எளிய தமிழில் SQL - பாகம் 10

SQL கற்பதற்கான ஒரு இலவச மென்பொருளான 2005 ஐ முந்தைய பாகங்களில் கண்டோம்.
அதன் நவீன வடிவமாகிய Microsoft® SQL Server® 2008 Express with Tools ஐ இறக்கி நிறுவிப் பயன்பெருங்கள்.

SQL Server 2008 Express with Tools
SQL Server database engine - create, store, update and retrieve your data
SQL Server Management Studio Basic - visual database management tool for creating, editing and managing databases

இந்த அடிப்படைப் பயன்பாடு நமக்கு ஒத்துவரும். 2005 ஐ நிறுவியிருந்தவர்கள் அதை uninstall செய்தபிறகு இதை நிறுவவும்.

நேற்றையப் பதிவில் CREATE,INSERT,SELECT ஆகியவை பற்றிப் பார்த்தோம்.

இன்றைக்கு UPDATE மற்றும் DELETE ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

ஏற்கனவே பதியப்பட்ட தகவல்களில் மாற்றங்கள் செய்வதற்கு UPDATE உதவும்.
பழைய தகவல்களின் Row / Rows ஐ அழித்துவிடுவதற்கு DELETE உதவும்.

ஏற்கனவே நாம் உருவாக்கிய MyListஐ ஒரு Copy (படி) எடுத்து வைப்பதற்காக கீழ்க்கண்ட வரியை இயக்கவும்.

Table ஐ Copy செய்வதற்குரிய Syntax :

SELECT * INTO newTableName FROM oldTableName



உதாரணம்:
SELECT * INTO BakupMyList FROM MyList


இதன் மூலம் MyList எனப்படும் நம்முடைய பழைய Tableன் Copy ஐ, புதிய BackupMyListல் எழுதி வைத்துவிடலாம்.

இதை இயக்கியதும் எனக்குக் கிடைத்த விடை : (5 row(s) affected)

இப்போது UPDATE பற்றிப் பார்ப்போம்.

UPDATE ன் Syntax:
UPDATE tableName
SET
[fieldName] = 'newValue'
WHERE
[fieldName] ='oldValue'

உதாரணம்:
UPDATE MyList
SET
[Name] = 'Arun'
WHERE
[Name] ='valpaiyan'

நம்முடைய MyList என்னும் Tableல் 2வது rowல் உள்ள தகவல் 2,valpaiyan,Erode - என இருந்தது. அவருடைய உண்மையான பெயர் Arun. செல்லமாக அவர் வைத்துக்கொண்ட பெயர் valpaiyan. அவருடைய செல்லப்பெயரை, உண்மைப் பெயரைக் கொண்டு மாற்றுவதற்கு - மேற்கொண்ட UPDATE பயன்படும்.

இப்போது SELECT * FROM MyList WHERE [Person#] = 2 எனக் கொடுத்து F5 அழுத்தினால், கிடைக்கும் விடை : 2 Arun Erode

நாம் ஒரு rowல் இருக்கும் குறிப்பிட்ட Column ல் ஏற்றப்பட்ட மதிப்பை வேறு ஒரு மதிப்பைக் கொண்டு மாற்றுவதற்கு இப்போது UPDATE ஐப் பயன்படுத்தினோம்.

இதில் WHERE எனப்படும் கட்டுப்பாட்டை விதிக்காவிடில் என்ன ஆகும்?
உதாரணமாக :

UPDATE MyList
SET
[Name] = 'Arun'

என்று மட்டும் கொடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்.

இப்படி ஆகியிருக்கும். அனைவருடைய பெயரையுமே Arun என்று மாற்றியிருக்கும்.

எத்தனை முறை SELECT கொடுத்தாலும், எந்தத் தகவலுமே மாறாமல் அப்படியே இருக்கும்.

ஆனால் UPDATE, DELETE கொடுக்கும்போது கவனமாக இருக்கவும். எதாவது தவறிழைத்துவிட்டால் - அனைத்துத் தகவலும் நொடியினில் மாறிவிடும் ஆபத்து உள்ளது.

அதற்காகவே SELECT * INTO கொடுத்து ஒரு backup எடுத்து வைத்துக்கொண்டேன்.

இந்த அட்டவணையில் (Table) ஏற்கனவே ஏற்றப்பட்டுள்ள 5 Rowsல் இருக்கும் [Name] Columnன் மதிப்புகள் அனைத்தையுமே பெரிய எழுத்துகளில் (CAPITAL LETTERS) மாற்றுவதற்கு என்ன செய்யவேண்டும்?

UPDATE MyList
SET
[Name] = UPPER([Name])


இங்கே UPPER( ) என்பது ஒரு Function ஆகும். இதை உள்ளமைந்த built-in function என்போம். இது பெரிய எழுத்துகளாக மாற்றுவதற்குப் பயன்படுகிறது.

இந்த UPPER( ) மாற்றப்பட்டவுடன் கிடைத்த விடை மேலே:

இப்போது அழிக்கும் வேலைக்கு என்ன Statement என்பதைக் காண்போம்

Syntax கீழே:
DELETE FROM tableName WHERE Condition

DELETE FROM
MyList
WHERE
[Person#] = 4

இதன் அர்த்தம் என்ன. 4வது rowவை அழித்துவிடு.

DELETE FROM MyList என்று WHERE ஐ நீக்கிவிட்டுக் கொடுத்தால் என்ன ஆகும்?
ஒட்டுமொத்தமாக அனைத்து records (rows) ம் அழிந்து போகும்.
ஆனால் Tableன் Structure அழியாது.

இந்த DELETE FROM MyList இதற்குச் சமமாக வேறு ஒரு Statement ம் இருக்கிறது.

அதன் Syntax மற்றும் உதாரணம் கீழே:

TRUNCATE TABLE tableName


TRUNCATE TABLE MyList

குறிப்பு :
ஒரு Table ஆனது, அதனுடன் தொடர்புடைய இணைக்கப்பட்ட மற்றொரு Table உடன் இணைப்பில் இருந்தால் (Foreign Key Relationship) அதை Truncate செய்ய இயலாது. Truncate ன் மூலம் ஒரு Tableல் உள்ள அனைத்து Rows ஐயும் அழித்துவிட இயலும்.

ஒரு Tableஐ வேறொரு Tableஉடன் இணைப்பதற்கு (join) Foreign key பயன்படுகிறது.

Structure ஐயும் சேர்த்து அழிப்பதற்கு என்ன செய்யவேண்டும்?

Syntax :

DROP TABLE tableName

உதாரணம்:
DROP TABLE MyList




இப்போது ஏற்கனவே Copy செய்து வைத்திருக்கிறோமே BakupMyList என்கிற Table அதை MyList என பெயர் மாற்றுவோம்.

இப்படி ஒரு Tableன் பெயரை மாற்றுவதற்கு கீழே உள்ள வரியை இயக்கலாம்.

SP_RENAME 'BackupMyList', 'MyList'

SP_RENAME என்பது ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு நிரல். அதனை Stored Procedure என்று அழைப்பார்கள். அதுபற்றிப் பிறகு பார்ப்போம்.

இதன் Syntax:

SP_RENAME 'oldTableName', 'newTableName'

இப்படி ஒரு Tableன் பெயரை மாற்றும்போது, கிடைக்கும் ஒரு எச்சரிக்கைச் செய்தி:

Caution: Changing any part of an object name could break scripts and stored procedures.

Tableன் ஒரு குறிப்பிட்ட columnன் பெயரை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

SP_RENAME 'dbo.MyList.City', 'Place', 'COLUMN'

இதன் Syntax :

SP_RENAME
'dbo.tableName.oldColumnName',
'newColumnName', 'COLUMN'


இங்கே dbo என்பது object owner.

வானவில்லே வரைந்த ஒளியோவியங்கள்













Classic Wall Papers : வானவில் ஓவியம்

கூகிள் ஆட்சென்சும் பொதுச்சேவை விளம்பரங்களும்

நம்மில் தமிழ் வலைப்பூ வைத்திருப்போர் பலரும் Google Adsenseன் அனுமதி பெற்று adsense publisher இருக்கிறோம்.

ஆனால் தமிழ்மொழியை கூகிள் ஆட்சென்ஸ் இன்னும் ஏற்றுக்கொள்ளாததால் நம்மில் பலருக்கும் பொதுச்சேவை விளம்பரங்களான PSA எனப்படும் Public Service Ads ஐயே கண்ணுக்குக் காட்சியளிக்கிறது.



பல மாதங்களாகவே இது ஒரு தொடர்கதையாகவே இருந்து வந்தது. மேலே உள்ள படத்தில் வரும் விளம்பரங்களின் தன்மையைப் பாருங்கள். உங்கள் வலைப்பூ / தளத்தில் எந்த ஆங்கில keywords ம் இல்லாததால் கூகிள் விளம்பரம் பொதுச்சேவையாக மாறிவிட்டது. ஆனால் இங்கே நாம் பயன்படுத்தியிருப்பது கூகிளின் புதிய Coding தான். (Google's New Adsense Code).

புதிய Codingஐப் பயன்படுத்தினால், தமிழ்த்தளங்களிலோ / வலைப்பூக்களிலோ கண்டிப்பாக பொதுச்சேவை விளம்பரம்தான் வரும். எப்போதாவது மிக மிக அரிதாக சில விளம்பரங்கள் வேற்று மொழியில் அதாவது பொதுச்சேவை நீங்கலாக வரலாம். ஆனால் இதைக் கொண்டு நமக்குப் பிரயோசனம் இல்லை. நமது தளம் / வலைப்பூவில் ஆங்கில விளம்பரம் வந்தால்தான் சிறிதாவது நமக்கும், கூகிளுக்கும் நன்மை.

அதற்கு என்னதான் செய்வது?

மிக எளிய ஒரு அணுகுமுறை (இத்தனை நாளா இது இருக்கு - கண்ணில் படவேயில்லை).

உங்கள் ஆட்சென்ஸ் பப்ளிஷருக்கான பப்ளிஷர் எண் கொடுத்திருப்பார்கள்.
உதாரணமாக அது இவ்வாறு இருக்கும் : pub-xxxxaaaabbbbcccc
அதை http://oldadsensecode.com/ தளத்தில் கொடுத்து பழைய coding ஐப் பெற்று உங்கள் தமிழ்த்தளம் / தமிழ்வலைப்பூவில் பொதியுங்கள்.

புதிய coding ஆல் இதுவரையில் காண்பிக்கப்பட்ட பொதுச்சேவை விளம்பரங்கள் மறைந்து, ஆங்கில விளம்பரங்களை adsense காண்பிக்கும்.

வலைப்பதிவின் பதிவுகளின் ஊடே சில சில ஆங்கில வார்த்தைகளைப் (keywords) பிரயோகித்தால், அதற்குச் சமமான ஆங்கில விளம்பரங்களை திரையில் காட்டுகிறது.

உதாரணமாக SQL சம்பந்தமான எனது தொடர்பதிவுகளில் திரையில் தோன்றும் விளம்பரங்களில் SQL Advertisements ஐப் பார்த்திருப்பீர்கள். இதற்கு உதவிசெய்தது இந்த பழைய Coding தான்.

தள முகவரி : http://oldadsensecode.com/

நன்றியறிவிப்பு :
இந்தத் தகவலை எனக்கு வழங்கியவர் நண்பர் : திரு. கார்த்திகேயன் (http://www.tothetech.com) அவருக்கு எனது நன்றிகள்.

எளிய தமிழில் SQL - பாகம் 6

DQL: SELECT
DML: DELETE, INSERT, UPDATE
DDL: CREATE, DROP, TRUNCATE, ALTER
TCL: COMMIT, ROLLBACK, SAVEPOINT
DCL: GRANT, REVOKE

மேலே சில கட்டளைகளை (Commands)கொடுத்துள்ளேன். இந்தக் கட்டளைகள் மூலம் Databaseஐ நாம் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.

DQL என்பது Data Query Language. ஒரு Databaseன் Tableல் ஏற்கனவே நாம் பதிந்துவைத்துள்ள தகவல்களை தேடி எடுப்பதற்கு. உதாரணமாக 1000 rows இருப்பதாகக் கொள்வோம். அதில் குறிப்பிட்ட சில rows மட்டும் நமக்குத் தேவையெனில் அவற்றை மட்டும் தேடி எடுக்க DQL . இதற்காக SELECT என்கிற கட்டளை பயன்படும்.

DML என்பது Data Manipulation Language. ஏற்கனவே பதிந்துவைத்திருக்கும் தகவல்களில் மாற்றங்களை ஏற்படுத்த, அழிக்க, உருவாக்க. (தகவல்களைத் தான் மாற்றுகிறதே ஒழிய ஒரு Tableன் Structureல் எந்த மாற்றமும் நிகழாது).

DDL என்பது Data Definition Language. புதிய Database (அ) Table போன்றவற்றை உருவாக்க. அதாவது Tableன் Structure ஐ உருவாக்க, ஒட்டுமொத்த Table ஐயுமே அழிக்க, மாற்றங்கள் செய்ய. ஒரு குறிப்பிட்ட Column ன் Data Type ஐ மாற்ற.புதிய Column ஐ உருவாக்க, தேவையற்ற Column இருப்பின் அதை நீக்க.

TCL என்றால் Transaction Control Language. ஒரு நிரலை இயக்கும்போது ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால், பிழை ஏற்படுவதற்கு முன்னர் வரை ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் அவையனைத்தையும் நிராகரித்து முந்தைய நிலைக்குக் கொண்டு செல்வதற்கு.

TCL பற்றி சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.

உதாரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட Database அல்லது Tableகளில் நாம் ஒரு குறிப்பிட்ட Program ஐ இயக்குவதாகக் கொள்வோம். ஒரு Tableல் உள்ள ஒரு மதிப்பைக் கழித்து (முதலாவது செயல்), அடுத்த Tableல் உள்ள ஒரு குறிப்பிட்ட மதிப்புடன் கூட்டச் செய்ய(இரண்டாவது செயல்) முயற்சிக்கிறோம்.

முதல் செயல் நல்லபடியாக நிறைவுற்றுவிடுகிறது. ஆனால் இரண்டாவது செயல் நிறைவேறுவதற்கு முன்னர் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு நிகழ்ந்தால் என்ன ஆகும்?

முதலாவது Tableல் அந்த மதிப்பு கழிக்கப்பட்டு இருக்கும். ஆனால் கோளாறு காரணமாக இரண்டாவது Tableல் அந்த மதிப்பு கூட்டப்பட்டு இருக்காது.

அப்படியெனில் இதை ஒரு சரியான நிகழ்வாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. முதலில் கழிக்கப்பட்ட மதிப்பை reverse செய்து , தலைகீழாக மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும். அப்போதுதான் முறையான நிகழ்வு.

நல்ல உதாரணம் ஒன்று:

உங்களது வங்கியின் ATM அட்டையை, ATM இயந்திரத்தில் செருகி பணம் எடுக்க முயற்சிக்கிறீர்கள். எத்தனை ரூபாய் பணம் என்பதையும் தட்டிவிட்டீர்கள். இயந்திரமானது பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது. திடீரென்று கோளாறு. Battery down - Power Cut. ஏதோ ஒரு கோளாறு. என்ன ஆகும்?

பணம் உங்கள் கைக்கு வராது.

உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுக் கழிக்கப்பட்டு இருக்கும். ஆனால் உங்கள் கைக்குப் பணம் வந்திருக்காது. இப்படியே விட்டுவிட்டால் முறையாகுமா?

இந்த மாதிரி இக்கட்டான சமயத்தில் உதவுவதுதான் Transaction Control. TCL ன் பணி என்னவென்றால் ஏதேனும் பிழை ஏற்பட்டிருக்கும்போது அதைத் தலைகீழாக ஆக்கி, reverse செய்து (Undo) ஒட்டுமொத்த செயல்களையும் பழைய நிலைக்கு ஆக்குவதே.

TCL இருப்பதால் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட பணமானது, இயந்திரக்கோளாறு ஏற்பட்ட உடனேயே, தலைகீழ் இயக்கத்தால் திரும்ப உங்கள் accountல் சேர்க்கப்பட்டுவிடும்.

(இது எனக்கு இரண்டுமுறை நடந்து இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் இரண்டுமுறை இந்த TCL இயக்கத்தால் பணம் பரிபோகாமல் தப்பித்தது.)


1) எந்தப் பிழையும் நிகழாமல் இருக்கும்போது ஒட்டுமொத்த நிரலும் நல்லபிள்ளையாக இயங்கி பரிவர்த்தனையை ஒழுங்காக நிறைவு செய்யும்.

2) ஏதேனும் பிழை ஏற்பட்டால் உடனே நிரலானது தனது இயக்கத்தை நிறுத்திவிட்டு, அதுவரை செய்யப்பட்ட இயக்கத்தை reverse செய்து தகவல் இழப்பைத் தடுத்துவிடுகிறது.

முந்தைய பாடத்தில் Authorization பற்றிப் பார்த்தோம். ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு ஒரு Databaseஐப் பார்வையிட மட்டும் அனுமதிக்க DCL உதவும்.

DCL என்றால் Data Control Language. ஒரு குறிப்பிட்ட பயனர் உருவாக்கிய Database,Table களின் உரிமங்களை அடுத்த பயனாளருக்கு விட்டுத்தருவதற்கு. அல்லது அடுத்தவருக்கு விட்டுத்தந்த சலுகைகளை நிராகரிப்பதற்கு.

GRANT என்றால் சலுகைகளை வழங்குவது. உரிமங்களை வழங்குவதற்கு.

REVOKE என்றால் கொடுத்த சலுகைகளை / உரிமைகளைத் திரும்பப் பெருவதற்கு.

DROP என்பது ஒட்டுமொத்த Database (அ) Table ஐ அழிப்பதற்கு (தகவலும், Structureம் அழிந்துவிடும்).

TRUNCATE என்பது தகவல்களை மட்டும் அழிப்பதற்கு (Structure அழியாது).

SELECT பதியப்பட்ட தகவல்களைத் தேடித் தருவதற்கு

INSERT புதிய rowவை உருவாக்க
UPDATE பழைய rowன் தகவலை மாற்றுவதற்கு
DELETE பதிந்திருக்கும் row / rows ஐ அழிப்பதற்கு

CREATE புதிய Database / Table ஐ உருவாக்க

எதிர்பாராத நேரத்தில் எடுத்த புகைப்படங்கள்









திரு. பில்கேட்ஸ் அவர்களின் அரிய புகைப்படங்கள்








இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் 2009

டிவிடிகளில் தகவல்களை எழுத / நகலெடுக்க 5 இலவச மென்பொருட்கள்

12 ஆண்டுகளுக்கு முன்னர் 4 GB hard disk ஐப் பார்த்து அதிசயித்து நின்றேன். 4GB இதில் ஏற்றும் அளவுக்கு என்ன பெரிய தகவல் வேட்கை இருக்கப்போகிறது என்றெல்லாம் எண்ணியிருந்தேன்.

சரியாக 2000ம் ஆண்டின் மே மாதத்தில் 40 MB hard disk ஒன்றை நண்பர் ஒருவரது கணினியில் பார்த்தேன். மிகச் சிக்கலான Seal உடன் வந்தது. அதில் விண்டோஸ் 95 கூட நிறுவமுடியாது. ஆனால் அதில் Microsoft DOS இயங்குதளம் போட்டு Foxpro வை நிறுவி இருந்தார்கள். அந்த hard diskஐ என் வாழ்நாளில் மறக்க முடியாது.

சில காலங்களை Floppy disks வைத்தே ஓட்டினோம். பல தமிழ் எழுத்துருக்களை (Fonts) Floppy diskல் பதிவேற்றி வைத்திருந்தோம். பிறகு CD Player, CD-Writer எல்லாம் பயன்படுத்தினேன். 8,600 /- ரூபாய்க்கு ஒரு CD-Writer ஐ மதுரையில் இருந்து வாங்கிவந்து பயன்படுத்தினோம் 2002ல்.

2003ல் 3500 ரூபாய்க்கு CD-Writer வாங்கினேன். ஆனால் 2007ல் 1200 /-க்கு ஒரு DVD-Writer 18X வேகத்தில் வாங்கினேன். இப்படி இருந்த எனது சரித்திரத்தில் Nero Burning Rome, Easy CD Creator போன்றவை நீங்காத இடம் பிடித்தன.

2003ல் Buffer Under Run என்னும் ஒரு பிழைச்செய்தியைத் துப்பிவிட்டு பல CDகள் ஒழுங்காக எழுதப்படாமலேயே வீணாயின.

Nero வில் இந்தப் பிழை சரிசெய்யப்பட்டு அடுத்தடுத்த பதிப்புகளைப் பயன்படுத்தி வந்தேன்.

ஆனால் Nero மென்பொருளானது, நமது Hard disk ல் நிறைய இடங்களை ஆக்கிரமித்து வந்தது. பல custom setup தேர்வு செய்து, தேவையில்லாதவற்றை நீக்கினாலும் அது குறிப்பிட்ட hard diskன் Space ஐ ஆக்கிரமித்தே வந்திருந்தது.

DVDகளில் தகவல்களை ஏற்றிப் பதிவுசெய்வதற்கு வேறு ஏதேனும் மாற்று மென்பொருள் இருந்தால் பரவாயில்லையே என எண்ணி இணையத்தில் தேடினேன். குறைந்த hard diskன் Space ஐ மட்டும் அது எடுத்துக்கொண்டால் நல்லது என்பதே எனது நோக்கம்.

இப்போது எனக்குக் கைகொடுத்தது CDBurnerXP. இதைப்போல இன்னும் பல இலவச DVDக்குத் தகவல் ஏற்றும் மென்பொருட்கள் இருக்கின்றன. அவற்றின் சுட்டிகள் :

http://www.cdburnerxp.se/en/download

http://www.deepburner.com/?r=download

http://www.burnatonce.net/downloads/

http://www.nch.com.au/burn/index.html

http://www.imgburn.com/index.php?act=download

சிங்காரச் செட்டிநாட்டு வீடுகள்







கூகிள் குரோம் : குறுக்கு வழி சாவிகள்

Ctrl+N Open a new window
Ctrl+Shift+N Open a new window in incognito (private) mode
Ctrl+T Open a new tab
Ctrl+Shift+T Reopen the last tab you’ve closed.
Press Ctrl, and click a link Open link in a new tab
Press Shift, and click a link Open link in a new window
Ctrl+Tab or Ctrl+PgDown Switch to the next
Ctrl+Shift+Tab or Ctrl+PgUp Switch to the previous tab
Ctrl+W or Ctrl+F4 Close current tab or pop-up
Alt+Home Open your homepage


Ctrl+B Toggle bookmarks bar on and off
Ctrl+H View the History page
Ctrl+J View the Downloads page
Shift+Escape View the Task manager


Ctrl+P Print your current page
Esc Stop page loading
Ctrl+F5 or Shift+F5 Reload current page, ignoring cached content
Ctrl+U View source
Ctrl+D Bookmark your current webpage
Ctrl++ Make text larger
Ctrl+- Make text smaller
Ctrl+0 Return to normal text size

மைக்ரோசாப்ட் வேர்ட்க்கு 5 மாற்று மென்பொருட்கள்

மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ் தொகுப்பின் (Microsoft Office) வேர்ட் (MS Word) செயல்பாடுகளை ஒத்த மாற்றுப் பயன்பாடுகள் (alternative), அதுவும் இலவசமென்பொருட்களாக(Freeware) இணையிறக்கம் செய்வதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன.

இவைகளில் சிலவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொண்டும் இருப்பீர்கள். சில புதியனவாக இருக்கும். ஆபீஸ் தொகுப்பின் வேர்டை மட்டும் வைத்திருப்பவர்களே - இந்த மாற்று மென்பொருட்கள் உங்களுக்காகவும்தான்.

ஆபீஸ் தொகுப்பே இல்லாத கணினியின் சொந்தக்காரர்களே - உங்களுக்காகவே இந்தப் பதிவு.

இலவச மென்பொருள்தானே - என்கிற கவலையே வேண்டாம். முழுக்க முழுக்க அனைத்து பயன்பாடுகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மென்பொருள் தொகுப்புகளே இவை.

பக்கம் பக்கமாக தட்டெழுதப்பட்ட வாக்கியங்களை ஒழுங்குபடுத்தி அழகேற்றி(Format), பிழை திருத்தி (Spell check), அச்சுப்பொறியில் அச்செடுக்க (Printout) உதவுகின்றன. மேலும் ஆபீஸ் தொகுப்பின் மூலம் உருவாக்கப்பட்ட கோப்புகளைக்கூட இவற்றின் மூலம் திறந்து படிக்கலாம். தேவையெனில் மாற்றங்களும் (Corrections) செய்யலாம்.

IBM நிறுவனம் வழங்கும் Lotus Symphony, Sun Micro system வழங்கும் Open Office போன்றவை மிகச் சிறந்த இலவச ஆபீஸ் தொகுப்புகள்.

http://www.openoffice.org/

http://symphony.lotus.com/software/lotus/symphony/home.nsf/home

http://easyoffice-freeware.en.softonic.com/

http://www.jarte.com/index.html

http://www.abisource.com/

ஒரு குறுந்தகவல்:


சுவீடனில் படிக்கலாம் வாங்க, படிப்பு இலவசம், ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம் - (தகவல் உதவி திரு. நாமக்கல். சிபி)

இலவச கோப்புச் சுருக்கிகள் ஐந்து

மிகப்பெரிய அளவிலான கோப்புகளைச் அழுத்திச் சுருக்கி அளவைக் குறைத்து நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவதோ, வேறு ஏதேனும் USB களில் பதிவதோ நாம் அறிந்த ஒன்று.

100 MB அளவிலான கோப்புகளின் தொகுப்பை அழுத்திச் சுருக்கி 40MB யாகக் குறைப்பதற்கு உதவும் மென்பொருட்களை Archiver என்கிறோம். இதனால் நமது hard diskன் நினைவகம் நமக்கு உபரியாகக் கிடைக்கும்.

எப்போதாவது பயன்படுத்தப் போகும் கோப்புகளைச் சுருக்கி வைத்துக்கொள்ளலாம். நமது Harddiskன் Memory Space வீணாவதைத் தடுப்பதற்கு இது ஒரு நல்ல வழி.

மின்னஞ்சல் attachment ல் மிகப்பெரிய கோப்புகளை அனுப்ப இயலாதபோது, சுருக்கியின் உதவியை நாடுவதும் நன்மையே.

WinZip, WinRar போன்ற சுருக்கிகள் உலகலாவிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஆனால் அவை இலவச மென்பொருட்கள் அன்று. குறிப்பிட்ட காலத்திற்கு அவற்றை இலவசமாகப் பயன்படுத்தலாம். கால அவகாசம் முடிந்ததும் அவை காலாவதி ஆகிவிடும்.

இலவசமாகக் கிடைக்கும் சுருக்கிகள் (Compressors - Achiever) ஐந்தை இங்கே காணலாம்.

http://www.7-zip.org/

http://www.izarc.org/

http://www.tugzip.com/

http://www.larshederer.homepage.t-online.de/cabpack.htm

http://kgbarchiver.net/

பழங்காலத்து மோட்டர் பைக்குகளின் அணிவகுப்பு

இந்த மனிதனின் தோல் எதனால் ஆனது?

வில்லாய் வளையும் முகம்

அழித்துக்கட்டும் சிவனா நீ : இதற்கும் ஒரு மென்பொருளா?

வன்வட்டு போன்ற நினைவகச் சாதனங்களில் நாம் தினமும் தகவல்களைப் பதிகிறோம். அவை தேவையில்லாதபோது அழித்துவிடுகிறோம். ஆனால் அழிந்து போன கோப்புகள் ஏற்கனவே இருந்த இடத்தில், புதிய தகவல்கள் பதியப்படாத வரையில் அவற்றை மீட்டுவிடலாம். இணையத்தில் தேடினால் கிடைக்கும் ஒரு இலவச மீட்பான் இதற்கு உதவும்.

ஆனால் மிக மிக ரகசியமான - ஒரு முறை பயன்படுத்திவிட்டு அழித்தே தீரவேண்டிய தகவல்களை - மீட்க இயலாத முறையில் அழிப்பது எப்படி?

வட்டுகளில் எழுதி அழிக்கப்பட்ட தகவல்களை மீட்பதற்கு எத்தனையோ மென்பொருட்கள் இருக்கின்றன. அதே போல அழிந்து போன தகவல்களை மீட்க இயலாத வகையில் தடுப்பதற்கும் மென்பொருட்கள் உள்ளன. இரண்டாவது வரிசையில் மூலவரைவு இலவசமாக வழங்கப்படும் இந்த மென்பொருளையும் சேர்க்கலாம்.

இந்த மென்பொருளின் பெயர் எரேசர்.

இந்தப் பயன்பாடானது Windows XP முதல் Windows 2008 வரை எல்லா Windows இயங்குதளங்களிலும் இயங்க வல்லது.

தரவிறக்கச் சுட்டி :

http://eraser.heidi.ie/

கலைச்சொற்கள்:
வன்வட்டு : Hard disk
தகவல் : Information, Data
நினைவகம் : memory
கோப்புகள் : Files
மீட்பான் : Recovery tool
அழித்தல் : Deletion, Removal
மூலவரைவு : Source Code
இயங்குதளம் : Operating System
அழிப்பான், எரேசர் : Eraser

ஒளிக்களஞ்சியம் :

எட்டே நிமிடங்களில் இணைய உலகின் வரலாற்றைக் கூறிடும் ஒரு தொழில்நுட்ப விளக்கப் படம் உங்களுக்காக

ஒலிவட்டுகளில் இருந்து பாடல்களை MP3 ஆக மாற்ற



ஒலிவட்டுகள் (Compact Disk) வைத்திருப்பவர்களே உங்களுக்காக இந்த மென்பொருள்.

உங்கள் CDகளில் இருக்கும் பாடல்கள், இசை போன்றவற்றை MP3 ஆக மாற்றி கணினியில் பதிவு செய்து கேட்டு மகிழ உதவும் ஒரு எளிமையான முகப்பு கொண்ட மென்பொருள் இது.

ஏற்கனவே இதைப் பலபேர் பயன்படுத்திக்கூட இருக்கலாம்.
புதியவர்களுக்காகப் பயன்படட்டுமே என்கிற நோக்கில் எழுதுகிறேன்.

ஆடியோ கிராப்பர் என்பது இதன் பெயர். இதன் மூலம் ஒலிநாடாக்களில் இருந்தும் கூட அதன் பதிவுகளை MP3 ஆக மாற்றிவிடலாம்.

நண்பர் திரு. தியாகராஜன் அவர்கள் இப்படி ஒரு மென்பொருள் வேண்டுமென மடலிட்டிருந்தார். அவருக்கு என்னுடைய நன்றிகள்.

http://www.audiograbber.com-us.net/download.html

ஒளிக்களஞ்சியம் :
மதுரை மாநகரம் பற்றிய BBCன் ஆவணப்படம்

கடவுச்சொற்களைப் பராமரிக்க இலவச மென்பொருள்


எத்தனையோ இணையத்தளங்களில் நாம் பயனர் கணக்கு (user name & password) வைத்திருப்போம். ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான வேறு வேறு கடவுச்சொற்களை (password) உருவாக்கி இருப்போம். ஒவ்வொரு பாஸ்வேர்டையும் தனித்தனியாக பாதுகாப்பது கடினம் எனத் தோன்றியவர்கள் - அனைத்துத் தளங்களுக்குமே ஒரே பயனர்கணக்கையும், ஒரே பாஸ்வேர்டையுமே வைத்திருப்போம்.

இது மிகமிகக் குழப்பமான - கடினமான செயல். இதை எளிமைப்படுத்த உதவும் மென்பொருள்களில் மூன்றை கீழே சுட்டிகளில் (links) தரவிருக்கிறேன்.

இந்த மென்பொருட்களின் உதவியுடன் எந்தத்தளங்களில் என்ன username, என்ன password பயன்படுத்துகிறோம் என்பதை ஒரு தரவுத்தளமாக(Database) பதிவு செய்யவேண்டும்.

இறுதியில் இந்த மென்பொருளை இயக்குவதற்காக மட்டும் ஒரு மாஸ்டர் பாஸ்வேர்டைத் தேர்வு செய்து அதை மட்டும் மனதில் ஏற்றிக்கொள்ளவேண்டும். அவ்வளவுதான்.

யாருக்காவது உங்களது பாஸ்வேர்ட் தெரிந்துவிட்டால் உடனே மாற்றிவிடுங்கள். அல்லது குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறையாவது பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருங்கள்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் பெரிய கம்பெனியில் உலகம் சுற்றும் வாலிபன் பொறுப்பில் இருக்கிறார். அவருடைய பாஸ்வேர்ட் ஆறு ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருக்கிறதாம் - பெருமையாகச் சொல்வார். மேலும் அதன் பாஸ்வேர்டை பல நண்பர்கள் சூழ வெளிப்படையாக இதுதான் பாஸ்வேர்ட் என்கிறார். அது என்னவெனில் அவருடைய மாற்றுப்பெயர். அருண் என்கிற நண்பர் அவர். அவரது மாற்றுப்பெயர் (nick name) சரவணன். அவர் அதையே பாஸ்வேர்டாக வைத்து ஆறு ஆண்டுகளாக மாற்றாமல் இருப்பதாகப் பெருமை வேறு தேடிக்கொள்கிறாராம். அவரை மாதிரி ஆட்களை ஒவ்வொரு நிறுவனங்களிலும் காணலாம். அவரைப்போல மிகமிக பிசியாக இருப்பவர்களுக்காகவே இந்த மென்பொருட்கள் உதவுகின்றன.

பாஸ்வேர்ட் விவகாரத்தில் எப்போதும் கவனம் தேவை. அதற்காகவே இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.

மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட சுட்டிகளைச் சொடுக்கவும்.

http://keepass.info/

http://www.zeraha.org/dload.php?action=license&license_id=2&file_id=42

https://www.steganos.com/us/products/data-security/locknote/overview/


ஒளிக்களஞ்சியம் :

மறைபொருள் குறும்படம் - பொன்.சுதாவின் எண்ணம் & இயக்கத்தில்

அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட 10 திரைப்படங்கள்



உலகில் அதிகபட்சப் பொருட்செலவில் எடுக்கப்பட்ட 10 திரைப்படங்களின் அணிவகுப்பு.

1. Pirates of the Carribean: At World’s End
2. Spider-Man 3
3. Quantum of Solace
4. Pirates of the Caribbean: Dead Man’s Chest
5. X-Men: The Last Stand
6. King Kong
7. Superman Returns
8. Chronicles of Narnia: Prince Caspian
9. Terminator 3: Rise of the Machines
10. Titanic

ஒளிக்களஞ்சியம்:
பொங்கல் விழாவுக்காக பாடகி. நித்யஸ்ரீமகாதேவன் பாடிய 6 பாடல்கள்

1GB அளவுள்ள கோப்பு ஒன்றை துண்டாக்காமல் மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?

இன்றைய இணைய உலகில் மின்னஞ்சலும், அரட்டையும் - நூற்றாண்டின் மிகச்சிறந்த ஊடகங்களாகும்.

ஒலி,ஒளி,புகைப்படம்,ஆவணங்கள் போன்றவற்றை தினமும் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு இவை பயன்படுகின்றன.

ஆனால் மின்னஞ்சல் சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கொள்ளளவுக்கு மேல் இணைப்புகளை ஏற்பதில்லை.

மின்னஞ்சலுடன் இணைக்கப்படும் இணைப்புகளின் கொள்ளளவுக்கு வரையறை விதித்திருக்கிறார்கள்.

இதனால் என்ன செய்கிறோம் ஒரு பெரிய அதிகமான கொள்ளளவு கொண்ட கோப்பு ஒன்றை சிறு சிறு கூறுகளாக்கி அதைத் தனித்தனியாக ஒவ்வொன்றாக மின்னஞ்சலில் இணைத்து அனுப்புகிறோம்.

அல்லது ஏதேனும் ஒரு கோப்புப்பகிர்வான் தளத்தில் ஏற்றி அதன் சுட்டியை எதிர்முனையில் இருப்பவரிடம் தருகிறோம்.

1GB அளவுள்ள கோப்பு ஒன்றை துண்டாக்காமல் மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒரு புதிய இணையத்தளம் புறப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1GB அளவுள்ள கோப்பு ஒன்றை துண்டாக்காமல் அப்படியே மின்னஞ்சலில் இணைப்பாக இணைத்து அனுப்ப இயலும்.

http://www.dropsend.com/

தொடர்புடைய பதிவு :

விண்ரார் சுருக்கி : அளவில் பெரிய கோப்பை துண்டு துண்டாக்குவது எப்படி?
செயல்முறை விளக்கம் : படங்களுடன்


ஒளிக்களஞ்சியம் :

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் Slumdog Millionaire திரைப்படத்தில் இசையமைத்ததற்காக உலகின் மிகச் சிறந்த விருதுகளில் ஒன்றான Golden Globe Award வாங்கும்போது படமாக்கப்பட்ட வீடியோ

300+ இலவச மென்பொருட்கள் உங்களுக்காக

ஒவ்வொரு மென்பொருளாகத் தனித்தனியாக அறிமுகப்படுத்தி வந்திருக்கிறேன். அந்த வரிசையில் பொங்கல் சிறப்பு அதிரடி முழக்கமாக 300+ இலவச மென்பொருட்கள் உங்களுக்காக - அனைத்துமே சிறந்ததெனெ உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.

அவற்றை ஓரிடத்தில் தொகுத்திருக்கிறார்கள். அதன் சுட்டியைக் கீழே தருகிறேன்.

Office,Archive managers,Internet
P2P,Chat,Security
Network,Servers,Audio
Video,Image,3D
Developers,CD/DVD,Codecs
System Ulilities,UI Enhancements,Hardware monitoring/Benchmarking
Games,Education,Miscellaneous
Wallpapers


இத்தனை வகையான இலவச மென்பொருட்கள் அனைத்திற்கான சுட்டிகளை ஓரிடத்தில் தொகுத்துத் தந்த பாராட்டுக்கு உரியவர்கள் :

http://www.winaddons.com/top-300-freeware-software/

ஒளிக்களஞ்சியம் :


இலவச மென்பொருட்களைப் பற்றிய இசைப்பாடல்

இலவச கோப்புப் பகிர்வான் சேவை வழங்கிகள்



http://www.mediafire.com/

http://www.adrive.com/

http://skydrive.live.com/

http://www.megashares.com/

http://www.orbitfiles.com/

http://www.4shared.com/

http://www.esnips.com/

http://myvirtualdisk.permissionresearch.com/Home.aspx

http://www.divshare.com/

இத்தனை இலவச கோப்புப்பகிர்வான் தளங்கள் உள்ளன.
இவற்றில் நீங்கள் எதைப் பயன்படுத்துகிறீர்கள்?
ஏதேனும் இங்கே விடுபட்டுள்ளதா?
மிகச்சிறந்ததாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
அல்லது எதையுமே பயன்படுத்தவில்லையா?

உங்களிடம் இருக்கும் கோப்புகளைப் பிறருடன் பகிர்வதற்காக இந்த இலவச கோப்புப்பகிர்வான் தளங்கள் உதவுகின்றன. இதனால் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு.

அளவுக்கு மீறினால் அமுதமும் விசமே. உங்கள் வாக்குகளை ஒரு பின்னூட்டத்தில் இட்டுச் செல்லுங்கள். அப்போதுதான் சிறந்த ஒன்றைப் பெற இயலும்.

வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்

தமிழ்நெஞ்சம்
(ஏன் இதைக் கேட்கிறேன் என்றால் ஓராண்டுக்கும் அதிகமாக 4shared.com தளத்தையே பயன்படுத்தி வந்துள்ளேன். 2GB ஏற்றினேன். அதை 400GB வரை நம் மக்கள் தரவிறக்கியுள்ளனர். இதைவிட சிறந்ததாக ஒன்று இருந்தால் அதைப் பயன்படுத்தலாமே என்கிற நோக்கில் எழுதப்பட்ட பதிவு இது.)



ஒலிக்களஞ்சியம் :
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த தனிப் பாடல் தொகுப்பு ‘அந்திமாலை’. அதிலிருந்து ஒரு பாடல்.

140 வினாடிகளில் 4600 மைல் பயணம்

நெருப்பு நரி(FF) உலவியின் பாதுக்காப்புத்தன்மையை மேலும் அதிகரிக்க


இணையத்தில் எத்தனையோ நன்மை பயக்கும் தளங்கள் இருந்தாலும், விசமத்தனமான தீமை விளைவிக்கக் கூடிய தளங்களும் நிறைய இருப்பதைக் காண்கிறோம்.

கெடுதி விளைவிக்கும் தளங்கள் என்னதான் செய்கின்றன?
தீமை விளைவிக்கக் கூடிய தளங்களைப் பார்வையிடும் காண்போரின் கணினியில் குற்றம் விளைவிக்கும் நிரல்களை ஏவி விடுகின்றன. இந்த நிரல்கள் அமைதியாக இருப்பதுபோல பாவனை செய்யும். நமக்கும் இப்படி ஒரு நச்சுநிரல் நம் கணினியில் இருக்கிறதா என்பதே தெரிந்திருக்காது.

கணினியின் மூலம் நாம் செய்யும் இணையப்பணப்பரிமாற்ற நடவடிக்கைகளையும், கடனட்டை விவரங்களையும் இந்த நச்சுநிரல் கவனித்து அது குறித்த தகவல்களை எதிராளிக்கு (நிரலை ஏவியவருக்கு) தந்துவிடும்.

வைரசு எதிர்ப்பான்களே கூட இவைபோன்ற தளங்களைப் பல நேரங்களில் கவனிக்கத் தவறிவிடுகின்றன.

நாமும் எப்போதாவதுதான் வைரசுஎதிர்ப்பானின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துகிறோம். அடிக்கடி மேம்படுத்திக் கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை. இதில் ஏராளமான சட்டச்சிக்கல்கள் வேறு உள்ளன.

நம்மில் பலபேர் இன்னும் வைரசுஎதிர்ப்பான்களைக் கூட கணினியில் நிறுவாமலேகூட இருப்போம். அல்லது பழைய பதிப்பையே இன்னும் வைத்துக்கொண்டு கணினி பாதுகாப்பாய் இருப்பதாக நமக்குநாமே கற்பனை செய்துகொண்டு இருப்போம்.


குண்டக்கமண்டக்க தளங்களைப் பார்வையிடாமல் தடுக்க ஏராளமான மென்பொருட்கள் இருக்கின்றன.

நாம் என்ன நினைக்கிறோம் என்றால் -நெருப்பு நரி ஒரு பாதுகாப்பான உலவி என்று. அது சரிதான். அதில் சந்தேகமில்லை. அதன் பாதுகாப்புத்தன்மையை மேலும் அதிகரிக்க உதவும் ஒரு நீட்சிதான் WOT.

இந்த FireFox Addon (நீட்சி)யை நிறுவிவிட்டால், உலகில் உள்ள 20 மில்லியன் தளங்களைப் பற்றிய பாதுகாப்பு விபரங்களை அது அறியத்தருகிறது. ஏதேனும் ஒரு தளத்தை நீங்கள் பார்வையிட முயற்சிக்கும்போது பச்சை / மஞ்சள் / சிவப்பு நிறங்களின் மூலம் எச்சரிக்கை செய்துவிடும்.

கூகிள் போன்ற தேடுதல்வேட்டை முடிவுகளை அறிவிக்கும் தேடியந்திரங்களின் அறிக்கைகளிலும் நச்சுநிரல்களைப் பரப்பக்கூடிய தளங்களும் இடம்பெற்று இருக்கின்றன. தேடுதல் அறிக்கை வெளியாகும்போதே, பச்சை / மஞ்சள் / சிவப்பு நிறங்களில் தளத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்களையும் WOT உடன் இலவச இணைப்பாகத் தருகிறது.

குழந்தைகள் பார்க்கக்கூடாத, நம்பகமில்லாத தளங்கள் போன்றவற்றை இந்த நீட்சியின் மூலம் முன்கூட்டியே அறிந்திட இயலும்.

அடிக்கடி இணையப்பாதுகாவலனின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். WOT யை உடனே நிறுவிக்கொள்ளுங்கள்.

தரவிறக்கச் சுட்டி :

https://addons.mozilla.org/en-US/firefox/addon/3456

இங்கே பயன்படுத்தப்பட்ட கலைச் சொற்கள்
நெருப்பு நரி : Fire Fox Browser
பாதுகாப்புத்தன்மை : Security
கெடுதி விளைவிப்பவை : malware
நிரல்கள் : Programs
இணையப்பணப்பரிமாற்ற நடவடிக்கை : Money Transaction On Net
கடனட்டை : Credit Card
வைரசு எதிர்ப்பான் : Anti Virus
வைரசுஎதிர்ப்பானின் பாதுகாப்பு அம்சங்கள் : Security Updates
பழைய பதிப்பு : Older Version
நீட்சி : Add-On
தேடியந்திரம் : Search Engine
இணையப்பாதுகாவலன் : Internet Security
WOT : Web Of Trust

ஒரு குறுந்தகவல் :

தமிழ்நெஞ்சம் (http://www.tamilnenjam.org) - தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற விரும்பினால் வலது உச்சியில் உள்ள ‘மின்னஞ்சலில் பெற’ பெட்டியில் உங்களது மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்யவும். உங்களுக்கு ஒரு e-mail வரும். அதில் உள்ள சுட்டியை அழுத்தினால் போதும். உறுப்பினராகிவிடுவீர்கள். நன்றி.

ஒளிக்களஞ்சியம்:

மொழி ஒன்று - அருமையான காணொளிப்பாடல் உங்கள் பார்வையில் படுவதற்காக ஏங்குகின்றது.

ஒலிக்களஞ்சியம்:

மேற்கத்திய இசையில் சுப்ரபாதம்

தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட தொடர்புகொள்க

கணினி மொழிகளும் Hello World நிரலியும்

கணினி உலகில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் புதுப்புது கணினிமொழிகள் வந்துகொண்டே உள்ளன.

ஒரு புதிய கணினிமொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது Hello World (வணக்கம் உலகே) என்கிற எளிய நிரலியையே முதலில் கற்போம்.

உலகில் முதன்முதலாக Hello World நிரலி எந்தப் புத்தகத்திற்காக எழுதப்பட்டது?

1978ம் ஆண்டில் வெளிவந்த Kernighan & Ritchie இவர்களால் எழுதப்பட்ட "The C Programming Language" புத்தகத்திற்காக பாடம் 1.1ல்.

main() {

printf("hello, world");

}

30 ஆண்டுகள் கழிந்தும் இன்னமும் Hello World (வணக்கம் உலகே) புரோக்ராம் வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு மொழிகளிலும் ‘வணக்கம் உலகே’ program ஐ எழுதுவது எப்படி?
உதாரணமாக C மொழியில் எப்படி எழுதுவது என்பதை மேலே கொடுத்துள்ளேன்.

இது போல உலகில் உள்ள கணினிமொழிகளில் எல்லாம் எப்படி ‘வணக்கம் உலகே’வை எழுதுவது? இவ்வளவு மொழிகளா கணினியுலகில் உள்ளன!.

மூன்று சுட்டிகளைத் தருகிறேன்.

சுட்டி 1:
http://www.roesler-ac.de/wolfram/hello.htm

சுட்டி 2:
http://en.wikibooks.org/wiki/List_of_hello_world_programs

சுட்டி 3:
கம்ப்யூட்டர் மொழிகள் அல்லாத உலக மனிதர்களால் பேசக்கூடிய மொழிகளில் Hello World என்பதை எப்படிக் கூறுவது?
http://helloworldsite.he.funpic.de/hello.htm#Human

ஒரு குறுந்தகவல்:
அட இதெல்லாம் இருக்கட்டும் நம்ம மேட்டருக்கு வருவோம்.
"நான் உன்னைக் காதலிக்கிறேன்" - "I love You" அப்படிங்கிறதை
100 உலக மொழிகளில் எவ்வாறு உரைப்பது?

ஒளிக்களஞ்சியம் :
இந்திய தேசியகீதத்தைப் பாடுகிறாள் ஒரு சின்னஞ்சிறு கிளி : ஆனந்தமாகவும் ஆர்வமாகவும்.

நெருப்புநரிக்கான ஒரு நீட்சி : ஒலி/ளிக்கோப்புகளை இணையத்தில் ஏற்றி இறக்க


ஒருவர் ஒரு வேலையை மிக விரைவாகச் செய்தால், அதை ‘தீ’ மாதிரி செய்கிறார் - என்போம்.

இணையத்தளங்களில் இருந்து ஒலி/ஒளி/புகைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கவோ / இணையேற்றவோ செய்வதற்கு உதவிசெய்கிறது - Firefox Universal Uploader.

பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையான கருவியாக உள்ளது.

- Box.net
- Flickr
- Picasa
- Youtube
- Facebook
- Webshots
- Omnidrive
- Smugmug
- SmeStorage
- Google Docs

போன்ற தளங்களில் இருந்து கோப்புகளை ஏற்றி இறக்க இந்த FireFoxன் Addon உதவுகிறது.

ஒரே நேரத்தில் எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் தரவேற்றலாம்.
பல்வேறு தளங்களுக்கும் Upload / Download செய்வதற்கு இந்த ஒரே ஒரு நீட்சியையே பயன்படுத்தலாம். சுட்டி கீழே.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/4724

ஒலிக்களஞ்சியம் :

ஆண்களுக்கான அழகுநிலையத்தில் நிகழும் ஒரு உரையாடலின் ஒலி.
இடம் / வலம் / மேல் / கீழ் எனப் பலதிசைகளிலும் பயணப்படுகிறது.

கேட்டுத்தான் பாருங்களேன். தரவிறக்கமும் செய்யலாம்.

ஒலிப்பானைத் (Headset) தலையில் மாட்டிக் கண்களை மூடிக் கேட்டுப்பாருங்கள்.
ஒரு வித்தியாசமான அனுபவம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

சுட்டி இதோ :

http://www.4shared.com/account/file/79091286/593530f8/VirtualBarber.html

ஒளிக்களஞ்சியம்:

உலக அழகிப்போட்டி 2008 : 1st & 2nd வெற்றிபெற்றவர்களின் பேட்டி

அடேங்கப்பா.. சந்தைக்குள்ளே புகைவண்டி



முழுவதும் பார்த்தால்தான் உண்மை என்னன்னு புலப்படும். நம்பமுடியாத கற்பனையா இருக்குமோன்னு தோணுதோ?

ஒளிக்களஞ்சியம்:
இந்தியாவின் முதல் முப்பரிமான கணினி விளையாட்டு (கஜினி)

புதிய கணினியின் திறமையைச் சோதிப்பது எப்படி?

புதிதாக வாங்கிய கணினிக்கு அதிகப்படியான வேலைப்பளுவைக் கொடுத்து அது அவ்வளவு அழுத்தத்தையும் தாங்குகிறதா? எனச் சோதிப்பதற்கு ஏதேனும் மென்பொருள் இருக்கிறதா?

அதிகப்படியான வேலைப்பளுவையும், மிகுந்த அழுத்தத்தையும் தரக்கூடிய ஒரு கடினமான சோதனையைச் செய்யும்படி கணினியைப் பணிப்பது எப்படி?

எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும், மனம் தடுமாறாமல் கவனத்தைப் பிற விசயங்களில் ஈடுபடுத்தாமல் ஒரே மனநிலையில் இயங்குபவர்களே வாழ்வில் வெற்றிபெறுவர்.

எவ்வளவு மன அழுத்தம் இருப்பினும், அதை வெளிக்காட்டாமல் தனது கடமையில் இன்னமும் சிறப்பாகச் செயல்படமுடியுமா? எனக் கடமையில் கருத்தாய் இருப்பவர்களை நாம் தினமும் பார்க்கிறோம்.

இந்த வேலையைச் செய்து நமக்கு உதவுவதற்காகவே Heavy Load எனப்படும் இலவச மென்பொருள் உள்ளது.

மிகக்கடினமான வேலையைச் செய்யும் கணினியானது குறித்த நேரத்துக்குள்ளாக தனக்கு இட்ட பணியைச் செவ்வனே செய்து முடித்துவிடுகிறதா என்பதை இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கண்டறியலாம்.

கணினியின் பல்வேறு பாகங்களான CPU, நினைவகம், வன்வட்டு (Hard disk), இயங்குதளம் (OS), வலைப்பின்னல் (Network) ஆகியவற்றின் திறமையை இதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.

இந்த மென்பொருளானது அளவில் பெரிய கோப்புகளை (Files) கணினியில் தற்காலிகமாக எழுதிப் பார்த்துச் சோதிக்கும். சோதனை முடிந்தபிறகு உருவாக்கிய தற்காலிகக் கோப்புகளை (Temp Files) அழித்துவிடும்.

தரவுத்தள மேலாண்மைக் (Database Management) கணினிகளை உற்பத்திப் பிரிவுக்கு (Production) அனுப்புவதற்கு முன்னர் இதைப் பயன்படுத்திச் சரிபார்க்கலாம் - அதன் வேகத்திறமையை.

இதன் சிறப்பம்சம் என்னவெனில் கடினமான கணக்கீடுகளைச் செய்து கணினியின் Micro Processor ஐ அதிகமான வேலை வாங்கி அதன் முடிவுகளை ஒரு வரைபடமாகக் காண்பிப்பதே.

தரவிறக்கம் செய்ய உதவும் சுட்டி கீழே:

http://www.jam-software.com/heavyload/hload.zip

ஒலிக்களஞ்சியம்:


விலைவாசி விண்ணைத்தொடும் இன்றையப் பொருளாதார நிலைமை குறித்து யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீ மகாதேவன் பாட்டு. பாடலைக் கேட்கவும், MP3 ஆக இணையிறக்கவும் உதவும் சுட்டி கீழே:

http://www.4shared.com/file/78889922/1a127b0c/TheBlastUnni.html

நன்றி : The Blast.

ஒளிக்களஞ்சியம்:

திரு. வை. கோபால்சாமி அவர்களின் குமுதம் இணையத் தொலைக்காட்சிக்கான சமீபத்திய பேட்டியின் காணொளி வடிவம் : இதோ இங்கே

விஸ்ட்டாவின் வேகத்தைக் கூட்டுவது எப்படி?

Windows Vista இயங்குதளமானது (Operating System) எக்கச்சக்கமான நினைவகத்தை (Memory) ஆக்கிரமித்து கணினியின் வேகத்தைக் குறைத்துவிடுகிறது என நிறைய நண்பர்கள் குறைகூறிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் மனக்குறையை நீக்குவதற்காகவே இந்த மென்பொருள் பயன்பாடு : Vista Service Optimizer.

ஓரளவு Windows அனுபவம் உள்ளவர்கள் இந்தப் பயன்பாட்டை(Application)
அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மேலும் Customize செய்யலாம்.

புதியவர்கள் ஒரே சொடுக்கின் மூலம் தானியங்கித்தனமாக (Automatic optimization) Vistaவின் தேவையற்ற வேகக்குறைப்பான்களை சரிசெய்து, அதன் வேகத்தை அதிகரிக்க இதைப் பயன்படுத்தலாம்.

இதன் சிறப்பம்சங்கள்:
1) பயன்படுத்த எளிமையானது
2) பாதுகாப்பானது
3) தானியங்கியாக இயக்க இயலும்
4) வேகம் குறைந்ததற்கான பிரச்சினைகளின் காரணியை அறிய முடியும்.

தரவிறக்கச் சுட்டி கீழே :

http://www.4shared.com/file/78682792/1e7369bc/VistaOpt.html

http://smartpcutilities.bravehost.com/downloads.html

இந்தத் தகவலைத் தந்து உதவியவர் : நண்பர். திரு. கார்த்திகேயன். அவருக்கு எனது நன்றிகள்.

ஒளிக்களஞ்சியம் : புத்தாண்டு சிறப்புப் பட்டிமன்றத்தின் காணொளிப் பதிவு
தலைப்பு : தமிழ்க் குடும்பங்கள் சினிமாவுக்குப் போகிறார்களா? Vs சினிமாவோடு போகிறார்களா?
எங்கே காண்பது : A Blog For Short Films

தமிழகக் கலாச்சாரத்தைக் காக்க காக்க கனகவேல் காக்க




வால்பையனின் நண்பர் திரு. கார்த்திக் தி ஹீரோ எடுத்தனுப்பிய புகைப்படம் இது. அவருக்கு எனது புத்தாண்டு சிறப்பு வாழ்த்துக்களும், நன்றிகளும்.

ஒளிக்களஞ்சியம் :

இசை குறித்து இசைஞானி இளையராஜாவின் மலையாளப் பேச்சு

கடந்த ஆண்டின் சிறந்த ஒலி/ஒளி மாற்றிகள்


3GP வடிவிலிருந்து AVI க்கு மாற்ற

AVI WMA, MOV, H.264, MPEG1/MPEG2 இவற்றிலிருந்து MP4 வடிவத்திற்கு மாற்ற

WMA கோப்பை MP3 ஆக மாற்ற

RM ஒலியை MP3க்கு

Flvயை உள்ளிட்டு AVI யை பெறுவதற்கு

MP4 லிருந்து AVI க்கு

FLV லிருந்து MP3க்கு

ஒரு குறுந்தகவல் :
மேலும் ஒரு மாற்றி (Magic Converter 8.0 Download)

சுட்டி 1 : டோரண்ட் வடிவில்

சுட்டி 2 : ரேபிட்ஷேர் வழியாக

ஒளிக்களஞ்சியம்: உலகம் 2008 - ஒரு மீள் பார்வை காணொளி : இதோ இங்கே

ஒரு சிறு விளக்கம் : இணையத்தில் கண்டதை இங்கே பகிர்கிறேன்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP