நாளை நடப்பதை நானறிந்தால் நானே கடவுள்.

கணினி உலகின் கடை மூடும் விழா

இணையம் என்னும் சமுத்திரத்தில் ஏராளமான மென்பொருட்கள், பயன்பாடுகள்,
சேவைகள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் இவை ஆண்டாண்டு காலத்திற்கும் இலவசமாகவே கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. பல்வேறு இலவச சேவைகள் தங்கள் கடையை மூடிவிட்டு வேறு வேலையைப் பார்க்கக் கிளம்பி விட்டன. இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ளது டிரிம்.

மிக நீளமான யுஆரெல் இணைய முகவரியை சுருக்கி சிறியதாக மாற்றுவதற்கு
பல்வேறு தளங்கள் இலவசச் சேவை வழங்கி வந்தன.
டிரிம் என்கிற தளம் இதில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. பழைய
புள்ளி விவரங்களை மட்டுமே வைத்து ஒரு நிறுவனத்தின் வெற்றியை தீர்மாணிக்க இயலாது. நடப்பு சமயத்தில் என்ன நிலைமை என்பதை வைத்தே ஒரு நிறுவனத்தின் வலிமை ஆராயப்பட வேண்டும்.

டிவிட்டர் நிறுவனத்தால் வாங்கப்படலாம் என எதிர்பார்த்த டிரிம் அதற்கான
முயற்சியில் இறங்கி தோல்வி கண்டது. பிட்.லி என்கிற இணைய முகவரியை சுருக்கும் நிறுவனத்தை டிவிட்டர் ஆதரிக்கிறது. இதனால் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த டிரிம் தனது சேவையை விலக்கிக்கொள்வதாக கூறிவிட்டது.

தனது தளத்தைப் பயன்படுத்திய லட்சக்கணக்கான பயனர்களால் தனக்கு எந்த
விதத்திலும் லாபம் இருந்ததாக டிரிம் நிறுவனம் கூறவில்லை. மாறாக லாபமே
இல்லை என்பதை வெளிப்படையாகக் கூறிவிட்டது. தனது பயனர்களுக்கு ஒரு
வருத்தத்தைப் பகிர்ந்த செய்தியை வீட்டுப்பக்கத்தில் வைத்துள்ளது இந்தத்
தளம். புதியதாக டிரிம் வழியாக எந்த முகவரியையும் சுருக்க முடியாது என்பது
பயனர்களுக்கு அதிர்ச்சியான செய்தி.

இது ஆரம்பம் தான். போகப்போக இன்னும் என்ன என்ன நடக்குமோ? நாளை நடப்பதை நானறிந்தால் நானே கடவுள்.

http://tr.im

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP