மிஸ்டர் எக்ஸ் அனுப்பிய மின்னஞ்சல் - நகைச்சுவை

மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார். மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது.

வேறு ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இழந்தவள். இறந்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள். பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது Laptop ஐ திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா எனப் பார்வையிட்டாள்.

அவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Laptop இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில் பின்வருமாறு இருந்தது.


அன்பான மனைவிக்கு,

எனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம் தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.

இப்படிக்கு உன் அன்புக் கணவன்


இறந்து போன கணவன் e-mail அனுப்பி தன்னையும் வரச்சொன்னதாகப் பிழையாக நினைத்து மயக்கம் போட்டவளை என்னவென்று சொல்வது? அஞ்சலை அனுப்பியவரது முகவரியைப் படிக்காமல் விட்டது அவளது தவறுதானே.

நீதி : எப்போதுமே மின்னஞ்சலைத் திறந்து படிப்பதற்கு முன்னர் அனுப்பியவர் யார்? என்பதை உறுதிப்படுத்திய பிறகே திறந்து படிக்கவும். Spam Mail களைப் படிக்காமலேயே அழித்துவிடவும்.

இப்படித்தான் தினமும் எக்கச்சக்கமாக SPAM அஞ்சல்கள் நிறைய வந்துகொண்டிருக்கின்றன. Yahoo, MSN கூட்டு லாட்டரியில் உங்களுக்கு இத்தனை கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது. என்றெல்லாம் நிறைய Spam Mail வந்துகொண்டுதான் இருக்கின்றன.

தொழில்நுட்பப் பதிவுகளில் ஒரு புதிய கூட்டு முயற்சி


இத்தனை காலமாக தமிழ்2000 என வலைப்பூவில் பல்வேறு தலைப்புகளில் எழுதியும், பல ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்தும் வந்தேன். பின்பு தமிழ்நெஞ்சம் என வலைத்தளம் ஆரம்பித்தேன்.

சமீபத்தின் நண்பர் திரு. கார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து ஒரு புதிய தளத்தில் கூட்டு முயற்சியாக பிரத்தியேகமான தலைப்புகளில் தொழில்நுட்பப் பதிவுகளை வெளியிட்டு வருகிறேன்.

அந்தத் தள முகவரி : http://www.tamiltech.info

எனது பதிவுகளை அங்கேயும் நீங்கள் படிக்கலாம்.

அங்கே உள்ளவை முழுக்க முழுக்க 100% தொழில்நுட்பம் சார்ந்தவையாக மட்டுமே இருக்கும்.

தமிழ்நெஞ்சம் தளத்தில் வழமைபோல எல்லாமும் கலந்த கலவையாக (தொழில்நுட்பம், சிறுகதை - மொழியாக்கங்கள், மொக்கைகள், படங்கள்) என வெளிவரும்.

இது ஒரு கூட்டுமுயற்சி. உங்கள் ஆதரவு என்றும் தேவை.

இதை ஏன் தெரிவிக்கிறேன் எனில் மின்னஞ்சல் வாயிலாக எனது பதிவுகளைப் படிப்பவர்களுக்கு இந்தக் கூட்டுமுயற்சி பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு இதை அறிமுகப்படுத்துவதற்காகவே இந்தப் பதிவு.

http://www.tamiltech.info தளத்தில் இது வரை நான் எழுதிய தொழில்நுட்பப் பதிவுகளின் பொருளடக்க்கம் கீழே.

வலைப்பதிவர்கள் கவனத்திற்கு

Powerpoint Slide ல் இருந்து படங்களைப் பிரித்தெடுக்க

FLV லிருந்து DVD. டிவிடியிலிருந்து FLV மாற்றுவதற்கு

PDF கோப்புகளைத் தேட சிறப்புத் தேடுபொறி

இணைய அரட்டை அடிக்க Digsby - (பலவும் ஒன்றில்)

VideoPad- இலவச வீடியோ எடிடிங்க் மென்பொருள்

Flash Drive ஐ ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி?

இலவச Domain வேண்டவே வேண்டாம் - ஏன்?

மிகச்சிறந்த Logo களை உருவாக்க 11 online தளங்கள்

Yahoo Messenger க்கான தட்டச்சுக் குறுக்கு வழிகள்

கணினியின் தேவையற்ற காலி Folder களை அழிப்பதற்கு

VSoft ரேபிட்ஷேர் தரவிறக்கி

Blue Ray Disc களில் தகவல்களை ஏற்ற உதவும் 5 இலவச மென்பொருட்கள்

இணையத்தில் புதிது - RIA நுட்பம்

Microsoft ன் வரலாறு 1975 முதல்..

கணினி விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்ய 5 தளங்கள்

USB கருவிகளின் செயல் வேகத்தை அளவிடுவது எப்படி?

கணினிப் பிழைகளுக்கான தேடுபொறி - ஒரு ஆய்வு

உங்கள் கடவுச்சொல் எப்படிப்பட்டது?

101 மிகச்சிறந்த மென்பொருட்களும், தளங்களும் உங்களுக்காக

Microsoft வழங்கும் MVP விருதுகள்

நன்றிகளுடன்,
தமிழ்நெஞ்சம்.

குதிரையை அடையாளம் காண்பது எப்படி?


ஐரிஷ் (Irish) தேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தமக்காக ஆளுக்கு ஒரு குதிரையை வாங்கினார்கள்.

இரண்டு குதிரைக்கும் வித்தியாசம் கண்டறிவதற்காக ஒரு குதிரையின் வால் (tail) வெட்டப்பட்டது.

”வால் உள்ள குதிரை என்னுடையது. வால் அற்றது உன்னுடையது”, இப்படி முடிவானது.

இரண்டே நாளில் குறும்பு மிக்க இளைஞன் மற்றொரு குதிரையின் வாலையும் வெட்டிவிட்டான். இப்போது இரண்டு குதிரைக்குமே வால் இல்லாததால் எந்தக் குதிரை யாருடையது எனக் கண்டறிவது கடினமாக இருந்தது.

மிகுந்த யோசனைக்குப் பிறகு ஒருவன் சொன்னான் - “ஒரு குதிரைக்கு இடைவார் ஒன்றைக் கட்டுவோம். மற்றொன்றுக்கு கட்டாமல் விட்டுவிடுவோம். இடைவார் உடைய குதிரை என்னுடையது. மற்றொன்று உன்னுடையது”.

ஒரு வழியாக இடைவார் எனப்படும் belt கட்டப்பட்டது.

ஆனால் அடுத்த நாளே அதே குறும்பான இளைஞன் belt கட்டப்பட்ட குதிரையில் இருந்து belt ஐ கழற்றி விட்டான்.

மீண்டும் இருவரும் குழப்பத்திற்கு ஆளாயினர்.

முதலில் வந்த ஐரிஷ்காரன் (Irish) சொன்னான் - “இது தான் கடைசி சந்தர்ப்பம் - இரண்டு குதிரைகள் உள்ளன.வெள்ளைக் குதிரை என்னுடையது. கருப்பு நிறத்தில் உள்ள குதிரை உன்னுடையது”.

நீதி : எளிய உண்மையானது உடனே கண் பார்வையில் படாது.
காலம் சென்றபிறகுதான் கண்ணுக்குக் காட்சி தரும்.
அருகில் இருக்கும் கோவிலின் மகத்துவம் நமக்குத் தெரியாது.
ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவருக்குத்தான் அதன் மகத்துவம் தெரியும்.

சட்டமும் தர்க்கமும் - குறும்புக் கதை

ஒரு சட்டக்கல்லூரி மாணவன் தனது பரீட்சையில் மிகக்குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டான்.

தனது மதிப்பெண் சான்றிதழைப் பார்த்துவிட்டு தனது பேராசிரியரிடம் கேட்டான். அவருக்கு வயது 50+.

மாணவன் - “நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா?”.
பேரா - “தாராளமாக. பதில் கூறுவது எனது கடமை”.

மாணவன் - “நல்லது. நான் கேட்கும் கேள்விக்குப் பதில் தேவை. நீங்கள் சரியான பதிலைச் சொன்னால் எனக்கு வழங்கப்பட்ட மிகக்குறைந்த மதிப்பெண்ணையே அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் தவறான பதிலைச் சொன்னால் எனக்கு உயர் மதிப்பெண் வழங்க வேண்டும். இதை ஏற்றுக்கொள்கிறீர்களா?”.

பேரா - “சரி. கேள்வியைக் கேள் மகனே!”.

மாணவன் - 1) சட்டப்படி (law) சரியானதும், தர்க்க (logical) ரீதியிலாக தவறானதும் எது?
2) சட்டப்படி தவறானதும், தர்க்கப்படி சரியானதும் எது?

நீண்ட நேரம் யோசித்த பிறகும் எந்த ஒரு முடிவுக்கும் வராத பேராசிரியர் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் தெரியவில்லை என ஒத்துக்கொண்டார். அந்த மாணவன் பெற்ற குறைந்தபட்ச மதிப்பெண்ணை அதிகபட்சமாக மாற்றுவதற்கு சம்மதித்தார்.

பின் மாணவனின் முகத்தைப் பார்த்து அதே கேள்வியைத் திரும்பக் கேட்டு ”பதில் வேண்டும்”, என்றார்.

மாணவன் சிரித்துக்கொண்டே சொன்ன பதில்கள் :

1) சட்டப்படி (law) சரியானதும், தர்க்கரீதியிலாக தவறானதும் எது?
உங்களுக்கு 55 வயது ஆன பின்பு இப்போது 20 வயது குமரியைத் திருமணம் செய்திருக்கிறீர்கள். இது சட்டப்படி சரியானதாக இருந்தாலும், தர்க்க ரீதியிலாகத் தவறானது.

2) சட்டப்படி தவறானதும், தர்க்கப்படி (logical) சரியானதும் எது?
உங்கள் மனைவிக்கு 25 வயதுக் காதலன் ஒருவன் இருக்கிறான். அது தர்க்கப்படி சரி ஆனால் சட்டப்படி தவறு.

அந்த 25 வயதுக் காதலனுக்கு நீங்கள் முதலில் குறைத்த மதிப்பெண் வழங்கினீர்கள். இப்போது அதிகபட்ச மதிப்பெண் வழங்கிக் கவுரவித்துவிட்டீர்கள். அவன் வேறு யாருமில்லை. நானே..

(இதுக்கு மேல என்ன நடந்துருக்கும்னு சொல்லத் தேவையில்லைங்க)

டூப்ளிகேட் பிரியர் விகடனாருக்கு நன்றி

ஒருத்தர் என்னுடைய பழைய பதிவைச் சுட்டார். அது யூத்ஃபுல் விகடன் வரை போயிருச்சு.

இருந்தாலும் விகடனார் ஒரிஜினலைவிட டூப்ளிகேட்டை மதித்துள்ளார். அந்தப் பதிவின் சுட்டி கீழே.

http://yespinki.com/2009/03/blog-post_23.html

அவரே அதைப் பற்றி தனிப் பதிவு எழுதியுள்ளார் :

கடந்த பதிவு “சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும்..”
விகடனின் சிறந்த ப்ளாக் பிரிவில் தேர்ந்தெடுக்க பட்டமைக்கு என்னுடைய நன்றிகள் ! கூடவெ தமிழ்நெஞ்சம் அவர்களுக்கும் என் நன்றி!!
http://youthful.vikatan.com/youth/bcorner.asp
என்ற விகடன் முகவரிஇல் குட் Blogs பிரிவில் காண்க ..

சுட்ட இடம் :
http://www.tamilnenjam.org/2008/12/2008.html

அவருக்கு நான் 5 பின்னூட்டங்கள் போட்ட பிறகுதான் அவர் ஒரு courtesyக்காக நன்றி : தமிழ்நெஞ்சம் அப்படின்னு போட்டார். அவருக்கு எனது நன்றி. ஆனால் நான் போட்ட 5 பின்னூட்டங்களையும் நீக்கிவிட்டார்.

பதிவுகளைச் சுடுபவர் கவனத்திற்கு:
இனிமேல் எனது பதிவுகளில் நீங்கள் சுட்ட பதிவுகளுக்கு எப்போதாவது விகடனின் ஒத்துழைப்பு இருந்தால் அதை மட்டும் எனக்குத் தெரிவியுங்கள் அது போதும்.

ஏனெனில் விகடனாருக்கு சுட்ட பதிவு எது? / ஒரிஜினல் பதிவு எது என்று வித்தியாசம் தெரியாது. அதற்காகத்தான்.

மற்றபடி நீங்கள் அனைவரும் எனது நண்பர்களே!

ஆனால் விகடனில் சுட்ட பதிவு அங்கீகரிக்கப்பட்டால் மட்டும் எனக்கு ஒரு கமெண்டு போடுங்கள். அது போதும்..

குறிப்பு :

http://www.tamiltech.info/magazine/archives/ria-technology/ இந்த பதிவை எழுத எனக்கு 40 முதல் 70 நிமிடங்கள் ஆனது. 12 இணையத் தளங்களை refer செய்தபிறகுதான் இதை எழுதினேன். ஆனால் இதையும் ஒருத்தர்

http://www.tamilveli.com/showurl.php?url=http://piriyatharsan.blogspot.com/2009/03/blog-post_28.html பதிவில் ரிப்பிட் அடித்திருக்கிறார்.

காப்பியடித்ததைப் பற்றி நான் குற்றம் சொல்லவேயில்லை. ஆனால் காப்பி அடித்த பிறகு அதற்குக் கிடைத்த அங்கீகாரத்தை மட்டும் முறைப்படி ஒரு கமெண்ட் பாஸ் பண்ணிட்டீங்கன்னா புண்ணியமாப் போகும்.

புரிதலுக்கு நன்றி,

தமிழ்நெஞ்சம்.

(வழக்கம் போல இதை மொக்கைப் பதிவாகவே கருதவும். சும்மா தமாசு.)

இணையமின்றி, கணினியின்றி தொலைக்காட்சியிலேயே யூட்யூப் பார்ப்போமா?

நவீனத் தொழில்நுட்பம் மூலம் ஒரு வழியைக் கண்டறிந்துள்ளனர். தொலைக்காட்சியின் (LCD HDTV Television) ஊடாக Youtube வீடியோக்களை உடனடியாகப் பார்க்க இயலும். இதற்காகத் தனியே இணைய இணைப்பும் (internet connection) தேவையில்லை.

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

ஆர்வமாக இருக்கிறதே என்கிறீர்களா?

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இதோ இப்படித்தான்..
Now You can watch Youtube Videos in Your LCD HD Television
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|




வந்த வழி : http://ignaciopilotto.wordpress.com/2009/03/06/youtube-addict/
ஏப்ரல் 1 கொண்டாட்டங்களின் ஆரம்பம்....

நண்பர் அருண் தி ஹீரோ அவர்கள் எனக்கு வழங்கிய விருது

வலையுலக நண்பர்கள் மத்தியில் சமீபகாலமாக உள் சுற்று விருதுகள் வழங்கப்பட்டு வருகிற நல்ல வேளை இது.

உள் சுற்று விருதுகள் என்பது என்ன?

நமக்குப் பிரியமான நமது நட்பு வட்டாரத்தில் இருக்கும் நண்பர்களுக்கு நாமே விருது வழங்குதல்.

எனக்கு இந்த விருதை திரு அருண் தி ஹீரோ அவர்கள் வழங்கினார்கள்.

அவருக்கு அங்கிள் சஞ்சய் என்னும் சக வலைப்பதிவர் (மூத்தவர்) வழங்கினார். இப்போது நான் இதை நமது நண்பர்களுக்கு வழங்கவேண்டும்.

இப்போது இந்த வலைப்பதிவின் மூலமாக நான் என் சார்பாக பட்டாம்பூச்சி விருதினை வழங்குகிறேன். இதற்கு பட்டாம்பூச்சி விருது எனப் பெயரிட்டுள்ளனர். பட்டாம்பூச்சி எப்படி பல இடங்களுக்குப் பறந்து செல்கிறதோ அதேபோன்று நமக்கு வழங்கப்பட்ட விருதினை நாமும் பிறருக்கு வழங்கி தொடர்ந்து பட்டாம்பூச்சியைப் பறக்கச் செய்திட வேண்டும்.

நான் இங்கே 6 நண்பர்களுக்கு விருது வழங்கியுள்ளேன். இவர்கள் அனைவரும் தத்தமக்குப் பிடித்தமான வலையுலக நண்பர்களுக்கு இவ்விருதினை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

1) திரு. வடுவூர் குமார் அவர்கள்
இத்தனை ஆண்டு காலமாய் அனைவருக்கும் பின்னூட்டமிட்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் பின்னூட்டச்சக்கரவர்த்தி இவரே.

2)திரு. வேலன் அவர்கள்
குழந்தை மனம் கொண்டவர். இவரது பதிவுகள் அனைவருக்கும் புரியவேண்டும் என்று மிக எளிமையாகப் படைப்பவர்.போட்டோஷாப் பற்றிய தொடரை வழங்கிக்கொண்டிருக்கிறார்.

3) திரு. ஜிம்ஷா என்கிற வெற்றிச் செல்வன் அவர்கள்
மிக எளிமையான மனிதர். பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிகிறார். எனக்காக ஒரு லோகோ உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

4) திரு. தியாகராஜன் அவர்கள்
கரூர் மாநகரில் டெக்ஸ்டைல் வணிகம் செய்கிறார். எப்போதாவது எழுதுவார். அவரை அடிக்கடி எழுத வைக்க வேண்டும் என்பதற்காகவே இங்கே அவரைக் குறிப்பிட்டுள்ளேன்.

5) திரு. ச.இலங்கேஸ்வரன் அவர்கள்
இலங்கை மண்ணில் வசித்தாலும் நமது தமிழ் நண்பர்களுக்குப் பரிச்சயமான அன்பர். கணினி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.மிக சமீபத்தில் திருமணமானவர். அவருக்கு அனைவரின் சார்பாகவும் திருமண வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

6)திரு. ஜுர்கேன் க்ருகேர் அவர்கள்
தான் சார்ந்திருக்கும் துறை பற்றி தனியே எழுதிக்கொண்டிருக்கிறார்.

நன்றிகளுடன்,

தமிழ்நெஞ்சம்

நன்றியறிவிப்புக் கடிதம் - யாருக்கு என்ன தேவை?


ஒரு குடும்பத்தில் நான்கு சகோதரர்கள் இருந்தனர். அவர்களது கல்லூரிப் படிப்பும் முடிந்தது. அவரவர்களும் அவர்கள் படித்த படிப்பின் துணைகொண்டு வழக்கறிஞர், மருத்துவர், பொறியாளர், மேலாளர் என வேறுவேறு துறைகளில் பயணம் செய்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விருந்தில் உணவருந்திக் கொண்டே பேச ஆரம்பித்தனர். இவர்கள் நால்வரும் வேறுவேறு திசைகளில், வெவ்வேறு துறைகளில் பிரகாசமாக இருக்கின்றனர். அனைவரும் வசிக்கும் இடங்கள் வேறு வேறாகவும், இவர்கள் அனைவரின் தாயார் வசிக்கும் இடம் வேறாகவும் இருப்பதால் எப்போதாவது ஒரு சந்திப்பு நிகழ்ந்து சகோதரர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திப் பேசி மகிழும் சந்தர்ப்பம் நிகழும்.

முதல் சகோதரர் சொன்னார் - “நம் அம்மாவுக்காக நான் ஒரு பெரிய வீடு - எனது கனவு மாளிகையைக் கட்டியிருக்கிறேன்”.

இரண்டாமாவர் சொன்னார் - “அம்மாவுக்காக பெரும் செலவில் ஒரு திரையரங்கத்தை வீட்டினுள் நிர்மாணித்திருக்கிறேன். Dolby ஒலிபெருக்கியம்சங்கள் கொண்டது அது.”

மூன்றாம் நபர் சொன்னார் - “என்னுடைய பங்காக ஒரு Mercedes காரை அம்மாவுக்குக் கொடுத்திருக்கிறேன்”.

(நான்காவது சகோதரர் இந்த விருந்தில் கலந்துகொள்வதற்குச் சற்றுத் தாமதமாகிவிட்டது. தற்போதுதான் உள்ளே நுழைந்தார். பிறர் கூறிய வாக்கியங்கள் அவருக்கு மீண்டும் சொல்லப்பட்டன. பின் உரையாடலைத் தொடர்ந்தார்)

நான்காம் நபர் சொன்னார்:


“உங்கள் எல்லோருக்கும் தெரியும். நம் அம்மாவுக்கு பைபிள் படிப்பதென்றால் ரொம்பப் பிரியம். ஆனால் அவளுக்கு இப்போது வயதாகிவிட்டதால் கண்பார்வை பிரச்சினை உள்ளது".

"அதனால் அவளால் பைபிள் படிக்க முடிவதில்லை. நான் ஒரு மத போதகரைச் (preacher) சந்தித்தேன். அவர் ஒரு கிளியைப் பற்றிச் சொன்னார். அந்தக் கிளிக்குக் கொடுத்த முறையான 12 ஆண்டுகாலப் பயிற்சியின் விளைவால் முழு பைபிளையும் படிக்கும் இயல்பைப் பெற்றிருக்கிறது. அந்தக் கிளியை அம்மாவுக்குப் பரிசாக வாங்க முடிவு செய்தேன்."


" ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் என 20 ஆண்டுகளுக்கான பணத்தை மாதா கோவிலில் முன் தேதியிட்ட காசோலையாகக் கொடுத்துவிட்டு வந்தேன். இந்தத் தொகையை நன்கொடையாகக் கொடுத்ததால் அவர்கள் அந்தக் கிளியை எனக்குக் கொடுத்தார்கள். முழு பைபிளையும் சப்தமாகப் படிக்கக் கூடிய அந்தக் கிளியை அம்மாவுக்குக் கொடுத்துவிட்டு இப்போதுதான் வந்தேன். அதனாலேயே இங்கே வரத் தாமதமாகிவிட்டது”.

இதைக் கேட்ட மற்ற மூவர் மனதிலும் நல்ல அபிப்பிராயம் உண்டானது.

அந்த விடுமுறைக் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு அவர்களது அம்மா ஒரு நன்றியறிவிப்புக் கடிதத்தை அனுப்பி இருந்தாள்.

1. மகனே மில்ட்டன் நீ எனக்குக் கொடுத்த வீடு மிகப் பெரியது (dream house). ஆனாலும் நான் அதில் ஒரே ஒரு அறையே போதுமானதாக உணர்ந்து ஒரு அறையில் வசிக்கிறேன். ஆனால் மீதியுள்ள எல்லா அறைகளையும் நான் சுத்தப் படுத்தியே தீரவேண்டியுள்ளது. எனினும் நன்றி

2. மகனே மர்வின் நீ எனக்குக் கொடுத்த Mercedes காரை நான் இன்னும் பயன்படுத்தவில்லை. எனக்கு மிகவும் வயதாகிவிட்டதால் என்னால் அதில் பயணம் செய்யமுடியவில்லை. எனக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் வீட்டுக்கே வந்து கொடுக்கிறார்கள். ஆதலால் உனது கார் நீ நிறுத்திய அதே இடத்திலேயே நிற்கிறது. இருப்பினும் நன்றி.

3. மகனே மைக்கேல் நீ எனக்கு ஒரு மிகப் பெரும் செலவிலால் ஆன ஒரு Dolby திரையரங்கத்தையே வீட்டினுள் நிர்மாணித்தாய். அதில் நான் மட்டும் தனியே அமர்ந்து படம் பார்க்கப் பிடிக்கவில்லை. எனது தோழியர் அனைவரும் இறந்துவிட்டனர். எனக்கு இப்போது காதும் கேட்கவில்லை. கண்ணும் தெரியவில்லை. அதனால் அந்த திரையரங்கத்தை நான் பயன்படுத்தவேயில்லை. இருப்பினும் நன்றி.

4. மகனே மெல்வின், நீ கொடுத்த பரிசுதான் எனக்கு மிக விருப்பமான ஒன்றாக இருந்தது. உனது அறிவை மெச்சுகிறேன். நான்கு சகோதரர்களில் இருந்து வந்த பரிசுகளில் நீ கொடுத்ததுதான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நீ கொடுத்த கோழியின் இறைச்சி மிகவும் ருசியானதாகவும், சத்தானதாகவும் இருந்தது. மிக்க நன்றி.

நீதி : உங்கள் கவுரவத்தைக் காட்டுவதற்காக பெரும் செலவு செய்து பரிசு கொடுத்திடலாம். ஆனால் அதை வாங்குபவருக்கு அந்தப் பரிசால் நன்மையா என யோசித்துவிட்டுக் கொடுக்கவும்.

கண் தெரியாத, காது கேட்காத ஒரு தாயிடம் பைபிளைப் படித்துக்காட்டும் விலைமதிப்பற்ற கிளியைக் கொடுத்தால் அவள் அதை கோழியென்று நினைத்துச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு கறி நன்றாக சுவையாக இருந்ததெனக் கடிதம் எழுதினாள்.

அவளுக்குத் தேவை சுவையான கோழி வறுவல் மட்டுமே. அவளிடம் இப்படி தேவையில்லாத பெரும் செலவுள்ள பொருட்களைக் கொடுத்து என்ன பயன். கிளியைக் கோழியென்று நினைத்தது அவளது மூடத்தனமா? கொடுத்தவரின் அறியாமையா?


டிஸ்கி:
நெடுநாட்களுக்குப் பிறகு இப்படி நீண்டதொரு பதிவை எழுதிவிட்டேன். இதை எப்படி எடுத்துக்கொள்வீர்களோ தெரியவில்லை!..!!..!!! மிகவும் பொறுமையாகப் படித்ததற்கு நன்றி.

ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் - ஏன் இந்த வித்தியாசம்?


ஒரு கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு ராஜா, மற்றும் ராம் இருவரும் திரும்பி வந்தனர்.

ராம் என்பவருக்கு ஒரு சந்தேகம் - “நான் சாமி கும்பிடும்போது புகை பிடிக்கலாமா?”.

ராஜா சொன்னார் - “நாம் நமது பூசாரியிடம் (priest) கேட்போமே!”.

ராஜா, பூசாரியிடம் கேட்டார் - “ஐயா, நான் சாமி கும்பிடும்போது புகை பிடிக்கலாமா?”.

பூசாரி சொன்னார் - “இல்லை மகனே!. இது நமது மத வழக்கத்திற்கு எதிரானது. கூடாது”.

இந்த நிகழ்ச்சியினை ராம் என்பவரிடம் சென்று சொன்னார் ராஜா.

ராம் சொன்னார் - “எனக்கு ஏதும் ஆச்சரியமாகத் தெரியவில்லை. நான் முயற்சிக்கிறேன்”.

இந்த முறை ராம் எனப்பட்டவர் பூசாரியிடம் கேட்டார் - “ஐயா. எனக்குக் கடவுள் பக்தி மிக அதிகம். ஆனால் நான் எந்நேரமும் புகைபிடிக்கும் செயின் ஸ்மோக்கர் ஆகிவிட்டேன். ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகளாவது புகைக்கிறேன். ஆனாலும் நான் கடவுள் பக்தி மிக்கவன். எனக்காக நீங்கள் ஒரு உண்மையைப் பரிந்துரைக்க வேண்டும். நான் புகை பிடிக்கும்போது சாமி கும்பிட்டுக்கொள்ளலாமா?”.

பூசாரி சொன்னார் - “மகனே. நீ எவ்வளவு நல்லவனாக இருக்கிறாய். புகை பிடிக்கும் நேரத்தில் கூட சாமியை கும்பிட ஆசைப்படுகிறாயே. நீ ஆசைப்பட்டது கிடைக்கும். கும்பிடலாம்.”

நீதி : - கேள்வியை எப்படி எந்த ரீதியில் கேட்கிறோமோ அதற்கான பதிலே கிடைக்கும்.

குறிப்பு 1:
Information Technology நிறுவனங்களில் விடுமுறை கேட்டால் கிடைப்பது கடினம்.
ஆனால் அதையே கொஞ்சம் மாற்றி நான் விடுப்பில் இருக்கும்போது ப்ராஜக்டில் (Project) ஈடுபடலாமா? எனக் கேட்டுப் பார்த்தால் உடனே லீவு கிடைக்கும்.

குறிப்பு 2:
நகைச்சுவைக்காக சொல்லப்பட்ட கதை இது. இப்போதுல்ல காலகட்டங்களில் லீவு எதுவும் எடுத்தால் உடனே வேலையை விட்டுத் தூக்கிவிடுவார்கள். கவனமுடன் இருக்கவும்.

நவீன புகைப்படக் கருவிகளில் தகவல் இழப்பைத் தவிர்ப்பது எப்படி?


வலையுலக நண்பர்களான நாமக்கல் சிபி , விழியன்,கார்த்திக் போன்றோர் அடிக்கடி தனது புகைப்படக் கருவியைத் தோளில் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பிவிடுவர். எங்கேயாவது பட்சி சிக்குமா? புதிய கோணத்தில் படங்கள் எடுப்போமே என துடிதுடித்து ஒரு புத்துணர்ச்சியுடன் இருப்பர்.

அவர்களது கைவண்ணத்தை தனது கேமராவின் கோணத்தில் காண்பித்து புதிய பரிணாமத்தைக் காட்சிப் படுத்துவர். அவரைப் போன்றோர்களுக்காகவே இந்தப் பதிவு.

ஏதோ ஒரு காரணத்தால் கேமராவின் நினைவகம் எனப்படும் ஒரு சிறிய சிப் ஆனது பாதிக்கப்பட்டு அதிலுள்ள தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் அழிந்துபோக நேரிடலாம்.

அதனால் கடின உழைப்பால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இழக்க நேரிடும் அபாயம் உள்ளது. இந்த நேரத்தில் டிஜிடல் கேமராவின் நினைவகத்தில் இருந்து தகவல்களை மீட்பதற்கு ஆர்ட்ப்ளஸ் எனப்படும் ஒரு மென்பொருள் உள்ளது.

இந்த மென்பொருளைப் பயன்படுத்தி தகவல்களை மீட்டு எடுக்கலாம். மேலும் நீங்கள் ஏற்கனவே ஃபார்மட் செய்திருந்த சிப்பில் இருந்தும் மீட்டெடுக்கலாம்.

1) எல்லாவிதமான நினைவகச் சிப்புகளையும் இந்த மென்பொருளால் கையாளலாம்.

2) ஃபார்மட் செய்யப்பட்ட சிப்பிலிருந்தும் தகவல்களை மீட்டெடுக்கலாம்.

3) விண்டோஸ் இயங்குதளத்தால் உணரப்படாத கார்டுகளில் இருந்தும் தகவல்களை இந்த மென்பொருளால் பார்வையிட இயலும்

4) JPG, TIF, RAW வகையைச் சேர்ந்த கோப்புகளையும், இன்னும் பல கோப்பு வகைகளையும் மீட்டு எடுக்கும் வசதி கொண்டது.

5) அனைத்து விண்டோஸ் இயங்குதளங்களுடனும் ஏற்புடையது

தரவிறக்கச் சுட்டி : http://www.artplus.hr/adapps/eng/dpr.htm

குறிப்பு : CNET Download தளத்தால் சோதிக்கப்பட்டு எந்தக் கெடுதியும் விளைவிக்காத மென்பொருள் எனச் சான்றிதழ் பெறப்பட்டது.

கலைச்சொற்கள்:
புகைப்படக் கருவி - digital camera
நினைவகம் - memory chip, memory card
தகவல்கள் - data
காணொளிகள் - videos
தகவல் இழப்பு - data loss due to corruption
மீட்பு - recovery
ஃபார்மட் - Format
கோப்பு வகைகள் - File types
இயங்குதளம் - Operating System

ஐந்தாம் ஆண்டு கொண்டாட்டத்தில் GMail


GMail BETA என்கிற மின்னஞ்சல் சேவையை கூகிள் நிறுவனமானது 01-ஏப்ரல்-2004 அன்று துவக்கியது. இன்று உலகமெங்கும் ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவைகளில் GMail முக்கியமான இடம் வகிக்கிறது.

ஜிமெயில் ஆனது தனது பீட்டா சேவையின் ஐந்தாம் ஆண்டுக் கொண்டாட்டத்தை வரும் 01-ஏப்ரல்-2009ல் நிகழ்த்தவிருக்கிறது.

ஆரம்பத்தில் ஜிமெயில் கணக்கினை யார் வேண்டுமானாலும் தனக்காகத் துவக்கிக்கொள்ள இயலாது. யாருக்கெல்லாம் அழைப்பிதழ் கிடைத்துள்ளதோ அவர்களால் மட்டுமே புதிய பயனர் கணக்கைத் துவக்கிக்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அவரவர்களும் அவர்களுக்குப் பிரியமானவர்களில் 50 பேர்களுக்கு இலவச அழைப்பு விடுக்கலாம். இப்படி அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மாத்திரமே ஜிமெயில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள இயலும்.

உலகமெங்கும் பரந்து விரிந்த ஜிமெயில் ஆனது சில காலத்திற்கு முன்புதான் பொதுமக்களுக்காகத் திறந்து விடப்பட்டது. அதாவது யார் வேண்டுமானாலும் தனக்காக ஒரு ஜிமெயில் மின்னஞ்சலை உருவாக்கிக்கொள்ளலாம் (அதுவும் அழைப்பிதழ் இல்லாமலேயே).


எந்த ஒரு மென்பொருள் பயன்பாட்டிலும் பிழைகள் எனப்படும் bugs இருக்கவே செய்யும்.பின்னர் அந்தப் பிழைகள் காலப்போக்கில் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டு patch வெளியிடுவார்கள்.

புதிய வெளியீடுகளை BETA என வெளியிடுவர். அதில் நிறைய கண்டறியாத பிழைகளுடனேயே இருக்கும். ஒரு ஒழுங்கான வெளியீடு வெளியிடப்படும் வரை மட்டுமே BETA முத்திரை இருக்கும். பின்னர் அவற்றை உலகமெல்லாம் இருக்கும் வல்லுநர்களால் கண்டறியப்பட்டு பிழைகள் திருத்தப்பட்டு சீர் செய்யப்பட்டு ஒழுங்கான பதிப்பாக வெளியிடப்படும். அப்போது BETA முத்திரை நீக்கப்பட்டுவிடும். இது கணினி வரலாற்று உலகில் வழக்கமாக உள்ள ஒரு நிகழ்வு.

ஆனால் இத்தனை இலட்சம் மக்களால் ஐந்து ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை இன்னமும் Google Mail BETA என BETA முத்திரையுடன் வெளிவருகிறது.

இது கணினி வரலாற்றில் ஒரு அதிசயம் தானே? BETA முத்திரையுடன் இருக்கும் ஒரு நல்ல பயன்பாட்டை இத்தனை பேர் பயன்படுத்துகிறோம்.

அடிக்கடி இதன் சிறப்புத் தன்மைகளையும் மேம்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இன்னும் சில ஆண்டுகளுக்கு இதே நிலை தொடர்ந்தால் GMail என்பதை GMail BETA என்றே அழைத்திடலாமோ!

கலைச்சொற்கள் :
மின்னஞ்சல் சேவை -Email Service
அழைப்பிதழ் - Invitation
பிழைகள் - Bugs
பிழை திருத்தம் - Bug Fixing
பயன்பாடு- Application
சிறப்புத் தன்மை- Special Features
மேம்படுத்துதல்- Upgrade

ரிச் காப்பி - கோப்புகளை அதி வேகமாகக் காப்பி செய்வதற்கு


விண்டோஸ் நிறுவப்பட்ட கணினிகளில் கோப்புகளைக் காப்பி (copy) செய்யும்போதும், வேறிடத்துக்கு நகர்த்தும்போதும் (move) மிகுதியான வேகம் கொண்ட இயங்குதிறனைப் பெறுவதற்காக ஒரு மென்பொருளை மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.

இதன் பெயர் ரிச்காப்பி (Rich Copy)

முதன் முதலில் ரிச்காப்பி வெளியிடப்பட்ட ஆண்டு 1996.

நெட்வொர்க்கின் வளங்களை (network resources) மிகக் குறைந்த அளவு மட்டும் பயன்படுத்தி கோப்புகளைக் காப்பி செய்வதால் இதன் வேகம் மிக அதிகமாக இருக்கிறது.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இந்தக் கருவி இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வளவு நாட்களாக மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தில் பணிபுரிவோர்கள் மட்டுமே இதைப் பற்றி அறிவர்.

இது இன்றுமுதல் மார்ச்,24,2009 அனைவரது பயன்பாட்டுக்காகவும் என விதிமுறைகள் தகர்த்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்டோஸ் பயனர்கள் யாவரும் இதை இணையிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இதன் தற்போதைய நவீன வெர்சன் ரிச்காப்பி 4.0. வேறு எந்த காப்பி செய்யும் பயன்பாடுகளைக் காட்டிலும் இதுதான் வேகம் அதிகமானது.

ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருக்கும் கோப்புகளைத் தேர்வு செய்து ஒரே ஒரு குறிப்பிட்ட இடத்தில் காப்பி செய்யும் வசதி இதில் உண்டு.

(Copy from Multiple Source location) வழக்கமாக இந்த அம்சமானது CD / DVD burning செய்யும் பயன்பாடுகளில் மட்டுமே உண்டு.

இதனை GUI வடிவிலான கருவியாக மட்டும் அல்லாது, CUI எனப்படும் கட்டளை கொடுத்தும் இயக்கலாம்.

சாதாரணமாக நாம் கோப்புகளைக் காப்பி செய்யும்போது அதில் resume support (விட்டு விட்டு காப்பி செய்தல்) என்கிற வசதி இருக்காது.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளைக் காப்பி செய்யலாம்.

XCOPY என்னும் ஏற்கனவே உள்ள கட்டளையைப் போன்று 8 மடங்கு அதிகமான வேகத்தில் இயங்க வல்லது.

ஆனால் ரிச்காப்பி என்னும் இந்தப் பயன்பாட்டில் காப்பி செய்யும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திப் பிறகு தொடரும் வசதி இருக்கிறது.

தரவிறக்கச் சுட்டி : http://blogs.technet.com/keithcombs/archive/2009/03/22/richcopy-bulk-file-copy-tool-released-get-it-here.aspx

லண்டன் டைம்ஸ் நாளிதழில் தமிழ்நெஞ்சம்


இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது ஒரு வித்தியாசமான தளத்தைப் பார்த்தேன்.

தள முகவரி : http://www.fodey.com/generators/newspaper/snippet.asp

The Newspaper Clipping Generator என்கிற சிறிய நிரலை இணைத்திருக்கிறார்கள். அதில் செய்தித்தாளின் பெயர், தேதி, தலைப்புச்செய்தி, தகவலின் சுருக்கம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் தந்து Generate அழுத்தினால் அச்சு அசலாக செய்தித்தாளில் இடம்பெற்ற தகவலைப் போன்றே ஒரு சிறிய .jpg கோப்பு ஒன்று கிடைக்கும்.

அதை நண்பர்களிடம் காண்பித்து விளையாடலாம். உதாரணத்துக்கு மேலே உள்ள படத்தைப் பாருங்கள். அதில் நான் கொடுத்த தகவலைத்தான் பார்க்கிறீர்கள்.

குறிப்பு :
சும்மா மொக்கைக்காக ஒரு பதிவு இது. கண்டுக்காதீங்க தோழர்களே.

சர்வதேச நாடுகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு ( இலவசமாக )


இந்தியாவில் இருந்தபடி தேசிய அளவில் (national) குறுஞ்செய்தித் தகவல்களை நண்பர்களுக்கும், உறவினர்களூக்கும் இலவசமாக அனுப்புவதற்கு

http://www.160by2.com

http://www.way2sms.com

தளங்களைப் பயன்படுத்துகிறோம்.

அதேபோல சர்வதேச (international) அளவில் வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கும் தோழர் பெருமக்களுக்கும் SMS செய்திகளை இலவசமாக அனுப்ப உதவும் தளங்களை கீழே காண்போம்.

நாம் யார், யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறோம் என்பதை தனி தரவுத்தளத்தில் பதிந்திருக்கிறார்கள். அதனால் அவற்றை நாம் கையாள்வது எளிமையாக்கப்பட்டுள்ளது.


http://www.sendsmsnow.com/register.php


http://smsdaak.com/Registration.aspx

http://gizmosms.com/

http://www.cherple.com/

http://www.txtdrop.com/

கலைச்சொற்கள் :

குறுஞ்செய்தி - SMS - Short Message Service
தரவுத்தளம் : Database
கையாள்வது : Customization

பிடிஎஃப் கோப்புகளை உருவாக்க 4 இலவச மென்பொருட்கள்

நம்மிடம் இருக்கும் எழுத்து வடிவிலான(text), பட வடிவிலான(picture) கோப்புகளை பிடிஎஃப் கோப்பு வகைக்கு மாற்றுவதற்கு உதவும் இலவச மென்பொருட்கள் நான்கினை இங்கே காண்போம்.

இந்த சேவையை வழங்கும் மென்பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை வணிகரீதியிலானவையாகவும் இலவசம் அல்லாதவையாகவும் இருக்கும். இலவசமாக இருந்தால் அவற்றில் ஏதேனும் வரையறை இருக்கும்.

மிகுந்த திறன் உடைய மென்பொருளாகவும், இலவசமாகவும் கிடைக்கின்றவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.

1. PDFForge
இது ஒரு திறந்த நிலை மூலவரைவு வகையைச் சேர்ந்த மென்பொருள் பயன்பாடு. விசுவல் பேசிக் மூலம் எழுதப்பட்ட நிரலைக் கொண்டது. இலவசமாகவே இருந்தாலும் பிற வணிகரீதியிலான மென்பொருட்களின் அனைத்து அம்சங்களையும் கொண்டது. இதன் மூலம் உருவாக்கப்படும் பிடிஎஃப் கோப்புகளுக்கு கடவுச்சொல் மூலம் கட்டுப்பாடு விதிப்பதோ, அச்செடுப்பதைத் தடைசெய்வதோ இயலும். ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை ஒன்றிணைப்பதும் எளிது.

2. PDF4Free

எந்த விதமான மின் கோப்புகளையும் பிடிஎஃப் ஆக மாற்ற உதவுகிறது.

3. doPDF

கணினியின் எந்த ஒரு பயன்பாட்டிலிருந்தும் பிரிண்ட் எனக் கொடுக்கும்போது Virtual PDF Printer என்பதைத் தேர்வுசெய்து பிடிஎஃப் ஐ உருவாக்கிடலாம்.

4. PrimoPDF

முன்னூறுக்கும் அதிகமான கோப்பு வடிவங்களிலிருந்து பிடிஎஃபை உருவாக்க இந்தப் பயன்பாடு உதவுகிறது.

கலைச்சொற்கள்:
கோப்புகள் - Files
பிடிஎஃப் - PDF - Portable Document Format
இலவச மென்பொருட்கள் - Freeware Applications
வணிகரீதியிலானவை - Commercial
வரையறை - Limitation
திறந்த நிலை மூலவரைவு - Open Source
விசுவல் பேசிக் - Visual Basic
நிரல் - Program source code
கடவுச்சொல் - Password
கட்டுப்பாடு - Restriction
அச்செடுப்பது - Printing

உடைந்த பாத்திரமும் சில ரோஜாப்பூக்களும்

சீனாவில் ஒரு குக்கிராமத்தில் ஒரு பாட்டி வசித்து வந்தாள். அவளிடம் இரண்டு நீர் சுமக்கும் பாத்திரங்கள் இருந்தன. ஒரு நீளமான கம்பில் கயிற்றைக் கட்டி கயிறுடன் பாத்திரங்களை இணைத்து விடுவாள். வெகுதொலைவு நடந்து சென்று இந்த இரண்டு பாத்திரங்களிலும் நீரை நிரப்பி அவற்றைத் தோள்பட்டையில் சுமந்துகொண்டு வீட்டுக்கு வருவாள்.

அவளிடம் இருந்த இரண்டு நீர் சுமக்கும் பாத்திரங்களும் வித்தியாசமானவை. ஒன்று எந்தவிதக் குறைபாடும் இல்லாமல் ஓட்டை உடைசல் இல்லாத பாத்திரம். மற்றொன்றில் ஒரு சிறிய ஓட்டை இருந்தது. முழுக்க முழுக்க நீரை நிரப்பினாலும் வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் பாதி தண்ணீரானது வெளியில் கொட்டி வீணாகிவிடும்.

இருப்பினும் ஒவ்வொரு நாளும் பாட்டியானவள் நீர் நிரப்பும்போது இரண்டு பாத்திரத்துக்கும் சம அளவு நீரை நிரப்பியே தூக்கிச் செல்வாள். வீடுவரை சுமையைத் தூக்கிச் சென்று பார்த்தால் ஒன்றரைப் பாத்திரத்தில் மட்டுமே நீரைக் காண இயலும். பழுதில்லாத முதல் பாத்திரத்தில் அனைத்து நீரும் பத்திரமாக இருக்கும். ஆனால் உடைந்து போகி ஓட்டையுடன் இருக்கும் இரண்டாவது பானையில் பாதியளவு தண்ணீ மட்டுமே இருக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பந்தம் தொடர்ந்துகொண்டு இருந்தது.

ஒரு நாள் பாட்டியின் ஒன்பது வயது பேத்தி முறையிட்டாள் "பாட்டி. எனக்கு மிகவும் மன வருத்தமாக உள்ளது. ஒரு பாத்திரத்தை மட்டும் அந்த குயவன் முடமாகப் படைத்துவிட்டான். நீயும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டைப் பாத்திரத்தையும் பயன்படுத்துகிறாய். 100 சதவீதம் நீரை நிரப்பினாலும் வீடு வந்து சேர்வதற்குள் பாதி நீர் வீணாகி விடுகிறது. ஆனால் நல்ல பாத்திரத்தைப் பார். அதனால்தானே உனக்கு முழுக்க முழுக்க நன்மை. பேசாமல் ஓட்டைப் பாத்திரத்தைக் கீழே போட்டு உடைத்துவிட்டு புதிய நல்ல உடைசல் இல்லாத பாத்திரமாக வாங்கிக்கொள். உனக்கும் நல்லது".

இப்படி சிறுமி சொன்னதைக் கேட்ட பாட்டி சொன்னாள் - "சிறுமியே ஒன்றைக் கவனித்தாயா? நான் நீரைச் சுமந்து வரும் பாதையின் இரு ஓரங்களையும் கவனித்ததுண்டா? நல்ல பாத்திரம் இருந்த பக்கமாக முட்செடிகள் மட்டுமே இருக்கும். ஆனால் ஒட்டைப் பாத்திரத்தைக் கொண்டு வந்த பக்கமாகப் பார்த்தாயா? அந்தப் பாத்திரத்தின் நீர் சிந்திய பக்கமாக அழகழகான ரோஜா மலர்களைக் காண்கிறாயே. அவற்றை நீயும் சூடிக்கொண்டு அழகுடன் திரிகிறாயே. அந்த ரோஜாச் செடிகள் நல்ல நிலையில் வளர்ந்ததற்கும், அவை பூப்பூப்பதற்கு யார் காரணம் - அந்த ஓட்டைப் பாத்திரம் தானே. அதனுடைய நீர் சிந்தியதால்தானே அவை பூப்பூக்கின்றன"

நான் குயவனிட்ம் பாத்திரம் வாங்கும்போதே அது ஒட்டைப்பாத்திரம்தான் என நன்றாகத் தெரியும். தெரிந்துதான் வாங்கினேன். மலர்ச்செடிகளுக்கான விதைகளை ஒரு பக்கமாகத் தூவினேன். அவற்றில் நீரை ஊற்றுவதற்கு அந்த ஓட்டைப்பாத்திரத்தைப் பயன்படுத்தினேன். ஒவ்வொரு நாளும் நீரூற்றினேன். இப்போது அந்தச் செயலுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

நீதி : ஒவ்வொரு மனிதனும் தவறுடனே பிறக்கிறான். அவரவருக்கும் தனிப்பட்ட பிழைகள் இருக்கவே செய்கின்றன. அந்தத் தவறுகளே நமது வாழ்வைச் செம்மைப் படுத்தவும், சுவையூட்டவும் செய்கின்றன.தவறுகளைக் காரணம் காட்டிப் பிறரை ஒதுக்கிவிடக் கூடாது.

என்ன பிரச்சினை தல?

ஒரு பஸ் ஓட்டுநர் பேருந்து நிலையத்தில் இருந்து தனது பேருந்தை இயக்க ஆரம்பித்தார். அவரது வழித்தடம் வழியாக பேருந்து சென்றுகொண்டிருந்தது. முதல் ஐந்து நிறுத்தங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆறாவது நிறுத்தத்தில் ஒரு பெரிய ஜாம்பவான் ஒருவன் பேருந்துக்குள்ளே நுழைந்தான். ஆரடி உயரமும் அகலமாக விரிந்த உடல்வாகையும், நீளமான கைகளையும் கொண்டவன் அவன்.

டிரைவரை எகத்தாளமாய் பார்த்து - “நான் பெரியசாமி. பணம் தரத்தேவையில்லை”, சொல்லிவிட்டு டிரைவரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்தான்.

அவனது தோற்றத்தைப் பார்த்த வண்டியின் ஓட்டுநருக்கோ இருப்புக் கொள்ளவில்லை. டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செஞ்சாலும் பரவாயில்லைனு விட்டுவிட்டார். எந்த வாக்குவாதத்துக்கும் அவர் தயாராக இல்லை. காரணம் - பெரியசாமியின் தோற்றம்.

அடுத்த நாளும் அதே நிகழ்ச்சி நடந்தேறியது. “குத்துச்சண்டை வீரனைப்போன்ற தோற்றம் கொண்ட பெரியசாமி வண்டியில் ஏறி இருக்கையில் அமர்ந்த பிறகு - நான் பெரியசாமி. பணம் தரத்தேவையில்லை” என்றான். டிரைவருக்கும், நடத்துநருக்கும் மனதுக்குள் பெரிய குற்ற உணர்ச்சி.

தொடர்ந்து 15 நாட்களாக இதே நிகழ்ச்சி தொடர்ந்தது.

“இந்த பெரியசாமியின் கொட்டத்தை அடக்கவேண்டும்” என இருவரும் திட்டம் போட்டனர்.

ஒட்டுநருக்கும், நடத்துநருக்கும் இரவுகளில் உறக்கமே இல்லாமல் போனது. எல்லாம் பெரியசாமியின் நினைவுதான். பெரியசாமியின் தொந்தரவில் இருந்து தப்பிப்பது பற்றியே எண்ணிக்கொண்டு தூக்கத்தைத் தொலைத்தனர்.

”தொடர்ந்து 15 நாட்களாக பணமே கொடுக்காமல் - டிக்கெட் எடுக்காமல் - நான் பெரியசாமி! பணம் தரத்தேவையில்லைனு ஒருத்தன் போக்குக்காமிச்சுக்கிட்டு இருக்கான். அவனை ஒரு வழி பண்ணாமல் விடக்கூடாது”, ஓட்டுநர்.

நடத்துநர் “அண்ணே! ஒரு ஐடியா. நாம ரெண்டு பேரும் ஜிம்முக்குப் போகி உடம்பத் தேத்தி, கராத்தே, ஜுடோ இதெல்லாம் கத்துக்குட்டு அவனைவிட பெரிய வீரர்களா ஆகிடுவோம். அப்புறம் அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவோம்” எனக் கூறினார்.

வெயில்காலம் முடிவடைவதற்குள் அவர்கள் இருவரும் சிறப்பு அனுமதி பெற்று ஜிம், கராத்தே, ஜுடோ எனப் பல பயிற்சிகளையும் பெற்று உடலைத் தேற்றி ஆஜானுபாகுவாக ஆயினர்.

அவர்களுக்குள் மகிழ்ச்சி கரை புரண்டது. “நாளைக்கு திங்கள் கிழமை. பெரியசாமியை உண்டு இல்லைன்னு ஆக்கிருவோம்” - முன் கூட்டியே திட்டமிட்டனர்.

திங்கள் அன்று வழக்கம் போல குத்துச்சண்டை வீரன் பெரியசாமி வந்தான். பேருந்தில் ஏறினான். வழமை போல குரல் கொடுத்தான் - “நான் பெரியசாமி! பணம் தரத்தேவையில்லை”.

ஓட்டுநரும், நடத்துனரும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் எழுந்து வந்து பெரியசாமிக்கு எதிராகப் பயங்கரப் பார்வையுடன் “ஏன்? ஏன் பணம் கொடுக்க மாட்டாய்? என்ன தைரியம்” என முதல் முறையாக எதிர்த்துக் கேட்டனர்.

ஒரு ஆச்சரியமான முகபாவத்துடன் “எங்கிட்டே பஸ் பாஸ் இருக்கு. அதனால நான் பணம் தரத் தேவையில்லை” எனக் கூறி பஸ் பாஸை இருவரின் முன்னால் நீட்டினான்.

நீதி : பிரச்சினையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிறகுதான் தீர்வைப் பற்றி யோசிக்க வேண்டும். இல்லாத பிரச்சினையை இருப்பதாகக் கற்பனை செய்யக் கூடாது

நெருப்பு நரி உலவியில் தரவிறக்க வேகத்தை அதிகரிக்க


இணைய உலவிச் சந்தையில் நெருப்பு நரி என செல்லமாக அழைக்கப்படும் Firefox அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வேகமாக இயங்குவதுடன் ஏராளமான நீட்சிகளை (addon) உடையதாகவும் இருப்பதால் இது உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏதேனும் கோப்புகளை இணையத்தின் ஊடாகத் தரவிறக்கம் / இணையிறக்கம் (download) செய்யும்போது மட்டும் பிற முடுக்கிகளின் (accelerator) அளவிற்கு இதன் வேகம் இருப்பதில்லை என்கிற குறை உண்டு.

தரவிறக்க வேகத்தை அதிகரிப்பதற்காகவே நெருப்புநரிக்காக ஒரு நீட்சி உள்ளது. இதை Firefox உடன் ஒருங்கிணைத்துவிட்டால் தரவிறக்க வேகம் 10 மடங்கு அதிகரிக்கிறது என வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த நீட்சியை நிறுவுவதற்கு முன்னர் உங்கள் நெருப்பு நரி உலவியை மேம்படுத்திக் (update) கொள்ளவும்.

உலவின் வெர்சன் (version) 3.0+ ஆக இருத்தல் நலம்.

சுட்டி : http://www.fireaddons.com/iamchosen/

எவ்விதமான கோப்புகளையும் திறந்து பார்ப்பதற்கு - இயக்குவதற்கு

உங்களுக்கு மின்னஞ்சல் (e-mail) வாயிலாக உங்கள் நண்பர் பல கோப்புகளை (files) அனுப்பியுள்ளார். அவற்றில் சந்தேகமும் கேட்கிறார் என வைத்துக்கொள்வோம்.

ஆனால் அவர் அனுப்பியிருக்கும் கோப்புகளில் பல உங்களுக்குத் தெரியாத எக்ஸ்டென்ஸ்களில் (extension) உள்ளன.

உதாரணமாக மைக்ரோசாப்ட் வேர்ட் (MS Word) கோப்புகள் - .doc எனவோ .docx என்றோ இருக்கும்.

படக் கோப்புகள் பெரும்பாலும் .jpg, jpeg, .gif, .png என்பனவாக இருக்கும். ஆனால் நண்பர் உங்களுக்கு அனுப்பிய கோப்பின் எக்ஸ்டென்ஸன் (File Extension) எல்லாம் உங்களுக்கும் பரிச்சயமில்லாதவை. மேலும் உங்கள் இயங்குதளமான(OS) விண்டோஸுக்கும் பரிச்சயமில்லாதவை.

இந்த நேரங்களில் அவர் அந்தக் கோப்புகளைத் திறந்து பார்க்கச் சொல்லியும், அதில் சந்தேகமும் கேட்டுள்ளார்.

ஒவ்வொரு கோப்புகளையும் அவற்றிற்குரிய சரியான மென்பொருட்களைக் கொண்டுதான் திறந்து பார்க்க இயலும். ஆனால் குறிப்பிட்ட கோப்புகளை இயக்கிப் பார்க்கவோ / திறந்து பார்க்கவோ ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருட்கள் (Software Applications) உள்ளன.

உதாரணமாக .mp3 வகை கோப்புகளைத் திறந்து பார்ப்பதற்கு VLC மீடியா ப்ளேயரில் இருந்து, நம் விண்டோசுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மீடியா ப்ளேயர் (Media Player) வரை ஏராளமான மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்.

இப்படி நமக்கும், விண்டோஸுக்கும் நன்கு அறியப்பட்ட கோப்புகளை இரண்டு முறை மவுசால் சொடுக்கினால் (Double Click) அதற்குரிய மென்பொருள் பயன்பாட்டின் வாயிலாக அந்தந்த கோப்புகளைத் திறந்து பார்த்து இயக்கலாம்.

ஆனால் இனம் கண்டறியாத கோப்புகளை இரண்டு முறை சொடுக்கினால் என்ன ஆகும்?

கீழ்க்கண்ட காட்சியைத் தான் காண்போம். ஒரு பிழைச்செய்தியுடன் தனி உரையாடல் பெட்டி திரையில் தெரியும்.

இப்படிப்பட்ட தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்போது நமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையத்தளம் உள்ளது. அந்தத் தள முகவரி : http://www.openwith.org/

free programs to open any file extension


இந்தத் தளத்திலிருந்து அவர்கள் கொடுக்கும் ஒரு இலவசப் பயன்பாட்டை இணையிறக்கம் செய்து நிறுவ வேண்டும்.

பின் நண்பர் அனுப்பிய கோப்பின் மேல் மவுசை வைத்து வலது பட்டனை அழுத்தி "OpenWith.org - How do I Open This?" என்பதைச் சொடுக்கவேண்டும்.

இதன் பிறகு குறிப்பிட்ட கோப்பினைத் திறந்து பார்ப்பதற்காக எந்த வகையான மென்பொருள் பயன்படும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். பின் அந்த மென்பொருளை இணையிறக்கம் செய்து அதன் மூலம் நண்பரின் கோப்பினைத் திறந்து பார்த்து அவரது சந்தேகத்தைத் தீர்த்து வைக்கலாம்.

கபில்தேவ் Vs தோனிவ் (1983 - 2007)



இணைய வீடியோ - தரவிறக்கம் செய்ய 10 சிறப்பு தளங்கள்

இன்றைய இணைய உலகில் நம்மில் பெரும்பாலானவர்கள் எல்லோரும் யூடியூப், கூகிள்வீடியோ, மெட்டாகஃபே, டெய்லிமோசன், ப்ரேக் (Youtube, Google Video, Metacafe, Dailymotion, Break) எனப் பலவிதமான வீடியோத் தளங்களை தினமும் பார்வையிடுகிறோம்.மேலும் இத்தனை தளங்களிலும் உள்ள வீடியோக்களில் பிடித்தமானவற்றைத் தரவிறக்கவும் செய்கிறோம்.
இணையிறக்கம் (Download) செய்த வீடியோக்கோப்புகளை இணைய இணைப்பில்லாமல் கையடக்கக் கருவிகளில் (iPod, Mobile Phone - hand held devices) பார்த்து மகிழ விரும்புகிறோம்.

இதற்கு மூன்று நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

1. வீடியோத்தளத்திலிருந்து இணையிறக்கம். (Video Download)
2. குறிப்பிட்ட வீடியோ வடிவிற்கு மாற்றுதல் (Format Conversion)
3. வேறு மாற்றுக் கருவிகள் வாயிலாகப் பார்த்தல் (Using Hand held device to watch)

Youtube, Metacafe மற்றும் இன்னும் பல தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவக்கூடிய 10 இணையத்தளங்களை இங்கே காண்போம்.








மேலே உள்ள படங்களின் மேல் சொடுக்கினால் குறிப்பிட்ட தளத்தைப் பார்வையிடலாம். (Please click the Images to visit to appropriate video downloading sites.)

கூகிள் டாக் பயனர்களுக்கான தட்டச்சுக் குறுக்கு வழிகள்


கூகிள் நிறுவனம் இலவசமாக வழங்கும் சேவைகளில் கூகிள்டாக் எனப்படும் மின்னரட்டையும் ஒன்று. இந்த Google-Talk பயன்படுத்தும் ரசிகர்களுக்காக இந்தப் பதிவு.
இந்தக் குறுக்கு வழிகளைப் பின்பற்றி g-talk ல் வேகமாக இயங்கலாம்.



Ctrl + E - It centralizes the selected text, or the current line.
Ctrl + R - It justifies to the right the selected text, or the current line.
Ctrl + L - It justifies to the left the selected text, or the current line.
Ctrl + I - The same thing does that Tab.

Tab - It is giving the area to each of the windows opened by Google Talk.
Ctrl + Tab - The same thing does that Shift + Tab .
Shift + Tab - The same thing does that Tab but in reverse.
Ctrl + Shift + L -Switch between points, numbers, letters, capital letters, roman numbers and capital roman numbers

Ctrl + 1 (KeyPad) - It does a simple space between the lines.
Ctrl + 2 (KeyPad) - It does a double space between the lines.
Ctrl + 5 (KeyPad) - A space does 1.5 between the lines
.Ctrl + 1 (NumPad) - It goes at the end of the last line.
Ctrl + 7 (NumPad) - It goes at the begin of the last line.
Ctrl + F4 - It closes the current window.

Alt + F4 - It closes the current window.
Alt + Esc - It Minimize all the windows.
Windows + ESC - Open Google Talk (if it's minimized, or in the tray)
F9 - Open Gmail to send an email to the current contact.

F11 - It initiates a telephonic call with your friend.
F12 - It cancels a telephonic call.
Esc - It closes the current window.

லினக்ஸ் பிரியர்களுக்காக தட்டச்சுக் குறுக்கு வழிகள்


கணினியின் மவுஸைக் கொண்டு ஒரு இயங்குதளத்தின் எல்லாச் செயல்களையும் செய்ய முடியும் என்றாலும், அவசரமாக ஒரு செயலைச் செய்ய விழைகையில் நம்மையறியாமலே நாம் பல்வேறு விதமான தட்டச்சுக் குறுக்கு வழிகளையே பயன்படுத்துகிறோம்.

இது நம்மையும் அறியாமல் நாம் செய்யும் பழக்கமாக உள்ளது. உபுந்து லினக்ஸ் பிரியர்களுக்காக அவர்களுடைய வேகத்திறனை இன்னும் அதிகரித்துக் கொள்வதற்காகவே இந்தப் பதிவு.


Useful Keyboard Shortcut For Ubuntu

For those shortcut key lovers out there, here is a long list of keyboard shortcuts for Ubuntu Hardy. Most of them should work in the previous version of Ubuntu as well. Enjoy the list.
I have already Posted Yahoo messanger Shortcut Keys,Windows Keyboard Shortcuts & Gmail hotkeys to work Fast.

General keyboard shortcuts

Ctrl + A = Select all
Ctrl + C = Copy the highlighted content to clipboard
Ctrl + V = Paste the clipboard content
Ctrl + N = New (Create a new document, not in terminal)
Ctrl + O = Open a document
Ctrl + S = Save the current document
Ctrl + P = Print the current document
Ctrl + W = Close the close document
Ctrl + Q = Quit the current application

Keyboard shortcuts for GNOME desktop

Ctrl + Alt + F1 = Switch to the first virtual terminal
Ctrl + Alt + F2(F3)(F4)(F5)(F6) = Select the different virtual terminals
Ctrl + Alt + F7 = Restore back to the current terminal session with X
Ctrl + Alt + Backspace = Restart GNOME
Alt + Tab = Switch between open programs
Ctrl + Alt + L = Lock the screen.
Alt + F1 = opens the Applications menu
Alt + F2 = opens the Run Application dialog box.
Alt + F3 = opens the Deskbar Applet
Alt + F4 = closes the current window.
Alt + F5 = unmaximizes the current window.
Alt + F7 = move the current window
Alt + F8 = resizes the current window.
Alt + F9 = minimizes the current window.
Alt + F10 = maximizes the current window.
Alt + Space = opens the window menu.
Ctrl + Alt + + = Switch to next X resolution
Ctrl + Alt + - = Switch to previous X resolution
Ctrl + Alt + Left/Right = move to the next/previous workspace

Keyboard shortcuts for Terminal

Ctrl + A = Move cursor to beginning of line
Ctrl + E = Move cursor to end of line
Ctrl + C = kills the current process.
Ctrl + Z = sends the current process to the background.
Ctrl + D = logs you out.
Ctrl + R = finds the last command matching the entered letters.
Enter a letter, followed by Tab + Tab = lists the available commands beginning with those letters.
Ctrl + U = deletes the current line.
Ctrl + K = deletes the command from the cursor right.
Ctrl + W = deletes the word before the cursor.
Ctrl + L = clears the terminal output
Shift + Ctrl + C = copy the highlighted command to the clipboard.
Shift + Ctrl + V (or Shift + Insert) = pastes the contents of the clipboard.
Alt + F = moves forward one word.
Alt + B = moves backward one word.
Arrow Up/Down = browse command history
Shift + PageUp / PageDown = Scroll terminal output

Keyboard shortcuts for Compiz

Alt + Tab = switch between open windows
Win + Tab = switch between open windows with Shift Switcher or Ring Switcher effect
Win + E = Expo, show all workspace
Ctrl + Alt + Down = Film Effect
Ctrl + Alt + Left mouse button = Rotate Desktop Cube
Alt + Shift + Up = Scale Windows.
Ctrl + Alt + D = Show Desktop
Win + Left mouse button = take screenshot on selected area
Win + Mousewheel = Zoom In/Out
Alt + Mousewheel = Transparent Window
Alt + F8 = Resize Window
Alt + F7 = Move Window
Win + P = Add Helper
F9 = show widget layer
Shift + F9 = show water effects
Win + Shift + Left mouse button = Fire Effects
Win + Shift + C = Clear Fire Effects
Win + Left mouse button = Annotate: Draw
Win + 1 = Start annotation
Win + 3 = End annotation
Win + S = selects windows for grouping
Win + T = Group Windows together
Win + U = Ungroup Windows
Win + Left/Right = Flip Windows

Keyboard shortcut for Nautilus

Shift + Ctrl + N = Create New Folder
Ctrl + T = Delete selected file(s) to trash
Alt + ENTER = Show File/Folder Properties
Ctrl + 1 = Toggle View As Icons
Ctrl + 2 = Toggle View As List
Shift + Right = Open Directory (Only in List View)
Shift + Left = Close Directory (Only in List View)
Ctrl + S = Select Pattern
F2 = Rename File
Ctrl + A = Select all files and folders
Ctrl + W = Close Window
Ctrl + Shift + W = Close All Nautilus Windows
Ctrl + R = Reload Nautilus Window
Alt + Up = Open parent directory
Alt + Left = Back
Alt + Right = Forward.
Alt + Home = go to Home folder
Ctrl + L = go to location bar
F9 = Show sidepane
Ctrl + H = Show Hidden Files
Ctrl + + = Zoom In
Ctrl + - = Zoom Out
Ctrl + 0 = Normal Size

தொலைதூரக் கணினியில் நமது கோப்புகளை அச்செடுக்க


பக்கத்து வீட்டிலோ, அடுத்த ஊரிலோ, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலோ இருக்கும் நண்பருடன் உரையாடுவதற்கு, அரட்டை அடிப்பதற்கு இன்ஸ்டண்ட் மெசெஞ்சர் (Instant Messenger) எனப்படும் மென்பொருட்களைப் பயன்படுத்துகிறோம்.

அடுத்தவரின் கணினியை இங்கிருந்து இயக்கவோ, வெகுதொலைவில் இருப்பவருக்கு அவரது கணினியில் ஒரு மென்பொருளை சோதனை ஓட்டிக் காண்பிக்கவோ ரிமோட் டெஸ்க்டாப் (Remote Desktop) மென்பொருட்களைப் பயன்படுத்துகிறோம்.

நம் கணினியில் இருக்கும் கோப்புகளை வேறு ஒரு தொலைதூரக் கணினி (Remote PC) வாயிலாக அச்செடுக்க ஒரு புதிய தொழில்நுட்பம் உள்ளது. இதற்கு பிரிண்ட் எனிவேர் (Printer Share Anywhere) என்று பெயர்.

கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அடுத்தவரது கணினியுடன் இணைக்கப்பட்ட பிரிண்டர் (printer) மூலம் அச்செடுக்கலாம்.

இந்த முனையில் இருப்பவரும், அடுத்த முனையில் இருப்பவரும் இணையம் (internet) மூலம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதே போல உங்களது கணினியுடன் இணைக்கப்பட்ட பிரிண்டரை அடுத்தவர் பயன்படுத்த நீங்கள் அனுமதிக்கலாம்.

பிரிண்ட் எனிவேர் என்கிற இந்த மென்பொருளை நிறுவியவுடன் இது தானியங்கித்தனமாகவே உங்கள் கணினியுடன் இணைக்கப்பட்ட பிரிண்டரையும், வேறு ஏதேனும் உங்கள் வலைப்பின்னலுக்குள் (network) இணைக்கப்பட்டுள்ள பிரிண்டர்களையும் அடையாளம் கண்டு கொள்ளும்.


சிறப்பம்சங்கள் :
1) எந்த ஒரு மென்பொருள் பயன்பாட்டின் வாயிலாகவும் பிரிண்ட் எடுக்கலாம்.
2) உங்கள் பிரிண்டரை வேறு ஒருவருடன் பகிர்ந்துகொள்ளலாம்.
3) பிரிண்டவுட் எடுக்கவேண்டிய கோப்புகளை மின்னஞ்சல் அனுப்பவோ அட்டாச்மெண்ட் (attachment) செய்யவோ தேவையில்லை
4) வேகமான இயக்கம் கொண்டது
5) பாதுகாப்பானது (secured)
6) மிக எளிய முறையில் நிறுவிக்கொள்ளலாம்.
7) அகலப்பட்டை வசதி இருத்தல் நலம்

இணையிறக்கச் சுட்டி : http://www.softpedia.com/get/Network-Tools/Misc-Networking-Tools/PrinterAnywhere.shtml

விண்டோஸிலிருந்து லினக்ஸுக்கு மாறுவதற்கு 10 காரணங்கள்


நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளங்களான Windows XP, Vista போன்றவற்றை உபயோகிக்கிறோம். ஆனால் எல்லோருமே Linux பற்றிய செய்திகளை அவ்வப்போது அறிந்துகொண்டிருக்கிறோம். விண்டோஸுக்கும் லினக்ஸுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை இங்கே காணலாம்.

1. Linux என்பது முற்றிலுமாக திறந்தநிலை மூலவரைவு மென்பொருள் (Open Source). முழுக்க முழுக்க இலவசம். விண்டோஸைப் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.ஆனால் இணையத்தில் இருந்து லினக்ஸுக்கான ஐ.எஸ்.ஓ. கோப்பினை (ISO) இணையிறக்கி (download) அதனை ஒரு CD / DVD யில் பதிவு செய்து அதன் மூலம் நிறுவிப் பயன்பெறலாம்.

2. லினக்ஸுடன் அதனுடனே ஒருங்கிணைந்தே ஏராளமான இலவசப் பயன்பாடுகளும் கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக PDF Reader, Web Server, Compilers, IDE போன்றவை. இதற்காக நாம் தனியாக எதையும் இணையிறக்கவோ, பணம் கொடுத்து வாங்கவோ தேவையில்லை. உபுண்டு லினக்சுடன் Open Office பயன்பாடும் சேர்ந்தே வருகிறது. இது மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு சவாலான ஒரு மாற்று மென்பொருள்

3. Virus, Spyware, Adware போன்றவை லினக்ஸ் இயங்குதளத்தைப் பாதிப்பதில்லை. இதனால் antivirus நிறுவி அதன் மூலம் கணினியின் திறன் குறையும் சிக்கல் லினக்ஸில் இல்லை/

4. விண்டோஸ் விஸ்ட்டாவோ, எக்ஸ்ப்பியோ பயன்படுத்துவதற்கு 1 முதல் 4 GB வரையிலான நினைவகம் இருந்தும் அதன் வேகம் பல நேரங்களில் மூச்சுத்திணறும். குறைந்த நினைவகம் (RAM), குறைந்த திறன் கொண்ட Processor உடைய கணினியிலும் Ubuntu லினக்ஸானது மிக வேகமாக இயங்குகிறது.

5. விண்டோஸைக் காட்டிலும் லினக்ஸில் இயங்குதளப் பிரச்சினைகள் வருவது அரிது. உதாரணமாக நீலத்திரைப் பிழைச் செய்திகள் (Blue screen errors) விண்டோசில் அடிக்கடி வரும். ஆனால் லினக்சில் இல்லவே இல்லை. இதனால்தான் வெப்சர்வர்களை (web server) நிறுவுபவர்கள் லினக்சையே விரும்புகிறார்கள்.

6. நீங்கள் Programing கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புவீர்களானால் உங்களுக்கு லினக்ஸே ஏற்புடையது. லினக்ஸுடன் ஏகப்பட்ட Compilers, கருவிகளும் இலவசமாகக் கொடுக்கப்படுவதால் அதன் மூலம் நீங்கள் எளிய முறையில் நிரல்களை எழுதி இயக்கிப் பார்க்கலாம்.C மொழியில் நிரல் எழுதிப் பார்ப்பதற்கும், அதை ஓட்டிப்பார்ப்பதற்கும் gcc கம்பைளர் கொடுக்கப்பட்டுள்ளது. லினக்ஸின் vi editor வழியாக நிரலினை எழுதிப் பார்க்கலாம். python மொழியைக் கற்பதற்கான பைத்தான் IDE நிறுவிப் பயன்படுத்தலாம்.

7. லினக்ஸுக்கான பகிர்ந்தளிப்பு (distribution) மிக வேகமானது. புதிய புதிய versions வருடத்திற்கு இரண்டுமுறையாவது வந்துகொண்டிருக்கின்றன.

8. உலகமெங்கும் லினக்ஸிற்கான விசிறிகள் (fans) ஏராளமாக இருக்கின்றனர். லினக்ஸ் தொடர்புடைய இணையக் குழுமங்கள் (forum,groups), வலைப்பூக்கள் எக்கச்சக்கமாக உள்ளன. உங்களுக்கு லினக்ஸ் பற்றி ஏதேனும் சந்தேகம், பிரச்சினை ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்க அவர்கள் எந்த நேரமும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

9. இப்படி இருந்து நீங்கள் இன்னமும் விண்டோஸை விரும்பினீர்கள் என்றால் அதற்காக ஒரே வன்வட்டில் (hard disk) இரண்டு இயங்குதளங்களை நிறுவிக்கொண்டு விண்டோஸ் தேவைப்படும்போது அதற்கும், லினக்ஸ் தேவைப்படும்போது இதற்கும் மாறிமாறிப் பயன்படுத்தும் வழிவகை உண்டு. இதற்கு இரட்டை பூட்டிங்க் (dual booting) முறை என்று பெயர். மேலும் விண்டோசில் இருந்தபடி அதனுள்ளே லினக்ஸை நிறுவி அங்கிருந்தபடியே இயக்கிப்பார்க்கும் வழிவகையும் உண்டு. இதற்கு VMWare / Microsoft Virtual PC போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

இது போல லினக்ஸில் இருந்தபடி விண்டோஸை இயக்குவதற்கு Wine எனப்படும் emulatorம் உண்டு.

10. புது அனுபவத்திற்காகவே லினக்ஸை நிறுவிப் பயன்படுத்திப் பார்ப்பவர்களும் உண்டு. பின் அதனுடன் மிகுந்த ஈடுபாடு கொண்டு லினக்ஸ் விசிறிகளாக மாறியவர்கள் ஏராளம். இது போக லினக்ஸில் கட்டளைகளைக் கொடுத்து இயக்கும் terminal வசதியும் உண்டு. அதன் மூலம் லினக்சின் முழுத் திறனையும் நாம் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு : http://www.ubuntu.com/

மணலில் எழுதிய எழுத்து

இணைபிரியாத நண்பர்கள் இருவர் பாலைவனம் வழியாக நடந்து சென்றனர். இருவரும் பயணத்தின் ஊடே பேசிக்கொண்டே சென்றனர். வாக்குவாதம் பலமாக இருந்தது. வாதம் மிக தீவிரமாகச் சென்றது. ஒரு நண்பனானவர் அடுத்தவனின் கன்னத்தில் அடித்து விட்டான்.வாக்குவாதத்தின் விளைவுதான் இதற்குக் காரணம்.

அடி வாங்கியவனுக்கு வலித்தது. அவன் மனம் துடித்தது. இருப்பினும் அவன் எதையும் சொல்லாமல் மவுனமாக அந்தப் பாலைவனப் பாதையின் மணலில் எழுதினான் - “இன்று என்னுடைய இனிய நண்பன் எனது கன்னத்தின் அடித்துவிட்டான்”.

அதன்பிறகு எதுவுமே பேசாமல் மேலும் வெகுதொலைவு நடந்து சென்றனர். அங்கே ஒரு பாலைவனச்சோலை (oasis) காணப்பட்டது. அந்தப் பாலைவனச்சோலையில் குளிக்கலாமென இருவரும் முடிவெடுத்தனர். குளித்தனர். திடீரென்று கன்னத்தில் அடிவாங்கிய நண்பனானவன் நீரில் மூழ்கிவிட்டான். அவனுக்கு நீச்சல் தெரியாது. ஆனால் சற்றுமுன் அவனை அடித்த நண்பன் இவனைக் காப்பாற்றிவிட்டான்.


உயிர்போகி உயிர் வந்தது நீரில் மூழ்கிப் பிழைத்தவனுக்கு. பிறகு அவன் அந்த நீர்க்கரையில் இருந்த ஒரு பாறையில் எழுதினான் - “இன்று என்னுடைய இனிய நண்பன் எனது உயிரைக் காப்பாற்றினான்”.

அவனைக் கன்னத்தில் அடித்தவனும், நீரில் இருந்து காப்பாற்றியவனும் கேட்டான் - “நான் உன்னை அடித்தவுடன் அந்த நிகழ்ச்சியை நீ மணலில் எழுதினாய். ஆனால் உன் உயிரைக் காப்பாற்றிய நிகழ்ச்சியை பாறையில் எழுதிவிட்டாயே?”.

உயிர்பிழைத்தவனும் அடிவாங்கியவனுமாகிய நண்பன் சொன்னான் - “யாராவது நமது மனதைப் புண்படுத்தும்படி நடந்துகொண்டால் நாம் அதை மனதில் எழுதிக்கொள்ளக் கூடாது. மணலில்தான் எழுத வேண்டும். மன்னிப்பு என்கிற காற்றானது மணலில் எழுதியவற்றை அழித்துவிடும்”.

“ஆனால் யாராவது நமக்கு உண்மையிலேயே நன்மை செய்திருந்தால் அதை மனம் என்கிற கல்லில்தான் எழுத வேண்டும். காற்று அதை எக்காலத்திலும் அழித்து விடாது. அப்போதுதான் பிறர் செய்த நன்மையானது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும்.”

நீதி : உங்களிடம் உள்ள செல்வங்களால் உங்கள் மதிப்பு எடை போடப்படுவது இல்லை. உங்களுக்கு உதவ முன்வருபவர்களைக் கொண்டே உங்களுடைய மதிப்பு எடை போடப்படும்.

முதன் முதலில் மனிதன் உருவான விதம் எப்படி?

எட்டுவயது சிறுமி ஒருத்தி தன் அம்மாவிடம் கேட்டாள் : ”முதன் முதலில் மனிதன் உருவான விதம் எப்படி?”

அன்னையின் பதில் : “கடவுள் ஆதாம், ஏவாளைப் படைத்தார். அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. இப்படியே மனித உலகம் உருவானது”.

இரண்டு தினங்களுக்குப் பிறகு அவள் தன் தந்தையிடம் கேட்டாள் : ”முதன் முதலில் மனிதன் உருவான விதம் எப்படி?”

தந்தையின் பதில் : “குரங்கிலிருந்து மனிதன் உருவானான். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் குரங்காக இருந்தவர்கள் நாம்”.

சிறுமிக்குக் குழப்பம் அதிகரித்தது. ”ஒரே கேள்விக்கு தாயின் பதிலும், தந்தையின் பதிலும் வேறுவேறாக இருக்கிறதே” என்று.

அடுத்த நாள் தன் தாயிடம் கேட்டாள் “இது எப்படிச் சாத்தியம்? நீங்கள் ஆதாமும், ஏவாளுமே மனிதன் உருவாகக் காரணம் என்றீர்கள். ஆனால் அப்பா சொன்னார் - குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று. இரண்டில் எது உண்மை”.

சுதாரித்துக்கொண்ட தாய் சொன்னாள் -

1) “இது மிக எளிது. என் பரம்பரை அதாவது (உன் அம்மாவின் பரம்பரை) வந்த விதம் ஆதாம், ஏவாளின் சந்ததி வாயிலாக உருவானது”

2) “உன் தந்தையின் பரம்பரை வந்த விதம் குரங்குகளின் சந்ததி வாயிலாக உருவானது. இரண்டுமே சரிதான்” என்றாள்.

இதைக்கேட்ட சிறுமி ‘ஙே’ என விழித்தாள்.

நீதி : மட்டம் தட்டியே பழக்கப்பட்டவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

பழசும் புதுசும் - இது என்ன சத்தம்?

எண்பது வயதான முதியவர் நன்கு படித்த தனது மகனுடன் நாற்காலியில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார்.

மகனுக்கு 45 வயதிருக்கும். வெளிநாடு சென்று மேற்படிப்புப் படித்து தற்போது ஒரு பெரிய தொழிற்சாலையை நிர்வகிக்கிறார். இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும்போது வீட்டின் மாடியில் ஒரு காகம் ‘காகா’ எனக் கரைந்தது.

மகனிடம் கேட்டார் “இது என்ன சத்தம்?”.

“காகம் கரையும் சத்தம்”

சில நிமிடம் கழித்து மீண்டும் அவர் கேட்டார் “இது என்ன சத்தம்?”.

”அப்பா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சொன்னேனே - காகம் கரையும் சத்தம் இது”.

மீண்டும் சில நிமிடங்களுக்குப் பிறகு தந்தை கேட்டார் - “இது என்ன சத்தம்?”.

மகன் கத்தியே விட்டார். ”ஏம்பா இப்படிக் கேட்ட கேள்வியையே மறுபடி மறுபடி கேட்டு உசிரை வாங்குறீங்க. இது காக்கை கரையும் சத்தம்னு எத்தனை தடவை சொல்லிட்டேன். வயசானாலே உசிரை எடுக்கிறீங்களே”.

மூன்றுமுறை அவர் “இது என்ன சத்தம் என்று கேட்டதற்கே” மகனுக்கு tension தலைக்கேறிவிட்டது.

உடனே வயதில் முதிர்ந்த தந்தை தனது அறைக்குள் சென்று ஒரு பழைய நாட்குறிப்பேடு (diary) ஒன்றைக் கொண்டு வந்தார்.
அவர் பிறந்ததில் இருந்து நடந்த சுவையான சம்பவங்களை அவர் அதில் பதிவெழுதி வந்திருக்கிறார்.

அதில் ஒரு குறிப்பிட்ட பக்கத்தைத் திறந்து மகனிடம் காண்பித்தார். “மகனே இந்தப் பக்கத்தை சற்று சத்தமாக உரக்கப் படிக்கவும்” - என்றார்.

மகன் படித்துக்கொண்டிருந்தார் :

அந்த நாட்குறிப்பேடில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டு இருந்தது.

“இன்று என் இனிய மூன்று வயது மகன் என்னுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். ஒரு காகம் மாடியின் ஜன்னலின் அருகே அமர்ந்தது. என் பையன் 23 முறை அப்பா அது என்ன? அப்பா அது என்ன? எனக் கேட்டுக்கொண்டே இருந்தான். நானும் அவனுக்குப் பொறுமையாக அன்புடன் - அது காகம் - அது காகம் என திரும்பத் திரும்ப அவன் கேள்வி கேட்கும்போதெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தேன். அவனை அன்புடன் தழுவிக்கொண்டே அவன் ஒவ்வொருமுறையும் அது என்ன என்று கேட்கையில் நான் பதில் சொன்னேன்.
ஒரே கேள்வியை 23 முறை கேட்கிறானே என்று எனக்குத் தோணவில்லை. அவன் மேல் இருந்த அன்பே பெரிதாக இருந்தது.”.

இதைச் சத்தமாகப் படித்த மகனுக்கு பழைய Flash back ஓடியது. தற்போது மூன்றுமுறை தனது தந்தையார் “அது என்ன என்று கேட்டதற்கே - தன்னால் பொறுமையாகப் பதில் சொல்ல இயலவில்லையே. தந்தையின் அன்பு எங்கே தான் எங்கே!” என வெட்கித் தலைகுனிந்தார்.

நீதி : ஊருக்கு ஒரு நியாயம் உனக்கு ஒரு நியாமல்ல. அனைவருக்கும் ஒரே நியாயம்தான்.

மிஸ்டர் எக்ஸின் அரேபியப் பயணம்

ஒரு மிகப் பெருமை வாய்ந்த குளிர்பானக் (soft drinks) கம்பெனியில் மிஸ்டர். எக்ஸ் வேலை செய்துகொண்டிருந்தார். அரேபிய நாட்டுப் பாலைவனப் பகுதிகளில் அந்தக் கம்பெனியின் Marketing பிரிவு முடுக்கிவிடப்பட்டிருந்தது.

அரேபியாவின் Marketஐப் பிடிப்பதற்கான தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார்.

அவர்களின் எந்த ஒரு முயற்சியும் அங்கே வெற்றியடையவில்லை. வேறு வழியின்றி தோல்வியை ஒப்புக்கொண்டு வீடு திரும்பினர்.

வீட்டில் மிஸ்டர். எக்ஸின் மனைவி கேட்டாள் “ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க. என்ன விசயம். இப்படி நீங்க கவலைப் பட்டு நான் பார்த்ததில்லையே”.

மிஸ்டர் எக்ஸ் - “அரேபிய நகரத்தில் என் குழுவினருடன் Marketing செய்வதற்காகச் சென்றேன். அங்கே பாலைவனப் பகுதியாயிருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் வெற்றிநடை போட்டுச் சென்றேன். ஆனால் அங்கே அவர்கள் பேசிய மொழி எனக்குப் புரியவில்லை. நான் பேசிய மொழி அவர்களுக்குப் புரியவில்லை. அங்கே ஆரம்பித்தது பிரச்சினை. அதற்காக நான் ஒரு உபாயம் சொன்னேன். நகரின் முக்கியமான இடங்களில் எல்லாம் மூன்று படங்களை வைத்தோம். ஒரே மனிதனின் மூன்று தோற்றங்களை விளக்கும் வகையில் அந்தப் படங்கள் அமைந்திருக்கும்.

முதல் படம் : பாலைவன வெயிலில் கஷ்டப்பட்டுப் பயணிக்கிறான் ஒருவன். நீர் குடிக்கும் ஆவலில் வறட்சியுடன் நிற்பான் அவன்.

இரண்டாம் படம் : அவனே நம் கம்பெனியின் குளிர்பானத்தைக் குடிப்பான்

மூன்றாம் படம் : முற்றிலும் உற்சாகமானவனாக அவனே காட்சியளிப்பான்.

இந்த மூன்று படங்களையும் நகரின் அனைத்துத் தெருக்களிலும் காட்சிக்கு வைத்துக் காத்திருந்தோம். அப்படி இருந்தும் எல்லோரும் படங்களை உற்று நோக்கிச் சென்றனரே தவிர யாரும் குளிர்பானங்களை வாங்கி அருந்தவில்லை. ஏனென்று தெரியவில்லை.

ஒரு மாத காலத்திற்குப் பிறகு நொந்துபோகி வீடு வந்தேன்” என்றார்.

மிஸ்டர் எக்ஸின் மனைவி தன் தலையில் மெல்ல அடித்துக்கொண்டாள்.

”ஏங்க உங்க Idea எல்லா இடத்திலும் Work out ஆகிடாதுங்க. எல்லா நாடுகளிலும் இடமிருந்து வலமாகத்தான் (Left to Right) படிப்பாங்க எழுதுவாங்க. ஆனால் அரேபியாவில் வலமிருந்து இடமாக (Right to left) எழுதுவாங்க. படிப்பாங்க.

இது உங்களுக்குத் தெரியாமல் போயிருச்சு. மொழி தெரியாமல் நடந்த தப்பு இது.

அதே படங்களை வலமிருந்து இடமாக (Right to left) யோசிச்சுப் பாருங்க

1. மிக உற்சாகமாக ஒரு இளைஞன் காட்சியளிக்கிறான்
2. உங்கள் கம்பெனி பானத்தைக் குடிக்கிறான்.
3. மிகக் கலைத்துப் போகி கஷ்டப்படும் முகத்தைக் காண்பிக்கிறான்.

இதுதான் நீங்கள் செய்த தவறு.” என்றாள்


நீதி : யானைக்கும் அடி சருக்கும்.

மிஸ்டர். எக்ஸின் அப்பாவித்தனம்

மிஸ்டர். எக்ஸ் ஒரு Super Market ல் பொருட்களை வாங்குவதற்காக சென்றார். ஒவ்வொரு பொருட்களாக எடுத்துக் கூடைக்குள் போட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவர் மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு - “யாரோ என்னையே வெகு நேரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்”.

அவர் யூகம் சரிதான். அவரையே ஒரு மூதாட்டி தொடர்ந்துகொண்டிருந்தாள்.

ஆனால் அவர் அந்த மூதாட்டியைப் பற்றிக் கவலையின்றி தனக்குத் தேவையான ஒவ்வொரு பொருட்களையும் சேகரித்துக்கொண்டிருந்தார்.

எல்லாம் முடிந்ததும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, பணம் கட்டும் இடத்துக்கு விரைந்தார்.

அதற்குள்ளாக அந்த வயதான மூதாட்டி அவருக்குக் குறுக்கே வந்து நின்றாள்.

“மன்னிக்கவும். நான் உன்னையேதான் வெகு நேரமாக உற்று நோக்கிக்கொண்டிருந்தேன். அதை நீயுமே உணர்ந்திருப்பாய். ஒரு சாயலுக்கு நீ எனது மகனைப் போல இருக்கிறாய். அவன் இப்போது வெளிநாட்டில் இருக்கிறான். வருடம் ஒருமுறை தான் இங்கே வருகிறான். உன்னைப் பார்த்ததில் எனக்கு ஒரு சந்தோசம் கிடைத்தது. அதனால் தான் நீண்ட நேரம் உன்னையே உற்றுப்பார்த்தேன்.” - என்றாள்.

“எனக்கு ரொம்ப வெட்கமாக இருந்தது”, என்ற மிஸ்டர். எக்ஸ், “அம்மா உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமெனில் கேளுங்கள்” என்றார்.

“ஆமாம் மகனே. நான் இங்கே இருந்து வெளியே செல்லும்போது, போய் வாருங்கள் அம்மா! என உன் வாயால் சொல்ல இயலுமா?”.

“சரி”.

வயதான மூதாட்டியும் Super Market (பல்பொருள் அங்காடி) யை விட்டுக் கிளம்பி வெளியே சென்றாள்.

முன்கூட்டியே திட்டமிட்டபடி நம் மிஸ்டர். எக்ஸும் “போய் வாருங்கள் அம்மா” எனக் கூறி மூதாட்டியைப் பார்த்துக் கையசைத்தார்.

பின் ஒரு வழியாக பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்றார். அங்கே அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் செலுத்தவேண்டிய மொத்தத்தொகையாக 8500 ரூபாய்க்கு ரசீது கொடுத்தார்கள். ஆனால் அவர் வாங்கிய பொருட்களின் விலையோ வெறும் 300 ரூபாய் மட்டுமே.

அவர் பணம் கட்டுபவரிடம் முறையிட்டான். “அக்கா. நான் வாங்கிய பொருட்களின் மொத்த விலை 300 ரூபாய்தானே. ஏன் 8500 ரூபாய்க்கு bill கொடுத்திருக்கீங்க”.

“உங்க அம்மாதான் சொன்னாங்க. அவங்களுக்கும் நீங்களே பணம் கொடுத்துடுவீங்கன்னு. நீங்ககூட போய் வாருங்கள் அம்மான்னு சத்தமா சொல்லி கையைக் காண்பிச்சீங்களே.”.

நல்ல வேலை Credit Card கொண்டு சென்றதால் மிஸ்டர். எக்ஸ் தப்பித்தார்.

நீதி : யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

கருமியின் மனைவி

ஒரு தேசத்தில் ஒரு உலக மகாக் கஞ்சன் தன் குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு பணத்தின் மேல் கொள்ளை ஆசை.

உலக மகாக் கருமி அவன். வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கிடைத்த பணம் அனைத்தையும் பத்திரப்படுத்தி வந்தான்.

அவன் சாகும் தருவாயில் தன் மனைவியிடம் சொன்னான் - “நான் இறந்த பிறகு, எனது வாழ்நாளில் நான் சம்பாதித்த அத்தனை பணத்தையும் உடன் எடுத்துச் செல்ல விரும்புகிறேன். ஆதலால் அனைத்துப் பணத்தையும் ஒரு சிறு பெட்டியில் போட்டு எனது சவப்பெட்டிக்குள்ளேயே வைத்துவிடவும்.”.

இவ்வாறு செய்தே தீரவேண்டும் என தனது மனைவியிடம் உறுதிமொழியும் சத்தியமும் பெற்றுவிட்டான். மனைவியும் கணவன் மேல் உள்ள பாசத்தினால் சத்தியமும் செய்துவிட்டாள்.

அவனும் அவன் நினைத்தமாதிரியே விரைவில் இறந்துவிட்டான்.
அனைத்து மதச்சடங்குகளும் முடிந்தபிறகு சவப்பெட்டியை மூடத் தயாராகினர். அந்த நேரத்தில் துக்கத்துக்கான கருப்பு நிற ஆடை அணிந்த அவனது மனைவியானவள் ஒரு சிறிய கையடக்கப் பெட்டியைக் கொண்டு வந்தாள். “ஒரு நிமிடம். பெட்டியை மூடாதீங்க. இதை உள்ளே வைச்சுருங்க”

அவள் கொடுத்த சிறிய பெட்டியை கருமியுடன் வைத்துச் சவப்பெட்டியை மூடிவிட்டனர்.
பின் ஒரு வழியாக அவனுடைய சவ அடக்கமும் முடிந்தது.

அவன் மனைவியின் நண்பி ஒருத்தி வந்தாள். “ஏண்டி உனக்கு எதாவது அறிவிருக்கா?. அவந்தான் ஒரு கூறுகெட்ட மனுசன். பணம் பணம்னு அழைஞ்சான். பத்துக் காசு செலவழிக்காம எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சு அழகு பாத்தான். செத்தபிறகாவது நிம்மதியா இருக்க விடாம. எல்லாப்பணத்தையும் தன்னுடன் எடுத்துப் போகணும்னு சத்தியம் கேட்டான். சத்தியத்தைப் பண்ணிப்புட்டு இப்போ எல்லாத்தையும் பொட்டியில போட்டு அவங்கிட்டயே கொடுத்திட்டியே” என்றாள்.

மனைவி சொன்னாள் - “என் கணவர் எவ்வளவு மகாக் கருமியா இருந்தாலும், அவர் மேலே எனக்குக் கொள்ளைப் பிரியம். என் மனசு முழுவதும் நிறைந்திருப்பவர் அவர். அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றாவிட்டால் எனது கட்டை வேகாது. அவர் விருப்பத்துக்கு இணங்கி அவருடைய பணத்தையெல்லாம் அவருடனேயே வைத்துவிட்டேன்”.

“என்னடி சொல்றே. எல்லாப் பணத்தையும் அவனோட அனுப்பிட்டியா?!@#$$%%^#”

“ஆமாம். அப்படித்தான் செய்தேன்”. “அவருடைய பணம் எல்லாத்தையும் எனது வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டு, அவருடைய பெயருக்கு ஒரு செக் எழுதி அந்த செக்கை ஒரு சிறு பெட்டியில் வைத்து அவருடன் அனுப்பிவிட்டேன். அவரால் அந்தச் செக்கைப் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள இயலுமெனில் மாற்றிக்கொண்டு செலவழிக்கட்டுமே” - என்றாள் மனைவி.

வேலை மாற்றத்தின் விளைவு

ஒரு வாடகை டாக்சியில் பயணியும், ஓட்டுநரும் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
ஓட்டுநர் சற்றே வயதானவராகக் காணப்பட்டார். பயணியானவர் தனது நிறுத்தம் வந்ததைச் சுட்டிக்காட்டுவதற்காக ஓட்டுநரின் தோளைத் தொட்டார்.

அவ்வளவுதான். வண்டியானது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத்துவங்கியது. ஒரு பேருந்தை மோதவிருந்து மயிரிழையில் தப்பித்தது. நடைபாதையிலே ஓடத்துவங்கி ஒரு வழியாக ஒரு கடையின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டது. இறுதியில் டாக்சியின் பிரேக்கை அழுத்தி நிறுத்திய டிரைவர் வீரிட்டுக் கத்தத் துவங்கினார்.

“அண்ணே.. இப்போப் பண்ணியது மாதிரி இன்னோரு முறை பண்ணாதீங்கண்ணே. என்னை ரொம்பப் பயமுறுத்தீட்டிங்கண்ணே.” என்று பயணியிடம் டிரைவர் கூறினார்.

டிரைவரிடம் மன்னிப்புக் கேட்ட பயணி, “என்னப்பா உன் தோளைத் தொட்டதற்கே இப்படிப் பயப்படுகிறாயே? ஏன்?”.

டிரைவர் - “மன்னிக்கவும். இது முழுக்க முழுக்க என்னுடைய தவறுதான். இந்த டாக்சி டிரைவர் உத்தியோகத்துக்கு நான் இன்றுதான் புதிதாகச் சேர்ந்தேன். இதற்கு முன்னர் நான் உயிரற்ற பிணங்களைச் சுமக்கும் வண்டியை ஓட்டும் ஓட்டுநராகவே இருந்தேன். 25 ஆண்டுகளாக அதே பணிதான். இன்றுதான் உயிருள்ள ஒரு மனிதருடன் பயணிக்கிறேன். திடீரென்று தோளைத் தொட்டுவிட்டீர்கள். எனக்குப் பேச்சு மூச்சே நின்றுவிட்டது.”

வாழ்க்கைப் பாடம் - தந்தையும் மகனும்

ஒரு பணக்காரத்தந்தை தன் 12 வயது மகனை அழைத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றார்.

ஏழை மக்கள் படும் கஷ்டத்தை மகனுக்கு உணர்த்துவதற்காகவும்,அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை தனது மகன் அறிய வேண்டும் என்பதற்காகவும் இந்தச் சிறப்புச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தார்.

இரண்டு வாரங்களுக்கு மேல் தந்தையும், மகனும் கிராமத்தில் வசித்தனர். வயல்வெளிகளிலும், நிலாவெளிச்சத்திலும் சுற்றித் திரிந்தனர். பின் குறிப்பிட்ட தினத்தில் தனது சொந்த இருப்பிடத்திற்கு திரும்ப வந்துவிட்டனர்.

வீடு திரும்பியதும் தந்தை மகனிடம் கேட்டார் - “சொல் மகனே!, இந்தச் சுற்றுலாவில் என்ன கற்றுக்கொண்டாய்?”.

அவரது எண்ணம் என்னவெனில், கிராமத்தைப் பற்றியும், மக்கள் படும் கஷ்டத்தையும் மகன் வாயால் கூறக் கேட்கவேண்டும் என்பதே.

மகன் சொன்னான் :

தந்தையே நாம் ஒரே ஒரு நாய்தான் வைத்திருக்கிறோம். அங்கே அந்த ஏழைகள் அவரவர் வீடுகளில் நான்கைந்து நாய்கள் வளர்க்கின்றனர்.

நம் வீட்டு நீச்சல் குளம் நமது தோட்டத்தின் எல்லைக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. ஆனால் அவர்கள் நீந்துவதற்காக மிகப்பெரிய ஏரி, கண்மாய்கள் இருக்கின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவற்றின் எல்லையை என்னால் காண இயலவில்லை.


நாம் இரவு வெளிச்சத்திற்காக நமது தோட்டத்தில் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட குறிப்பிட்ட விலையுள்ள வண்ண அலங்கார விளக்குகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் விலைமதிப்பே இல்லாத வானத்து நட்சத்திரங்களையும், வண்ண நிலவையும் இரவு வெளிச்சத்திற்காக உபயோகிக்கின்றனர்.

நாம் வாழ்வதற்காக மிகச் சிறிய நிலப்பரப்பையே வைத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் பரந்துவிரிந்த நீளமான வயல்வெளிகளையும், தோட்டங்களையும் வைத்திருக்கிறார்கள்.

நமக்கு வேலைசெய்வதற்காக நாம் வேலையாட்களை வைத்திருக்கிறோம். வேலையாட்கள் நமக்கு உதவுகிறார்கள். நாம்தான் யாருக்கும் உதவுவதில்லை.
ஆனால் கிராமத்து மக்களோ அடுத்தவர்களுக்கு உதவுவதிலும், பிறருக்குச் சேவைசெய்வதிலும் இன்பம் கொள்கிறார்கள்.

இவையனைத்தையும் கேட்டதும் பணக்காரத் தந்தைக்குப் பேச்சே வரவில்லை.

இறுதியாக மகன் சொன்னான் - “மிக்க நன்றி தந்தையே!. ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எனக்குக் காட்டியமைக்கு நன்றி”.

நீதி :
பார்வையும், பார்க்கும் கோணமும் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. தந்தையின் பார்வைக்கும், மகனின் பார்வைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
நம்மிடம் இல்லாதது வேறு ஒருவரிடம் இருக்கும். அவரிடம் இல்லாதது நம்மிடம் இருக்கும். ஆனால் எல்லோரிடமும் அன்பு மட்டும் இருந்தால் வாழ்வு மலர்ச்சியுடன் இருக்கும். நம்மிடம் இருப்பவற்றை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்து வாழும் வாழ்வே சிறப்பானது.

சொர்க்கத்தில் மிஸ்டர். எக்ஸ்

மிஸ்டர் எக்ஸ். தான் இறந்த பிறகு சொர்க்கத்துக்குச் சென்றார். அங்கே ஒரு தேவதை அவருக்குச் சொர்க்கத்தைச் சுற்றிக் காண்பித்து வழி நடத்தினாள்.

அவர்கள் அங்கே நடந்து சென்றபோது பாதையின் இருபக்கமும் ஏராளமான தேவதைகள் வேலைசெய்துகொண்டு இருந்தனர்.

முதல் பகுதியின் முகப்பில் அவரை நிறுத்தி வழிநடத்துபவள் சொன்னாள் - ”மனிதர்கள் கடவுளுக்கு அனுப்பும் விண்ணப்பங்கள் / மனுக்கள் அனைத்தும் இங்கே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவர்கள் அனைவரும் மனிதர்களிடம் இருந்து வந்த மனுக்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்”.

முதல் பகுதியில் வேலைசெய்யும் தேவதைகள் அனைவரும் மிகமிக தீவிரமாக சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டு இருந்தனர்.

கட்டுக்கட்டாக மனுத்தாள்கள் இருந்தன. அதைக் கண்ட மிஸ்டர் எக்ஸ். ”கடவுளிடம் மனுக் கொடுப்பதில் மக்கள் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்களா?”.

முகப்பைக் கடந்து மேலும் சிறிது தூரம் நடந்து சென்றனர். முதலாவது பகுதி முடிந்து இரண்டாவது பகுதி ஆரம்பித்தது. அங்கேயும் ஏராளமான தேவதைகள் முதல்பகுதியில் கண்டதைப் போன்றே அதிவேகமாகவும், சுறுசுறுப்பாகவும் வேலைபார்த்துக்கொண்டு இருந்தனர்.

அவர்களைச் சுட்டிக்காட்டிய வழிநடத்துபவள் சொன்னாள் - “இதுதான் முதல்பகுதியில் மனிதர்களிடம் இருந்து வாங்கிய விண்ணப்பங்களை கடவுளிடம் சேர்ப்பதற்கான பகுதி. இவர்கள் அதற்குரிய பணியைச் செய்துகொண்டிருக்கின்றனர்”. இரண்டாவது பகுதியில் இருந்தவர்கள் அனைவரும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் ஆர்வமாகவும், அவற்றை முறைப்படி அடுக்கிக்கொண்டும் இருந்தனர்.

இப்படி சொர்க்கத்தைச் சுற்றிப்பார்த்த மிஸ்டர் எக்ஸ். அதன் இறுதிப்பகுதியை அடைந்தார். அது ஒரு சிறிய பகுதியாக இருந்தது. அங்கே வெளிவாயிலில் ஒரே ஒரு தேவதை மட்டும் அமர்ந்திருந்தாள். அவளும் எந்த வேலையும் செய்யவில்லை.

அவளைக்கண்ட மிஸ்டர். எக்ஸுக்கு ஆச்சரியம். ”இதற்கு முந்தையப் பகுதிகளில் வேலை செய்த அனைவரும் மிக மிகத் துரிதமாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தனர். ஆனால் இறுதி வெளிவாயிலில் இருக்கும் இவளோ ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கிறாளே?. இது என்ன இடம்? இவள் என்ன செய்கிறாள்?” என்று வழிநடத்துபவளிடம் கேட்டார்.

வழிநடத்தும் தேவதை சொன்னாள் - “இதுதான் மனிதர்களின் விண்ணப்பங்களைப் படித்துப் பார்த்த பிறகு கடவுள் திரும்ப அனுப்பும் அக்னாலட்ஜ்மெண்ட் பகுதி”.

”எத்தனை கோடி விண்ணப்பங்களை கடவுள் முன் வைத்தாலும், அவராக மனது வைத்துக் குறிப்பிட்ட சில விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார். அப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றுக்கு மட்டும், அவர் பதிலிடுகிறார். அதனாலேயே இங்கே ஒருத்தி மட்டுமே வேலை செய்கிறாள். ஆனால் அவளுக்கு எப்போதாவதுதான் வேலை.”

நீதி : எல்லாப் பாரத்தையும் கடவுள் மேல் போட்டுவிட்டு ஓய்ந்திருந்தால் எந்த வேலையும் நடக்காது. ஏதாவது சில விசயங்களுக்கு மட்டும்தான் கடவுள் நமக்கு உதவுவார். நமது அனைத்துச் செயல்களுக்கும் நாமே காரணகர்த்தா. கடவுளைக் காரணம் காட்டி நமது பணியைத் தள்ளிப் போடக்கூடாது.

விண்டோஸ் டாஸ்க்மேனேஜருக்கு 5 மாற்றுகள்

நம்மில் பலரும் அவரவர் கணினியின் இயங்குதளமாக விண்டோஸ் பயன்படுத்துகிறோம்.

Windows உடன் இணைந்துள்ள Task Managerஐப் பற்றியும் அறிந்து இருக்கிறோம்.

எப்போதாவதோ / அடிக்கடியோ நமது கணினிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு திகைத்துப் போகி நின்றுவிடும் நேரத்தில் Taskmanager ஐ உதவிக்கு அழைத்து எந்தப் பயன்பாட்டை இயக்கியதனால் கணினி திணறுகிறது, என்பதைக் கண்டறிந்து அந்தக் குறிப்பிட்ட பயன்பாட்டை மூடிவிடலாம்.

ஒரு செயலுக்கும் (process) அதனுடன் தொடர்புடைய பிற கிளைச்செயல்கள் (child process) இருக்கும். இந்தத் தொடர்புடைய செயலையும் நிறுத்தினால்தான் கணினியை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். இப்படிச் செய்வதற்கு task manager உதவுகிறது.

இந்த விண்டோஸுடன் இணைந்துள்ள டாஸ்க்மேனேஜர்க்கு பதிலிகளாக 5 மாற்றுப் பயன்பாடுகளைக் கீழே கொடுத்துள்ளேன்.


சாதாரணமாக taskmanager ல் காண இயலாத ஏராளமான அம்சங்களை இவற்றில் காணலாம்.


1. Process Explorer

2. DTaskManager

3. MSN TaskExplorer

4. Free Extended Task Manager

5. AnVir Task Manager


இது போன்ற வேறு சில மாற்று மென்பொருட்கள் உங்கள் பார்வைக்கு.

1) மைக்ரோசாப்ட் வேர்ட்க்கு 5 மாற்று மென்பொருட்கள்

2) விண்டோஸ் கால்குலேட்டருக்கு ஒரு மாற்று

3) விண்டோஸ் டீஃப்ராக்மென்ட்க்கு ஒரு மாற்று

4) மாற்று மென்பொருள் பயன்பாடுகள் ஐந்து

5) விண்டோஸ் எக்ஸ்ப்ளோரருக்கு ஒரு மாற்று

6) விண்டோஸ் பெயிண்ட் பிரஷ்க்கு ஒரு மாற்று

7) அடோப் ரீடருக்கு ஒரு மாற்று

8) விண்டோஸ் நோட்பேடுக்கு ஒரு மாற்று

9) மீடியாபிளேயருக்கு ஒரு மாற்று

10) அடோப் இல்லஸ்ட்ரேட்டர் (அ) கோரல்ட்ராவுக்கு ஒரு மாற்று

நெருப்பு நரி : FireFox க்கான குறுக்குவழிகள்

நெருப்பு நரி என்று செல்லமாக அழைக்கப்படும் ForeFox உலவியையே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். அதன் வேகமும், tabbed browsing ம் அனைவரையும் கவர்ந்தவை.

அதன் வேகத்தை இன்னும் அதிகப்படுத்த கீழ்க்கண்ட குறுக்குவழிச் சாவிகளைப் பயன்படுத்தலாம்.

---> Ctrl + Tab or Ctrl + PageDown: Cycle through tabs.
---> Ctrl + Shift + Tab or Ctrl + PageUp: Cycle through tabs in reverse.
---> Ctrl + (1-9): Switch to tab corresponding to number.
ஒரு tabக்கும் வேறு tabக்கும் மாறிமாறிச் செல்வதற்கு.




---> Ctrl + N: New window.
---> Ctrl + T: New tab.

---> Ctrl + L or Alt + D or F6: Switch focus to location bar.
---> Ctrl + Enter: Open location in new tab.
---> Shift + Enter: Open location in new window.

---> Ctrl + K or Ctrl + E: Switch focus to search bar.
---> Ctrl + O: Open a local file.

---> Ctrl + W: Close tab, or window if there's only one tab open.
---> Ctrl + Shift + W: Close window.

---> Ctrl + S: Save page as a local file.
---> Ctrl + P: Print page.
---> Ctrl + F or F3: Open find toolbar.

---> Ctrl + G or F3: Find next...
---> Ctrl + Shift + G or Shift + F3: Find previous...
---> Ctrl + B or Ctrl + I: Open Bookmarks sidebar.

---> Ctrl + H: Open History sidebar.
---> Escape: Stop loading page.

---> Ctrl + R or F5: Reload current page.
---> Ctrl + Shift + R or Ctrl + F5: Reload current page; bypass cache.
---> Ctrl + U: View page source.

---> Ctrl + D: Bookmark current page.
---> Ctrl + NumpadPlus or Ctrl + Equals (+/=): Increase text size.

---> Ctrl + NumpadMinus or Ctrl + Minus: Decrease text size.
---> Ctrl + Numpad[0] or Ctrl + 0: Set text size to default.
---> Alt + Left or Backspace: Back.

---> Alt + Right or Shift + Backspace: Forward.
---> Alt + Home: Open home page.

---> Ctrl + M: Open new message in integrated mail client.
---> Ctrl + J: Open Downloads dialog.

---> F6: Switch to next frame. You must have selected something on the page already, e.g. by use of Tab.
---> Shift + F6: Switch to previous frame.

---> Apostrophe ('): Find link as you type.
---> Slash (/): Find text as you type.


தொடர்புடைய சுட்டிகள் :


1. விண்டோஸ் எக்ஸ்ப்பி இயங்குதளத்துக்கான குறுக்குவழிச் சாவிகள்

2. மைக்ரோசாப்ட் வேர்ட் 2007க்கான குறுக்குவழிச் சாவிகள்

3. விண்டோஸ் 7 பீட்டாவின் குறுக்குவழிச் சாவிகள்

4. எக்ஸல் தொகுப்புக்கான குறுக்குவழிகள்

நீளமான இணைய முகவரிகளைச் சுருக்குவது எப்படி?

நம் நண்பர்கள் அனைவருமே இணையத்தளமோ (web site), வலைப்பதிவோ (blog) வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு இணைய முகவரி (URL ) கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பதிவுகளுக்கும் தனித்தனி முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பதிவின் முகவரியைத் தொலைபேசியின் ஊடாக வேறு ஒரு நண்பருக்குத் தெரிவிக்க முயற்சித்தால் தகவல் இழப்புதான் நிகழும்.

ஏனெனில் பதிவின் முகவரி (URL for post address) மிக நீளமானதாகவும், தொலைபேசியின் அடுத்த முனையில் இருப்பவருக்குச் சிரமம் கொடுப்பதாகவும் அமைந்திருக்கும்.

தொலைபேசி வாயிலாக ஒரு குறிப்பிட்ட பதிவின் முகவரியை எழுத்துப்பிழையில்லாமல் தெரிவிக்க இது போன்ற கருவிகளைப் பயன்படுத்தலாம்.


குறிப்பிட்ட சில புக்மார்க் திரட்டிகளில் (book mark aggregators) ஏதேனும் காரணத்துக்காக ஒரு குறிப்பிட்ட URL ஐ நிராகரித்திருப்பார்கள். அந்த URL ஐ அவர்களது Filter நுட்பம் வடிகட்டிவிடும்.

இந்த நேரத்தில் நிராகரிக்கப்பட்ட URL ஐ சுருக்கி வேறோரு URL ஆக மாற்றி அதை bookmark திரட்டிகளில் submit செய்யலாம். இது ஒரு காரணம். இது போல பல காரணங்கள்.

மிக நீளமான இணைய முகவரிக்குப் பதிலாக சிறிய முகவரியைப் பயன்படுத்தலாம். இதற்கு URL Redirection என்று பெயர்.

இந்தச் சேவையை வழங்குவதற்காக கீழ்க்கண்ட தளங்கள் உள்ளன.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/2805

http://metamark.net/

http://notlong.com/

http://xaddr.com/

http://www.snipurl.com/site/index

http://doiop.com/

http://memurl.com/

http://shorl.com/

http://qurlyq.com/

http://is.gd/

http://traceurl.com/index.html?locale=en#t0

http://tinyurl.com

உதாரணம்:

http://snipurl.com/dkmwf இதைச் சொடுக்கினால், http://vijaybalajithecitizen.blogspot.com/2009/03/singh-is-king-cartoons.html இந்தப் பதிவிற்கு redirect ஆகும். முயற்சித்துப் பாருங்கள்.

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எனது கணினியைத் துவக்குவதற்கு 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பின் சில நெறிமுறைகளைப் பின்பற்றிய பிறகு ஒரே நிமிடத்துக்குள்ளாகவே Start ஆகிவிடுகிறது.

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.
பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு :
ஒரு முறை இயங்குதளத்தையும், தேவையான பயன்பாடுகளையும் நிறுவியபிறகு வேறு ஏதேனும் வெளியுலகத் தொடர்பே ஏற்படாத வகையில் தனித்திருக்கும் கணினிகளுக்கு மட்டுமே இதைப் பரிந்துரைக்கலாம்.

மிஸ்டர் எக்ஸும் 4 புரியாத புதிர்களும்

1. மிக உயரமான கட்டடத்தில் ஒருவன் வசிக்கிறான். தினமும் வேலைக்குச் செல்வதற்காக மேல் மாடியில் இருந்து lift ஐ உபயோகித்துக் கீழே வருவான். ஆனால் வேலைமுடிந்து வீட்டுக்கு வரும்போது மழை நாட்கள் தவிர மீதி நாட்களில் பாதி வரை liftல் பயணிப்பான். பின்னர் மீதிப் பாதியை மாடிப்படிகளின் வழியே நடந்தே மேலே ஏறுவான். ஏன்?

2. ஒரு மனிதனும் அவனது மகனும் ஒரு car விபத்தில் சிக்கிக்கொண்டனர். அந்த விபத்தில் தந்தை இறந்துவிடுகிறார். மகனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்றனர். மருத்துவமனையில் மருத்துவர் சொல்கிறார் - “இந்தச் சிறுவனுக்கு என்னால் அறுவைசிகிச்சை செய்ய இயலாது. ஏனெனில் இவன் என் மகன்”. இது எப்படிச் சாத்தியம்?

3. ஒரு மதுவிருந்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மிஸ்டர். எக்ஸும் கலந்துகொண்டார். மதுவிருந்து ஆரம்பிக்கும்போது மிகச் சிறிய அளவு மதுவை மிஸ்டர். எக்ஸ் சுவைத்துவிட்டு வெளியேறிவிட்டார். சில மணி நேரங்கள் கழித்து விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் இறந்து போயினர் - மிஸ்டர். எக்ஸைத் தவிர. மிஸ்டர். எக்ஸ் தப்பித்ததன் மர்மம் என்ன?

4. மிஸ்டர். எக்ஸ் ஒரு மதுபானக் கடையில், ”நீர் அருந்துவதற்காக ஒரு tumbler குடிநீர் கிடைக்குமா?” என்று கேட்டார்.கடையில் வேலை செய்யும் ஒரு மூத்த ஊழியர் திடீரென்று உள்ளே வந்து தனது சட்டைப்பையில் இருந்த துப்பாக்கியை மிஸ்டர். எக்ஸின் முன்னே உயர்த்தி “Hands up” என்றார். உடனே மிஸ்டர் எக்ஸ். நீரைக் கூடக்குடிக்காமல் கடையின் மூத்த ஊழியருக்கு நன்றி தெரிவித்துவிட்டு நடையைக் கட்டினார். இது என்ன கலாட்டா? என்ன நடந்தது?

(விடைகள் : கீழே)
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|


1. அந்த மனிதன் மிகமிகக் குட்டையான ஒருவன்.
lift ல் உள்ள எல்லா buttonsம் அவனுக்கு எட்டாது. பாதிவரை தான் அவனுக்கு எட்டும். அதனால் எப்போதும் கட்டடத்தின் பாதிவரை lift வழியாகவும், மீதியை நடந்தும் வருவான். ஆனால் மழை நாட்களில் அவன் குடையை எடுத்துச் செல்வது வழக்கம். அந்த நேரங்களில் குடைக்கம்பியால் மேல்மாடிக்கான lift பொத்தானை அழுத்தி நேரடியாக மேல்மாடிக்குச் சென்றுவிடுவான்.

2. மருத்துவமனையில் மருத்துவராக இருந்தவர் அச்சிறுவனின் அம்மா.

3. மதுவிருந்தில் கலந்துகொண்டவர்களைத் தீர்த்துக்கட்டுவதற்காக ice cubesல் விசம் கலக்கப்பட்டு இருந்தது. ஆனால் மிஸ்டர். எக்ஸ் ஆனவர் விருந்து ஆரம்பிக்கப்பட்ட உடனேயே சிறிதளவு மட்டும் அருந்தினார். அதாவது ice cubes உறைநிலையில் இருக்கும்போதே மது அருந்தினார். உடனே அவர் கிளம்பிவிட்டார். அவருக்கு விசத்தின் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் மற்றவர்கள் நீண்டநேரம் கழித்தும் மறுபடி மறுபடி மது அருந்தினார்கள். ice cubes எல்லாம் உருகி, கரைந்து விசமானது மதுவில் கலந்த பின்னர் அவர்கள் மதுவுடன் விசத்தையும் சேர்த்தே அருந்தினர்.

4. மிஸ்டர். எக்ஸ்க்கு விக்கல் வந்தது. அதை அடக்குவதற்காக அவர் நீர் குடிக்கும் எண்ணத்தில் மதுபானக்கடையில் நீர் கேட்டார். அவரது பேச்சுத் தோரணையையை அறிந்த மூத்த ஊழியரானவர், தனது துப்பாக்கியை உயர்த்தி ஹாண்ட்ஸ் அப் எனப் பயம் காட்டினார். அந்தப் பயத்தில் மிஸ்டர். எக்ஸின் பயம் போகிவிட்டது - விக்கலும் தான். உடனே நன்றி தெரிவித்து எஸ்கேப்பினார்.

பழுதடைந்த CD / DVD களை இயக்க, DVD படத்தை வெட்டியெடுக்க

மென்பொருள் உலகில் தகவல்களைப் பராமரிப்பதற்கு அடிக்கடி நகல் எடுத்துவைத்துப் பயன்படுத்துகிறோம். அப்படி நகல் எடுத்து வைப்பதற்கும், படி எடுப்பதற்கும் CD / DVD களைப் பயன்படுத்துகிறோம்.

குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அவற்றில் பழுதேற்பட்டு 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட CD / DVD களைப் பயன்படுத்த இயலாத நிலைமை ஏற்பட்டுவிடுகிறது.

கணினியில் இவற்றை இயக்கிப் பார்க்கவும் இயலாமல் போகிவிடுகிறது.


இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன்மூலம் பழுதடைந்த CD / DVD களிலில் ஏற்றப்பட்ட தகவல்களை மீட்பதற்கும் வழியுண்டு.

http://www.aivsoft.com/downloads/badcdreader/BadCDDVDreaderSetup.exe

DVD Cutter என்பது ஒரு எளிய சிறிய மென்பொருள். ஒரு DVD யில் ஏற்றப்பட்டுள்ள படக் கோப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் நமது கணினியில் பதிவு செய்வதற்கு இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

DVD Cutter மூலம் ஒரு .VOB கோப்பின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுத்து தனியாகப் பதிவு செய்திட இயலும்.


ஒரு முழுநீளத் திரைப்படத்தில் இருந்து குறிப்பிட்ட நகைச்சுவைக் காட்சியையோ, அழகான காதல் காட்சியையோ, நகைச்சுவையையோ கணினியில் பதிவு செய்வதற்கு இந்த மென்பொருள் உதவும்.
http://www.aivsoft.com/downloads/dvdcutter/dvdcutterSetup.exe

தகவல் வழங்கிய நண்பர் திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி

மனத்திருப்தி - மொழியாக்கச் சிறுகதை

ஒரு கோவிலில் கல்தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள்,சிலைகள்,விக்ரகங்கள் வடிவமைக்கப் பட்டுக்கொண்டு இருந்தன.

ஒரு கல்தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக்கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன. எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன.

அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், “ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” என்றார்.

கல்தச்சர் சொன்னார், “எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது. ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன்”.

வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்துவிட்டுச் சொன்னார் - “எந்த சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே”.

தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல்தச்சர் சொன்னார் - “அந்தச் சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதமுள்ளது.”.

”இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்கவிருக்கிறீர்கள்?” - வழிப்போக்கர்.

“50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்” - க.த.

“ஐம்பதடி உயரத்தில் இருக்கப்போகிற சிலையின் மூக்கினருகில் இருக்கும் இந்தச் சிரிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்?” - வ.போ.

தனது வேலையை சற்று நிறுத்திவிட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன் க.த. சொன்னார் “யார் கவனிக்கப் போகிறார்கள்? - எனக் கேட்கிறீர்கள். அய்யா. வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சேதம் சிரியதா? / பெரியதா? என்பது பற்றிக் கவலையில்லை. செய்யும் தொழிலில் பிழையேற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே
விரும்புகிறேன்”.

நீதி : உயர்ந்ததரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வரவேண்டியது இல்லை. அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும். அடுத்தவருக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட தன் மனத்திருப்திக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்.

கோப்புகளை விரிக்க ஒரு நேரடி வசதி


சுருக்கப்பட்ட கோப்புகளான .zip கோப்புகளை நண்பர்களிடம் இருந்தோ, இணையத்தில் இருந்தோ, மின்னஞ்சல் வாயிலாகவோ தினமும் பெறுகிறோம். windows பயனர்கள் அத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள கோப்புச்சுருக்கி விரிக்கும் வசதியைப் பயன்படுத்துகிறோம். அதனால் .zip கோப்புகளை உருவாக்கவோ / விரிக்கவோ இயலும்.

ஆனால் Windows Explorer வாயிலாக 7Z, RAR, Z , TAR போன்ற பிற வகையிலான கோப்புகளை விரிக்க இயலாது.

நண்பரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற RAR கோப்புகளை விரிவாக்கிப் பார்க்கவும், மேலும் இப்படிப்பட்ட கோப்புகளை இயக்கவும் நாம் தனியாக மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி நிறுவிப் பயன்படுத்த வேண்டும்.

இதற்கு மாற்றாக ஒரு இணையத்தளம் : http://www.wobzip.org/

இந்தத் தளத்தில் சுருக்கப்பட்ட கோப்பினை ஏற்றினால் போதும். உங்கள் அழுத்திச் சுருக்கப்பட்ட கோப்புகளை விரிக்கச் செய்து நீங்கள் பயன்படுத்த வழிவகை செய்துவிடும்.
விரிக்கப்பட்ட கோப்புகள் ஒவ்வொன்றும் உங்கள் உலவியில் LINK ஆகத் தெரியும். அவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

மேலும் ஏதோ ஒரு இணையத்தளத்தில் நீங்கள் கண்ட RAR கோப்பின் முகவரியான URL ஐ இங்கே உள்ளிட்டாலும் போதும். உலவியில் இருந்தபடியே இயக்கலாம் என்பது ஒரு கூடுதல் வசதி.

குறிப்பு :
1) இந்தத் தளமானது இன்னும் சோதனை வடிவிலேயே உள்ளது.
2) ஒரு கோப்பின் அதிகபட்சக் கொள்ளளவு 100 MB மாத்திரமே


தளமுகவரி : http://www.wobzip.org/


How do I uncompress and save my files?
To uncompress files from your computer, go to the main page and select your file by clicking the "Browse" button then on "wobzip it!"

To uncompress files from a URL, go to this page and type in your URL. Click on "wobzip it!" to upload and uncompress.

A list of files will appear, and you can save your files by clicking on the filename. You can also save your files as a ZIP file by clicking on the "Download files as .zip" button.

That's all there is to it!

கடவுளும் மிஸ்டர். எக்ஸும் : ஐந்து நிமிடம் காத்திருக்கவும்

மிஸ்டர் எக்ஸ். கடவுளைச் சந்தித்தார். “கடவுளே!, உங்களை ஒரு கேள்வி கேட்லாமா?”, என்றார்.

“தாராளமாகக் கேட்கலாம்”, கடவுள்.

“நீங்கள் நெடுங்காலமாக இருக்கிறீர்கள். உங்கள் கண்ணோட்டத்தில், 1000 வருடங்கள் என்பது என்ன?”

“1000 ஆண்டுகள் என்பது சுமார் 5 நிமிடம் மட்டுமே”, கடவுள் சொன்னார்.

”சரி. அப்படியெனில் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு என்ன?”.

“ஒரு கோடி ரூபாயின் மதிப்பு வெறும் 50 பைசாதான்”.

“ஆ. அப்படியா, எனக்கு ஐம்பது பைசா கொடுத்து உதவ முடியுமா”, மிஸ்டர் எக்ஸ்.

கடவுள் சற்றும் தயக்கமின்றிப் புன்னகையுடன் கூறினார், “என் அருமை மகனே! ஒரு ஐந்து நிமிடம் மட்டும் காத்திரு. உனக்கு உன் கண்ணோட்டத்தில் ஒரு கோடி ரூபாயை - என் கண்ணோட்டத்தில் 50 பைசாவைத் தருகிறேன்”.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP