக்காமல் தவிர்த்துவிடலாம். நல்ல நீட்சி இது.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/5028

ப்ளாக்கரின், பிக்காசா - 1ஜிபியை மீறுவது எப்படி?

ப்ளாக்கரின், பிக்காசா - 1ஜிபியை மீறுவது எப்படி?
How to overcome 1 GB free space limit of Picasa + Blogger combination?

Blogger வாயிலாக picasaவில் படங்களை ஏற்றும் பழக்கமுடையவர்களே!. பிகாசாவின் இலவச சேவையில் அதிகபட்சமாக 1 GB அளவிற்கு படங்களை ஏற்றலாம். அதிக அளவு படங்களை வலைப்பூவில் காண்பிப்பவர்களுக்கு இந்த வரையறை சில நாட்களுக்குள் முடிந்துவிடும். இந்த 1 ஜிபி வரையறையை மீறுவது எப்படி?

வேறு ஒரு G-Mail கணக்கின் மூலம் ஒரு dummy blog உருவாக்கி, அந்த dummy blog ல் ஒரு புதிய post போடவும். அந்த புதிய பதிவில் அங்கே படங்களை ஏற்றி முடித்ததும் ஒரு script ஆனது ப்ளாக்கரின் HTML பெட்டியில் தானாக அமரும். அதைக் Cut செய்து, நமது வழக்கமான எப்போதும் பாவிக்கும் ப்ளாக்கரின் புதிய பதிவில், HTML பாக்ஸில் Paste செய்துவிட வேண்டும்.

வேறு வேறு அக்கவுண்ட் வழியாக ஏற்றி, அதை ஒரே ப்ளாக்கரின் அடுத்தடுத்த பதிவுகளில் Paste செய்து தொடர்ந்து பதிவிடலாம். இதன் மூலம் இலவசச் சேவையான 1 ஜிபி அளவை நாம் மீறிவிடலாம்.

கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.

கோப்பு வடிவங்களை மாற்ற

கோப்பு வடிவங்களை மாற்ற
Free File Conversion tool for you


ஒரு கோப்பு வடிவில் (file type) இருந்து வேறொரு கோப்பு வடிவிற்கு மாற்றுவதற்கு நிறைய இணைய தளங்களின் சேவைகள் இலவசமாக (free service) வழங்கப்படுகின்றன.

ஆனால் அவற்றின் மூலம் சில குறிப்பிட்ட வடிவ கோப்புகளை மட்டுமே, மற்றொரு வடிவிற்கு மாற்ற முடியும். கணினி என்னும் சமுத்திரத்தில் எண்ணற்ற கோப்புகள் - ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில். இதற்காக எந்த மென்பொருளையும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யாமல் கோப்பு வடிவங்களை மாற்றுவதற்காக உள்ள இணையதளம் http://www.convertfiles.com/


100+ கோப்புகளை இந்ததளம் ஆதரிக்கிறது. நம் கணினியில் உள்ள கோப்பு (அ) இணையத்தில் ஏற்கனவே எங்கோ உள்ள கோப்பு ஒன்றின் யுஆரெல் (URL), நமது மின்னஞ்சல் முகவரி, மேலும் எந்த வடிவிற்கு மாற்றப் போகிறோம் என்பதை உள்ளீடு செய்தல் வேண்டும்.

வடிவு மாற்றப்பட்ட பிறகு உங்களுக்கு வரும் மின்னஞ்சலைத் திறந்து அங்கே உள்ள லின்க்கைச் (link) சொடுக்கினால் போதும். மூன்று நாட்கள் வரை அந்த சுட்டிக்கு உத்திரவாதம் (validity) உண்டு. அதற்குள் உங்கள் கோப்புகளை தரவிறக்கம் (download) செய்துவிடவேண்டும்.

http://www.convertfiles.com/

ஐடி பொறியியல் வல்லுனர்களின் கல்லறை வாசகங்கள் !

Information Technology வல்லுனர்களின் கல்லறை வாசகங்கள். இறந்த பிறகும் ஆவியா வந்து coding போடுவாங்களோ?

Tombstones of IT Personalities

Connection Reset by Peer - He came, he saw, he logged out.
A Fatal Exception Error Has Occurred

சிலிகான் பள்ளத்தாக்கு - அமெரிக்காவில் இருந்து

Silicon Valley USA
Yahoo
Symantec
Sun

McAfee
intel
ebay
Hewlett Packard
Cisco
Borland
Apple
AMD

ஒரே நேரத்தில் வேறுபட்ட இயங்குதளங்களில் பணிபுரிய

ஒரே நேரத்தில் வேறுபட்ட இயங்குதளங்களில் பணிபுரிய

ஒரு கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை (Operating Systems) நிறுவும் முறைக்கு Dual Boot முறை என்று பெயர். இது பெரும்பாலானோர் அறிந்த ஒரு முறை. ஆனால் இதன் மூலம் ஒரு நேரத்தில் ஏதேனும் ஒரு இயங்குதளத்தை மட்டுமே இயக்க முடியும். வேறு இயங்குதளத்துக்கு மாற வேண்டும் என்றால், கணினியை Restart செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

மாயக்கணினிகள் - Virtual PC என்போம் - இது ஒரு புது முறை. இதற்கான மென்பொருட்களை நிறுவி (install) ஒரே கணினியில், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளத்தில் மாறி மாறி இயங்க வாய்ப்புள்ளது.

விண்டோஸ், லினக்ஸ் - இரண்டும் ஒரே நேரத்தில்

மேக், விண்டோஸ் - இரண்டையும் ஒரே நேரத்தில் இயக்க

இரு வேறு விண்டோஸ் இயங்குதளங்களை ஒரே நேரத்தில் இயக்க

மாயக்கணினிகள் - Virtual PC - என்போம். இந்த மென்பொருட்களை இறக்கி, நிறுவி அதன் செயல்முறை கையேடுகளை நன்கு படித்து பிறகு முயற்சிக்கவும்.


How to run more than one Operating Systems at the same time?



Windows with different flavour of Windows : http://www.microsoft.com/windows/virtual-pc/

Windows with Linux : http://www.andlinux.org/index.php

Mac with Windows : http://www.parallels.com/download/desktop/

உங்கள் கணினிக்கான ஹார்ட் டிஸ்க்குகள் -யுஎஸ்பி கருவிகள்

Desktop Hard Drives - LACIE Products


LaCie Rugged XL
eSATA 3Gb/s | Hi-Speed USB 2.0
1TB
LaCie Hard Disk MAX, Design by Neil Poulton
Hi-Speed USB 2.0
2TB
LaCie Hard Disk, Design by Neil Poulton
Hi-Speed USB 2.0
500GB | 1TB
LaCie d2 Quadra Hard Disk
eSATA 3Gbits | USB | FireWire 400 & 800
1TB
LaCie Brick Desktop Hard Drive
Hi-Speed USB 2.0
1TB (Red) | 1TB (White)
LaCie Big Disk Quadra
eSATA 3Gb/s | USB | FireWire 400 & 800
2TB

http://www.lacie.com/asia/products/range.htm?id=10033



LaCie itsaKey
USB Flash Drive

LaCie iamaKey
USB Flash Drive


LaCie DataShare
SD and MicroSD Dual USB Card ReaderLaCie CurrenKey
USB Flash Drive


http://www.lacie.com/asia/products/range.htm?id=10052

கோப்பு வடிவங்களுக்கான ஒரு தரவுத்தளம்

கோப்புகளின் வகைகளை (file types) அவற்றின் எக்ஸ்டென்ஸனைக் (extension) கொண்டு அறியலாம். உதாரணமாக MP3, JPG - இந்த மூன்று எழுத்துகளை வைத்தே ஒரு கோப்பின் தன்மையை அறிந்திடலாம்.



ஏதேனும் ஒரு குறிப்பிட்ட extension நமக்கு அந்நியத்தன்மை (unknown) வாய்ந்ததாகவும்,
அது நமது கணினியிலோ / நண்பர் அனுப்பிய மின்னஞ்சலிலோ (e-mail) இருக்கிறது.

அதன் extension நாம் இது வரை கேள்விப்படாததாக உள்ளது. இதனாலேயே இது virus என அஞ்சிவிடலாகாது. இந்த எக்ஸ்டென்ஸனைப் பற்றி மேலதிகத் தகவல்களைப் பெறுவதற்காக ஒரு தேடுபொறி (search engine) உள்ளது.

இந்தத்தளத்தைத் (web site) திறந்து அதில் எக்ஸ்டென்ஸனை மட்டும் தட்டுங்கள், enter அடிக்கவும். உடனே அதைப் பற்றிய மேலதிக விபரங்களை அறியத்தருகிறது. நல்ல வேகமாகவும் இயங்கும் தளமாக உள்ளது.

Do you want to know more details about particular file extension?

File Extension Database : http://extensionfile.net/database

யு.எஸ்.பி கருவிகளும் ஆட்டோரன் மால்வேர்களும்

AutoRun Eater for USB Flash Memory Devices

யு.எஸ்.பி கருவிகளும் ஆட்டோரன் மால்வேர்களும்

தற்போதைய காலகட்டங்களில் கணினிப் பயனர் அல்லாதோர் கூட ஒரு சிறு நினைவகக் கருவியைத் (memory device - backup storage) தன்னுடன் வைத்திருக்கின்றனர். இதை ஒரு fashion ஆகப் பாவிக்கின்றனர். இந்த நினைவக ஃப்ளாஷ் கருவியில் Autorun.inf என்னும் ஒரு கோப்பின் மூலம்தான் பல்வேறு தீச்செயல்கள் (threats) ஒரு கணினியில் இருந்து வேறு கணினிக்குப் பரவுகின்றன(spread).

இந்த Autorun.inf என்பது தானியங்கித் தனமாக சில காரியங்களை USB கருவியில் இருந்து பிற கணினிக்கு பரப்பி விடும். இதனால் பல்வேறு தகவல்கள் திருடப்படுவதற்கோ, அழிக்கப்படுவதற்கோ வாய்ப்புள்ளது.

இதைத் தடுப்பதற்காக AutoRun Eater என்கிற மென்பொருளைப் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை நிறுவிய பிறகு - அது கணினியில் ஓடிக்கொண்டே (background process) இருக்கும்.

எப்போதாவது தீங்கு விளைவிக்கக்கூடிய யுஎஸ்பி கருவியின் ஆட்டோரன் கோப்பை இது கண்டால் , உடனே அதைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்துவிடும்.




Softpedia certifies this application is 100% clean from spyware, malware, virues.

http://www.softpedia.com/get/Security/Secure-cleaning/Autorun-Eater.shtml

ஆபரண நகைகளா? நினைவகங்களா?

USB Jewellery Collections











உங்கள் வலைப்பூவை Bing தேடுபொறியில் சேர்ப்பதற்கு

கூகிள் தேடுபொறியில் (Google Search engine) நமது வலைப்பூ முகவரியை (blog / web site address) உள்ளிட்டால் முதலில் - முதல் பக்கத்தில் - நமது வலைப்பூ வந்துவிடும்.

ஆனால் Bing தேடுபொறி (Bing Search Engine) மிகப் புதியது. அதில் தேடினால் முதல்பக்கத்தில் நமது வலைப்பூ வருமா? வரவைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.

நமது வலைப்பூவை Bing பொறியில் நாமே சேர்த்திடலாம்.

Bing தேடுபொறியில் இணைப்பதற்கு உங்களது Hotmail / live ID வாயிலாக உள் நுழைந்திருத்தல் அவசியம்.

இதற்கான சுட்டி : http://www.bing.com/webmaster/WebmasterAddSitesPage.aspx

அந்தச் சுட்டியைச் சொடுக்கினால் திரையில் சில கேள்விகள் கேட்கப்படும்.

அதில் website முகவரி, webmaster மின்னஞ்சல் முகவரி இவற்றை இடவும். பின் submit கொடுக்கவும்.

பின் அது கொடுக்கும் meta tag ஒன்றை உங்கள் வலைப்பூவின் head பகுதியில் சேர்த்து விடவும்.

Please do the following steps to add meta tag to your blog.

Please open Blogger.com - Layout - Edit HTML - Expand Widget Templates

Please search for <head>

just paste the meta info given by Bing.com under the head tag.

உங்கள் வலைப்பூவானது பிங் தேடுபொறியில் Index ஆகிவிடும்.

வருங்கால தொழில்நுட்பம் பற்றிய கார்ட்டூன்ஸ்

வருங்கால தொழில்நுட்பம் பற்றிய கார்ட்டூன்ஸ்


Don't tell me the backup is down again!
Come on, dad, there will be mistakes in it. It's only the beta version of
my homework.

Wireless Enabled

Digital Enhancers
Automatic Image Correction
Google Home Search

கோப்புகளை ஆன்லைனில் திறந்து படிக்க

கோப்புகளை ஆன்லைனில் திறந்து படிக்க
The easiest way to view documents online

நண்பர் ஒருவர் உங்களுக்கு கோப்பு (file) ஒன்றை அனுப்பி இருக்கிறார். அது pdf, ps, doc, docx, xls, xlxs, ppt, pptx, pps, odt, odp, sxw, sxi கோப்பு வடிவங்களில் (file types) ஒன்றாக இருக்கிறது. ஆனால் உங்கள் கணினியில் இந்தக் கோப்புகளை திறந்து படிப்பதற்கு உதவக்கூடிய மென்பொருள் (software application) நிறுவப்படாமல் இருக்கிறது. நண்பரோ அந்தக் கோப்பினை உடனே திறந்து படிக்கும்படி கட்டளையிடுகிறார். எந்த மென்பொருளையும் நிறுவாமல் அந்தக் கோப்பினை திறந்து படிப்பதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?

http://www.viewdocsonline.com/ தளத்தில் நண்பரது கோப்பினை ஏற்றி (upload) அங்கேயே உடனடியாக திறந்து பார்த்துப் படித்திடலாம். இதற்காக தனியாக எந்த மென்பொருளையும் நிறுவவேண்டிய அவசியம் இல்லை என்பது ஒரு ஆச்சரியமான உண்மை.

குறிப்பிட்ட கோப்பானது ஏதேனும் இணையதளத்தில் ஏற்கனவே ஏற்றப்பட்டு (upload) இருந்தால் அந்த முகவரியை (URL) மட்டும் கொடுத்தால் கூடப் போதுமானது.


Some other sites.

http://www.openitonline.com/


http://view.samurajdata.se
/

விண்டோஸ், மேக் - வரலாற்று ஒப்பீடுகள்

விண்டோஸ், மேக் - வரலாற்று ஒப்பீடுகள்

History Of Microsoft Windows, 1983-2008













History of Macintosh, 1976-2008

விண்டோஸ் 7, உபுண்டு 9.0.4 - முதல் பார்வையில் மோகம் வருமா?

விண்டோஸ் 7, உபுண்டு 9.0.4 - முதல் பார்வையில் மோகம் வருமா?

Windows 7 - First Look



Ubuntu 9.04 - First Look

PC 2 Phone - இலவச உரையாடல் செய்ய

PC 2 Phone - இலவச உரையாடல் செய்ய
Do you want to make a call to telephone using your PC for free?

ஒரு கணினியில் இருந்து வேறு தேசத்தில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு இலவசமாக
Voice call செய்வதற்கு Evaphone சேவையை நாடலாம். வழக்கமான தளங்களும், சேவைகளும் - கணினி 2 கணினி தொல்லாடல் சேவையை இலவசமாக வழங்குவார்கள். ஈவாபோன் பயன்பாட்டுத்தளமானது ஒரு படி மேலே போகி PC 2 Phone அழைப்புகளையே இலவசமாகத் தருகிறது.



இதை இணையத்தொலைபேசி (Internet telephony) எனலாம். இலவசச் சேவையில் (free service) விளம்பரங்களின் (advertisement) ஆதிக்கம் இருக்கிறது. கட்டணச் சேவையில்
விளம்பரங்கள் வராது. நீங்கள் எதையுமே தரவிறக்கம் (download)செய்து நிறுவ வேண்டிய அவசியம் இதில் இல்லை. உங்கள் உலவியில் (browser) இருந்தே நேரடியாக தொல்லாடல் செய்து மகிழலாம்.

தளத்தின் உறுப்பினர்கள் இலவசச் சேவையில் இருந்து கட்டணச் சேவைக்கும் (paid service) மாற்றிக் கொள்ளலாம். ஒரு ஒலிவாங்கியும், ஒலிப்பானும் மட்டுமே போதுமானது (Mic, headset). எந்த எந்த நாடுகளுக்கு எவ்வளவு நேரம் இலவசமாக பேசிக்கொள்ளலாம் என்பதை அவர்கள் அறியத் தருகிறார்கள்.

Check it out there : http://www.evaphone.com/

வால்பையனுக்கு அர்ப்பணிக்கிறேன்

தொடர்புடைய வால்பையனின் பதிவு

Dedicated to Valpaiyan - வால்பையனுக்கு அர்ப்பணிக்கிறேன்

















தொடர்புடைய வால்பையனின் பதிவு

கடினமான கணிதச் சமன்பாடுகளை உருவாக்க MathCast

கடினமான கணிதச் சமன்பாடுகளை உருவாக்க MathCast
Want to Edit Complex Maths Equations

சாதாரண Text editorகளில் நாம் எழுத்து, எண், சிறு அடையாளக் குறியீடுகள் (special symbols) போன்றவற்றை தட்டெழுதலாம். ஆனால் மிகக் கடினமான கணிதச் சமன்பாடுகளை (Maths Equations) இந்த எடிட்டர்கள் மூலமாக உருவாக்குவது என்பது மிகக் கடினமாகவோ / முடியாததாகவோ அமைந்துவிடும்.



மிகக் கடினமான கணிதச் சமன்பாடுகளையும் (Complex Maths Equations), எளிதாக மிகச் சில வினாடிகளிலேயே தட்டிவிட ஒரு இலவசமென்பொருள் உள்ளது. அதன் பெயர் MathCast. இந்த மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட கோப்புகளை Microsoft Office அல்லது Open Office தொகுப்பின் மூலம் திறந்து படிக்க / மாற்றங்கள் செய்ய இயலும். இந்த மென்பொருள் வாயிலாக உருவாக்கப்பட்ட கணிதச் சமன்பாடுகளை பட வடிவில் JPG வடிவில் கூட மாற்றிக்கொள்ளலாம்.

திரையில் படிப்பதற்கோ, அச்சுப்பொறியில் அச்செடுப்பதற்கோ (print out) மிகச்சிறப்பான முறையில் கண்ணைக் கவரும் வகையில் இந்த மென்பொருளால் உருவாக்கிடலாம்.


Here is the link to download MathCast application.

http://mathcast.sourceforge.net/home.html

Related Post : Beauty of Mathematics

மேக், லினக்சுக்கான கூகிள் குரோம்

மேக், லினக்சுக்கான கூகிள் குரோம்
Google Chrome download links for Mac, Linux

Windows இயங்குதளத்திற்காக (Operating System) கூகிள் நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்ட நவீன உலவிதான் (browser) கூகிள் குரோம். இது டிசம்பர்,11,2008ல் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்டது. இது நாள் வரை மேக், லினக்ஸ் (Mac, Linux) இயங்குதளங்களுக்கான குரோம் வெளியிடப்படாமல் இருந்தது.

தற்போது சோதனை ஓட்டமாக லினக்ஸ், மேக் - இந்த ஓஎஸ்ஸில் இயங்கும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒருங்குறி எழுத்துரு (unicode support), ப்ளாஷ் பயன்பாடுகள் (Flash), கடினமான எழுத்துகள் (Complex text) போன்ற பல ஒத்திசைவுகள் காணப்படவில்லை. இன்னும் இது டெவெலப்மென்ட் (Development) வடிவில் உள்ளது.



இது முழுமையான வடிவம் அல்ல. இதில் எண்ணற்ற பிழைகள் (bugs) இருக்கலாம். இது சோதனை ஓட்டத்திற்காக வெளியிடப்பட்டுள்ளது. குரோமில் உள்ள பிழைகளைச் சரிசெய்வதற்காகவும், வேறு பிழைகள் உள்ளதா என்பதை அறிவதற்காகவுமே இது தற்போது வெளியாகி உள்ளது.

பிற பயனர்கள் இதைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேக், மற்றும் லினக்ஸின் 32, 64 bit இயங்குதளங்களுக்கான குரோம் தரவிறக்கச் சுட்டிகள் (download links) கீழே


For Mac :
http://www.google.com/chrome/intl/en/eula_dev.html?dl=mac

For 32 bit Linux Machines :
http://www.google.com/chrome/intl/en/eula_dev.html?dl=unstable_i386_deb

For 64 bit Linux Machines :
http://www.google.com/chrome/intl/en/eula_dev.html?dl=unstable_amd64_deb


வீட்டு உபயோகப் பொருட்களில் அறிவியல் நுட்பங்கள்

வீட்டு உபயோகப் பொருட்களில் அறிவியல் நுட்பங்கள்
Smart Innovation for House Hold Things


















அந்நிய மொழியில் எழுதப்பட்ட சொற்றொடரின் மொழியை அறிய

Foreign Language Detection Tools
எனக்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு e-mail வந்தது. ஆனால் அது வேற்று மொழியில் (foreign language) எழுதப்பட்டு இருந்தது. அது எந்த மொழி என்று எனக்கு விளங்கவில்லை. குறைந்தபட்சம் அது எந்த மொழி என்று கண்டுபிடித்தே (detect) ஆகவேண்டும் என்கிற ஆர்வம் என்னிடம் இருந்தது. இதற்காக இணையம் என்னும் கடலில் குதித்தேன். மூன்று தளங்களை (web sites) இணையம் எனக்குக் கொடுத்தது.



langid.net இந்த தளத்தின் மூலம் 85 விதமான மாறுபட்ட மொழிகளை அடையாடம் ( identification )கூற இயலும். இங்கே உள்ள ஒரு textbox ல் தட்டெழுதியோ, வேற்றுமொழியில் எழுதப்பட்ட கோப்பினை இங்கே இணையேற்றியோ (upload), மின்னஞ்சல் (e-mail)செய்தோ, அல்லது twitter வாயிலாக டிவிட் செய்தோ இந்தத் தளத்திற்குத் தெரிவிக்கலாம்.

whatlanguageisthis இது ஒரு மிக வேகமான இணையதளம். அந்நிய மொழிகளின் வார்த்தைகளை இந்தத் தளத்தால் அடையாளம் காண இயலவில்லையெனில் இது தெளிவாகக் கூறிவிடுகிறது - "என்னால் இயலவில்லை" என்று.

language detect உலகின் மிகப்பெரும் இணைய ஜாம்பவான் Google ஒரு எளிய முகப்பைக் கொண்ட ஒரு சேவையைத் (service) தருகிறது. இதில் உங்கள் அந்நிய மொழிக்கான வார்த்தைகளை பேஸ்ட் (paste) செய்தால் - உடனே அது எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகிறது.



உலகை வேறு பாதையில் அழைத்துச் செல்லும் 25 நவீன இணைஞர்கள்

உலகை வேறு பாதையில் அழைத்துச் செல்லும் 25 நவீன இணைஞர்கள்
Top 25 persons who changed the global internet


Larry Page and Sergey Brin - Google Inc.

David Filo and Jerry Yang - Yahoo! Inc
Bill Gates - Microsoft
Steven Paul Jobs - Apple Inc.
Mark Zuckerberg - Facebook
Kevin Rose - Digg
Bram Cohen - BitTorrent
Mike Morhaime - Blizzard Entertainment
Jimmy Wales - Wikipedia

Jeff Preston Bezos - Amazon
Shawn Fanning - Napster, Rupture
Pierre Omidyar - eBay
Jack Ma - Alibaba

Matt Mullenweg - WordPress
Thomas Anderson - MySpace
Garrett Camp - StumbleUpon
Linus Torvalds - Linux
Jon Postel - Internet Pioneer
Caterina Fake - Flickr
Stewart Butterfield - Flickr
Marc Andreessen - Netscape
Jack Dorsey - Twitter
Orkut Büyükkökten - orkut


இது போன்ற பல வினோதமான, விந்தையான, வித்தியாசமான படங்களைக் காணவேண்டுமா?
உடனே visit செய்யுங்கள். வருகை தாருங்கள் :
http://amazingphotos4all.blogspot.com


(104 வயது டிவிட்டரர், 83 வயது யோகா மாஸ்டர், 17 வயதில் 7 குழந்தைகளுக்குத் தாயானவள், முதலை வாய்க்குள் தலைவிடும் வாலிபர், முதலையால் விழுங்கப்பட்டு உயிரிழந்த சிறுவன், யானையால் மிதிக்கப்படுவதை விரும்பும் வினோத உல்லாசிகள் - என 550+ புகைப்படப் பதிவுகள். )

video கோப்புகளை iPodகு ஏற்ற வடிவில் மாற்றியமைக்க

எந்த ஒரு வீடியோ கோப்பினையும், iPod கருவியில் காண வேண்டுமா?

iPod கருவியானது அதற்கு ஏற்ற சிறப்பு கோப்பு வடிவங்களை (file formats) மட்டுமே ஏற்றுக்கொண்டு, அவற்றை மட்டுமே திரையில் ஓட்டிக் காண்பிக்கும்.


கணினியில் இயங்கும் பல்வேறு கோப்பு வடிவங்களை அது புரிந்துகொள்ளாது. இதற்காக சில பிரத்தியேகெ மென்பொருட்கள் உள்ளன. இந்த மென்பொருட்களின் உதவியுடன், பல்வேறுவிதமான கோப்புவடிவங்களை நாம் ஐபாடில் இயங்கும் அதற்குரிய சிறப்பு வடிவிற்கு எளிதில் மாற்றி விட முடியும்.

iPod Video Converter இதற்கு உதவுகிறது. இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானதும் (freeware), எந்தவிதமான கெடுதி விளைவிக்கும் malware எதுவும் இல்லாததாகவும் உள்ளது. மிக விரைவான இயக்கம் கொண்டது. ஒரே நேரத்தில் ஏகப்பட்ட கோப்புகளை மாற்றிடலாம்.



இந்த மென்பொருளை கணினியில் நிறுவுவதும், நீக்குவதும் மிக எளிது.

DVD/VCD and AVI, MPEG, WMV, RM, RMVB, DivX, ASF, VOB வடிவங்களை இதன் மூலம் மாற்றிடலாம்.

http://www.ipod-video-converter.org/downloads.html

Copy,Paste ன்னா சாதாரணமா?

Copy - Paste Special



இது போன்ற பல மொக்கைப் படங்களைப் பார்த்து ரசிக்க வேண்டுமா?
உடனே visit செய்யுங்கள். வருகை தாருங்கள் :
http://amazingphotos4all.blogspot.com

( சூர மொக்கையில் ஆரம்பிச்சு - தூங்குமூஞ்சிப் பசங்க வரை - வித வித மொக்கை உலகம் )



இது போன்ற பல மொக்கைப் படங்களைப் பார்த்து ரசிக்க வேண்டுமா?
உடனே visit செய்யுங்கள். வருகை தாருங்கள் :
http://amazingphotos4all.blogspot.com

( சூர மொக்கையில் ஆரம்பிச்சு - தூங்குமூஞ்சிப் பசங்க வரை - வித வித மொக்கை உலகம் )

Firefox உலவியில் 3 நுட்பங்கள்

யாமறிந்த உலவிகளில் நெருப்பு நரி @ Firefox போல வேறொன்றை கண்டறியோம்- இது வல்லுனர் வாக்கு.

நெருப்புநரி உலவியில் (Firefox Browser) பலருக்குத் தெரியாத ஒரு ரகசியம் சொல்கிறேன்.

நாம் அடிக்கடி விசிட் செய்யும் தளங்களின் முகவரியின் முடிவில் .COM , .NET , .ORG என இருக்கும்.

இந்த மாதிரி தளங்களை விசிட் செய்யும்போது தடேல் என உடனடியாக தளத்திற்குள்
செய்வதற்கு, கீழ்க்கண்ட short cuts (குறுக்குவழிகள்) உதவும்.



தள முகவரி : kumudam அடித்து பிறகு கன்ட்ரோல் + என்டர் அடித்தால் -
http://www.kumudam.com க்குச் செல்லலாம். (ctrl + enter)

தள முகவரி : tamilnenjam அடித்து பிறகு கன்ட்ரோல் + ஷிஃப்ட்+ என்டர்
அடித்தால் - http://www.tamilnenjam.org க்குச் செல்லலாம். (ctrl + shift
+ enter)

தள முகவரி : tothetech அடித்து பிறகு ஷிஃப்ட்+ என்டர் அடித்தால் -
http://www.tothetech.net க்குச் செல்லலாம். (shift + enter)

குறிப்பு : மேலே நீங்கள் காணும் படமானது, உலகெங்குமுள்ள நெருப்புநரி சங்கத்தின் (Firefox Fans of the world) சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதிகப் படங்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும். அன்பர், அலெக்சாவின் சாதனை நாயகன், தமிழ்நாடு கண்டெடுத்த தவப்புதழ்வன் லக்கிலுக் கின் ரசிகர்களுக்காகவும் சில ஆச்சரிய அதிசயப் படங்கள் (13+) காத்திருக்கின்றன.Please click here

உங்கள் G-Mail கணக்கைப் பாதுகாத்திட

உங்களுக்கான G-Mail கணக்கை வேறு யாரும் பயன்படுத்துகிறார்களோ? என சந்தேகம் வந்தாலும், வராவிட்டாலும் கீழ்க்கண்ட செயல்முறையை செய்து சோதித்துப் பாருங்கள்.

உங்கள் உலவியின் (browser) வழியாக ஜி-மெயில் க்குள் Login செய்யவும்.

உலவியின் அடிப்பாகத்திற்குச் செல்லவும். “Last account activity” க்குப் பக்கத்தில் “Details” இருக்கும். Details ஐ சொடுக்கவும்.



இங்கே தெரியும் தகவல்களை வைத்து உங்கள் கணக்கை வேறுயாரேனும் பயன்படுத்தினார்களா? என்பதை அறியலாம்.

“Access Type”, “Date and Time” , “IP Address”. ஆகியவை கண்ணெதிரே பட்டியலிடப்படும்.

இங்கே இந்த நடப்பு IP address @ முகவரியில் நீங்கள் இப்போது login ஆகி உள்ளீர்கள். இதே நேரத்தில் வேறு எந்த IP address @ முகவரியில் உங்கள் ஜி-மெயில் கணக்கில் வேறு யாரேனும் login ஆகி இருந்தார்கள் எனில் அதன் ஐபி முகவரியும் ஒரு சிறு நட்சத்திர ஸ்டார் குறியும் (*) காண்பிக்கப்படும்.


உங்களுக்கு சந்தேகப்படும் வண்ணம் ஏதேனும் நடவடிக்கை இருப்பின், இங்கிருந்தபடியே பிற நடவடிக்கைகளை Sign out செய்யலாம். உடனே உங்கள் நடப்பு கடவுச்சொல்லையும் (password), பாதுகாப்பு குறித்த கேள்வியையும் (Security question) மாற்றிவிடவும்.

முதலை பிறக்கும் காட்சிகள் - Live Birth of a crocodile

Birth of a Crocodile - முதலை பிறக்கும் காட்சிகள்

Crocodile Formation - Birth of a Crocodile






Related Posts - Please see these posts also:


Crocodile Formation - Birth of a Crocodile முதலை பிறக்கும் காட்சிகள்
Turtle Formation - Birth of a Turtle. ஆமை பிறக்கும் காட்சிகள்
Chicken Formation - Birth of a Chicken. கோழிக்குஞ்சு பிறக்கும் காட்சிகள்

Windows ன் வேகத்தை அதிகரிக்க

விண்டோசின் வேகத்தை அதிகரிக்க
How to accelerate the speed of your windows Operating System?

கணினியின் வன் வட்டு @ hard diskகில் தேவையற்ற சமாச்சாராங்கள் நிரம்பி
வழிந்தால் அதன் வேகம் குறையும். தொடர்ந்து Windows ன் செயல்பாட்டு வேகமும் முடங்கும். இதற்காக அவ்வப்போது defrag செய்துவர வேண்டும்.



நமது தகவல்கள் வன்வட்டு @ hard disk கில் தொடர்ச்சியாக எழுதப்படாமல் random ஆக அங்கங்கே எழுதப்பட்டு வரும். இதை மாற்றியமைத்து ஒரு சீராக / தொடர்ச்சியாக எழுதினால் - ஹார்ட்டிஸ்க்கின் வேகம் புத்துணர்ச்சி பெறும் (optimize).

இந்தச் செயலை defrag என்பார்கள். இப்பணியைச் செய்வதற்கு கீழ்க்கண்ட 8 மென்பொருட்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்திப் பாருங்கள். பெரும்பாலும் இந்தச் செயலை அலுவலக வேலைகள் முடிந்து கணினி அமைதியாக இருக்கும் நேரத்தில் செய்யுங்கள்.

கணினி மிக வேலைப்பளுவுடன் இருக்கும்போது இந்த defrag வேலையைச் செய்ய வேண்டாம்.

http://www.iobit.com/iobitsmartdefrag.html


http://wincontig.mdtzone.it/en/index.htm

http://www.auslogics.com/en/software/disk-defrag

http://www.diskeeper.com/

http://www.oo-software.com/home/en/products/oodefrag/

http://www.raxco.com/

http://www.kessels.com/JkDefrag/

http://www.defraggler.com/

What is defragmentation?

A process for rearranging the clusters on a disk for each file so that they are adjacent rather than scattered all over the disk.


விண்டோஸ் க்ளிப்போர்ட்க்கு 6 மாற்று மென்பொருட்கள்

Windowsன் ஒருங்கிணைந்த Clipboard பற்றித் தெரியாதவர்களுக்கு : நீங்கள் எதையாவது Copy, Paste செய்யும்போது - அந்த தகவலானது - க்ளிப்போர்ட் எனப்படும் தற்காலிக நினைவகப் பகுதியில் (memory) பதிவாகி இருக்கும். ஒவ்வொரு முறை பேஸ்ட் அடிக்கும்போது, க்ளிப்போர்டில் இருந்தே பெறப்படும். Cut, Copy செய்யும்போது Clip Board க்கு அனுப்பப்படும். ஒவ்வொரு முறையும் கட்,காப்பி செய்யும்போது புதிய தகவல் ஏற்றப்பட்டு - பழைய தகவல் அழிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த உண்மை.

Here I am listing some good alternatives for default clipboard.

அடிக்கடி காப்பி,பேஸ்ட் செய்பவர்களுக்கு இந்த விண்டோசின் க்ளிப்போர்ட் கண்டிப்பாகப் போதவே போதாது. இதற்கான சில மாற்றுப் பயன்பாடுகளைத் (alternatives) தேடியதில்
கீழ்க்கண்ட மென்பொருட்களைக் கண்டேன். இவற்றைப் பயன்படுத்தினால், ஒரே நேரத்தில் பல்வேறு தகவல்களை மாற்றி மாற்றி காப்பி-பேஸ்ட்டலாம். சில பயன்பாடுகள் 15, 25 தகவல்களை நினைவகத்தில் பதியும் தன்மை கொண்டவை. சில உள்ளமைந்த டேட்டாபேசையே (SQLite Database) பயன்படுத்துகின்றன.

இதனால் 1024 தனிப்பட்ட தகவல்களை நீங்கள் மாற்றி மாற்றி பேஸ்ட்டலாம். சிறிய எழுத்து, பெரிய எழுத்து, கலந்த கலவையான எழுத்துகள் - என பேஸ்ட்தட்டும்போதே மாற்றிக்கொள்ள இயலும் என்பது இவற்றின் தனிச்சிறப்பு.

Please use the links below to get these free Clipboard managers for windows tools.

http://www.intelexual.com/products/YC3/

http://sourceforge.net/projects/ditto-cp/

http://clipguru.com/

http://m8software.com/clipboards/freeclip/freeclip.htm

http://www.joejoesoft.com/cms/showpage.php?cid=97

http://ditto-cp.sourceforge.net/

PDF கோப்புகளைப் படிப்பதற்கு 5 applications

PDF கோப்புகளைப் படிப்பதற்கு 5 applications

இணையம் தோன்றிய புதிதில் PDF கோப்புகள் புழங்க ஆரம்பித்தன. PDF கோப்புகளை அடோபி நிறுவனத்தின் Adobe Reader வழியாகப் படித்து வந்தோம். ஆரம்பத்தில் 2 எம்பி அளவில் இருந்த Reader பயன்பாடு இப்போது version 9.0ல் 32 எம்பி அளவுக்கு அதிகரித்து விட்டது. இதை நிறுவினால், 130+ எம்பி அளவுக்கு வன்வட்டு @ hard disk ல் இடத்தை ஆக்கிரமிக்கிறது.

ஒரு PDF கோப்பினை சாதாரணக் கணினியில் Adobe Reader வழியாக திறந்தால், வெகு நேரம் கழித்த பிறகே திரையில் எழுத்துகள் தென்பட ஆரம்பிக்கும். இந்த ரீடர் ஆனது பல்வேறு நுணுக்கங்கள் கொண்ட செயலிகளை உடன் இணைத்து Load ஆவதால், இவ்வளவு நேரம் ஆகிறது. ஒரு சாதாரண எளிய பிடிஎப் கோப்பினை சும்மா
திறந்து படிப்பதற்கு வெர்சன் 9.0 போன்ற அதி நவீன ரீடர் தேவையில்லை. மிக light weight ஆன ஒரு ரீடரே போதும்.

மிக வேகமான இயக்கத்திற்கும், மிகக் குறைவான ஆக்கிரமிப்பிற்கும் ஏற்புடைய 5 பிடிஎப் ரீடர் பயன்பாடுகளை கீழே கொடுத்துள்ளேன். பயன்படுத்திப் பாருங்கள்.


Please consider the following alternatives for viewing small, normal PDF files.

http://www.pdf2exe.com/reader.html

http://blog.kowalczyk.info/software/sumatrapdf/index.html

http://www.soft-xpansion.com/index.php?p=pdftech/pdfqr

http://www.foxitsoftware.com/pdf/reader/

http://www.docu-track.com/home/prod_user/PDF-XChange_Tools/pdfx_viewer

Copy-paste அடித்து வாழ்வாரே வாழ்வார்

காப்பி-பேஸ்ட் அடித்து வாழ்வாரே வாழ்வார்

வழக்கமான Windows இயங்குதளத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு, இந்த Clipboardன் வசதி போதவே போதாது. ஒரு முறை Copy செய்து பலமுறை Paste செய்யலாம். மீண்டும் எதையாவது காப்பி செய்தால் பழைய தகவல் அழிந்துவிடும். இது எல்லோரும் அறிந்ததே. மிகச் சமீபத்தில் எதை Copy, Cut செய்தோமோ அதுவே நினைவில் நிற்கும். இது விண்டோஸ் உடன் இணைந்துள்ள க்ளிப்போர்ட் வசதி.

அடிக்கடி காப்பி, பேஸ்ட் கொண்டு இருப்பவர்களுக்காக ஒரு இலவச மென்பொருள் -
CopyPasteTool ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களை ஒரே நேரத்தில் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. பல தகவல்களும் நினைவகத்தில் அமர்ந்திருக்கும். எது தேவைப்படுகிறதோ - அதை உங்கள் விருப்பமான ஒன்றை - நீங்கள் பேஸ்ட் செய்துகொள்ளலாம்.



இந்த சிறிய மென்பொருளை நிறுவியவுடன் கணினியின் டாஸ்க்பாரின், System trayல் அமர்ந்திருக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களை மாற்றி மாற்றி, விட்டு விட்டு பேஸ்ட் செய்ய விரும்பினால், Ctrl விசையை கீபோர்டில் அழுத்தியபடி, V பட்டனை திரும்பத் திரும்ப விட்டு விட்டு அழுத்தினால் வேறு வேறு தகவல்கள் பேஸ்ட் ஆகும். (இதைச் செய்யும்போது ஒரு விரலால் Ctrl கீயை அழுத்தியபடியே இருக்கவும் - விட்டுவிட வேண்டாம். V பட்டனை மட்டும் விட்டு விட்டு அழுத்தவும்)

எந்த தகவலை Paste செய்ய விரும்புகிறீர்களோ அத்துடன் Ctrl விசையில் இருந்து கையை எடுத்துவிடவும்.

Do you want to try it in your computer : http://www.copypastetool.com/

See this related post : Paste anything, get it anywhere

laptoம் battery meterம்

புதிதாக வாங்கப்பட்ட மடிக்கணினி @ Laptopல் 3 முதல் 4 மணி நேரம் வரை அதன் பேட்டரியானது, வெளியுலக மின்னிணைப்பு இல்லாமல் உழைத்தால் அது உங்கள் அதிர்ஷ்டமே. அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் மடிக்கணினியின் விற்பனை மிக அதிகமாக இருக்கும். ஆனால் மடிக்கணினியின் பேட்டரி நம்மை சில நாட்களிலேயே
பாடாய்படுத்தும்.

Microsoft Windows உடன் இணைந்துள்ள Battery Meter கடைசி நேரத்தில் காலை வாரும். 4 மணி நேரம் bakup time என்றிருப்பார்கள் - ஆனால் 2 மணி நேரத்தில் பல்லைக் காட்டும் அந்த பேட்டரியும், பேட்டரி மீட்டரும்.


இதற்காக மீண்டும் 100$ கொடுத்துப் புதிய battery வாங்க வேண்டாம்.

கீழ்க்கண்ட 2 மென்பொருட்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்திப் பாருங்கள். கணினியின் battery life இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது என்பது குறித்த மேலதிக தகவல்களை இந்த மென்பொருட்கள் துல்லியமாகத் தெரிவிக்கின்றன.

Here is the links to download :

http://www.osirisdevelopment.com/BatteryBar/index.html

http://mattcollinge.wordpress.com/software/power-meter-plus/

வினோதக் கணக்குகள்

Beauty of Mathematics
1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

Funny Maths Answers - கணக்குப் பரீட்சையில் இப்படியா எழுதுவது?

Funny Answers for Exam Questions - பரீட்சையில் படம் வரைந்து மாட்டிக்கிட்டவங்க

1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10= 1111111111

Funny Maths Answers - கணக்குப் பரீட்சையில் இப்படியா எழுதுவது?

Funny Answers for Exam Questions - பரீட்சையில் படம் வரைந்து மாட்டிக்கிட்டவங்க

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888

Funny Maths Answers - கணக்குப் பரீட்சையில் இப்படியா எழுதுவது?

Funny Answers for Exam Questions - பரீட்சையில் படம் வரைந்து மாட்டிக்கிட்டவங்க


1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321

Funny Maths Answers - கணக்குப் பரீட்சையில் இப்படியா எழுதுவது?

Funny Answers for Exam Questions - பரீட்சையில் படம் வரைந்து மாட்டிக்கிட்டவங்க

இன்றைக்கு இங்கே மழை பெய்யுமா?

கணினியின் இணைய IP address முகவரியை ஆதாரமாகக் கொண்டு, நம் இடத்தை அறிந்து, அதை பிரபல வானிலை அறிக்கை ( weather forecasting ) அளிக்கும் தளங்களின் தகவலுடன் ஒப்பிட்டு - இன்றைக்கு நமது பூமியில் மழை பொழியும் வாய்ப்பு இருக்கிறதா? என்பதை அறிந்துகொள்ள ஒரு இணையதளம் [ http://www.goingtorain.com/ ] உள்ளது.

உங்கள் இருப்பிடத்தில் மழை பொழியும் வாய்ப்புள்ளதா என்பதை அறிவதுடன், வேறு எந்த ஊர் முகவரியை உள்ளிட்டாலும், அந்த ஊரிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதா? என்பதையும் அறியத் தருகிறது.



உள்ளூரின் தட்பவெப்பநிலை (temperature) எவ்வளவு டிகிரியில் உள்ளது, மழையின் வேகம் எப்படி இருக்கும்? என்பன போன்ற தகவல்களையும் இத்தளத்தின் ஊடாக அறியலாம்.

http://www.goingtorain.com/

Related Post :
நமது ஐபி முகவரியைக் கொண்டு நமது இருப்பிடத்தை அறியலாம் என்பதை ஏற்கனவே ஒரு பதிவில் இட்டிருந்தேன். அந்தப் பதிவின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் கணினியின் ஐபி முகவரியை அறிவதற்கு

மொழி.காம் வழங்கும் 2 ஜிபி இலவசக் கோப்புக்கிடங்கு சேவை

கணினியின் வன்வட்டு @ hard disk ல் ஏராளமான தகவல்களை நாள் தோறும் பதிகிறோம். ஒவ்வொரு தகவலும் நமக்கு இன்றியமையாததுதான். e-mail, பாட்டு, படம், அலுவலகக் கோப்புகள், நாளைய தொழில்நுட்பத்தை இன்றே படிப்பதற்கான PDF கோப்புகள் - இப்படி அனைத்தையும் கணினியின் ஹார்ட்டிஸ்க்கில் தினந்தோறும் ஏற்றுகிறோம். எப்போதாவதுதான் இவற்றை bakup எடுத்து ஒரு DVDயில் பதிகிறோம். ஹார்டுடிஸ்க் @ வன்வட்டு - எப்போது வேண்டுமானாலும் செயலிழக்கும் அபாயம் உண்டு.

ஒரு வருடத்தில் 10 ல் ஒரு ஹார்ட்டிஸ்க் கெட்டுப்போகி, தகவல் இழப்பு நேரிடுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தகவலை மீட்பதற்காக 7500$ வரை செலவழிக்கிறார்களாம்.

மொழி.காம் வழங்குகிறது 2 ஜிபி அளவிலான இலவசக் கோப்புக் கிடங்கு சேவை. மேலதிக GB வேண்டும் எனில் தனியாகப் பணம் செலுத்தி உங்கள் தகவல்களைக் காப்பாற்றலாம்.

அவ்வப்போது மொழி.காம் தளத்தில் உங்கள் தகவல்களை ஏற்றி bakup செய்து வந்தால் - ஏதேனும் பிரச்சினையால் உங்கள் ஹார்ட் டிஸ்க் செயலிழக்கும்போது மொழி.காம் தளத்தில் இருந்து அனைத்துத் தகவல்களை மீளப் பெறலாம். ஒரு மில்லியன் உறுப்பினர்களைக் கடந்து வெற்றிநடை போடுகிறது மொழி.காம் தளம். தகவல்களைப் பாதுகாக்கும் ஒரு காப்பீடு @ insurance போன்றது இது.

http://www.mozy.com

ஒவ்வொரு உலவியிலும் உங்கள் வலைப்பக்கம் எப்படிக் காட்சியளிக்கிறது?

உங்கள் வலைப்பக்கம் / இணையப்பக்கம் - ஆனது ஒவ்வொரு தனிப்பட்ட உலவி @ browser லும் எப்படிக் காட்சியளிக்கிறது என்பதை அறிவதற்காக Adobe நிறுவனத்தின் இந்தச் சேவை வாயிலாக உறுதி செய்துகொள்ளலாம்.

நாம் புதியதாக உருவாக்கிய ஒரு வலைப்பக்கம் / இணையப்பக்கமானது ஒவ்வொரு உலவியிலும் வெவ்வேறு மாதிரியாகக் காட்சியளிக்கும் அபாயம் உள்ளது. இதற்குக் காரணம் - உலவிகளுக்குள் இடையே நிலவும் Javascript ஒவ்வாமைப் பிரச்சினைகளே ஆகும்.


Internet explorer வழியாக திரையில் பார்த்தால் தெளிவாகத் தெரியக்கூடிய பக்கமானது, Safari வழியாக கண்ணாபின்னாவென்று தெரியக்கூடிய அபாயம் உள்ளது. நமது கணினியில் ஒவ்வொரு உலவியாக நிறுவி ஒவ்வொன்றின் வாயிலாகவும் வலைப்பக்கங்களைச் சோதித்து அறிவது மிகக் கடினம்.

Chrome, Opera மற்றும் சில Linux ற்கான உலவிகளை இங்கே சோதித்தறிய இயலாது

Firefox, Internet Explorer & Safari இந்த உலவிகளை Mac and Windows ஆகிய தனித்தனி இயங்குதளத்தின் வாயிலாக சோதித்தறிய ஒரு அறிய வாய்ப்பு

Adobe Flash Player version 10.0.0 அல்லது அதற்கு மேலே உங்கள் கணினியில் நிறுவி இருத்தல் வேண்டும். உலவியில் ஜாவாஸ்க்ரிப்டின் இயக்கத்தை அனுமதி அளித்திருக்க வேண்டும்.

அடோபி உலவிச்சோதனைக்கான சுட்டி https://browserlab.adobe.com/index.html

ஆன்லைனில் காப்பி - பேஸ்ட் செய்ய

காப்பி, பேஸ்ட் செய்பவர்களுக்கு ஒரு நற்செய்தி!


அடிக்கடி Ctrl + C, Ctrl+V கொடுக்கும் பழக்கமுடையவர்கள் நாம்.
http://www.heypasteit.com/ தளத்தில் நாம் எதையாவது paste செய்து, Paste
Online பட்டனை அழுத்தினால், நமக்கென்று ஒரு URL முகவரி கொடுக்கப்படும்.
அதை தேவைப்படும்போது உலவியில் தட்டினால், நமது டெக்ஸ்ட் தகவல் உடனே
கிடைக்கும்.


இந்த URL முகவரியை நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டால், நமது தகவல்
அவர்களுக்குக் கிடைக்கும். ஒரு முறை http://www.heypasteit.com/ தளத்தில் பேஸ்ட் செய்து URL
உருவாக்கிக்கொண்டால், அதைப் பலமுறை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பயனர் கணக்கு உருவாக்கவேன்டிய நிர்பந்தம் இல்லை. நிறைந்த வேகம் மிக்கது

http://www.heypasteit.com/

41 நாடுகளுக்கு இலவச Fax அனுப்ப

MyFax தளத்தின் வழியாக உலகெங்கும் 41 நாடுகளுக்கு இணையம் மூலம் Fax அனுப்பலாம்.
தினமும் 2 Fax இலவசமாக, அதிகபட்சம் 9 பக்கங்கள் வரை அனுப்ப அனுமதிக்கிறது.
10 எம்பி வரை அனுமதிக்கிறது.

அனுப்பிய Fax ஒழுங்காகச் சென்றடைந்ததா / இல்லையா என்கிற விவரத்தின்
acknowledgement நமக்கு மின்னஞ்சலாகக் கிடைத்துவிடும். அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சீனா, ஜப்பான், தென் கொரியா முதலிய 41 நாடுகளுக்கு fax அனுப்பிடலாம்.

எந்த Fax எண்ணிற்கு அனுப்ப விரும்புகிறோமோ, அவர்களின் எண்@myfax.com,
உதாரணமாக : 12345678901@myfax.com இந்த தளம் மூலம் அனுப்பினால்
போதுமானது.


மேலதிக விபரங்களுக்கு : http://www.myfax.com/

ஆட்சென்ஸ் குறித்த கேள்விகளும், பதில்களும்

இந்த கேள்விகளைக் கேட்டவர் : திரு. சந்திரமோகன்

1. எனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வலைத்தளம் இருக்கிறது என வைத்து கொள்வோம், அப்படி இருக்கும் பச்சத்தில், ஒரு google adsense கணக்கு வைத்து கொண்டு எல்லா வலைத்தளத்திலும் விளம்பரம் செய்யலாமா ?

Yes. You can do. ஆமாம். தாராளமாக

2. ஒரே வலைத்தளத்தில் Google, Bidvertiser, Guruji இப்படி எல்லா விளம்பரங்களையும் போடா முடியுமா ? அல்லது ஏதாவது கட்டுப்பாடு உண்டா ?

போடலாம். தாராளமாக. ஆனால் ஒன்றுக்கொன்று வித்தியாசம் காண்பித்துப் போடவேண்டும். Bidvertiser, Adbrite, Guruji, Komli எதையும் இணைத்துப் போடலாம். ஆனால் வரும் விசிட்டர்கள் - வெறுப்பாகிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

3. நான் இப்போது இந்தியா'வில் வசித்து வருகிறேன், Google Check 'ஐ (காசோலை) அனுப்பும் போது TAX அல்லது Service Charge இப்படி எதாவது பிடித்து கொண்டு அனுப்புகிறதா ? டாலரில் தான் செக் அனுப்புமா ? or ரூபாயில் அனுப்புமா ? (ரொம்ப சில்லியா இருக்குனு கூச்சபடாதீங்கன்னே, எல்லாம் ஒரு தகவல் திரட்டுவதர்காகத்தான் )

tax, service charge பிடிப்பதில்லை. ஆனால் income tax அளவுக்கு உங்கள் adsense வருமானம் இருப்பின், நீங்களே மனமுவந்து அதை அரசிடம் காண்பித்து வருமானவரி கட்டவேண்டியது உங்களது கடமை. இதை google கூறுகிறது. டாலரில் வேண்டுமா / ரூபாயில் வேண்டுமா - என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். நான் எனக்கு இந்திய ரூபாய்களில் காசோலை பெற்றுக்கொள்ளும்படி அமைத்திருக்கிறேன்.

4. இப்போது நான் google 'டம் இருந்து காசோலை பெற்றுக்கொண்டுள்ளேன் அப்புறம் கொஞ்ச நாள் களைத்து வேறு நாடுகளுக்கு சென்று சிறிது காலம் வசிக்க வேண்டிய கட்டாயத்தில், என்னோட Google personal profile'லில் வசிக்கும் நாட்டை மாற்றினால் எதாவது தொந்தரவு வருமா ? இப்போது நான் google டம் இருந்து காசோலை பெற்றுக்கொண்டுள்ளேன் அப்புறம் கொஞ்ச நாள் களைத்து வேறு நாடுகளுக்கு சென்று சிறிது காலம் வசிக்க வேண்டிய கட்டாயத்தில், என்னோட Gஓக்லெ பெர்சொனல் profile ல் வசிக்கும் நாட்டை மாற்றினால் எதாவது தொந்தரவு வருமா ?

சீனாவைத் தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் அக்கவுண்ட்டை மாற்றிக்கொள்ளலாம். சீனாவுக்கு மாற்ற வேண்டும் என்றால், புதிய அக்கவுண்ட் உருவாக்குவதைத்தவிர வேறு வழியில்லை . யூரோ, டாலர் பிரச்சினை இருப்பின் அதை நீங்கள்தான் சமாளிக்க வேண்டும். ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு மாற்ற முயற்சிக்கும்போது பிரச்சினை எழுந்ததாக நண்பர் கூறினார்.

5. Web Hosting பண்ணுவதற்கு சிறந்த தளம் ?

இந்தக் கேள்விக்கு பின்னூட்டம் வாயிலாகப் பதில் தந்தவர் :The Rebel

Best Webhosting Site-Hostgator.com

Plans- Start at $5 per month

Best Sites to Register Domain Names:
name.com(cheap n best)
dynadot.com
godaddy.com

Hope its useful for newbies.Its based on my personal experience.

கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டவர் திரு. பிரபாகரன்

plz tell about guruji ads?

கூகிள் ஆட்சென்ஸ் வாயிலாக க்ளிக்குகளைப் பெறுவது மிகக் கடினம். ஒரு நாளில் 1000 பார்வையாளர்கள் வந்து தலைக்கு 3 பக்கங்களை வாசித்து, 3000 இம்ப்ரெசனைப் பெற்றிருந்தாலும், ஒட்டு மொத்த க்ளிக்குகளின் எண்ணிக்கையை பார்த்தால் 30 க்ளிக்குகள் விழுந்திருக்கும். இந்த 30 க்ளிக்குகளுக்கு 2$ ஏறி இருக்கும். குத்துமதிப்பாக 95 முதல் 100 ரூபாய்.

ஆனால் குருஜி ஆட்ஸில் இதே 30 க்ளிக்குகளுக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் ஏறி இருந்தால் பெரிய விசயம்.
ஒரு க்ளிக்குக்கு ஐம்பது பைசா தரும் விளம்பரங்கள் குருஜியில் வந்ததை நண்பர் வடிவேலன் ஆர். சொன்னார்.

Google adsense சில ட்ரிக்குகள் செய்து ஒரே க்ளிக்கில் 10$ பார்த்தவர்களும் இருக்கிறார்கள். எனக்கு ஒரே க்ளிக்கில் அதிகபட்சமாக 7$ ஒரு முறை வந்தது. ஆனால் அது நல்ல விளம்பரமாகவும், வேறு நாட்டில் விழுந்த க்ளிக்காகவும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு நாட்டில் இருந்து வரும் க்ளிக்குகளைக் கொண்டே நமது வருமானம் கணக்கில் கொள்ளப் படுகிறது. ஒரே விளம்பரத்தை அமெரிக்காவில் இருந்து க்ளிக்கினால் கிடைக்கும் பண மதிப்பு, இந்திய க்ளிக்கால் கிடைக்காது. இது நான் கண்டறிந்த உண்மை.



கூகிள் ஆட்சென்ஸ் - புதிய பதிவர்களுக்காக

முன் குறிப்பு :
அருமை நண்பர் செந்தழல் ரவியின் பதிவின் எதிரொலியாக. கூடுமானவரை எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதி இருப்பதாக நினைக்கிறேன். புரியாதவர்கள் 3 முறையாவது படிக்கவும். வறட்டுத் தியரி என ஓடிவிடாதீர்கள். பதிவு முழுக்க முழுக்க பக்கா ப்ராக்டிகல்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவில் adsense கணக்கு வைத்திருப்பவர்கள் குறைவாக இருந்தனர். ஆதலால் கேட்டவர்களுக்கெல்லாம், ஏன் தமிழ் வலைப்பதிவு வைத்திருந்தவர்களுக்கும் கூட google ஆதரவளித்து adsense பயன்படுத்த உரிமை வழங்கியது. நான் எனது பழைய தமிழ் ப்ளாக் வழியாக ஒரு முறை முயற்சித்தேன் - அதற்கெல்லாம் கூட அனுமதி வழங்கப்பட்டதை நினைவு கூர்கிறேன். (நானே 2 வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் வலைப்பூ வாயிலாக ஆட்சென்ஸ் அனுமதி பெற்றேன். அப்போது அவர்கள் இவ்வளவு கெடுபிடிகளைக் கடைபிடிக்கவில்லை.)

ஆனால் தற்போது நிலைமை தலை கீழ். ஆங்கில வலைப்பூ ஆரம்பித்து 6 மாச காலம்
கடந்திருப்பவர்களுக்கும், பல்வேறு சோதனைகளைக் கடந்தே ஆட்சென்ஸின் அனுமதி
கிடைக்கிறது (இது இந்தியர்களுக்கு மட்டுமே).
ஏன் இப்படி?

இந்தியாவில் இருந்து ஆன்லைன் வழி வருமானம் ஈட்டுவதற்கு ஆசைப்படுபவர்கள் அதிகம். (ஏன் என்றால் மக்கள் தொகை பெருக்கம். இத்தனை சனம் இருக்கோம். அத்தனை சனத்துக்கும், உரிமம் வழங்கிவிட்டால் கூகிளுக்கும் பல்வேறு பிரச்சினைகள். ஆதலால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துத்தான் அனுமதி வழங்குகிறது. அதில் முதல் தகுதி - வலைப்பூ ஆரம்பித்து குறைந்தது 6 மாசகாலம் ஆகி இருத்தல் வேண்டும்.) ஆனால் இது அவர்களது விதிமுறைப் படிவத்தில் இடம் பெற்றிருக்கிறதா? என்பதை சோதித்து அறியுங்கள்.

சரி. பழைய பதிவர்கள் - ஏற்கனவே adsense அக்கவுண்டை எப்படியே பெற்றிருப்பவர்கள் - ஆனால் இது வரை பைசாவைக் கண்ணில் காணாதாவர்கள் - அவர்களுக்கு நான் கூறுவது ஒன்றுதான் - தமிழில் எழுதி ஏன் ஏதாவது ஒரு இந்திய பிராந்திய மொழியில் எழுதி - அதன் மூலம் கூகிள் வழியாக பணம் பார்க்க முடியாது.

பணம் பார்க்க ஆசைப்பட்டால் - ஆங்கில வலைப்பூ / தளம் ஆரம்பித்து அதில் உங்கள் ஆட்சென்ஸ் கோடிங்கை இணைத்து நல்ல traffic உண்டாக்கி அதன் மூலம் தொடர்ந்து முயற்சிக்கவும்.

இட்லி சாப்பிட வேண்டும் என்றாலே முதல்நாளே மாவரைத்து அடுத்த நாள் தான் தயாரிக்கிறோம். அதற்கே குறிப்பிட்ட நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஆட்சென்ஸும் அது மாதிரித்தான் - பொறுமை வேண்டும்.

புதிய வலைப்பதிவர்கள் கவனத்திற்கு - உங்களுக்கு adsense account உடனே வேண்டுமா?

இப்போதே ஒரு ஆங்கிலப்பதிவைத் துவங்கி, மாதத்திற்கு 5 பதிவுகளாவது எழுதி வாருங்கள். சின்னச் சின்னப் பதிவாக இருந்தால் கூடப் பரவாயில்லை. அதில் உங்கள் கருத்துக்களை அள்ளித் தெளித்து வாருங்கள். ஆறு மாசம் கழித்து முயற்சித்தால் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 6 மாச காலத்திற்குள் இந்த வலைப்பூவின் page rank - அதை கண்டிப்பாக பூஜ்யத்தில் இருந்து 2,3 என அதிகரித்து வைக்க முயற்சிக்கவும்.

சரி. ஒரு வழியாக கூகிள் ஆட்சென்ஸ் அனுமதி பெற்றுவிட்டோம். இனி என்ன செய்வது?

முதல் 10$ சேர்க்க வேண்டும். உங்கள் வலைப்பூவின் பதிவுகளை நமது மக்கள் பார்த்து பிடித்திருந்தால், படிப்பவர்களின் கருத்தைக் கவனத்தைக் கவர்ந்திருந்தால், அதில் வரும் விளம்பரங்களின் கவர்ச்சி அவர்களை ஈர்த்திருந்தால் - அதில் என்னதான் இருக்கிறது என ஒரு க்ளிக்குவார்கள். இப்படி விளம்பரங்களை க்ளிக்கி அதன் மூலம் அவர்கள் அந்த டார்கெட் web siteல் சிறிது நேரம் உலவுவார்கள். எவ்வளவு நேரம் உலவுகிறார்கள் என்பதைப் பொறுத்தும் உங்களது கணக்கில் பணம் சேரத்துவங்கும். முதல் 10$ சேர்ந்ததும், உங்களது முகவரிக்கு google அனுப்பிய PIN number வந்து சேரும். இது ATM PIN எண்ணைப் போன்றது. இதை நீங்கள் உங்கள் ஆட்சென்ஸ் கணக்கைத் திறந்து அதில் தட்டெழுத வேண்டும்.

இந்த எண்ணை நீங்கள் சரியாக அளித்த பிறகுதான் உங்களுக்கு கூகிள் அளிக்கும் காசோலை @ check வீடு வந்து சேரும். இந்த எண்ணை 3 முறைகளுக்கு மேலாக தவறாக தட்டக் கூடாது.

நீங்கள் 10$ சேர்த்ததும் உடனே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என எண்ண வேண்டாம். அவர்கள் அங்கே அனுப்பி உங்கள் கைக்கு வந்து சேர்வதற்கு 20 முதல் 30 நாட்கள் வரை ஆகும். பொறுமை அவசியம்.

ஒரு முக்கியமான விசயம் : எந்தக் காரணம் கொண்டும் உங்கள் வலைப்பூவின்,
உங்கள் கணக்கின் விளம்பரங்களை - உங்கள் கணினி, உங்கள் IP address
வாயிலாக ஒரு போதும் க்ளிக் செய்துவிடாதீர்கள். இது ஒரு முக்கியமான கோட்பாடு. தவறிக்கூட நமது விளம்பரத்தை நாமே ஒரு ஆர்வத்தில் கூட க்ளிக் செய்துவிடக் கூடாது.

தமிழ் தளங்களில் ஆட்சென்ஸ் போட்டோ, இந்திய மொழிகளில் ஆட்சென்ஸ் போட்டோ
சிறிது சம்பாதிக்கலாம் என்பது உண்மை. ஆனால் முழுக்க முழுக்க இந்திய
மொழிகளிலோ, தமிழிலோ இருக்கும் ஒரு வலைத்தளத்தை கூகிள் சப்போர்ட் செய்யாது
என்பதே உண்மை.

தினமலர் போன்ற தளங்களில் கூகிள் ஆட்சென்ஸ் வருகிறதே? எனக் கேட்பீர்கள்.

அவர்களது தளத்தின் page rank அதிகம். ஒரு நாளைக்கு பல லட்சக்கணக்கானோர்களால் பார்வையிடப்படுகிறது. அத்தனை லட்சம் ஹிட்கள் கொடுக்கிறார்கள். அதனால் அவர்களை premium உறுப்பினர்களாக்கி இருப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட வரையறையைக் கடந்து எக்கச்சக்க visitors நமது தளத்தைப் பார்வையிட்டால், நாமும் premium user @ பயனராக ஆகலாம்.

நமது வலைப்பூ / தளத்தில் எத்தனை விளம்பரங்களை காட்சிக்கு வைக்கலாம்?

ஒரு பக்கத்தில் அதிகபட்சமாக 3 விளம்பரங்களுக்கு மட்டுமே அனுமதி. அது பட வடிவில், எழுத்து வடிவில் , படமாகவோ (அ) எழுத்தாகவோ இருக்கலாம். அதிகபட்சம் 3 விளம்பரங்களை ஒரு பக்கத்தில் காண்பிக்கலாம். ப்ரீமியம் உரிமம் பெற்றவர்களுக்கு இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

எக்காரணம் கொண்டும் தகவல்களே இல்லாத வெற்றுப்பக்கத்தில் @ empty pageல் கூகிள் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தாதீர்கள். அப்படிச் செய்தால் - அது பொதுச்சேவை @ பப்ளிக் சர்வீஸ் விளம்பர்ங்களையே காட்டும்.

இது போக இரண்டு சர்ச் பாக்ஸ் வைத்துக்கொள்ளலாம். 10$ சேர்த்துட்டோம். அதன் பிறகும் சேர்த்துச் சேர்த்து, இப்போது 160$ வரை சேர்த்துட்டோம். ஆனால் இன்னும் பின் எண் வரவில்லையா? மறுபடி பின் எண்ணை அனுப்புங்கள் என request செய்யலாம்.
அவர்கள் மீண்டும் பின் எண்ணை அனுப்புவார்கள். அந்த பின் எண்னை ஒப்பிட்டுப் பார்த்த பிறகுதான் உங்களுக்கு காசோலை கிடைக்கும் என்பதை நினைவில் நிறுத்தவும்.

உங்கள் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். முகவரி மாற்றம் இருப்பின் மாதத்தின் 15ம் தேதிக்கு முன்னரே தெரிவித்து விடவேண்டும்.

நமக்கு நாமே என்று நமது ஐபி வழியாக, நம் கணினி வழியாக நமது விளம்பரங்களைக் க்ளிக்க கூடாது. ஒரு குழுவாகச் சேர்ந்து நீ எனக்கு / நான் உனக்கு என மாற்றி மாற்றி க்ளிக்
செய்யக் கூடாது. இதற்கு க்ளிக் ரிங் என்பார்கள். கூகிளின் database ல் எந்த IP address @ ஐபி முகவரியின் வழியாக க்ளிக் செய்யப்பட்டது என்கிற புள்ளிவிவரம் @ statistics பதிவாகிவிடும்.

ஒவ்வொரு க்ளிக்கின் ஐபி முகவரியும் அந்த டேட்டாபேசில் பதிந்திருப்பார்கள். நீ எனக்கு / நான் உனக்கு என மாற்றி மாற்றி க்ளிக் ரிங் செட்டப் செய்திருந்தால் - இரண்டு ஐபிகளும் ஒன்றை ஒன்று காட்டிக்கொடுத்து - இருவரது கணக்குகளும் முடக்கப்படும்.

எந்தெந்த மொழிகளை ஆட்சென்ஸ் ஆதரிக்கிறது என்பதை https://www.google.com/adsense/support/bin/answer.py?hl=en&answer=9727 அறியலாம்.

ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இது நாள் வரை - எந்த இந்திய பிராந்திய மொழியையும் ஆட்சென்ஸ் ஆதரிக்கவில்லை. அப்படி நீங்கள் தமிழ் தளத்தில் ஆட்சென்ஸ் விளம்பரத்தைக் கண்டிருந்தால் - அது ப்ரீமியம் பயனர்களுக்கானது என்பதை அறிந்திடுங்கள்.

பின் எண் சோதனை வெற்றியடைந்துவிட்டது. அதன் பிறகு சிறிது சிறிதாக 100$ சேர்க்க வேண்டும். 100$ ஐ விட அதிகமாக உங்கள் கணக்கில் பணம் சேர்ந்திருந்தால், உங்களுக்கு
காசோலை அனுப்புவார்கள். சரி.

அதற்கு என்ன விதிமுறை?

இன்று தேதி ஜூன் 4. இந்த மாதம் 30ம் தேதிக்குள்ளாக நீங்கள் 100$ ஐ சேர்த்துவிட்டீர்கள்.
மாசத்தின் கடைசித் தேதிக்கு உள்ளாக 100$ ஐ தாண்டி உள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம்.
அவர்கள் எப்போது செக் அனுப்புவார்கள்.

கூகிள் ஆட்சென்ஸில் உங்கள் அக்கவுண்ட்டை சில பரிசோதனைகள் (auditing) செய்வார்கள்.

இந்தப் பரிசோதனைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே வீட்டுக்கு பணம் அனுப்புவார்கள்.
ஜூன் 30க்குள் 100$ ஐத் தொட்டவர்களுக்கு, ஜூலை மாசத்தின் கடைசி வாரத்தில் காசோலை அனுப்புவார்கள். அது ஆகஸ்ட் 2ம் வாரத்தில் உங்கள் கைக்குக் கிடைக்கும்.

உங்கள் வலைப்பூவின் ஹிட் ரேட், வருவாய் ஒவ்வொரு மாதமும் 100$ ஈட்டுவதாக வைத்துக்கொண்டாலும் இதே விதிமுறைதான்.

ஜூன் 30 க்குள் 100$ ஐத் தொட்டபிறகு, 50 நாட்களுக்குள் உங்களுக்குப் பணம் வரவில்லை என்றால் மீண்டும் அனுப்பவும் என மறுபடி request விடலாம். முக்கியமான விசயம் : தமிழ்தளங்களில் உங்கள் கோடிங்கை சேர்த்தால் பொதுச்சேவை @ பப்ளிக் சர்வீஸ் விளம்பரமே வரும். அதை க்ளிக்கினாலும், க்ளிக்காவிட்டாலும் பைசா வரவே வராது.

எக்காரணம் கொண்டும் அவர்கள் கொடுக்கும் கோடிங்கை மாறுதல் (tampering) செய்யவே கூடாது. அவர்களது கோடிங்கை சிதைத்து ஏதேனும் மாற்றி தமிழ் தளத்தில் பயன்படுத்தினால் விளம்பரங்கள் தென்படலாம். ஆனால் அது ஆபத்துதான். அவர்களது விதிமுறையில் ஒன்றாக கோடிங்கை மாறுதல் செய்யக்கூடாது என்பது மிக முக்கியமானது.

ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சென்ஸ் அக்கவுண்டை வைத்துக்கொள்ளலாமா? முடியாது. அதாவது ஒருவர் பெயர், முகவரிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வாங்க முடியாது. வேறு பெயர், முகவரி, தொலைபேசி எண் கொடுத்து அடுத்தவர் பெயரில் வாங்கலாம்.

ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே IP வழியாக திறக்காதீர்கள். சிறு பிழை தென்பட்டாலும், இரண்டு அக்கவுண்டுகளையும் கூகிள் முடக்கிவிடும் அபாயம் உள்ளது.

தனித்தனி IP address வழியாக கையாலளாம். இப்போது எங்கே பார்த்தாலும், அலுவலகம்
அல்லாத வீட்டு இணையங்களில் dynamic IP வைத்திருப்போம். ஒவ்வொரு முறையும்
வேறு ஐபியாக செட் ஆகும். இப்போது என்ன செய்வது? இது வரை எழுதியதைப் படியுங்கள். புரியவில்லை எனில் கேளுங்கள். பிறகு இந்தக் கேள்விக்கு விடை தருகிறேன்.

உங்கள் ட்விட்டர் தகவல்களை அப்படியே தரவிறக்க

Twitter இப்போது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. Google முதல் Microsoft வரை எல்லோருமே ட்விட்டரை பேரம் பேச முயற்சிக்கின்றனர்.

நமது கணினியின் வன் வட்டு @ hard disk அடிக்கடி பழுதாகி தகவல் இழப்பு ஏற்படுவது தெரிந்த விசயம்தான். இதற்காக அடிக்கடி backup எடுத்து வைத்துக்கொள்வது வழமையான செயல்தான்.

அது போல ட்விட்டரில் நமது தகவல்கள் அனைத்தையும் backup செய்ய வழி உள்ளதா?

இதற்காக பிரத்தியேகமாக சில பயன்பாடுகள் / தளங்கள் உள்ளன. அவை கீழே :


Do you wish to take entire backup of your twitter account data?"

http://twittersafe.com/

http://tweetcrunch.com/2008/07/26/backup-your-friends-and-followers-on-twitter/

http://jameswilliams.be/blog/entry/103

http://johannburkard.de/blog/programming/java/backup-twitter-tweets-with-twitterbackup.html

http://tweetbackup.com/

http://www.tweetake.com/

விசுவல் பேசிக்கில் பட்டையைக் கிளப்ப

Java மொழியை விரும்பிக் கற்றவர்கள் கூட Visual Basic பக்கம் எப்போதாவது மழைக்கு ஒதுங்கியது போல் ஓரக்கண்ணால் பார்த்திருப்பார்கள். மிக எளிமையானதாகவும், சுலபத்தில் கற்றுத் தேர்வதற்கு வசதியாகவும் அமைந்தது இது

ஏதேனும் ஒரு சிறு Coding எழுதுவதாக இருந்தால்கூட ஆரம்பத்தில் இருந்து முழுமையாக நீங்களே எழுத வேண்டிய அவசியம் இல்லை. கீழே கொடுக்கப்பட்ட தளங்களில் ஏகப்பட்ட coding இருக்கின்றது.



அதில் ஏதேனும் ஒன்றை எடுத்து உங்கள் தேவைக்கேற்ப மாற்றியமைத்தாலே போதும்.

Visual Basic ல் பட்டையைக் கிளப்ப நினைத்தீர்கள் என்றால் கீழ்க்கண்ட 6 இணையத்தளங்களை வலம் வாருங்கள். உங்களுக்கு சேவை செய்வதற்காகவே பிறவி எடுத்த வலைத்தளங்கள் இவை.

planet-source-code.com

vbaccelerator

vbcode

andreavb

a1vbcode

devx.com/vb

மொபைல் வழி இணைய மேய்ச்சலின் வேகத்தை அதிகரிக்க

"கற்றோற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" - அது போல "உலவத் தெரிந்தவருக்கு செல்போன் இருக்குமிடம் கூட சொர்க்கம்."

உங்களது செல்பேசிக்காண இணைய இணைப்பு மிகவும் வேகம் குறைந்ததாக உள்ளதா?
பக்கங்கள் திரையில் லோட் ஆவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா?

உங்களுக்கு உதவுவதற்காகவே http://www.mobtimizer.com/ உள்ளது.
மொபைல் போன் @ செல்பேசிகள் வழியாக இணைய உலவுதலை துரிதப்படுத்துகிறது.

Do you want to increase the browsing speed for your mobile phone?

ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் எக்கச்சக்கமாக படங்களும், விளம்பரங்களும்
வருவதாக வைத்துக்கொள்வோம். அந்தத்தளத்தை மொபைல் உலவி வாயிலாக ப்ரவுசிங்
செய்தால், பக்கங்கள் லோட் ஆகுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.

நமக்கு அந்த தளத்தில் உள்ள செய்திகள் வேகமாக தரவிறக்க வேண்டும்.
படங்கள் வேண்டவே வேண்டாம் - எனக் கருதினால் உங்கள் செல்போனில்
http://www.mobtimizer.com/ தளத்தில் நுழைந்து
அங்கே தேவையான தளத்தின் URL முகவரியை உள்ளிட்டாலே போதும்.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP