கணினி 2 கணினிக்கு இலவசத் தொல்லாடல்

உலகின் இரு முனையில் உள்ள இரு கணினிகளுக்கு இடையில் தொலைபேசி உரையாடல் (தொல்லாடல் !) - அரட்டை அரங்கம் நடத்துவதற்கு Gizmo5.com
வழங்கும் சேவையை நாடலாம். எங்கிருந்தும் இயக்கலாம் - எதையும் கணினியில் நிறுவத்தேவையில்லை. உலகெங்கிலும் உள்ள செல்பேசி, சாதாரண தொலை பேசிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பேசிக்கொள்ளலாம்.



மாதா மாதம் சந்தா கட்டத் தேவையில்லை. கணினி 2 கணினிக்கு -- எப்போதுமே இலவசத் தொல்லாடல் சேவையை வழங்குகிறது Gizmo5.com
Call PC-to-PC free.
ஒலிப்பான், ஒலிவாங்கி (headset, mic) இவை தேவைப்பட்டால் அதற்கு தனிக் கட்டணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்.

இங்கே உறுப்பினர் ஆவதற்குப் பணம் செலுத்தத் தேவையில்லை. உறுப்பினர் ஆனதுமே 0.10$ ஆனது உங்கள் கணக்கில் (credit) இலவசமாக சேர்ந்துவிடும்

http://gizmo5.com/pc/download/

ஒரு குறுந்தகவல்:
சில மாதங்களாகச் செயலிழந்து போயிருந்த http://www.circuitcity.com கடந்த வாரம் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது. இது குறித்து இணையத்தளபதி PKP அவர்களின் பதிவைக் காண்க.

கணினியின் தேவையற்ற கோப்புகளை ஒரே சொடுக்கில் அழிக்க

Dustbuster XP - இந்த சிறிய மென்பொருளைப் பயன்படுத்தி கணினியின் வன்வட்டு @ Hard disk ல் இருக்கும் தேவையற்ற குப்பைக் கோப்புகளை (garbage files) அழிக்கலாம். இந்த மென்பொருள் மூலம் 1500+ விதமான தேவையற்ற தற்காலிகமாக எழுதப்பட்ட கோப்புகள், டைரக்டரிகளை ஒரே சொடுக்கில் அழிக்கலாம்.



ஒவ்வொரு போல்டரிலும் இருக்கும், தேவையில்லாத கோப்புகளைக் கண்டறிந்து அழிக்கும் திறன் பெற்றது இது. மேலும் இதனால் வன்வட்டு @ hard diskன் நினைவகத்தன்மையின் அளவு அதிகரிக்கப்படுகிறது. கணினியில் நிறுவப்பட்டுள்ள நமக்குத் தேவையான மென்பொருட்களை இது எதுவும் செய்து விடாது.

http://www2.hiren.info/download/freeware/DustBusterXP.zip

கோப்புகளின் பெயர்களை ஒரே சொடுக்கில் மாற்றியமைக்க

நம்மில் பலரும் இணையம் என்னும் சமுத்திரத்தில் தினமும் ஏராளமான கோப்புகளை இணையிறக்கம் @ download செய்துகொண்டே உள்ளோம். ஆனால் இந்த கோப்புகளின் பெயர்கள் ஒரு சீராக அமைந்திருக்காது. உதாரணமாக ஒரு இணையப் பக்கத்தில் உள்ள படங்களான jpg கோப்புகளின் ஒவ்வொரு பெயர்களையும் பார்த்தீர்கள் என்றால் a23fsd23.jpg என்று இருக்கும். இப்படி பல்வேறு கோப்புகள் - ஒரு இணையப்பக்கத்தில் உள்ள படங்கள் எல்லாவற்றுக்கும் ஒரே பெயரை வைக்க விருப்பப்படுகிறீர்கள். அதாவது adventure1.jpg, adventure2.jpg, adventure3.jpg



இந்தச் செயலைச் செய்வதற்காக File Renamer Basic உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளின் பெயர்களை ஒரே சொடுக்கில் மாற்றியமைக்க, சீர்செய்ய உதவும் மென்பொருள் இது. எந்த folderல் உள்ள கோப்புகள், எந்தப் பெயருக்கு மாற்றிட விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் File Renamer Basic ல் சொல்லிவிட வேண்டும்.

http://www.sherrodcomputers.com/products_filerenamer_download.cfm

இசைக்கருவிகளுக்கான இலவச மென்பொருட்கள்

நம்மில் பலருக்கும் இசையார்வம் அதிகம் உண்டு. கணினியில் இசைக்கருவிகளான ட்ரம்ஸ், வயலின், கீபோர்ட் இவற்றுக்கான மென்பொருட்கள் இருப்பின் நமது ஆர்வத்தை, விருப்பத்தை அதில் ஈடுபடுத்தி இன்னும் திறமையைக் காட்டலாம்.

இணையத்தில் தேடியதில் சில Flash Application களைக் கண்டேன். டிரம்ஸ், வயலின், கீபோர்ட் இவற்றிற்கான ப்ளாஷ் அப்ளிகேசன்ஸ் இவை. இவற்றைத் தனியாக தரவிறக்கம் செய்து இணைய இணைப்பின்றியும் இசையமைத்து புதுசா பட்டையைக் கிளப்பலாம்.
உங்கள் கணினியின் keyboard, mouse வாயிலாக கீழே உள்ள musical keyboard ஐ இசைத்துப் பாருங்கள். காதில் headset ஐ அணிந்து கேட்டுப் பாருங்கள்.


ButtonBeats.com


இணையப்பக்கத்தில் ஒரு widget ஆகப் பொதிந்து படங்காட்டலாம். கீழே பாருங்கள். கணினியின் மவுஸ், விசைப்பலகை இவற்றால் இந்த இசைக்கருவிகளை மீட்டி மகிழலாம்.

http://www.buttonbeats.com/

உங்கள் பெயர் ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்யப்பட்டுவிட்டதா?

நாள் தோறும் எத்தனையோ புதிய இணையதளங்களில் உலா வருகிறோம். நமது பெயரை ஒவ்வொரு தளத்திலும் பதிவு செய்து உறுப்பினராக ஆகிறோம்.

குறிப்பிட்ட இணையதளத்தில் நமது பெயரைக் கொடுத்து நமது பெயரில் வேறு யாரேனும் ஏற்கனவே ரெஜிஸ்டர் ஆகிவிட்டார்களா? என சோதிப்பதற்காகவே சிறப்புத் தளங்கள் உள்ளன. இந்த சேவையைச் செய்யும் இணைய தளங்களை கீழே கொடுத்துள்ளேன்.

100+ சமூகக் குழுமங்களில் நாம் கொடுக்கும் பெயரை ஒப்பிட்டு, முடிவுகளை அறிவிக்கிறது. Available ஆக இருந்தால் பச்சை நிறத்திலும், ஏற்கனவே யாரோ நம் பெயரில் உறுப்பினராக ஆகிவிட்டனர் என்றால் Available என்பதை குறுக்குக் கோடிட்டு சிவப்பு வண்ணத்திலும் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றது.

http://www.knowem.com/

http://www.usernamez.com/

http://www.checkusernames.com/

http://www.usernamecheck.com/

http://www.namechk.com/

அடுத்தவரின் கணினியை இங்கிருந்து இயக்க

வேறிடத்தில் உள்ள நண்பரது கணினியில் ஒரு பயன்பாட்டில் சந்தேகம் அவருக்கு. அதைத் தீர்த்து வைக்க உங்களை நாடுகிறார். அவரது திரையை இங்கே கண்டு அவரது சந்தேகத்தை தீர்த்து வைக்க ஒரு இனிய மென்பொருள் உள்ளது. அதன் பெயர் LogMeIn.

உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் LogMeIn.



இருவரது கணினியிலும் LogMeIn மென்பொருளை நிறுவி, இயக்கி கணினித்திரையை பகிர்ந்து பயன்பெறலாம். வணிக ரீதியில்லாத, தனிமனிதப் பயன்பாடுகளுக்கு இந்த மென்பொருள் இலவசமாகவே கிடைக்கிறது. நிறைவான பாதுகாப்புடன் இயங்கும் மென்பொருள் இது.
Firewall, router - எதையும் மாற்றியமைக்காமல் இயங்கும்.

https://secure.logmein.com/products/hamachi/vpn.asp?lang=en

ஒரு அவசர உதவி

இன்று காலையில் எனக்கு சகோதரி பூமாவிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது.

பார்வைப் புலனற்ற நமது சகோதர, சகோதரிகளுக்கு அவர்கள் சொல்லச் சொல்ல தமிழ் மொழியில் அல்லது ஆங்கில மொழியில் பரீட்சை எழுதிக்கொடுக்க சேவை மனப்பான்மை கொண்ட அன்பான மனம் கொண்டவர்கள் தேவைப்படுகிறார்கள். உதவ விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் இத் தொலைபேசி எண்ணை அணுகலாம்.

Disha Foundation - 9941014591 (இரவு 7 மணியிலிருந்து 10 மணிக்குள் அழைக்கவும் )

மாணவர் விபரங்களும், பரீட்சை விபரங்களும் கீழ்வருமாறு...

SCRIBE
REQURIEMENTS   May - June 2009

  • Student Name
Malarvizhi
Ramathilagam
Anbarasi
Pitchai
Selvaraj
Thamarai Selvi

  • 26 - Tuesday
English

  • 27 - Wednesday
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
English

  • 28 - Thursday
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
English

  • 29 - Friday
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
English
  • 30 - Saturday
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
  • 1 - Monday
English
English
Tamil
Tamil
Tamil

  • 2 - Tuesday
English
English
Tamil
Tamil
Tamil
  • Time:
10 am to 1 pm



இத் தகவலைத் தெரிந்தவர்களிடத்தில் பரவச் செய்து விடுங்கள்.
உங்கள் பேருதவிகள் ஒருவர் வாழ்க்கைக்கு ஒளியேற்றட்டும்.
நன்றி நண்பர்களே !

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்.



பதிவைக் கண்ட இடம் : http://rishanshareef.blogspot.com/2009/05/blog-post_27.html

சுருக்கப்பட்ட கோப்புகளை விரிக்க - Universal Extractor

எத்தனையோ கோப்புச் சுருக்கிகள் (file compression tools) இணையத்தில் உள்ளன. ARJ, ZIP, RAR இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு மென்பொருளால் உருவாக்கப்பட்ட சுருக்கப்பட்ட file ஐ, வேறு ஒரு மென்பொருளால் விரிக்க முயற்சித்தால் பல நேரங்களில் ஒத்திசைவு இல்லாத பிழைச் செய்தி (compatibility issues) கிடைக்கும். RAR கோப்பினை WinZip வழியாக திறக்க முயற்சித்திருக்கிறீர்களா?


இதற்கான தீர்வுதான் Universal Extractor. எந்த மென்பொருள் வாயிலாக கோப்புகளைச் சுருக்கி இருந்தாலும், இந்த யுனிவர்சல் எக்ஸ்ட்ராக்டர் பயன்படுத்தி விரித்து விடலாம். மைக்ரோசாப்டின் MSI கோப்புகளையும், EXE கோப்புகளையுமே கூட இதன் மூலம் விரிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

http://www.legroom.net/software/uniextract#download

PDF ஐ வெட்ட / ஒட்ட

100 பக்கங்கள் கொண்ட பிடிஎப் கோப்பு ஒன்றை பத்து பத்து பக்கங்களாக பிரிக்க வேண்டுமா?

அதாவது ஒரு புத்தகத்தில் 10 தலைப்புகள் (chapters) இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொன்றும் 10 பக்கங்கள் இருக்கின்றன. மொத்தம் 100 பக்கங்கள். ஒவ்வொரு சாப்டரையும் தனித்தனி கோப்புகளாக ஆக்க வேண்டுமா? இதற்கு Split என்று பெயர் (வெட்டுதல்).
ஒன்றுக்கு மேற்பட்ட PDF கோப்புகளை ஒன்றாகக் கோர்த்தல் - அதாவது Merging செய்ய வேண்டுமா? இந்தப் பணிகளைச் செய்வதற்காக PdfMerge என்கிற மென்பொருளைப் பயன்படுத்தலாம். தரவிறக்கச்சுட்டி கீழே.

http://downloads.sourceforge.net/pdfmerge/PdfMergeSetup_1.19.msi

உள்ளங்கையில் இணையம் - சாத்தியமா?

ஒரு இணையதளத்தில் இருக்கும் எல்லா பக்கங்கள் (web pages) அவற்றின் உள்ளே உள்ள தொடுப்பு சுட்டிகள் (internal links), படங்கள், ஒலி, ஒளிக் காணொளிகள் எல்லாவற்றையும் ஒரே க்ளிக்கில் இணையிறக்கம் செய்து, offlineல் இணைய இணைப்பின்றி எந்த browser வாயிலாகவும் உலவுவதற்கு ஒரு மென்பொருள் உள்ளது.

WebReaper இதைச் சாத்தியமாக்குகிறது. இந்த பயன்பாட்டில் URL முகவரியை உள்ளிட்டு, Go அழுத்தினால் போதும். URL முகவரியுடன் தொடர்புடைய அனைத்து உள் தொடர்புடைய சுட்டிகளுக்கான பக்கங்களும் தரவிறக்கம் செய்யப்பட்டு உங்கள் கணினியிலேயே பதிவாகிவிடும். ஒரு இணையதள முகவரியை உள்ளிட்டு அதில் தேவையற்ற extension கொண்ட கோப்புகளைத் தரவிறக்கம் செய்யவேண்டாம் என வடிகட்டும் (filter) வசதியும் இதில் உள்ளது. முற்றிலும் இலவசமான பயன்பாடு இது. இணையிறக்கம் செய்த கோப்புகளை USB கருவியில் பதிந்து உள்ளங்கையில் எடுத்துச்செல்லலாம். உள்ளங்கையில் இணையம் என்பது இதுதானே?

http://www.webreaper.net/download.html

ஆன்லைன் புகைப்பட எடிட்டர் – Picnik dot Com

http://www.picnik.com இந்த தளத்தில் உங்கள் புகைப்படங்களை ஏற்றி அங்கேயே எடிடிங் செய்து கொள்ளலாம். தனியாக எந்த மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை.மிக எளிமையான பயன்பாட்டுத்தளம் இது.

புகைப்படங்களை மெருகேற்றுவதற்கு, சிறப்புத் தோற்றங்களைச் சேர்ப்பதற்கு, அழகு எழுத்துருக்களில் தலைப்புக் கொடுக்க என தளத்தின் பயன்பாடு விரிந்து கொண்டே செல்கிறது.
இத்தனையும் இலவசமாக Picnik தளத்திலேயே அளிக்கப்படுகிறது. Myspace, Flickr, facebook, Photobucket, Picasa, Webshots, Webs போன்ற தளங்களில் ஏற்கனவே ஏற்றப்பட்ட படங்களையும் Picnik தளம் வாயிலாக மாற்றியமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Jaycut - Video Editing செய்ய Online தளம்

http://www.jaycut.com இந்த தளத்தில் உங்கள் கேமரா, செல்பேசி, வெப் கேமரா ஆகிய கருவிகள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஏற்றி அங்கேயே எடிடிங் செய்து கொள்ளலாம். தனியாக எந்த மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை. மிக எளிமையான பயன்பாட்டுத்தளம்.

ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை ஒன்றாக இணைப்பதற்கு, ஒரு வீடியோவை பல பாகங்களாகப் பிரிப்பதற்கு இந்த தளத்தின் மூலம் இயலும். நெடிய வீடியோவில் எங்கெங்கு போரடிக்கும் காட்சிகள் இருக்கிறதோ அவற்றை மட்டும் வெட்டி நீக்கும் வசதி உண்டு. ஒளிநகர் படத்திற்கு ஏற்ற இசையைச் சேர்ப்பது, title என்னும் தலைப்பு சேர்ப்பது எல்லாம் இங்கே எளிமையாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் இலவசம்.
அகலப்பட்டை (broadband connection) மற்றும் ஒரு உலவி இவை மட்டுமே போதுமானது. எல்லா எடிட்டிங் வேலைகளும் முடிந்ததும் உங்கள் வீடியோக்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளலாம் (sharing). உங்களால் எடிடிங்க் செய்து மாற்றியமைக்கப்பட்ட புதிய மெருகேற்றப்பட்ட வீடியோவை iPod, PCல் இறக்கிக்கொள்ளலாம். அல்லது நேரடியாக உங்கள் வலைப்பதிவில் பொதியலாம் (embed).

அசைபட GIF கோப்புகளை உருவாக்க - ஆன்லைன் தளம்

இணையத்தில் எங்கெங்கு காணினும் பல்வேறு அனிமேட்டட் பேனர்ஸ் (Animated Banners) கண்டிருப்பீர்கள். தொடர்ச்சியான பல படங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படுவதே GIFன் தத்துவம்.



GIF ஐ உருவாக்க நிறைய மென்பொருட்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தரவிறக்கம் (download) செய்ய வேண்டும். இதற்காகப் பிரத்தியேகமாக உள்ள ஆன்லைன் இணையதளம் : http://www.gickr.com/ அங்கே அதிகபட்சமாக 10 jpg கோப்புகளை ஏற்றி உங்களுக்கான அசைபட GIF அனிமேசன்களை உருவாக்கலாம்.

Flickr தளத்தில் ஏற்கனவே இருக்கும் படங்களையும் http://www.gickr.com/ மூலம் GIF ஆக மாற்றிடலாம். அனிமேசனின் வேகத்தை நீங்களே நிர்ணயிக்கலாம் (customize).

ஸ்கைப் உரையாடலை கணினியில் பதிவதற்கு

ஸ்கைப் என்னும் மென்பொருளானது மிகவும் அத்தியாவசியமானதாக அமைந்துவிட்டது. இது VoIP நுட்பத்தில் வேலை செய்கிறது. உலகின் வேறு இடத்தில் ஸ்கைப் வைத்திருப்பவரிடம் இலவசமாக தொலைபேசுவதற்கு இது உதவும். ஆனால் இந்த ஸ்கைப்பில் தொலைபேசி உரையாடலை நேரடியாக record செய்வதற்கு வழி இல்லை.
ஆகவே Skype மூலம் நடக்கும் உரையாடலைப் பதிவு செய்வதற்கு 5 இலவச மென்பொருட்களை இங்கே தருகிறேன். இந்த 5 மென்பொருட்களின் பெயர்கள் வேறு வேறாக இருப்பினும், பயன்பாடு ஒன்றேதான். எல்லாவற்றிலும் ஒரு சிவப்பு நிற பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் பேச்சு record ஆகும். Pause, Stop போன்ற பட்டன்களும் உள்ளன. இந்த மென்பொருட்கள் அனைத்தும் ஸ்கைப் பயனரின் உரையாடலை MP3 வடிவில் பதிவதற்கு உதவும். சுட்டிகள் வழக்கம் போல கீழே:
Skype call Recorder

Call Graph

MX Skype Recorder

KishKish SAM

Pamela Call Recorder

மிக வேகமாக தட்டச்சு செய்வதற்கு

Typewriting : “எனக்கு டைப்ரைட்டிங்க் தெரியாது - ஆனால் என் ரைட்டிங் ஒரு டைப்பா இருக்கும்” - விவேக் காமெடி.

பழங்கால டைப்ரைட்டர்களில் தட்டெழுதுவதைக் காட்டிலும் இப்போ கணினி விசைப்பலகையில் மிக வேகமாக தட்டியெடுக்கிறோம். ஆனால் மிகச் சிலரே Typewriting காக உள்ள விதிமுறைகளைக் கையாள்கிறோம். பலரும் கண்ணாபின்னாவென்று தனக்கென ஒரு விதிமுறைகளை வைத்துக்கொண்டு, ஆனால் அவர்களின் வேகமும் பிரமிக்க வைக்கிறது.
உதாரணமாக எனது நண்பர் 12 ஆண்டுகளாக கணினி வல்லுநராக உள்ளார். அவர் எப்போது எந்த விரலால் - எந்த எழுத்தை தட்டுவார் என்று அவருக்கே தெரியாது. ஆனால் அவரது வேகம் அதிர்வை ஏற்படுத்தும். அவருக்கு முறையான Typewriting திறமை தேவைப்பட்டிருக்கவில்லை.

ஆனாலும் முறைப்படி கற்றுக்கொள்ள விரும்பும் நண்பர்களும் உண்டு. அவர்களுக்கான 3 இணய தளங்களை கீழே கொடுத்துள்ளேன்.

http://www.powertyping.com/

http://www.artypist.com/en/typing/index

http://www.software-giant.com/software/v_0_3/

விண்டோஸ் எக்ஸ்ப்பியில் புதிய font ஐ நிறுவுவது எப்படி?

விண்டோஸ் எக்ஸ்ப்பியில் புதிய font ஐ நிறுவுவது எப்படி?

அ) விண்டோஸின் Start மெனுவில் அழுத்தி, Control Panel ஐ தேர்வு செய்க

ஆ) Appearance and Personalization இதைத் தேர்வு செய்து தொடர்ந்து Fonts ஐ திறக்கவும்.

இ) இப்போது கண் முன்னே தெரியும் உரையாடல் பெட்டி (dialog box)ல் வலது சொடுக்கவும் (right click).

ஈ) அதில் Install New Font ஐ க்ளிக்கவும்.

உ) எந்த driveல் எந்த வன்வட்டில், எந்த folder / டைரக்டரியில் நீங்கள் fonts ஐ சேகரித்து வைத்திருக்கிறீர்கள் என்பதை தெரிவு செய்யவும். அந்த குறிப்பிட்ட fonts நிறுவப்பட்டுவிடும். இது விண்டோஸ் 7, Vista வுக்க்கும் பொருந்தும்.

யாகூ மெசஞ்சருக்கான தட்டச்சுக் குறுக்கு வழிகள்

யாகூ நிறுவனம் வழங்கும் மின்னரட்டை அடிப்பதற்கான மென்பொருள் யாகூ மெசஞ்சர்.

குடும்பத்தினர், நண்பர்கள், அலுவலக உறுப்பினர்கள் அனைவருடனும் மின்னரட்டை அடிப்பதற்காக யாகூ மெசஞ்சரைப் பயன்படுத்தி வருகிறோம்.

இந்த மென்பொருளைப் பயன்படுத்தும்போது நம்மையும் அறியாமல் Ctrl + D - என தட்டுவோம்.

அது Buzz என ஒரு சப்தத்தை உண்டாக்கி எதிர் முனையில் இருப்பவரின் கவனைத்தைக் கவரும்.

யாகூ மெசஞ்சரில் பயன்படக்கூடிய Ctrl + D போன்ற பல்வேறு தட்டச்சுக் குறுக்கு வழிகளை இங்கே காண்போம்.

General Use Shortcut Key

>>> Windows Key + Y – Bring Yahoo Messenger to Focus.
>>> Ctrl + G – Buzzes the contact you are chatting with.
>>> Ctrl + H – Show or Hide offline contacts in main messenger Window.
>>> Ctrl + Shift + P – Open preferences window.
>>> Ctrl + M – Provides a option to send a Instant message.

>>> Ctrl + T - Provides a option to send a SMS message.
>>> Ctrl + L – Provides a option to make a call.
>>> Ctrl + K – Provides options to Call a phone number.
>>> Ctrl + Y – Send a email message.
>>> Ctrl + Shift + A – Provides options to add a contact.

>>> Ctrl + Shift + 0,1 or 2 – Switches between different messaging formats
>>> Esc key – Closes a active message window.
>>> Ctrl + D – Sign out of Yahoo Messenger.
>>> Ctrl + Shift + D – Sign out of Yahoo Messenger client and sign in to your mobile device.
>>> Ctrl + Shift + F8 – Change your display Image.

>>> Ctrl + Shift + C – Send you contact info in a active chat window.
>>> Ctrl + Shift + M – Send you messenger friend list in a active chat window.
>>> Ctrl + Shift + R – Request contact details in a active chat window.

Messaging Window Editor Shortcut Keys

>>> Ctrl + B – Toggle bold on or off, or convert selected text to bold.
>>> Ctrl + I - Toggle italic on or off, or convert selected text to italic.
>>> Ctrl + U - Toggle underline on or off, or convert selected text to underline.

இந்த மென்பொருள் பயன்பாட்டில் நாம் பயன்படுத்தும் Smileysகளுக்கான தட்டச்சுக் குறுக்கு வழிகள் கீழே :


கலைச்சொற்கள் :
மின்னரட்டை >>> chat
யாகூ மெசஞ்சர் >>> Yahoo Messenger
மென்பொருள் >>> Software Application
தட்டச்சுக் குறுக்கு வழிகள் >>> Keyboard Short Cuts
ஸ்மைலீஸ் >>> Smilies - emoticons

மைக்ரோசாப்டின் வரலாறு 1975 முதல்..

ஒரு நல்ல செய்தியைக் கூறுகிறேன் - மைக்ரோசாப்ட் விரும்பிகளே!

Microsoft நிறுவனத்தின் வரலாற்றுச் சரித்திரத்தை அறிந்துகொள்ள ஆவலுடன் இருப்பவர்களே!

இப்போது Channel9 என்கிற இணையத் தளத்தில் “The History of Microsoft” என்கிற ஒரு காணொளித்தொடர் நிகழ்ச்சியை நீங்கள் காணலாம்.
Microsoft இது வரையில் கடந்து வந்த பாதைகளைப் பற்றியும், தாண்டி வந்த தடைகளைப் பற்றியும் இந்தக் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Bill Gates மற்றும் Paul Allen ஆகிய இருவரும் சேர்ந்து எப்படியெல்லாம் வெற்றிநடை போட்டனர் என்பதை இந்தப் படம் விவரிக்கும்.

இது வரை வேறு எங்கும் காண இயலாத Microsft பல புகைப்படங்களைக் காணவிருக்கிறீர்கள்.

1975ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டுகளாக விவரிக்கப்பட்டுள்ளது.

சுட்டி : http://channel9.msdn.com/shows/History/

ஒளி புகும் மடிக் கணினித் திரைகள்

Transparent Laptop Monitors











Transparent Laptop Monitors

புதிய எழுத்துருக்களை விரும்புவோர்க்காக

http://www.fontex.org/ இணைய தளத்தில் 100+ எழுத்துருக்கள் உள்ளன. புதிய (fonts) எழுத்துருக்கள் வேண்டுவோர் - தரவிறக்கிக் கொள்ளலாம். இந்த இணையதளத்தில் உள்ள (Database) டேட்டாபேசில் அவ்வப்போது புதிய fontsம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

A முதல் Z வரை ஏராளமான fontsகள் இங்கே உள்ளன.

உங்களுக்குப் பிடித்த fonts க்கு நீங்கள் ஓட்டுப்போடலாம்.
அதாவது - rating செய்யலாம். fonts ஐத் தேடுவதற்காக உள்ளமைந்த தேடுபொறியும் (builtin search engine) இந்த தளத்தில் உள்ளது. எந்த எழுத்துருவை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களோ - அதன் முன்னோட்டத்தை (preview) உடனே காணலாம்.

http://www.fontex.org/

VSoft ரேபிட்ஷேர் தரவிறக்கி

ரேபிட்ஷேர் (Rapidshare)எனப்படும் கோப்புப்பகிர்வான்(file sharing) தளத்தில் உலகமெங்கும் உள்ள பயனர்கள் (users) எண்ணற்ற கோப்புகளை (files)ஏற்றி வைத்துள்ளனர். ஏற்றப்பட்ட (uploaded) கோப்புகளின் சுட்டிகளை (links) பிறருக்குச் சொல்லிவிடுவார்கள். அந்தச் சுட்டி தெரிந்தவர்கள் இணையிறக்கிக் (download)கொள்ளலாம்.

இந்தக் கோப்புகளின் சுட்டியை ஏதேனும் ஒரு உலவியின் (browser) முகவரிப் பகுதியில் உள்ளிட்டால், இலவசப் பயனர்களுக்காக (free users) 30 முதல் 180 வினாடிகள் வரை காத்திருக்கச் சொல்லும். பின்பு அந்தக் குறிப்பிட்ட கோப்பினை தரவிறக்கம் / இணையிறக்கம் செய்ய அனுமதி கொடுக்கும்.

ஆனால் இலவசப் பயனர்களுக்கான நிபந்தனைகள் (restrictions) நிறைய இருக்கின்றன.

1) அவற்றுல் மிக முக்கியமான ஒன்று குறிப்பிட்ட வினாடிகள் வரை காத்திருத்தல் வேண்டும்.
2) ஒரே நேரத்தில் ஒரு கோப்பு மட்டும்தான் தரவிறக்க இயலும்.
3) ஒவ்வொரு கணினியின் ஐபி. முகவரியை (IP Address) ரேபிட்ஷேர் நினைவில் வைத்துக்கொண்டுதான் தரவிறக்க அனுமதி கொடுக்கிறது.
4)ஒரே ஐபி முகவரி வாயிலாக ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை இணையிறக்க அனுமதி அளிக்காது.
5)இதனால் நாம் மிகுந்த பொறுமையுடன் ஒன்றொன்றாக தரவிறக்கம் செய்ய வேண்டும்.

நம்மிடம் 10 சுட்டிகள் இருக்கின்றன. அனைத்தையும் இறக்கிவிட வேண்டும் எனில் ஒவ்வொன்றாகச் செய்தால் நிறைய நேரமிழப்பு நேரிடும்.ஆதலால் குறைந்த பட்சம் அடுத்தடுத்த கோப்புகளையாவது ஒரு Que வரிசையில் தொடர்ச்சியாக தரவிறக்கம் செய்ய அனுமதியளிக்கும் வகையில் உதவும் ஒரு மென்பொருளை இணையத்தில் கண்டேன்.

சிறப்பம்சங்கள் :

அனைத்து தரவிறக்கமும் முடிந்தவுடன் கணினியை அணைத்து அதன் இயக்கத்தை நிறுத்திவிட இயலும். (auto shutdown)

English , Farsi , French ஆகிய மூன்று மொழிகளுடன் ஏற்புடையதாக உள்ளது.

தரவிறக்கச் சுட்டி : http://www.vsoft.ir/files/RAD3.4.zip

குறிப்பு : மைக்ரோசாப்ட் டாட்நெட் 2.0 (Microsoft dotnet framework) வாயிலாக இந்த மென்பொருளின் நிரலை எழுதி இருக்கிறார்கள். ஆகவே இந்த மென்பொருளை நிறுவதற்கு முன்பாக டாட்நெட் 2.0 வை இறக்கம் செய்து நிறுவிவிடவேண்டும்.

நெருப்பு நரியின் வேகத்தை இன்னும் இன்னும் இன்னும்…

மற்ற எல்லா உலவிகளையும் விட நெருப்பு நரி பாதுகாப்பானதாகவும், வேகம் அதிகமானதாகவும் இருந்தாலும் அதன் வேகத்தை இன்னும் அதிகரிக்கச் செய்வதற்காக ஒரு மென்பொருள் உண்டு.

பெரிய பெரிய வல்லுநர்களால் சோதனை செய்யப்பட்டு தகுதிச்சான்றிதழைப் பெற்றுள்ளது இந்த மென்பொருள்.

நீங்களாகவே நெருப்பு நரியின் வேகத்தை இன்னும் அதிகரிக்கலாம். ஆனால் அது உங்களது பொன்னான நேரத்தை விழுங்கும்.

முதன்முறையாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அது ஒரு சவாலே.

நெருப்பு நரி உலவியானது சாதாரணமாக 40 எம்பி அளவிலான நினைவகத்தை ஆக்கிரமிக்கும்.

இந்த மென்பொருளைப் பயன்படுத்தியபிறகு அது வெறும் 100 முதல் 200 கேபி வரையிலேதான் ஆக்கிரமித்தது. டாஸ்க்மேனேஜரே தெரிவித்த விசயம் இது.

சிஸ்டம் டிரேயில் எல்லாம் இந்த மென்பொருள் அமராது. இதன் பெயர் ஃபயர் ட்யூன் ( FireTune )

http://dl.totalidea.com/files/public/firetune.zip

வலைப்பதிவர்கள் கவனத்திற்கு

சிவசேனாவைப் பற்றி எதிரான கொள்கையை உடையவர் கேரளாவைச் சேர்ந்த 19 வயது அஜித்.

இவர் ஆர்க்குட் தளத்தில் சிவசேனைக்கு எதிராக ஒரு குழுமத்தை ஆரம்பித்தார்.

அதற்கு ஏராளமான பெயரில்லா மறுமொழிகள் இடப்பட்டன. இதைக் கேள்விப்பட்ட சிவசேனைக் குழுவினர் அஜித்துக்கு எதிரான குற்றத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

மகாராஸ்ட்ரா நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகும்படி அஜித்க்கு அறிக்கை விடப்பட்டது.

கேரள உயர்நீதி மன்றத்தில் அஜித்துக்கு முன் ஜாமீன் கிடைத்தது. அவர் வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சுப்ரீம் கோர்ட்டில் முயன்றார்.

“அவரவர் நடத்தும் வலைப்பூக்களுக்கும், அதில் இடம்பெறும் மறுமொழி / பின்னூட்டங்களுக்கும் அவரவர்களே பொறுப்பேற்கவேண்டும்”- என உத்தரவிட்ட சுப்ரீம் நீதிமன்றம், அவரது நடத்தை பற்றி மகாராஸ்ட்ரா நீதிமன்றத்தில் சான்றிதழ் வழங்கும்படி கேட்டுள்ளது.

அவரவர் பதிவுகளின் தகவல்களுக்கும், பின்னூட்டங்களுக்கும் வலைப்பதிவரே பொறுப்பு.

உங்கள் வலைப்பூவில் ஒரு வாசகத்தைப் போட்டுவிடுங்கள் : “அனைத்துப் பின்னூட்டங்களும் வாசகர்களின் சொந்தக் கருத்துக்களே. இதில் வலைப்பதிவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை”.

குறிப்பு: கேரளாவைச் சேர்ந்த அஜித்தின் புகைப்படம் கிடைக்காததால் பாவனாவின் படத்தை இணைத்துள்ளேன். ஹிஹி.

பிடிஎஃப் கோப்புகளைத் தேட சிறப்புத் தேடுபொறி

உங்களுக்குத் தேவையான PDF கோப்புகளை இணையத்தில் தேடித்தேடி கிடைக்காமல் அலுப்பு ஏற்படுகிறதா?

உங்களுக்கு உதவுவதற்காகவே PDFGeni உள்ளது. இந்தத் தேடுபொறியில் உங்கள் விருப்பங்களை உள்ளீடு செய்தால் உடனே அது சம்பந்தமான PDF கோப்புகளை எங்கிருந்தாலும் தேடித்தருகிறது.

இது முற்றிலும் இலவசம். இதற்காக வேறு எதுவும் பயனர் கணக்கெல்லாம் தேவையில்லை.

இணையத் தள முகவரி : http://www.pdfgeni.com

ரேப்பிட்ஷேர் தளத்திலுள்ள கோப்புகளை தேடுவதற்கு

கோப்புப் பகிர்வான் (File sharing) தளங்களான esnips.com, 4shared.com போன்றவற்றில் ஒருங்கிணைத்த தேடும் வசதி (built in search facility) உண்டு. ஆனால் ரேப்பிட்ஷேர் தளத்தில் இந்த உள்ளமைந்த தேடும் வசதி கொடுக்கப்படவில்லை.ஏற்கனவே ஏற்றப்பட்ட கோப்பின் சுட்டி நமக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே அவற்றைத் தரவிறக்கம் செய்ய இயலும்.

உலகின் மிகப் பிரபலமான கோப்பு ஏற்றும் தளங்களில் ரேப்பிட்ஷேர் (Rapidshare) முக்கியமானது.

அலெக்சா (Alexa) தளத்தின் அறிக்கைப்படி, உலகில் அடிக்கடி பார்க்கப்படும் தளங்களில் ரேப்பிட்ஷேரானது பன்னிரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாம்.

இந்தத் தளத்தில் தேடுவதற்காக ஏராளமான தேடுபொறிகளும் (search engine) உருவாக்கப்பட்டன. அவற்றில் 15 தேடுபொறிகளை இங்கே தருகிறேன்.

1. RapidShare1
2. RapidShare Searcher
3. FileZ
4. LoadingVault
5. RapidOSearch
6. Rapidoogle
7. HellaFiles
8. RapidShare-Search-Engine
9. FileCrop
10. ThuVienPHP
11. RapidZilla
12. OplaHol
13. FileSearch
14. FileScoop
15. FilesBot

கணினியின் தேவையற்ற காலி ஃபோல்டர்களை அழிப்பதற்கு

நம் கணினியில் இயங்குதளத்துடன் (Operating System) வேறு ஏதேனும் மென்பொருட்களை (Software applications) நிறுவும்போது, சில ஃபோல்டர்கள் உருவாகும். பின் வேறு ஒரு காரணத்துக்காக அந்தப் பயன்பாட்டினை கணினியிலிருந்து அழிப்பதற்காக Uninstall செய்வோம். ஆனால் அது குறிப்பிட்ட சில ஃபோல்டர்களை (folders) அழிக்காமலேயே விட்டுவிடும்.

இது போல கணினியில் தேவையில்லாத காலி ஃபோல்டர்கள் (empty folders) நிறைய உருவாகி இருக்கும்.தவறுதலாக நாமே New Folder உருவாக்கி இருப்போம்.ஆனால் அழிக்க மறந்திருப்போம்.

இப்படி நம் கணினியின் வன் வட்டு என்றழைக்கப்படும் hard disk ல் ஏற்கனவே உருவாகி இருக்கக்கூடிய அனைத்து empty folders ஐயும் கண்டுபிடித்து அழிப்பதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. அதன் பெயர் Fast Empty Folder Finder.

இதன் மூலம் தேவையற்ற காலி ஃபோல்டர்களை கண்டறிவதுடன் அவற்றை ஒரேயடியாக அழித்துவிடவும் செய்யலாம். இப்படிச் செய்த பிறகு கணினியின் hard diskன் செயல்பாட்டின் வேகம் அதிகரிக்கும். நல்ல இயங்குதிறன் நமக்குக் கிடைக்கும்.

தரவிறக்கச் சுட்டி : உங்களுக்கு இந்தப் பயன்பாட்டினைப் பிடித்திருந்தால் http://listeningpc.com/app.php?id=112 சொடுக்கி தரவிறக்கம் செய்யலாம்.

யு எஸ் பி கருவிகளின் செயல் வேகத்தை அளவிடுவது எப்படி?

புதிதாக ஒரு USB வகையைச் சேர்ந்த Flash Drive வாங்கி இருப்போம். அதன் செயல் வேகத்தை அத்துடன் ஒரு கையேட்டில் குறித்திருப்பார்கள். ஆனால் அது உண்மை தானா?

உண்மையிலேயே ஒரு USB 2.0 வகையைச் சேர்ந்த நினைவகக் கருவியானது (memory device) அதன் செயல்பாட்டை நல்ல முறையில் நடத்துகிறதா?

இந்தக் கேள்விகளுக்கான விடையளிக்கும் விதமாக அமைந்ததே இந்தப்பதிவு.

இந்த மென்பொருட்களை இயக்கும்போது தற்காலிகமாக கோப்புகளை (temp files) எழுதிப் பார்க்கும். அப்படி எழுதிப் பார்க்கும்போது என்ன வேகத்தில் இயங்குகிறது என்பதை திரையில் காண்பிக்கப்படும்.
ஃப்ளாஷ் டிரைவ்களின் வேகத்தை அளவிட 5 மென்பொருட்களை (software applications) இங்கே காண்போம்.

Check Flash

HD Speed

Crystal Disk Mark

Flash Memory Toolkit

HD Tune

USB 2.0 கருவிகளின் வேகம் மிகவும் பிரமிப்பூட்டுபவை.

480Mbps மற்றும், USB 1.1 ஐவிட 40 மடங்கு அதிரிக்கப்பட்ட வேகமாகவும் இயங்குபவை.

கணினி விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்ய 5 தளங்கள்

கணினி விளையாட்டுகளை விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். என் நண்பர் ஒருவர் எந்த நேரமும் கணினியில் விளையாடிக்கொண்டே இருப்பார். எங்கிருந்தாவது புதிய புதிய விளையாட்டுகளை தரவிறக்கம் செய்து விளையாடி மகிழ்வார்.

“வாழ்வது ஒரு முறை - நமக்கென வாழ்வதே நன்முறை”- என்பது அவரது தத்துவம்.

பழைய விளையாட்டுகள் போரடித்தால் உடனே புதிய விளையாட்டுகளை தரவிறக்கம் செய்ய ஆரம்பித்து விடுவார். நீரில்லாத மீன் எப்படித் துடிக்குமோ - அதே போல அவரது மனம் படபடவென்று துடிக்க ஆரம்பித்துவிடும்.

அவரே எனக்கு இந்த தளங்களை சிபாரிசு செய்தார். இங்கே முற்றிலும் இலவசமான கணினி விளையாட்டுகள் உங்கள் தரவிறக்கத்துக்காகக் காத்திருக்கின்றன. உங்கள் பணப்பையில் இருந்து பணம் செலவு செய்யத் தேவையில்லை. கடன் அட்டை மூலம் கணினி விளையாட்டுகள் வாங்கத் தேவையில்லை.

அந்தத் தளங்கள் இதோ:

  1. GameTop.Com
  2. FreeGamePick.Com
  3. FunPcGame.Com
  4. Share-Games.Com
  5. GrandMatrix.Com

கலைச்சொற்கள்:
கணினி விளையாட்டுகள் - Computer Games
தரவிறக்கம் - Download
பணப்பை - Wallet
கடன் அட்டை - Credit Card


இணையத்தில் புதிது - ரியா நுட்பம்

இன்றைய நவீன இணைய உலகில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது. முன்பெல்லாம் பக்கம் பக்கமாக தட்டெழுத வேண்டி இருப்பின், அதற்காக நமது கணினியில் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற மென்பொருளை நிறுவி அதன் மூலம் தட்டெழுதினோம்.

இப்போது இணைய தளத்திலேயே நேரடியாக தட்டி அதனால் விளைந்த கோப்பு ஒன்றை மட்டும் கணினியில் தரவிறக்கிக் கொள்கிறோம்.

http://www.zoho.com/

http://docs.google.com/

சில காலம் முன்பு வரை புகைப்படங்களில் மாற்றங்கள் தேவையெனில் அதற்காக போட்டோஷாப் போன்ற மென்பொருளைக் கணினியில் நிறுவி அதைப் பயன்படுத்தினோம்.

http://www.picnik.com/

http://www.picjuice.com/

இப்போது அதற்கு மாற்றாக இணையத்திலே புகைப்படங்களை ஏற்றி எடிடிங் வேலைகளை முடித்து இறுதியாகக் கிடைக்கும் புகைப்படத்தை நமது கணினிக்கு மாற்றிக்கொள்கிறோம்.

இப்போது ஒரு படி மேலே சென்று வீடியோக்களையும் இணையத்தளத்தில் ஏற்றி அங்கேயே எடிடிங் செய்யும் வசதியும் வந்துவிட்டது.

http://jaycut.com/

http://www.jumpcut.com/

இதற்குப் பெயர்தான் ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ். செல்லமாக ரியா.

எந்த ஒரு மென்பொருளையும் தரவிறக்கி நிறுவ வேண்டிய அவசியமின்றி அனைத்துச் செயல்களையும் இணைய தளத்திலேயே செய்ய வழிவகை வகுத்த புதிய தொழில்நுட்பமே RIA.

கலைச்சொற்கள்:
மைக்ரோசாப்ட் வேர்ட் - Microsoft Word
போட்டோஷாப் - Adobe Photoshop
புகைப்படத்தில் மாற்றம் செய்தல் - Photo Editing
எடிடிங் - Editing
ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ் - Rich Internet Applications


கணினிப் பிழைகளுக்கான தேடுபொறி - ஒரு ஆய்வு

இந்த பூமியில் மனிதனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மென்பொருளுமே (software application) பிழைகள், தவறுகளுடன் (bugs) வருபவைதான். பின்னர் ஒவ்வொரு பிழையாகக் களையப்பட்டு (bug fixing) அடுத்தடுத்த வெளியீடுகள் வெளியிடப்படும்.

இது யாவரும் அறிந்ததே!

ஒவ்வொரு பிழைக்கும் அதற்கான பிழைஎண் உண்டு. அதற்கு error code என்று பெயர்.

அந்த எண்ணை குறிப்பிட்ட இணையத் தளத்தில் கொடுத்தால் அதைப்பற்றிய அந்தப் பிழைச்செய்தி பற்றிய மேலதிகத் தகவல்களைப் பெற இயலும்.

இந்த பிழைச்செய்தியை கூகிள் தேடுபொறி (search engine)யிடம் கொடுத்தால் அது உங்களை மயக்கத்தில் தள்ளிவிடும் அபாயம் உண்டு.

பிழைச்செய்தி குறித்த மேலதிகத் தகவல்களை துல்லியமாகக் கண்டறிவதற்காகவே ஒரு இணையத்தளம் இருக்கிறது.

நம்பகமான, நம்பிக்கையான தகவல்களை இந்தத் தளத்தில் பெறலாம்.

ஏராளமான மென்பொருள் பயன்பாடுகளுக்கான பிழைக்குறியீட்டு எண் மற்றும் அதுகுறித்த தகவல்கள் அனைத்தையும் ஒரு தரவுத்தளத்தில் (database) ஏற்றியுள்ளனர். ஒரு சிறிய தேடலில் விரல் நுனியில் அறிக்கைகள் கிடைக்கின்றன. இதற்காக அவர்களே ஒரு நெருப்பு நரிக்கான நீட்சியையும் (Firefox Add on) வெளியிட்டுள்ளனர்.

இணையத் தளம் : http://www.bug.gd

101 மிகச்சிறந்த மென்பொருட்களும், தளங்களும் உங்களுக்காக

இணைய உலகில் வசிக்கும் இணைஞர்களுக்கு ஒரு நற்செய்தி.

எத்தனை மென்பொருட்கள் வணிகரீதியிலாக (commercial) வெளிவந்தாலும், ஒவ்வொன்றையும் விஞ்சும் வகையில் நல்ல மென்பொருட்களாகவும் மிகத் தரமானதாகவும், மேலும் இலவசமாகவும் கிடைக்கும் அருமையான 101 பயன்பாடுகளை (freeware applications) வரிசைப்படுத்தியுள்ளனர்.

அலைபேசி, கணினி, சமூகக் குழுமங்கள் (social groups) இப்படிப் பலதரப்பட்ட பிரிவுகளில் அமைந்த 101 மென்பொருட்களும், இணையத்தளங்களும் - நெடிய ஆராய்ச்சிக்குப் பிறகு சான்றழிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

கணினித் திறனை மேம்படுத்துபவை (enhance), பாதுகாப்புத் தன்மையை அதிகரிப்பவை, இசை, புகைப்படம், காணொளி (video) ஆகியவற்றைக் கையாளும் வகையில் அமைந்துள்ள மென்பொருட்கள் போன்றவையும் இதில் அடக்கம்.

11 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் ஒவ்வொரு பிரிவிலும் மிகமிகச் சிறந்ததையும் குறிப்பிட்டுள்ளனர்.



அகர வரிசைப்படி மிகமிகச் சிறந்தவை கீழே:

>> Advanced SystemCare Free
>> Avast Home Edition
>> Digsby
>> DVD Flick
>> Gmail Labs
>> Google Calendar Sync
>> List.it
>> OpenOffice.org
>> PhotoPerfect Express
>> Qitera
>> Shazam
>> Songbird
>> Windows Live Sync
>> Wubi Ubuntu Installer

ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி?

Windows XP / Vista கணினிகளில் USB கருவிகளைச் செருகுவதற்காக குறிப்பிட்ட ஸ்லாட்கள் இருக்கும்.

இந்த யுஎஸ்பிக்கான ஸ்லாட்களில் வெளி நினைவகங்களான ஃப்ளாஷ் டிரைவ்கள், பென் டிரைவ்கள் போன்றவற்றை செருகி தகவல் பரிமாற்றம் செய்து பழக்கப்பட்டுள்ளோம்.

ஆனால் இந்த பென் டிரைவ் / ஃப்ளாஷ் டிரைவ்களையே கணினியின் நினைவகமான ராம் உடன் இணைந்து செயல்படச் செய்தால் - கணினியின் வேகம் பலமடங்கு அதிகரிக்கும்.

கணினியின் தற்காலிக நினைவகமான ராம் மெமரியின் கொள்ளளவைக் கொண்டே கணினியின் வேகமும் நிர்ணயிக்கப்படுகிறது.

4GB ராம் நினைவகத்தின் விலையைக் காட்டிலும், 4 ஜிபி ஃப்ளாஷ் டிரைவின் விலை மிகக் குறைவுதான்.

ஆகவே ஏற்கனவே கணினியில் இணைக்கப்பட்டுள்ள ராம் உடன், ஒரு பென் டிரைவை இணைத்து - ஒட்டுமொத்த நினைவகத்தை அதிகரித்து கணினியின் வேகத்தையும் பலமடங்கு அதிகரிக்க ஒரு மென்பொருள் உள்ளது.

இந்த மென்பொருளைப் பயன்படுத்தினால் பென் டிரைவின் நினைவகத்தையும் கணினியின் ஒருங்கிணைந்த நினைவகமாக விண்டோஸ் கருதிவிடும்.

இலவச மென்பொருளாக eBoostr என்னும் பயன்பாட்டை இணையிறக்கம் செய்து கணினியில் நிறுவி இயக்கிப் பாருங்கள்.

இந்தப் பயன்பாட்டின் விதிமுறையின் படி தொடர்ச்சியாக 4 மணி நேரம் வரை மட்டும்தான் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிறகு கணினியை ஒரு முறை மறுபடி துவக்கி மீண்டும் பயன்படுத்தலாம்.

ஏற்கனவே பென் டிரைவ் / ஃப்ளாஷ் டிரைவ் வைத்திருப்போர் இதை அவரவர் கணினியில் முயன்று பார்க்கலாம்.

யுஎஸ்பி 2.0 கருவியுடனும் விண்டோஸ் எக்ஸ்ப்பி மற்றும் 2003, விஸ்ட்டாவுடனும் ஏற்புடையதாக உள்ளது.

இணையிறக்கச் சுட்டி : http://www.eboostr.com/

கலைச்சொற்கள் :
ஃப்ளாஷ் டிரைவ் - Flash drive
பென் டிரைவ் - Pen drive
நினைவகம் - Memory
யுஎஸ்பி - Universal Serial Bus
ஸ்லாட் - Slot
ராம் - Random Access Memory - RAM
இணையிறக்கம் - Download
பயன்பாட்டின் விதிமுறை - Terms and Conditions
மறுபடி துவக்கி - Restart

ப்ளூ ரே டிஸ்க்குகளில் தகவல்களை ஏற்ற உதவும் 5 இலவச மென்பொருட்கள்

நாம் கணினியில் இருக்கும் தகவல்கள், படங்கள், பாடல்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அவற்றை குறுந்தகடுகளான சிடி/டிவிடி ஆகியவற்றில் பதிந்து வைக்கும் பழக்கத்தை உடையவர்கள்.

சாதாரணமாக CD/ DVD களில் தகவல்களை ஏற்றும் செயலை burning என்போம்.

Blue Ray என அழைக்கப்படும் வட்டுகள் வழமையான CD / DVD யைப் போலவே தோற்றத்தில் இருப்பினும் அவை அதிக அளவிலான நினைவகத்தைக் கொண்டுள்ளன. 25 GB முதல் 50 GB வரையிலான கொள்ளளவைக் கொண்டுள்ளன.

இந்த நீலக்கதிர் வட்டுகளில் (Blue Ray Disc) தகவல்களை ஏற்றிட 5 இலவச மென்பொருட்களை இங்கே காண்போம்.



இந்த மென்பொருள் பயன்பாடுகளின் மூலம் Windows boot Disk ஐ உருவாக்கிக்கொள்ளலாம்.

ஒரு முறை தகவலை ஏற்றிவிட்டு, மீண்டும் அதே டிஸ்க்கில் தொடர்ந்து பதிவும் வசதி உண்டு (multi session)

ஒலி வட்டுகள் - MP3 ஆகியவற்றை உருவாக்கிடலாம்.

வேகமான இயக்கத்தை உடையவை.

Windows NT/2000/XP/Vista (32 and 64 Bit)ஆகியவற்றுடன் ஒத்திசைவு கொண்டவை.

ISO எனப்படும் இமேஜ் கோப்புகளை உருவாக்கிடலாம்.

BIN / NRG கோப்பு வகைகளில் இருந்து ISO வகைக்கு மாற்றிட உதவும்.

சுட்டிகள் :
http://burnaware.com/index.html

http://cdburnerxp.se/

http://www.binarymagic.com/free.html

http://imgburn.com/

http://www.ashampoo.com/


மிகச்சிறந்த லோகோக்களை உருவாக்க 11 ஆன்லைன் தளங்கள்

வலைப்பூக்களுக்கோ, இணைய தளங்களுக்கோ லோகோக்களை (logo) உருவாக்குவதற்காக எத்தனையோ மென்பொருள்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வணிகரீதியிலானவை (commercial).

சிறந்த லோகோக்களை இலவசமாகவும் அழகழகாகவும் உருவாக்குவதற்காக 11 ஆன்லைன் தளங்களைக் கண்டேன்.


மேலும் இவையனைத்தும் இலவசச் சேவையையே வழங்குகின்றன. 5 நிமிடங்களுக்குள்ளாகவே உங்களுக்குத் தேவையான லோகோக்களை உருவாக்கிவிடலாம் என்பது இந்த தளங்களின் தனிச்சிறப்பு.

Create beautiful Logos for your blogs, website for 0$
தள முகவரிகள் கீழே :

http://www.logofactoryweb.com/default.asp?lg=en

http://cooltext.com/

http://web2.0stylr.com/stylr.aspx

http://www.simwebsol.com/ImageTool/

http://creatr.cc/creatr/

http://www.spiffytext.com/

http://www.text2logo.com/

http://www.txt2jpg.com/

http://www.crecon.com/newbanners.html

http://www.logomaker.com/

http://www.grsites.com/logo/


வீடியோபேட் - இலவச வீடியோ எடிடிங்க் மென்பொருள்

VidoPad - A Freeware Application for Video Editing Purpose

டிஜிடல் வீடியோக் (Digital Video) கோப்புகளில் இருந்து ஒரு தொடர்ச்சியான படத்தை உருவாக்குவது என்பது இது வரை உங்களுக்குக் கடினமாக இருந்திருக்கலாம்.

ஒரே ஒரு வீடியோ கோப்பிலிருந்தோ / நிறையக் கோப்புகளில் இருந்தோ ஒரு அருமையான தொடர்படத்தை (continuous movie) உருவாக்குவதற்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம்.
avi, .wmv, .3gp, .wmv, .divx மற்றும் இன்னும் பல விதமான வடிவங்களில் இருக்கும் கோப்புகளையும் இதனால் கையாள இயலும்.

சிறப்பு விளைவுகள் (special effects), தலைப்பிடுதல் (Video titling), ஏற்கனவே இருக்கும் ஒலிப்பகுதிக்குப் பதிலாக வேறொன்றைச் செருகுதுல் போன்றவற்றை இதன் மூலம் எளிமையாகச் செய்திடலாம்.

இது முழுக்க முழுக்க இலவசமாக (Freeware) இருப்பினும் கைதேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களால் உருவாக்கப்பட்டதால் சிறப்பம்சங்கள் மிகுந்தது.

இணையிறக்கச் சுட்டி : http://www.nchsoftware.com/videopad/vpsetup.exe

பவர்பாய்ண்ட் ஸ்லைடில் இருந்து படங்களைப் பிரித்தெடுக்க

Powerpoint வாயிலாக Slide show பார்த்திருப்போம்.அதில் ஒவ்வொரு Slide உடன் பொதிந்திருக்கக் கூடிய படங்களைத் தனியாகப் பிரித்தெடுக்க ஆசைப்பட்டால் என்ன செய்யவேண்டும்?

1. வழக்கம் போல Print Screen அழுத்தி, ஏதேனும் Photo Editing மென்பொருளின் உதவியுடன் ஒவ்வொரு படமாகப் பிரித்தெடுக்கலாம். ஆனால் இது நமது நேரத்தை விழுங்கும் ஒரு செயல்.

2. Screen Capture செய்வதற்காகவே SnagIt போன்ற மென்பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதியை மட்டும் Capture செய்யலாம். பின்பு அவற்றை ஒவ்வொன்றாக கோப்புகளாக மாற்றிவிடலாம்.
3. Power Point பயன்பாட்டில் இருந்தபடி File ==> Save As கொடுத்தபிறகு, அதில் .html, .htm கோப்பு வடிவில் சேமியுங்கள். எல்லாப் படங்களும் தனியே ஒரு குறிப்பிட்ட _files எனப்படும் Folderல் சேமிக்கப்பட்டுவிடும். அங்கே சென்று அனைத்துப் படங்களையும் கையகப்படுத்தலாம்.

4. Open Office பயன்பாட்டின் மூலமாகவும் மாற்றலாம். PPT கோப்பினை Open Office வழியாகத் திறக்கவும் அதை ODP (Open Office Impress Format) வடிவில் சேமிக்கவும்.
ODP கோப்பினை .zip என பெயர் மாற்றவும்.

அதாவது Extension ஐ மற்றும் மாற்றவும். பின்பு .zip கோப்பினை விரிக்கவும். Pictures எனப்படும் ஒரு folder உருவாகி இருக்கும். அதில் அனைத்துப் படங்களும் உங்களுக்காக தயாராக இருக்கும்.

FLV லிருந்து டிவிடி. டிவிடியிலிருந்து FLV மாற்றுவதற்கு

Youtube போன்ற வீடியோத்தளங்களில் இருந்து ஏராளமான வீடியோக்களை இணையிறக்கம் செய்திருப்போம்.அந்த வீடியோக் கோப்புகள் அனைத்துமே FLV எனப்படும் Flash Video வகையில் அமைந்திருக்கும். அவற்றைக் கணினியிலோ, அலைபேசிக் கருவிகளிலோதான் பார்த்து மகிழலாம்.

ஆனால் இந்த FLV கோப்புகளை DVD வடிவிற்கு மாற்றி பெரிய தொலைக்காட்சித் திரையில் பார்த்து மகிழ ஏதேனும் மென்பொருட்கள் உள்ளனவா என்று தேடியபோது கிடைத்த மென்பொருட்களை இந்தப் பதிவின் வாயிலாகத் தருகிறேன்.

அமாடிஸ் என்னும் ஒரு எளிய மென்பொருளைக்கொண்டு FLV கோப்புகளை DVDயில் ஓடக்கூடிய வடிவிற்கு மாற்றலாம்.

பின் அதை வீட்டில் இருக்கும் டிவிடி ப்ளேயர், காரில் உள்ள மற்றும் நடமாடும் வகையில் கையில் எடுத்துச் செல்லக்கூடிய அனைத்து டிவிடி ப்ளேயர்களிலும் இயக்கிப் படம் பார்த்து மகிழலாம்.

ப்ளாட்டோ என்னும் மென்பொருளைக் கொண்டு ஏராளமான வீடியோ வகைகளில் இருந்து FLV க்கு மாற்றலாம்.

rm, divx, xvid, avi, wmv, asf, mpg, mpeg, vob, mov, qt, mp4, 3gp, swf, nsv இத்தனை வகை கோப்புகளில் இருந்து FLV video ஆக மாற்றிட இயலும்.
இந்த இரண்டும் மென்பொருட்களுமே மிக எளிமையாகப் பயன்படுத்துவதற்கு உகந்ததாக உள்ளன. இணையிறக்கச் சுட்டிகள் கீழே.

Plato Video To FLV Converter

Amadis FLV to DVD Creator

ஒரு சவால் - இதை சரி செய்ய முடியுமா?

Can you repair these iPhone 3G?

Broken Apple Iphone 3G





இணைய அரட்டை அடிக்க Digsby - (பலவும் ஒன்றில்)

இணையத்தின் ஊடாக அரட்டை(chatting) அடிப்பதற்காக ஏராளமான இலவச மென்பொருட்கள் (Freeware) உள்ளன.

AIM, MSN, Yahoo, ICQ, Google Talk, Jabber, மற்றும் Facebook அரட்டை என இத்தனை தளங்களும் இலவச அரட்டை அடிக்கும் வசதியை ஏற்படுத்தித் தருகின்றன. ஆனால் ஒவ்வொரு தளத்தின் ஊடாக அரட்டை அடிப்பதற்கும் நாம் தனித்தனி மென்பொருட்களை இணையிறக்கம் (download) செய்து நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறோம்.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி-மெயில், யாகூ பயனர் கணக்கின் வாயிலாக அரட்டை அடிப்பது கடினம்.

இவையனைத்திற்கும் பதிலாக ஒரு மாற்று மென்பொருள் பயன்பாடுதான் Digsby. இந்த ஒரே பயன்பாட்டை மட்டும் நிறுவிவிட்டு அனைத்து அரட்டை அடிக்கும் தளங்களின் பயனர்கணக்கையும், கடவுச்சொல்லையும் (User Name, Password)கொடுத்துவிட்டால் - இதை மட்டும் பயன்படுத்தி அனைவருடனும் சாட்டிங் செய்து மகிழலாம்.

சிறப்பம்சங்கள் :

1) எந்த பயனர் கணக்கிற்கு புதிய மின்னஞ்சல் வந்தாலும் அதை நினைவூட்டிவிடும். (E-Mail Alert)

2) நண்பர்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்ப உதவுகிறது. (SMS - Short Message Service)

3) Hotmail, Gmail, Yahoo Mail, AOL/AIM Mail, IMAP, மற்றும் POP மின்னஞ்சல் சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து நிர்வகிக்க இயலும்.

4) நண்பர்களுக்குள் கோப்புப்பகிர்வு செய்வதும் இதன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது. (File sharing)

தள முகவரி : http://www.digsby.com/

இலவச டொமைன்கள் வேண்டவே வேண்டாம் - ஏன்?

நம்மில் வலைப்பதிவு (blog / web sites) வைத்திருப்போர்கள் சிலர் .tk மற்றும் .co.cc போன்ற இலவச domain சேவைகளை வழங்குவோர்கள் பக்கம் மாறியிருப்போம்.

1) அவர்களிடம் நீங்கள் இலவசமாக வாங்கிய domain பெயரானது எப்போதுமே உங்களுக்கே உங்களுக்கான சொந்தமாக இருக்கப் போவதில்லை.

2) எந்த domain பெயரை நீங்கள் பதிவு செய்து இலவசமாகப் பயன்படுத்துகிறீர்களோ - அதே பெயருக்கு வேறு ஒரு நபர் பணம் செலுத்தி வாங்கிவிடத் தயாராக இருந்தால் - உங்களுக்குத் தகவல் இழப்பு (data loss) ஏற்பட்டுவிடும். உங்களுக்கு வழங்கப்பட்ட இலவசச் சேவை ரத்து செய்யப்பட்டு உங்கள் domainஐ அடுத்தவருக்குக் கொடுத்து விடுவார்கள்.
3) உங்களுக்கு இலவசச் சேவையை வழங்கும் domain provider ஆனவர் - எந்த நேரமும் உங்களுக்கு வழங்கும் சேவையை நிராகரிக்கலாம். அது அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. நீங்கள் அதை ஏற்றுக்கொண்ட பிறகுதான் - அந்தப் பயனை அனுபவிக்கிறீர்கள்.

4) உங்களுக்கு வழங்கப்பட்ட domain ஆனது TLD (Top Level domain) வகையைச் சேர்ந்ததல்ல. அது தேடுபொறி (search engine)களால் எப்போதும் sub domain ஆகவே கருதப்படும்.

எனவே, இதுவரையில் இலவச டொமைன் சேவைகளை அனுபவித்த அன்பர்கள் - இனிமேலாவது அவற்றை விட்டுவிட்டு புதிய டொமைன் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளவும் (domain registration).

உங்கள் கடவுச்சொல் எப்படிப்பட்டது?

ஒரு நல்ல வலிமையான கடவுச்சொல் (strong password) என்பது பெரிய எழுத்து, சிறிய எழுத்து, எண், சிறப்புக் குறியீடுகள் ஆகிய அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

கடவுச்சொல்லுடன் சேர்ந்திருக்கக் கூடிய ஒவ்வொரு அதிகப்படியான எழுத்தாலும் (extra letter)அதன் வலிமை அதிகரிக்கப்படுகிறது.

8 முதல் 14 எழுத்துக்களைக் கொண்டதாக இருத்தல் நலம்.

உங்கள் கடவுச்சொல்லின் வலிமை எப்படிப்பட்டது என்பதை சோதிப்பதற்கு Microsoft தளத்தின் இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும்.

சுட்டி : http://www.microsoft.com/protect/yourself/password/checker.mspx

மைக்ரோசாப்ட் வழங்கும் MVP விருதுகள்

மைக்ரோசாப்ட் நிறுவனமானது MVP எனப்படும் விருதினை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் வழங்குகிறது.

வலைப்பூக்கள், இணையக் குழுமங்கள், விக்கிஸ், கலந்துரையாடல்கள் முதலியவற்றில் யாரெல்லாம் மிகத் துடிப்பாக இருக்கின்றனரோ அவர்கள் இந்த விருதுக்குத் தகுதியானவர்கள்.

மைக்ரோசாப்ட்டின் ஏதேனும் ஒரு தொழில்நுட்பத்தில் சிறப்பு அனுபவமோ, திறமையோ இருந்தால் தான் இந்த விருது கிடைக்கும் என்பது கிடையாது.

தொழில்நுட்ப வலைப்பூக்களில் இணையத்திற்கான பயன்பாடுகள் குறித்தோ, நுகர்வோர்க்கான மென்பொருட்களைப் பற்றியோ எழுதும் அளவுக்குத் திறமை கொண்டிருந்தாலே இந்த விருதினை வாங்குவதற்கான தகுதி உங்களுக்கு உண்டு.

தற்போதைய நடப்பு MVP மேதைகளைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை MVP விருது வழங்கப்படுகிறது. இந்த முறை கிடைக்க வில்லையெனில் அடுத்தமுறை 3 மாதம் கழிந்த பிறகு முயற்சிக்கலாம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தனிப்பட்ட சுற்றறிக்கைப் பயனர்களுக்கான அனைத்து வசதிகளையும் நீங்கள் ஒரு MVP ஆக இருந்தால் அனுபவிக்கலாம்.

அவர்கள் வழங்கும் மென்பொருள் பீட்டா வெர்சன்கள், தனிச்சுற்றுக்கு மட்டும் என வழங்கப்படும் செய்திக் குழுமங்கள், ஏராளமான மென்புத்தகங்கள் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் அனுபவ அறிவு மேலும் அதிகரிக்க ஒரு நல்ல வாய்ப்பு. நீங்கள் ஒரு MVP ஆக இருந்தால் http://lakequincy.com/ விளம்பர நிறுவனம் வழங்கும் விளம்பரங்களை உங்கள் தளத்தில் காண்பிப்பதற்கு இயலும்.

MVP விருது குறித்து மேலும் விபரங்களுக்கு இந்த பிடிஎஃப் கோப்பினைத் தரவிறக்கவும்.

கலைச்சொற்கள் :

MVP - Microsoft Most Valuable Professional
விக்கிஸ் - Wikis
இணையக் குழுமங்கள் - User group, Internet Forums
கலந்துரையாடல்கள் - Conference
தனிச்சுற்றறிக்கை - Private Circulation
மென்புத்தகங்கள் - Electronic Books -Ezines
பிடிஎஃப் - Portable document format (PDF)
கோப்பு - File
பீட்டா வெர்சன்கள் - Beta Versions

செல்போனில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு

இன்றைய நவீன யுகத்தில் தடுக்கி விழுந்தால் எதாவது ஒரு தொழில்நுட்பத்தில்தான் விழ நேரிடுகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஆண்டெனாவை (antenna) மொட்டை மாடியில் கட்டி, அதன் மூலம் கிடைக்கும் சிக்னலைக் கொண்டு தொலைக்காட்சி பார்த்தனர்.

பின்னர் டிஷ் ஆண்டெனா (dish antenna), கேபிள் டிவி வந்தது. இப்போது டிடிஎச் (DTH) வந்து அசத்துகிறது - விலையும் மிகமிகக் குறைந்துவிட்டது.


தொழில்நுட்பத்தின் தேடுதல் வேட்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதன் விளைவால் இப்போது செல்பேசி (cell phone) கருவியிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாகக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

இதற்கு மொபைல் டிவி (Mobile TV) எனப் பெயர்.

ஒரு பட்டனை செல்போனில் அழுத்தினால் உடனே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் செல்போன் திரையில் உடனடியாகக் காட்சியளிக்கிறது.

அடுத்தடுத்த சேனல்களை மாற்றுவதோ, முழுநீளத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதோ எளிது.

எதையுமே இதற்காக இணையிறக்கம் (download) செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

தளமுகவரி : http://www.flotv.com

பெரிய அளவுள்ள கோப்புகளைத் துண்டு துண்டுகளாக்க

நேற்று ஒரு கோப்பினை டோரண்ட்(torrent) உதவியுடன் இணையிறக்கம் (download) செய்தேன். அதன் கொள்ளளவு 11GB. அதை நான் DVD ல் பதிவதற்கு முயற்சித்தேன்.

ஆனால் டிவிடி வட்டின் (DVD Disk) கொள்ளளவோ 4.7 GB தான். அதில் வழக்கமாக அதிகபட்சமாக 4.37GB வரைதான் நான் எழுதுவேன்.

11GB அளவுள்ள பெரிய கோப்பு (large file) அதுவும் ஒரே கோப்பாக உள்ளதை எப்படி DVDல் ஏற்றுவது? இதற்காக ஏதேனும் துண்டாக்கும் (splitter) மென்பொருட்கள் உள்ளனவா என இணையத்தில் தேடினேன்.

GSPlit என்கிற மென்பொருள் கிடைத்தது. இதன் உதவியுடன் மிக எளிதாக 3 கூறுகளாக ஆக்கினேன். மூன்று கூறுகளையும் தனித்தனி டிவிடிகளில் எழுதி பாதுகாப்பாக வைத்துவிட்டேன். இது ஒரு இலவச மென்பொருள் (freeware).

பல்லூடகங்களான (Multi media) இசை, பாட்டு, காணொளி (video), படங்கள், மிகப்பெரிய அளவிலான கோப்புகள் போன்றவற்றை சுக்குச்சுக்காக துண்டுதுண்டாக ஆக்கி டிவிடிகளில் ஏற்றுவதற்கு அருமையான இலவச மென்பொருள் இது என்றால் மிகையில்லை.

இப்படித் துண்டாக்கிய கோப்புகளை CD, DVD, USB, Zip Disk மற்றும் mobile phone களில் ஏற்றிக்கொள்ளலாம்.கோப்புப் பகிர்வான் (file sharing sites) தளங்களில் ஏற்றிப் பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்களுக்கு அனுப்பலாம். தரவிறக்கம் (download) செய்ய கீழ்க்கண்ட சுட்டியைச் சொடுக்கவும்.

சுட்டி : http://www.gdgsoft.com/gsplit/index.aspx

வந்த பாதை : mynameisideal

புத்தம்புதிய மீடியா ப்ளேயர் - Kantaris

படங்கள், இசை, பல்லூடகம் - இவற்றை இயக்கிப் பார்ப்பதற்கு 10+ players இருக்கின்றன. அந்த வரிசையில் இந்த புதிய ப்ளேயரையும் சேர்க்கலாம். இதன் பெயர் Kantaris

windows Media, Real, VLC ஆகியவற்றைத் தொடர்ந்து வெளிவந்துள்ளது இது.

இவற்றில் எது மிகச்சிறந்தது என்று கூறுவது மிகக் கடினம்.

கிரிஷ்டோபர் பெர்சன் என்னும் வல்லுநரால் தயாரிக்கப்பட்ட மென்பொருள் இது.

VLC Playerன் அனைத்து அம்சங்களுடன், புதிய நுட்பங்களையும் உள்ளடக்கியது.

தனியாக எந்தவித Codec ஐயும் நிறுவ வேண்டாம் - என்பது இதன் தனிச்சிறப்பு.



VI, MPEG, MGEG-AVC, WMV, MOV, MKV, quicktime, matroska, divx, xvid, H264, MP3, WMA, OGG - இத்தனை விதமான கோப்பு வடிவங்களுடன் ஒத்திசைவு கொண்டது இது.

விண்டோஸ் 200, windows XP, Vista வில் இயங்கக் கூடியது

தள முகவரி : http://www.kantaris.org/

உங்கள் இணையதளத்தை கூகிள் / யாகூவுக்கு தெரிவிப்பது எப்படி?

புதிதாக வலைப்பூ / வலைதளம் ஆரம்பித்திருப்பீர்கள். அந்த வலைப்பூவின் பெயரை கூகிள் / யாகூ தேடுபொறியில் தேடினால் முதலாவதாகவோ, முதல் பக்கத்திலேயோ அந்த முகவரி இடம் பெற்றே ஆகவேண்டும்.

ஆனால் கூகிள் / யாகூவுக்கு புதிய தளங்களை crawl செய்த பிறகுதான் - அவற்றைப் பற்றி தெரியும். உங்கள் தளங்களை ஏராளமான சமுதாயக் குழுமங்களில் இணைத்தால் உங்களுக்கு நிறைய ட்ராஃபிக் கிடைக்கும்.



இலவசமானதும், வேகமானதுமான கூகிள், யாகூ - தேடுபொறியில் உங்கள் வெப்சைட்டை சேர்ப்பது எப்படி? அதை இப்போது பார்ப்போம்.

http://www.google.com/addurl/?continue=/addurl இந்த முகவரியைப் பின் தொடர்ந்து அதில் உங்கள் தளத்தின் முகவரியை உள்ளிட்டு captcha வை தட்டவும். (இது கூகிளுக்கு)

http://siteexplorer.search.yahoo.com/submit இந்த முகவரியில் சென்று உங்கள் தளத்தைப் பதியவும். (இது யாகூவுக்கு)

http://listings.yellowpages.com/Services/ServiceClaimSearch.aspx இங்கே சென்று பதிந்தால் Yellowpagesல் சேர்த்துவிடலாம் உங்கள் தளத்தை.

ஒரே சொடுக்கில் பவர்பாய்ண்ட்டில் இருந்து ப்ளாஷ்

நீங்கள் உருவாக்கிய ஒரு பவர்பாய்ண்ட் ஸ்லைட்ஸ் ஐ flash வடிவிற்கு மாற்றுவதற்காக iSpring என்கிற இலவச மென்பொருளைப் பயன்படுத்தலாம். அனிமேசன் கலக்கலுடன், ஸ்லைட்ஸ் பார்ப்பதற்கு இதனால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது மிகவும் நம்பகத்தன்மையானது - அதாவது .swf என்கிற கோப்பு வடிவிற்கு மாற்றப்படுவதால் இதை மிக எளிதாக பிரதியெடுத்து, மாற்றங்கள் செய்ய இயலாது. .ppt, .pptx என இருந்தால் வேறு யாராவது இந்தக் கோப்புக்ளை எளிதில் மாற்றிட இயலும்.



எந்த இயங்குதளம் (OS), உலவியிலும் (browser) இயங்கும் வல்லமை கொண்டது. சில வினாடிகளுக்குள்ளாகவே .ppt இல் இருந்து .swf க்கு மாற்றிக்கொள்ளலாம் என்பது இதன் வேகத்தை நிரூபிக்கிறது.

முகவரி : http://www.ispringsolutions.com/products/ispring_free.html

உங்கள் கணினியின் ஐபி முகவரியை அறிவதற்கு

ஐபி முகவரி என்பது இணையத்துடன் இணைந்திருக்கும் ஒவ்வொரு கணினியையும் வேறுபடுத்திப் பிரித்துப் பார்ப்பதற்கு உதவும் ஒரு எண் ஆகும். இது நான்கு எண்களால் ஆனது. ஒவ்வொன்றும் புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். உதாரணம் : 122.172.1.22

இந்த தளத்தை வைத்து எந்த ஒரு அனானிமஸ் (பெயரிலி) கணினியின் இருப்பிடத்தையும் கண்டு பிடிக்கலாம். மேலும் ப்ராக்சி வேலைகளைச் செய்திருந்தால், அதையும் கண்டு பிடிக்கலாம்.



உங்கள் கணினிக்கான ஐபி முகவரியை அறிய : http://www.geobytes.com நாடவும். இங்கே ஒரு கணினியின் ஐபி முகவரியைக் கொடுத்து அது எந்த நாட்டில், எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறியலாம்.

அளவில் பெரிய வீடியோக்களை வெட்டியெடுக்க

உங்களிடம் அளவில் பெரிய வீடியோக் கோப்புகள் உள்ளதா? அவற்றை சிறு சிறு கூறுகளாக்க விருப்பமா? வீடியோவின் ஆரம்பம் மற்றும் இறுதியில் உள்ள தேவையற்ற வெற்றுப் பகுதியை நீக்க ஆசையா? ஒரு முழு நீளத் திரைப்படத்தில் உள்ள நகைச்சுவை / பாடல் காட்சிகளை மட்டும் பிரித்தெடுக்க எண்ணமா?

உங்களுக்கான தீர்வு இதோ இங்கே

Free Video Cutter பயன்படுத்துங்கள். வெட்டி எடுக்கப்பட வேண்டிய ஆரம்பம் மற்றும் முடிவு குறித்த தகவல்களை மட்டும் தெரிவியுங்கள் – அது போதும்.



இதை Video Cutter, Splitter, Clipper என கூறுவார்கள். MPEG 1/2, MPEG4, DivX, Xvid, AVI, WMV, Quicktime MOV, Flash video முதலிய கோப்பு வடிவங்களை ஆதரிக்கும் மென்பொருள் இது. வீடியோ வடிவங்கள் குறித்துக் கவலையின்றி இந்த மென்பொருளைக் கையாலலாம்.

http://www.freevideocutter.com/ தளத்தில் இருந்து download செய்துகொள்ளுங்கள்.

உங்களுக்கான fonts ஐ நீங்களே உருவாக்க

இண்டெர்னெட் என்னும் மாய வலையில் நாம் தினம் தினம் புதிய தளங்களைக் காண்கிறோம்.

வலையுலக அன்பர்களில் டிசைனர்கள் ஏராளம் இருக்கிறோம். அவர்கள் தினம் தினம் ஏதாவது புதிய எழுத்துருக்கள் - fonts கிடைக்குமா என இணையத்தில் தேடிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக இந்த இணையதளம் : http://fontstruct.fontshop.com/



தங்களுக்குத் தேவையான எழுத்துக்களை தாமே உருவாக்கிக்கொள்ளலாம் இங்கே. நல்ல கிரியேட்டிவிடி மற்றும் கற்பனை வளம் இருப்பின் மிகச்சிறந்த font ஐ இங்கே உருவாக்கலாம். அதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். மிக எளிதான பயன்பாட்டை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த தளம்.

மிக உயர்தரமான true type எழுத்துருக்களை உருவாக்கி விண்டோஸ் / மேக்கில் இயக்கலாம். தளத்தின் பயனாளர்களால் உருவாக்கப்பட்ட எழுத்துருக்களைக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.

விண்டோஸ் 7 RCக்கு மாறுவதற்கு முன்

இப்போது நீங்கள் உங்கள் கணினியின் இயங்குதளமாக (OS) Windows XP / Vista / Linux இவற்றில் எதையோ நிறுவிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

விண்டோஸ் 7 RC ஐ முயற்சிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.

விண்டோஸ் 7 RC க்கு மாறுவதற்கு முன்னதாக உங்கள் கணினியின் தகவல்களை backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சிடி / டிவிடிகளில் தகவல்களை ஏற்ற இலவச மென்பொருள் : IMGBurn மிக வேகமாக, எளிமையான, குறைந்த வளங்களை மட்டுமே கையாளக்கூடிய, முற்றிலும் இலவசமான ஒரு மென்பொருள்தான் ImgBurn.



தகவல்களை IMAGE ஆக எழுதி வைக்கும் வசதி இதில் உண்டு. ஒலி / ஒளி / தகவல் - அனைத்தையும் விதவிதமான format களில் எழுதும் திறன் கொண்டது. வெறும் 2 MB அளவே கொண்ட மென்பொருள் இது.

தரவிறக்கம் செய்ய : http://www.imgburn.com/

வேடிக்கையான விண்டோஸ் பிழைச்செய்திகளை உருவாக்க


விண்டோஸின் நீலத்திரைப் பிழைச்செய்திகளை வைத்து எத்தனையோ காமெடிகள் வந்திருக்கின்றன. அதன் உச்சபட்சமாக இந்த தளம் வந்திருக்கிறது. புதுமையான விண்டோஸ் பிழைச்செய்திகளை நீங்களே இங்கே உருவாக்கலாம்.

1) எந்த செய்தியை உள்ளிட வேண்டும்,
2) எந்த எழுத்துருவில் பிழைச்செய்தி உருவாக வேண்டும்,
3) இடம், வலம், நடு - எந்தப் பக்கமாக செய்தி அச்சாக வேண்டும் என்பது போன்றவற்றை நீங்களே தீர்மானிக்கலாம்.

BSOD பற்றி தெரிந்தவர்களுக்கும், தெரிய விருப்பமுள்ளவர்களும் http://www.signgenerator.org/parody/windows/bluescreen/ தளத்தை நாடுங்கள்



உலகின் மூத்த டிவிட்டரர்



உலகின் மூத்த டிவிட்டரர் : Twitter ஐ பயன்படுத்தும் 104 வயது மூதாட்டி இவர் பெயர் Ivy Bean. FaceBook ஐ பயன்படுத்துபவர்களில் இவரும் ஒருவர்.(social networks) சமூகக் குழுமங்களில் தலை காட்டுவதில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு. கடந்த மே 15 அன்று இவர் டிவிட்டருடன் இணைந்தார்.



முதல் நாளிலேயே 9 செய்திகளை டிவிட்டரில் பதிந்தார். இது வரை 14000+ தொடர்வோர்களை (followers) நண்பர்களாக்கி இருக்கிறார். உலகின் மூத்த டிவிட்டரரின் டிவிட்டர் பக்கத்துக்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள் நண்பர்களே. நோய், தனிமை - இவற்றில் இருந்து விடுதலை கொடுப்பதற்கு இந்த சமூகக் குழுமங்கள் துணை புரிவதாக Ivy Bean சொல்கிறார்.

இவரது டிவிட்டர் முகவரி :http://twitter.com/ivybean104

சும்மா டைம் பாஸ்க்கு 2 ஜாவாஸ்க்ரிப்ட் நிரல்கள்


1)கீழ்க்கண்ட நிரலை (JavaScript code) அப்படியே காப்பி செய்து உங்கள் உலவியின் முகவரிப்பகுதியில் (browser's address bar) பேஸ்ட் செய்யவும். பின் எண்டர் தட்டவும். பூமியதிர்ச்சி மாதிரி இது ப்ரவுசர் அதிர்ச்சி - சும்மா டைம் பாஸ்


2) முதலில் கூகிள் இமேஜ் தேடுபொறியில் flowers எனத் தேடவும்
இதை வேறு ஒரு உலவியின் சாளரத்தில் (different window) செய்யுங்கள்.

http://images.google.com/images?hl=en&q=flowers&btnG=Search+Images&gbv=2&aq=f&oq

பிறகு கீழ்க்கண்ட நிரலை அப்படியே காப்பி செய்து, browserன் முகவரிப்பகுதியில் paste செய்யவும். பின் enter தட்டவும்.


குறிப்பு : சமீபத்திய நெருப்புநரி உலவியில் மட்டும் இதை முயற்சிக்கவும். பிற உலவிகளில் வேலை செய்யவில்லை.

Note : Please try these funny javascript programs in latest Firefox browser. It is not working in other IE, Chrome.

திக்கித்திணறும் விண்டோஸ் பயன்பாட்டை தீர்த்துக்கட்ட

விண்டோஸ் பற்றி எல்லோருக்கும் தெரியும். எதாவது ஒரு சின்னப் பிரச்சினை என்றாலும் - உடனே “Not Responding" என கையை விரித்துவிடும்.

எத்தனையோ முறை “Firefox” ஐ இயக்கும்போது, எனக்கு இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. VLC Player மூலம் DVDல் இருக்கும் படங்களை ஒரு Playlist ஆக தொகுக்க முயலும்போது ‘தடேல்’ என அப்படியே நின்றுவிடும்.

கணினியின் வன்பொருட்களில் எப்போதாவதுதான் பிரச்சினை ஏற்படும். ஆனால் இந்த விண்டோசில் அடிக்கடி இப்படி ‘எனக்கு ஒன்னுமே தெரியாதுப்பா’னு சொல்லிவிடும். கீழே உள்ள படத்தைப் பாருங்க. பிழைச்செய்தி வருவதால் துக்கம் தாங்கலை. கருப்பு வண்ணத்தில் போட்டுட்டேன்!.!!.!!!



இந்த நேரங்களில் Task managerக்கு சென்று End Task கொடுப்பதை வழக்கமாகச் செய்திருக்கிறோம்.

இதில் எந்த தவறுமில்லை. ஏற்கனவே விண்டோஸ் ‘ஒன்னுமே புரியல உலகத்திலே’ன்னு புலம்பிக்கிட்டு ‘Not Responding' சொல்லுது, இந்த நேரத்தில் புதுசா ‘task manager' ஐ திறந்தால் ‘Load தாங்குமா? தாங்காது - அபிராமி அபிராமி’.

ஒரு சிக்கலைச் சரிசெய்வதற்கு - அடுத்த சிக்கலை உருவாக்கலாமா? ‘கூடாது. கூடாது அபிராமி அபிராமி’ - புதுசா எதாச்சும் சொல்லச் சொல்றீங்களா. அதேதான். கீழே பாருங்க.

Taskmanager ன் துணையின்றி இந்த சிக்கலை தீர்க்கலாம். குறைவான கணினி வளங்களை வைத்துக்கொண்டே.

வருமுன் காப்போம் என்று அர்த்தம் இல்லை. இதுவும் வந்தபின் காப்போம் மன்னிக்கவும் - வந்ததும் தீர்த்துக்கட்டுவோம் என்றே அர்த்தம்.

உங்கள் கணினித் திரையின் Desktopல் வலது சொடுக்கவும் (Right Click).
New -- Short Cut அழுத்தவும்.



அங்கே கீழ்க்கண்ட வரிகளை paste செய்யவும்.

taskkill.exe /f /fi “status eq not responding”


அதற்கு ஒரு பெயரிடவும்.

இந்த shortcut Icon ஆனது Desktop ல் எப்போதும் இருக்கட்டும்.

எப்போதாவது 'Not Responding' வரும்போது இந்த Desktop Icon ல் ஒரே சொடுக்கு சொடுக்கவும்.

உடனே திக்கித்திணறும் பயன்பாடு தனது இயக்கத்தை சட்டுப்புட்டுன்னு நிறுத்தி விடும்.

குறிப்பு : Linux பற்றி 2 பதிவு போட்டேன். வழக்கமா வரும் பின்னூட்டங்களும் நின்றுவிட்டது. உடனே அதிரடியாக Windows பற்றிய இந்தப் பதிவு.

Linuxல் இயக்குவதற்காக 7 இலவச Video Editors

ஏதோ லினக்ஸ் பற்றிய பதிவு நமக்குத் தேவையில்லாத ஒன்று அப்படின்னு ஒதுங்கிடாதீங்க. இங்கே குறிப்பிடப்படும் மென்பொருட்களில் சில - விண்டோசிலும் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் தொடர்ந்து படிக்கவும்.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் Windows Movie Maker என்கிற வீடியோ editing பயன்பாடு உள்ளது.

VirtualDub என்கிற இலவச மென்பொருள் விண்டோஸுக்கான வீடியோ எடிட்டிங் வேலைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது 100% இலவசம்.

இது போல நம்ம அண்ணன் லினக்ஸ் (Linux) இயக்கத்தில் வேலை செய்வதற்கான வீடியோ editing பயன்பாடு என்னவெல்லாம் உள்ளன.

இந்தப் பயன்பாடுகள் 100% இலவசமானதாகவும், மூலவரைவு இணையத்தில் கிடைப்பதாகவும் (Open Source) இருக்கின்றன.

குறிப்பிட்ட சில பயன்பாடுகள் லினக்சில் மட்டுமல்லாது விண்டோஸ், மேக் - இவற்றிலும் இயங்கும் வண்ணம் வடிவமைத்திருக்கின்றனர்.

ஒரு பயன்பாடானது, ஒவ்வொரு இயங்குதளத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் - அதற்காக பிரத்தியேகமாக நிரல் எழுதியிருப்பார்கள்.

லினக்ஸில் இயங்க வேண்டும் என்றால் அதற்கு உரிய சிறப்புத்தன்மைகளை அறிந்து அதற்கு ஏற்றபடியும், விண்டோஸ் என்றால் அதற்கு ஏற்றபடியும் நிரலில் மாற்றம் செய்து, சிறப்புத்தன்மைகளை நிரலில் கலந்து எழுதுவார்கள்.

1. Avidemux [ விண்டோசுக்காகவும் கிடைக்கிறது]

2. Cinelerra

3. FFmpeg

4. Jashaka

5. Kino

6. LiVES Video Editor

7) KDEnlive







லினக்சில் இயக்குவதற்காக 12 உலவிகள்


மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows) இயங்குதளத்தில் இணைய உலவுதலுக்காக Firefox, Chrome, IE என பல்வேறு உலவிகளைப் (browser) பயன்படுத்துகிறோம்.

மைக்ரோசாப்ட் விண்டோஸில் ஒருங்கிணைந்த உலவியாக இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் (Internet Explorer) இருப்பதுபோல, லினக்சில் நெருப்பு நரி (Firefox) உள்ளது.

நெருப்பு நரி ஒரு நட்புணர்வான, அழகான, நீட்சிகளுடன் கூடியது. ஆனாலும் சில நேரங்களில் நெருப்பு நரியும் கூட ஏதேனும் சிக்கலுக்கு ஆளாகி விடுகிறது. (crash).

லினக்ஸ் (Linux) இயங்குதளத்தின் உலவல் பயன்பாடுகளைப் பற்றி இங்கே காண்போம்.

1. Flock

web 2.0 உலவி எனப்படுகிறது - இந்த Flock.

2. SwiftFox

இண்டெல் மற்றும் ஏ.எம்.டிக்கான தனித்தனி உலவிகளாக கிடைக்கிறது. இதன் நிரல் இலவசமாக வழங்கப்படுகிறது.

3. Swiftweasel

இது Firefox ஐ விட வேகமாக இயங்குவதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். குறைந்த நினைவகத்தை ஆக்கிரமிக்கிறது.

4. SeaMonkey

5. Konqueror

KDE இயங்குதளத்தில் ஒருங்கிணைந்த உலவி இது.

6. Midori

7. Epiphany

8. Kazehakase

9. Opera

10. Arora

மிகக் குறைந்த கணினி வளங்களை (resource) மட்டுமே பயன்படுத்தக் கூடிய உலவி.

11. Amaya

இணைய பக்க வடிவமைப்பாளர்களுக்கும், வரைகலை நிபுணர்களுக்கும் ஏற்ற உலவி.

12. Lynx

எழுத்துகளை மட்டுமே திரையில் காண்பிக்கக் கூடிய உலவி. படங்கள், ஸ்க்ரிப்ட், விளம்பரங்கள், பாப்பப் எதுவுமே இந்த உலவில் அகப்படாது.







விண்டோஸ் விஸ்டாவில் UAC ஐ நிராகரிப்பது எப்படி?

UAC என்றால் User Account Control என்பதன் சுருக்கம்.

விண்டோஸ் விஸ்ட்டாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பம்சம் இது.

Windows Vista வில் புதிதாக ஏதேனும் மென்பொருளை நிறுவும்போதோ, அறிமுகமில்லாத மென்பொருள் பயன்பாட்டை இயக்கும்போதோ கீழ்க்கண்ட உரையாடல் பெட்டியைத் திரையில் காண்பிக்கும்.
நமக்கு நன்றாக அறிமுகமான மென்பொருள்தான் என விண்டோஸ்க்கு தெரிவிப்பதற்காக Allow என்கிற பட்டனை அழுத்த வேண்டும்.

ஒவ்வொரு முறையும் இந்த உரையாடல் பெட்டி நமது கண்முன்னே தோன்றும். எந்த ஒரு புதிய மென்பொருளை இயக்கும்போதும் (விண்டோஸ் விஸ்ட்டாவுக்கு அறிமுகமில்லாத மென்பொருள்) இந்த உரையாடல்பெட்டி கண்முன்னே தோன்றி நமது கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்.

அடிக்கடி இந்த dialog box ஐப் பார்ப்பது எரிச்சலாக இருந்தாலும், அது நமது நன்மைக்காக விண்டோஸ் விஸ்ட்டாவுடன் ஒருங்கிணைந்த ஒரு ஏற்பாடு. வைரசு தொற்று, தேவையற்ற தொல்லை தரும் மென்பொருட்களில் இருந்து கணினியைப் பாதுகாக்கவே இந்த ஏற்பாடு.

இருப்பினும் இந்த UAC ஐ நிராகரிக்கும் வசதியும் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

செயல்முறை :

1) Vista ல் Start அழுத்தவும். MSCONFIG என தட்டெழுதவும்
2) Continue கொடுக்கவும். (தேவைப்பட்டால்)
3) Tools டேப் - இதில் அழுத்தவும்.

4) Scroll down செய்து Disable UAC இதை தேர்வு செய்யவும்.

5) Launch பட்டனை அழுத்தவும்

6) தேவைப்பட்டால் கணினியை மறுபடி துவக்கவும். (restart).

குறிப்பு : UAC ஐ நிராகரிக்கும் வசதி நமக்கு அளிக்கப்பட்டாலும், நாம் எச்சரிக்கையுடன் இதைப் பயன்படுத்த வேண்டும்.








ஒரு பின்னூட்டமும் 2 படங்களும்

ஒரு பின்னூட்டம் :

அன்பின் விஜய் பாலாஜி,

மிக அருமை, அதிலும் பொரேஸ் காந்தியின் பேரன் ராகுல் காந்தியின் அந்த கம்பேரிசன் சார்ட் புகைப்படம். அது நிஜத்திற்கும் நடிப்பிற்க்கும் இடையே உள்ள பெரும் இடைவெளியை அருமையாக காட்டிவிட்டது. நிறைய பேருக்கு நேரு குடும்பத்துக்கு பின்னால் எப்படி காந்தியின் பெயர் வந்தது என தெரியாது. அது இந்திரா பிரியதர்சினி நேருவை காதலித்து மார்ச் 1942 ல் திருமணம் செய்து கொண்ட நேர்மையான காந்தியவாதியான, இஸலாமிய மார்க்கத்தை பின்பற்றிய, பார்ஸி இனத்தை சேர்ந்த பொரேஸ் காந்தியால் தரப்பட்டது. ரேபரேலி தொகுதியில் முதலில் நின்று வெற்றி பெற்றவரும் அவரே. தன் மாமனாராகிய நேருவின் ஆட்சியில் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்தியவரும் அவரே. அதனாலயே நேருவிற்கு தன் மருமகனை பிடிக்காது. மேலும் விவரங்களுக்கு.


நீங்கள் சொன்னது போல பிரச்சினை நம்மிடம் தான். காரணம் போதிய அறிவின்மை, அதற்கான காரணம் அதைப்பற்றிய தகவல் இன்மை. எல்லாம் தகவல் தளம், தரவுகள் சம்மந்தப்பட்டவை. இதை படித்தவுடன் உங்களுக்கு லேசாக உடல் அதிரக்கூடும். இந்த தகவலை வைத்து நீங்கள் ஒரு தனிப்பதிவு கூட போடலாம். நான் காப்பி ரைட்டு, காப்பி லெப்டு என அலற மாட்டேன். காரணம் பிகேபி, நீங்கள் நான் எல்லாம் " அறிவு ஞானம் அனைவருக்குமே பொது " என்ற கொள்கையுடையவர்கள். மேலும் இந்த விஷயம் நிறைய பேரிடம் சென்றடையும். உங்களுக்கு தெரியுமா? ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி ராபர்ட் வதேராவை திருமணம் செய்தாலும் அவர் பிரியங்கா வதேரா இல்லை. இன்னமும் பிரியங்கா காந்தி தான்.


இது இஸ்மாயிலனந்தாவின் வார்த்தை -

"ஒரு விஷயத்தில் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால், உங்களுக்கு அதில் முழுமையான ஞானம் இல்லை என்று அர்த்தம்."


How is it?


with care and love,

Muhammad Ismail .H, PHD,

பின்னூட்டம் எழுதக் காரணமான 2 படங்கள்

மு.க. உண்ணாவிரதம்
குளிரூட்டியின் முன்னிலையில் 4 மணி நேர உண்ணா விரதம்
காலை உணவுக்குப் பிறகு ஆரம்பித்து, 
மதிய உணவுக்கு முன்னர் முடிந்த அறப்போராட்டம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் நடித்திருப்பார் - ‘அண்ணாமலை’ படத்தில். 
ஒரு சைக்கிள் - அவருக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும். அதில் ஸ்டீரியோ டேப்ரெகார்டர் எல்லாம் இருக்கும்.

 ஒரு பால்காரரின் வண்டி அப்படியெல்லாம் இருக்குமான்னு நாம் யாரும் கேட்கவில்லை. படத்துக்காக நடிப்புக்காக அதை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டோம். 

அதைப்போல அரசியல் நாடகத்திற்காக கீழ்க்கண்டதையும் ஏற்றுக்கொள்வோமாக.
இந்தப் பதிவை எனது amazingphotos4all.blogspot.com ல் வெளியிட்டிருந்தேன். மின்னஞ்சல் வாயிலாகப் பதிவைப் படிப்பவர்கள் - இதைத் தவறவிடக்கூடாது என்பதற்காக இங்கேயும் பதிகிறேன். 


5 வித்தியாசமான வீடியோக்கள் - மசாலாமிக்ஸ்

The Luckiest People Compilation



Animal Thieves


Women Vs Car Great Compilation



Top 10 Women Drivers of the year


Mitsubishi Lancer Nice Shot

இணைய இசைப் பிரியர்களுக்காக - MP3 தரவிறக்க


MySpace, Imeem, Last.FM, Pandora, eSnips, Mog, iJigg, Radio.blog.club மற்றும் பல இணைய தளங்களில் இருந்து இசையை நேரடியாகக் கேட்கும் வசதியை அனுபவித்திருப்போம்.




ஆனால் இந்த தளங்களில் நேரடியாகக் கேட்டு மகிழ்ந்த இசை, பாடல்களை - நமது கணினியில் MP3 ஆகப் பதிவு செய்து மீண்டும் மீண்டும் - இணைய இணைப்பின்றி கேட்டு மகிழ்வதற்கு ஒரு எளிய வழி உள்ளது.




Free music zilla இந்த மென்பொருளை download செய்து install செய்து பயன்பெருங்கள்.

சிறப்பம்சங்கள்:

அ) வரையறையற்றது

ஆ) IE, Firefox, Opera, Maxthlon, Avant போன்ற உலவிகளுடன் ஏற்புடையதாக உள்ளது.

இ) MySpace, Imeem, Last.FM, Pandora, eSnips, Mog, iJigg, Radio.blog.club போன்ற பல்வேறு தளங்களில் இருந்து இசையை இறக்கிக் கேட்பதற்கு உதவுகிறது.

ஈ) இலவசமானது. Spyware, Adware,Viruses தொந்தரவு இல்லாதது - என Softpedia தளத்தால் சான்றழிக்கப்பட்டது.

உ) வன்வட்டு எனப்படும் hard diskல் வெறும் 6 MB மட்டுமே ஆக்கிரமிக்கக் கூடியது.

தள முகவரி : http://www.freemusiczilla.com/download.htm

பிஞ்சிலே / விதையிலே பழுக்க வைக்கப்பட்டவர்கள்

1. No No அழப்புடாது - Do Not Cry Boss!
2. டேய் தம்பிகளா அண்ணனையும் ஆட்டது சேர்த்துக்கோங்கப்பா - Do Not Do It again!
3.வீரண்டா நீ - Don't Cry
4.பறவைகளின் நடுவினில் ஒரு ரோஜா
5.அய்ய சீ - Lovely Kid
6.என்ன தான் மார்க் பண்ணாலும் உன்னை மண்ணாங்கட்டி ஆக்கிபுடுவோம் பா. - What an Idea to identify a kid?

7.என்றா கண்ணு, விட்டுட்டு போயீட்டாங்களா
8.செல்லம் கண்ணு பட போகுது. - You look like me
9.எப்பா தொப்ப கணேஷா - Young Body Builder

10.ஜுப்பர் மேனு
11. அப்பா, பொம்பள பிள்ளைகலேல்லாம் பாக்குறாங்கப்பா உன்னை.

12. வன்முறையெல்லாம் கையில் எடுக்க கூடாது sorry வாயில் கடிக்க கூடாது.

13. அங்க என்னடா பாக்குற -- For SJ.Surya (New Director) Fans --
(இது மட்டும் தணிக்கைப்படுத்தப்படுகிறது)
மீறிப் பார்க்கணும்னு பிரியப்படுகிறவர்களை - நான் என்ன சொல்றது. இங்கன போகிப் பாருங்க. இது பிஞ்சிலே பழுத்தது. அல்லது பழுக்க வைக்கப்பட்டது. ஓவர் build up எல்லாம் இல்லைங்கோ..

குறிப்பு :

படங்களுக்கு வசனம் எழுதிய அன்பர் திரு. விஷ்ணு அவர்களுக்கு
நன்றி. நன்றி. நன்றி

1GB அளவுள்ள கோப்புகளை நண்பர்களுக்கு அனுப்புவதற்கு



SendTool இந்தத் தளத்தில் உங்கள் கோப்புகளை ஏற்றிவிட்டு, கிடைக்கும் சுட்டிகளை மட்டும் நண்பருக்கு அனுப்புங்கள்.

மின்னஞ்சலில் சேர்க்கையாகச் சேர்க்கப்படுபவைகளில் இருக்கும் சிக்கல்கள் இதில் இல்லை. 1 GB வரையிலான கோப்பு(கள்) இந்த தளம் மூலம் அனுப்பிட இயலும்.


SendTool eliminates the limitations of sending email attachments. Send files of any type and any size (up to 1GB). After submitting the file(s) you will receive a download link that anyone can use to download your file.

தளமுகவரி : http://sendtool.com/


ஒளிக்களஞ்சியம் : பணம் (money) குறும்படம். ஏழ்மையால் வாடும் ஒரு மாணவனின் உண்மைக்கதை

வோடாஃபோன் ZooZoo - 16+ வெள்ளான்கள் ஒரே இடத்தில்

எதுவுமே க்ராபிக்ஸ் இல்லையாம்ல.
Voice SMS


Magic Box 2



Busy message


Dating Tips


Bhakti Sagar


International Roaming


Stock Alerts


Cricket Commentary


Magic Box


Be the Star of the Match - 2nd Ad


Maps on Vodafone Live


Call Filter


Live Games


Chota Credit


Musical Greetings


Beauty Tips


Cricket Alerts


Be the Star of the Match


Phone Backup

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP