இணைய Video / MP3 இவற்றை இணையிறக்குவதற்கு NetVideoHunter



இணைய வீடியோக்களை இறக்குவதற்காக இதுவரை நிறைய மென்பொருட்கள், இணையச் சேவைகள், நெருப்பு நரி நீட்சிகள் (Firefox add-ons) - இவற்றைக் கொடுத்திருக்கிறேன்.

இணையம் என்பது ஒரு சமுத்திரம். அனைத்து மென்பொருட்களும் இங்கே சங்கமிக்கின்றன.

அந்த வகையில் நெருப்புநரி என செல்லமாக அழைக்கப்படும் Firefox உலவியின் மூலம் இணைய வீடியோக்களைத் தரவிறக்கம் செய்வதற்காக ஒரு நீட்சி பற்றி இங்கே காண்போம்.

இதன் பெயர் NetVideoHunter என்பது. இதனை நிறுவி இதன் மூலம் Youtube,Google Video, Myspace, Metacafe, Dailymotion, Veho, Blip.tv, Megavideo போன்ற இணைய வீடியோ தளங்களிலிருந்து வீடியோக்களையும், MP3களையும் தரவிறக்கம் செய்யலாம்.

மிக எளிதாகக் கையாலும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை நிறுவியபிறகு நெருப்புநரி உலவியின் வலதுப்புறமாக அடியில் ஒரு சிறிய நீலநிற icon வந்து அமரும். உதாரணமாக http://in.youtube.com தளத்தில் உங்களுக்குப் பிடித்த வீடியோவைப் பார்க்கும்போது, இந்த iconல் ஒரு க்ளிக் போடவும்.

உடனே ஒரு தனி popup window திரையில் தெரியும். அங்கே download link மற்றும் play இவற்றைக் காணலாம். download கொடுத்து உங்கள் கணினியில் எந்த folderல் பதிவு செய்ய வேண்டும் என்பதைக் கொடுங்கள்.

இது ஒரு FLV கோப்பாக உங்கள் கணினியில் பதிவாகும். இதை நீங்கள் இணைய இணைப்பின்றி எப்போது வேண்டுமென்றாலும் பார்த்து மகிழலாம்.

இதுபோல Myspace போன்ற தளங்களில் ஏதேனும் ஒரு பாட்டுப்பெட்டியில் (media player) பாடல் ஒலிப்பதை அப்படியே MP3 ஆகப் பதிந்திடவும் இயலும்.

தள முகவரி : http://netvideohunter.com/



IPL 20 Vs 20 போட்டித்தொடர் குறித்த ஒரு மென்நூல் இங்கே. வேண்டுவோர் தரவிறக்கிக்கொள்க.

மாற்றுப் பயன்பாடுகளின் உச்சகட்டம்




ஒவ்வொரு விண்டோஸ், மேக், லினக்ஸ் இயங்குதளத்திற்கான பயன்பாடுகளுக்கும் அதற்கு சமமான, அதைவிட செல்வாக்குடைய மாற்று மென்பொருட்களை இணையத்தில் காணலாம்.

எதற்காக இந்த மாற்று மென்பொருட்கள்?

வீட்டில் தினமும் இரவில் இட்லியையே சாப்பிட்டுப்பாருங்கள். நான்கு நாட்கள் தொடர்ந்தாலே வெறுத்து விடும். வேற எதாவது இருந்தால் சாப்பிடுவோமே? - என பரபரக்க ஆரம்பித்துவிடுவோம்.

அதே மனநிலைதான் கணினி / இணைய உலகிலும். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக விண்டோஸையே பார்த்துப் போரடிச்சுருச்சா?
உபுண்டு லினக்ஸை ஒரு கை பார்த்துடலாம்.

மீடியாப்ளேயர் (Media player) மூலமே பாட்டுக்கேட்டு நொந்து போகிட்டீங்களா? அதற்காக மாற்று மென்பொருள் இருக்கு.

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரை (Internet Explorer) நீங்க இழுத்த இழுப்புக்குக் கொண்டு வரமுடியலையா? விட்டுத்தள்ளுங்க 10 மாறுபட்ட உலவிகள் (browsers) உள்ளன.

எப்பவும் ஒரே உலவி, ஒரே இயங்குதளம் (OS), ஒரே பயன்பாட்டை இயக்குவதைவிட்டு வெளியில் வந்து மாறுபட்ட உலகத்தை ரசிக்க ஆரம்பிங்க.

இதுக்குப் பதிலா அது. அதுக்குப் பதிலா இது. இதுவே வாழ்வின் தத்துவம். இதை ஏன் இப்படி இவ்வளவு தூரம் சொல்றேன் தெரியுமா? ஒரு சின்ன flashback.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெண்ணைக் காதலித்தேன். காதல் 6 மாதம் ஓடியது. 6 மாதம் கழிந்த பிறகுதான் தெரிந்தது "அவளை நான் மட்டும் காதலிக்கவில்லையென்று." " என்னை விரும்பினாளா?” என்பதைக் கேட்டறியும் சக்தியில்லை அப்போது எனக்கு (இதயம் முரளி தோற்றார் போங்க - என் சோகக்கதையை வைச்சுதான் அந்தப் படமே எடுத்தாங்க).

திடீரென்று அவளும்+அவனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் எனது கைக்குக் கிடைத்தது (நல்ல வேலை இப்பவாவது தெரிஞ்சதே!).

ஒரு வாரகாலம் தாடி வளர்த்தேன். (அதுக்கு மேல வளர்த்தால் முகமே தெரியாது - முகத்தை மூடிடும் - ரொம்ப வேகமா வளருதுங்கோ! - இதுக்கு ஒரு மாற்று ஏற்பாடு யாராவது சொல்லக்கூடாதா?)

அப்புறம் “காதலாவது, brinjal ஆவதுன்னு”ட்டு அடுத்த வேலையைப்பார்க்க ஆரம்பிச்சேன் (நான்கு வருசத்துக்கு முன்னாடி முடிச்ச Diploma க்கு அப்புறம் ஒரு degree படிச்சேன். அங்கே ஒரு love. அது லவ்வான்னு தெரியல. அதையெல்லாம் விட்டுட்டு ஒரு லவ்வுக்கு மாற்று ஏற்பாடு திருமணம் மட்டுமேன்னு முடிவு செஞ்சுட்டு - master degree வரை படிச்சு முடிச்சேன்)

மாற்று ஏற்பாடு இருந்ததாலதான் தேவதாஸ் தாடியை, தற்கொலையை
(! - காதலைச் சொல்லவே தைரியம் இல்லை !! தற்கொலைக்கு எங்கே தெகுரியம் வருது!!!) தவிர்த்துப் புன்னகையுடன், புத்துணர்ச்சியுடன் 2 degree வாங்க முடிந்தது. அந்தக் காதலியையே நினைச்சு தண்ணி, தம்மடிச்சா - பிரச்சினைதான்.

(ஏன் இப்படி சொந்தக் காதல் கதையைச் சொல்றேன்னு நினைக்கிறீங்களா? தொடர்ந்து படிங்க. கடைசியில் ஒரு today's special இருக்கு இல்லே - அங்கே தெரிஞ்சுடும்)

சரி என் கதையை இத்துடன் முடித்து பதிவைத் தொடர்கிறேன்.

http://www.osalt.com/ னு ஒரு இணையத்தளம் இருக்குங்க. அங்கே வாங்க. எந்தெந்த வணிக ரீதியிலான மென்பொருள் பயன்பாடுகள் (commercial software applications) இருக்கோ, அவற்றிற்கு மாற்று ஏற்பாடான மென்பொருட்களை அறியத் தருகிறார்கள் (open source software alternatives).

உதாரணமாக Microsoft Visual Studio 2005 இதை எடுத்துக்கொள்வோம். இது வணிக அடிப்படையிலான மென்பொருள். இந்த மைக்ரோசாப்ட் கீறாங்களே அவிங்க தயாரிச்சது.

இதற்கான மாற்றுப் பயன்பாடுகள் என்னென்ன - இலவச திறந்தநிலை நிரல் கொண்ட (open source) மென்பொருள் ஏதும் இருக்கா? http://www.osalt.com/visual-studio இதை அழுத்தினால், உடனே சொல்லிடுச்சு.

SharpDevelop, ode::Blocks, MonoDevelop இந்த மூன்றுமே Visual Studio 2005 க்கான மாற்றுப் பயன்பாடுகளாம். முழுக்க முழுக்க இலவசமாம்.

இதெல்லாம் விடுங்க நம்ம தேவை என்ன - ஒரு இலவச ஆண்டி வைரசு (அங்கிள் வைரசு இல்லையோ!)

Kaspersky Anti-Virus இதுக்கு மாற்று மென்பொருள் - இலவசமாக கிடைக்குதா? ஓப்பன் சோர்சா இருக்கணுங்க. http://www.osalt.com/kaspersky-antivirus இங்கே பார்த்தால் ClamWin, Clam AntiVirus, Winpooch இதெல்லாம் இருக்காம்.

எல்லாம் நம்ம நல்லதுக்காகத்தான் கொடுத்துருக்காங்க. திருட்டு மென்பொருளே வேண்டாம். Rapidshare பக்கமே போக வேண்டாம். இப்படி இலவச, மாற்று மென்பொருட்கள் இருக்கும்போது இன்னாத்துக்கு அதுக?

ஒவ்வொரு மென்பொருளுக்கும் மாற்றுப் பயன்பாடுகளை அறிவதற்காக 3 தளங்களை இங்கே தருகிறேன். எல்லாம் நன்மைக்கே.

http://www.osalt.com/
http://alternativeto.net/
http://osliving.com/index.php




இன்று ஏப்ரல் 27 மோர்ஸ் பிறந்த நாள். அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வழமை போல விக்கிபீடியாவை நாடவும். நம்ம விசயத்துக்கு வருவோம். இன்றையப் பதிவில் love பத்தி ஒரு flashback பார்த்தோம்ல. அந்த விசயம்.

மோர்ஸ் கோடின் வழியாக ’நான் உன்னைக் காதலிக்கிறேன்?’
இதை எப்படிச் சொல்வது?
What is 'I Love You' in Morse Code?

..//.-../---/...-/.//-.--/---/..-/

இதுதான் அந்த code.

http://www.peters1.dk/webtools/conversion.php?sprog=en
இங்கே சென்று பாருங்க. எந்த ஆங்கில வரிகளைக் கொடுத்தாலும், அவற்றிற்குச் சமமான Morse Code ஐப் பெறலாம்.

ஒளியோவியம் :
பெங்களூரை வைச்சுக் காமெடி - கீமெடி பண்ணாமல் இருந்தால் எப்படி?
Traffic from Silk Board TO Electronic City Cartoon [ Traffic in Bangalore - Cartoon ]

எந்த ஒரு பயன்பாட்டிற்கும் தட்டச்சுக் குறுக்கு வழிகள்



http://www.keyxl.com/ ஒரே தளத்தில் அனைத்து விதமான பயன்பாடுகளின் தட்டச்சுக் குறுக்கு வழிகளை அறிந்திடலாம்.

ஒரு மிகப்பெரிய தரவுத்தளத்தில் (database) இயங்குதள (desktop applications), இணையதளப் பயன்பாடுகள் (web applications) ஆகியவற்றிற்கான தட்டச்சுக் குறுக்குவழிகளை அறியத் தருகிறார்கள்.

ஜிமெயில், உலவி, மின்னஞ்சல், புகைப்பட வரைகலை, எம்பி3, எச்டிஎம்.எல் என பலவிதப் பயன்பாடுகள் - இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

வேறுவேறு இயங்குதளங்களுக்கான எண்ணற்ற பயன்பாடுகளின் keyboard short cut keys ஐ அறிந்திடலாம். வேறு எங்கும் தேடத் தேவையில்லை.

உலவி / இணையம், வணிகம் / உற்பத்தித் திறன் மேம்படுத்துதல் (productivity), தகவல் தொடர்பு, மின்னஞ்சல், வரைகலை (graphics) என அனைத்துத் துறைகளுக்கான ஏராளமான மென்பொருட்களுக்கான தட்டச்சுக் குறுக்குவழிகள் இங்கே கொட்டிக் குவிக்கப்பட்டுள்ளன.

இந்தத்தளத்தில் உங்களுக்குத் தேவையான மென்பொருளின் short cut keys (குறுக்குவழிச் சாவிகள்) இல்லை என நீங்கள் நினைத்தால், அவர்களிடம் ‘எனக்கு இது வேண்டும்’ என வேண்டுதல் விண்ணப்பமிட்டால் (request) உங்களுக்காக அவர்கள் அந்த புதிய மென்பொருளுக்கான சேவையையையும் தளத்தில் இணைப்பார்கள்.

அங்கே இல்லாத பயன்பாட்டின் குறுக்குவழிச்சாவிகள் உங்களிடம் இருந்தால் அவற்றை நீங்கள், அந்த தளத்தில் சமர்ப்பிக்கலாம் (submit).

Microsoft,Adobe,Google,Web Browsers,Email programs,Photo/Imaging,MP3,HTML Editors என ஏராளமான பயன்பாடுகளின் குறுக்குவழிச்சாவிகளை அறிந்திட நீங்கள் நாடவேண்டிய

ஆஸ்கி எனப்படும் ASCII க்கான short cut keys ஐயும் அறிந்திடலாம்.

தேடும் வசதியும் உங்களுக்காக அங்கே கொடுத்திருக்கிறார்கள். ஒருமுறையாவது அங்கே சென்று பாருங்கள்.

இணையதள முகவரி : http://www.keyxl.com/



Do you want to Write Upside Down?
வாசகங்களை தலைகீழாக எழுதுவதற்கு



http://fliptitle.com/ இந்த தளத்தில் மேலே உள்ள டெக்ஸ்ட்பாக்சில் நீங்கள் தட்டெழுதும்போதே, எழுதிய வாசகங்கள் தலைகீழாகக் கிடைக்கும். கடினமான கடவுச்சொற்களை (strong password) உருவாக்க இந்த தலைகீழ் முறை பயன்படுகிறது என்பது ஒரு கூடுதல் செய்தி. நண்பர்களிடம் நீங்கள் தலைகீழாக எழுதி ஆச்சரியமூட்டலாம்.

ஒரு உதாரணம் கீழே :
தமிழ்நெஞ்சம் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது -
இதை ஆங்கிலத்தில்
தலைகீழாக எழுதியுள்ளேன்.

ƃɹo˙ɯɐɾuǝulıɯɐʇ˙ʍʍʍʍ//:dʇʇɥ oʇ ǝɯoɔlǝʍ ɯɹɐʍ

வீடியோ கோப்பு வடிவை மாற்ற 5 இலவச மென்பொருட்கள்



ஒவ்வொரு இணைஞரிடமும் மேசைக்கணினி (desktop), மடிக்கணினி (laptop), செல்பேசி, கையடக்க இசைக்கருவி(hand held), எம்பி3 இசைப்பான் என நவீனத்துவத்தைக் காண நேரிடுகிறது. காதில் மாட்டிக்கொண்டி திரிகிறார்கள். இசைப்பைத்தியம் பிடித்து அலைகிறார்கள். (நானும் இப்படித்தான்!).

ஒவ்வொரு கருவிகளுக்கும் தனிப்பட்ட கோப்பு வடிவங்கள் (file formats). ஒன்றை ஒன்று எதிர்க்கின்ற (incompatible) வகையில் அமைந்திருக்கும் கோப்பு வடிவங்கள்.

இந்தக் கருவியில் இயங்கக்கூடிய கோப்பானது வேறு கருவியில் ஒத்திசையாமல் போகிறது. கணினியில் காண இயலும் காணொளியை, கையடக்கக் கருவியில் காண ஏதேதோ தகிடுதத்தம் செய்ய வேண்டி இருக்கிறது.

ஒரு கருவியில் பார்த்த காணொளியை அடுத்த கருவியில் காண வைப்பதற்கு ஏகப்பட்ட க்ராக்கிங் தளங்களையெல்லாம் நாட வேண்டியிருக்கும். அத்துடன் வைரசு (virus) போன்ற வியாதிகளையும் இலவசமாக வாங்க வேண்டி இருக்கும்.

ஏன் இந்தக் கொலை வெறி?

ஏராளமான காணொளிகளுக்கான கோப்பு வடிவங்களால் (Video file types) வந்த பிரச்சினையே இவை. ஒன்றையொன்று அனுசரித்துப்போகாத வடிவங்கள்.


இதில் இருந்து சமாளித்து எல்லாக் கருவிகளிலும் நமது காணொளிகளை இயக்கி மகிழ என்ன வழி?

எந்த கேடுவிளைவிக்கும் க்ரேக்கிங் தளத்திற்கும் செல்லாதீர்கள். கீழ்க்கண்ட தளங்களில் கிடைக்கும் அருமையான இலவச மென்பொருட்களைப் பயன்படுத்துங்கள். பயன்படுத்துவதற்கு எளிமையானதாக இருக்கும் அதே வேளையில் அற்புதமான செயல்திறமை கொண்ட மென்பொருட்கள் இவை.

1) Quick Media Converter [ http://www.cocoonsoftware.com/ ]

மிகத் திறமையான இலவச மென்பொருள். இதன் மூலம் FLV, AVI, DIVX, XVID, MPEG 1-4, iPod/iPhone, Real Media, and M4A ஆகிய கோப்புகளைக் கையாலும் திறன் கொண்டது.


2) Super Video Converter [ http://www.erightsoft.net/S6Kg1.html ]

3GP and 3G2 for mobile phones, ASF, DIVX AVI, MOV, MPEG, flash video, real media, PSP video கோப்புகளை மாற்றித்தரும் இயல்புடையது.

3) Any Video Converter [ http://www.any-video-converter.com/products/for_video_free/ ]

மிக எளிமையான முகப்புடன் வருகிறது. யாரும் இயக்கலாம் - எந்தச் சிக்கலும் இல்லாதது.

4) MediaCoder [ http://mediacoder.sourceforge.net/ ]

இதன் நிரலானது இலவசமாகக் கொடுக்கப்படும் Open Source வகையைச் சேர்ந்தது. ஏராளமான கோப்பு வகைகளுடன் அனுசரனை உள்ளது. நாளை ஏதேனும் புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான update ஐயும் இவர்கள் தருவார்கள் என்பது சிறப்பம்சம்

வேறெந்த மற்ற மாற்றிகளிடம் காணாத சிறப்பம்சங்களான Video Compression, வீடியோவில் இருந்து ஒலியை மட்டும் பிரித்தெடுத்தல், கெட்டுப்போன கோப்புகளை சரிசெய்யும் வசதி - இவையெல்லாம் உண்டு.

5) Format Factory [ http://www.formatoz.com/ ]

PSP, iPhone இன்னும் பல வீடியோ வகைகளுடன் இயங்க வல்லது.



Search Out Famous People Died At Younger Age
சிறுவயதில் இறந்து போன புகழ்பெற்ற சாதனையாளர்கள்

DeadAtYourAge [ http://dead.atyourage.com/ ] தளத்தில் உங்கள் பிறந்த தேதியை உள்ளீடு செய்யவும்.

உங்கள் வயதுடன் ஒப்பிட்டு தற்போது உயிருடன் இல்லாத, இறந்து போன உலக சாதனையாளர்களின் செயல்களைப் பட்டியலிடுகிறார்கள். எல்லாம் Database தான்.


ஒளிக்களஞ்சியம்: கர்நாடக இசைக்கான தேடுபொறி - லிம்கா விருது பெற்ற குழந்தை வடிவில்

இணையத்தில் திருட்டு - ஒரு ஆய்வு



டோரண்ட் (Torrent) பற்றித் தெரிந்திருப்பீர்கள். ஒரு மெகாக் கோப்பு - அதை அனைவரும் ஒரே நேரத்தில் பகிர்ந்து, தனக்கும் பெற்றுப் பிறருக்கும் வழங்கும் செய்கையே - Torrent

உதாரணமாக 3.3 GB அளவுள்ள Visual Studio 2008 ன் ஒரிஜினல் DVD என வைத்துக்கொள்வோம். (ஒரு உதாரணத்துக்காக) அதை Torrent ஆக மாற்றிவிடுவார்கள்

டோரண்ட்டாக மாற்றுவதற்கு ஏராளமான பயன்பாடுகள் உள்ளன. டோரண்டாக மாற்றிய பிறகு கிடைக்கும் கோப்பின் கொள்ளளவு வெறும் KB அளவில் இருக்கும்.

இந்த சிறிய KB அளவில் இருக்கும் File ஐ, பைரேட்பே தளத்தில் ஏற்றிவிடுவர். இது போன்ற பல தளங்கள் உள்ளன.

யார் யாருக்கெல்லாம் Visual Studio 2008 ன் ஒரிஜினல் டிவிடி தேவையோ - (அதாவது திருட்டுக் காப்பி - நம்ம ஊர் பாஷையில் சொன்னால் - திருட்டு DVD). அவங்க எல்லோரும் பைரேட்பே தளத்தில் இருந்து அந்த சிறிய KB அளவில் இருக்கும் கோப்பை இறக்கிக்கொள்வர் (Download).

இறக்கிக்கொண்டு - அவர்கள் வசமுள்ள Torrent Client பயன்பாட்டில் இறக்கிய கோப்பினை இணைத்தால் போதும். மீதியை இந்த Torrent Client பயன்பாடே செய்துவிடும்.

ஒரே நேரத்தில் Visual Studio 2008ன் பகுதியை நீங்கள் பல்வேறு நபர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டும், நிறைய நபர்களுக்கு வழங்கிக்கொண்டும் இருப்பீர்கள்.

பல மணி நேரங்கள் கழிந்ததும் (அது உங்கள் இணையத்தின் வேகத்தையும் - உங்கள் பொறுமையையும் பொறுத்தது) முழு Visual Studioவும் உங்கள் கணினியில் இறங்கிவிடும்.

முழுவதும் இறங்கிய பின்னும், நீங்கள் விரும்பினால் தொடர்ந்து அதை பிறருக்கு வழங்கலாம் (seed).

இப்படி Torrent வழியாக கணக்கிலடங்காத original மென்பொருள் பயன்பாடுகளை இலவசமாக பகிர்கிறார்கள். Copyright செய்யப்பட்ட இசை, பாடல், திரைப்படங்கள் அனைத்தின் DVD வடிவங்களை இணையம் மூலம் இலவசமாகப் பகிர்கிறார்கள். இப்படிப் பகிர்வதற்கு உறுதுணையாக இருக்கும் தளங்களில் பைரேட்பே மிகுந்த செல்வாக்கு பெற்றிருக்கிறது.

இதைக் கண்ட Copyright செய்தவர்கள் கொதித்துப்போகி Swedish நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பைரேட்பேயின் உரிமையாளர்கள் 4 பேர்களும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிப்பதுடன், C$4.3 தொகையை அபராதமாகக் கட்ட வேண்டும் (Warner Bros, Sony Music Entertainment, EMI and Columbia Pictures ஆகியோர்க்கான நஷ்ட ஈடு) என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இசை,பாடல்கள், படங்கள், கணினி விளையாட்டுகள் ஆகியவற்றை இலவசமாகப் பகிர்வது என்பது காப்பிரைட்டை மீறிய நடவடிக்கை. இது சட்டத்திற்கு எதிரானது. ஆனால் இன்னும் இந்தத் தளம் புழக்கத்தில் தான் உள்ளது.

இது குறித்து மேலும் தகவல் அறிய : http://technology.canoe.ca/2009/04/17/9145106-ap.html

Disclaimer : Visual Studio 2008 என்று இங்கே ஒரு உதாரணத்துக்காக மட்டுமே கொடுத்துள்ளேன். சட்டத்தை மீறுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் - என்பதை உணர்த்தவே இந்தப் பதிவு. மேலும் அந்தத் தளத்தில் Visual Studio 2008ன் ஒரிஜினல் டிவிடியிக்கான Torrent ஐக் கண்டேன். ஏராளமான புதிய தமிழ் திரைப்படங்களின் torrent வடிவையும் அங்கே ஏற்றியிருக்கின்றனர்.

இணையம், கணினி மூலம் எவ்வளவு தூரம் குறுக்கு வழியில் ஏமாற்றினாலும், நீதிமன்றம் Court என இருப்பதனால் காப்பிரைட் செய்தவர்களுக்கு ஓரளவு நிம்மதி. இதைத்தான் நம்ம ஊரில் சொல்லுவாங்க - உப்பைத்தின்னா தண்ணி குடிக்கனும்னு.

இது குறித்த கீழ்க்கண்ட காணொளிகளைக் காணுங்கள்






சுட்டிகள்:
http://www.thepiratebay.org
http://technology.canoe.ca/2009/04/17/9145106-ap.html

அவுட்லுக்கில் இருந்து படங்களை தரவிறக்க 3 வழிகள்



மைக்ரோசாப்ட்டின் அவுட்லுக் என்பது ஒரு மின்னஞ்சல் (e-mail client)சேவைக்கான பயன்பாடு.

உங்களுக்கு மின்னஞ்சல் வந்ததும் நினைவூட்டும் வசதி (reminder), இணைய இணைப்பின்றி (offline) படிக்கும் வசதி என பல வசதிகள் இதில் உள்ளன.

ஆனால் மின்னஞ்சலில் வந்துள்ள படங்களை மட்டும் தனியாகத் தரவிறக்கி வேறிடத்தில் பதிந்திட இதில் நேரடி வழியில்லை.

படங்களை தனியாகத் தரவிறக்க உள்ள சில வழிகள்

How can I save Particular Image from an Outlook Email?

1) அந்தந்தப் படங்களின் மேலே வைத்து வலது சொடுக்கி, பிறகு அதை க்ளிப்போர்டுக்குக் (clipboard) கொண்டு சென்று, பெய்ண்ட்ப்ரஷ் (Paint Brush) போன்ற ஏதேனும் பயன்பாட்டில் பேஸ்ட் (paste) செய்து அங்கே ஒரு கோப்பு பெயர் கொடுத்து பதிய வேண்டியிருக்கும். (என்ன ஒரு சுற்று வழி!)

2)அவுட்லுக்கில் இருந்தபடி வந்த மின்னஞ்சலை HTML கோப்பாகப் பதியவும் (File -- Save As -- Web Page) இப்படிச் செய்வதனால், படங்கள் எல்லாம் தனியாக ஒரு ஃபோல்டரில் பதிவாகும். வன்வட்டில் அந்தக் குறிப்பிட்ட ஃபோல்டரில் சென்று எல்லாப் படங்களையும் நொடியினில் பெறலாம்.

மின்னஞ்சலில் ஏராளமான படங்கள் இருந்தால் இந்த வழிமுறையே ஏற்புடையது.

3) Actions மெனுவில் View in Browser ஐத் தேர்ந்தெடுக்கவும். இப்படிச் செய்வதால், உங்களுக்கு வந்த மின்னஞ்சலானது தனியாக உலவியில் காட்சியளிக்கும். அதில் HTML இணையப்பக்கமாகவே இருப்பதால், படத்தின் மேலே வலது சொடுக்கி (Right click), பெயர் கொடுத்து படங்களைப் பதிந்திடலாம். (இந்த முறை ஆபீஸ் 2007ல் உள்ளது)


ஒளிக்களஞ்சியம் :
இணையம் தோன்றிய வரலாறு - அற்புத வீடியோ - காணொளி

குறிப்பு:
2009ம் ஆண்டில் 12 ராசிகளுக்கான பலன்கள் - மென்புத்தகமாக - வேண்டுமென்போர் இறக்கிக்கொள்க

இணையத்தில் புகுந்து புறப்பட 10+ மென்நூல்கள்



இணையத்தில் புகுந்து புறப்பட - 10+ மென்நூல்கள் - இலவசமாகவே.


கூகிளுடன் விளையாட - 55 வழிகள்

விசுவல் பேசிக் 2008 எக்ஸ்ப்ரஸ் - Visual Basic 2008 Express

விண்டோஸ் சிறுதொழில் நிறுவனங்களுக்கான சர்வர் 2008 - Windows Small Business Server 2008

சி# 2008 - படவிளக்கங்களுடன் - Illustrated C# 2008

லினக்ஸ் - புதியவர்களுக்காக - Linux Starter Pack

எளிய முறையில் லினக்ஸ்

உபுண்டு - கையடக்க நூல் - Ubuntu Pocket Guide

விண்டோஸ் விஸ்டா ரெசோர்ஸ் கிட் - Windows Vista Resource Kit

விசுவல் சி# 2008 எக்ஸ்ப்ரஸ் - Visual C# 2008 Express

ஹேக்கிங் பற்றித் தெரிந்துகொள்ள

ரூபி மொழி - கற்றுக்கொள்ள - Ruby


Download Woork Handbook (1.8 MB)

சுட்டிகளைத் தந்து உதவியவர்:
22 வயது இணையப் புயல் திரு. கார்த்திகேயன்




International Country Codes, made simple

ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண் உண்டு. உதாரணமாக இந்தியாவிற்கு 00+91, அமெரிக்காவிற்கு 1. இந்த எண்ணை Country code என்போம். தொலைபேசும்போது இந்த Country code (தேசத்தின் எண்) ஐக் குறிப்பிட வேண்டியது அவசியம்.

எந்த நாட்டிற்கு தொலை பேச விரும்புகிறோமோ, அந்த நாட்டிற்கான எண் யாது என்பதை தெரிந்துகொள்ள http://www.simplecountrycodes.com/ தளத்தை நாடலாம்.

போட்டோஷாப்பில் புகுந்து விளையாட 11 தளங்கள்



அடோபி போட்டோஷாப் (Adobe Photoshop) - இந்தப் பயன்பாடானது புதிதாகப் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்று.

ஏகப்பட்ட menu, கட்டளைகள், தட்டச்சு குறுக்கு வழிகள் (keyboard short cuts) இவையனைத்தும் புதியவர்களை ஒரு வழி செய்துவிடும்.

நன்றாகக் கற்றுக்கொண்ட பின், இந்த photoshop பயன்பாடு என்பது மிகவும் அருமையானதாகவும், எளிமையுடனும் இருப்பதை உணர்வீர்கள்.

இதைக் கற்பதற்காக உள்ள கல்வி கற்கும் பாதை (learning curve) மிகக் கடினமானது.

இணையதளங்கள் (web sites) வழியாக போட்டோஷாப் மென்பொருள் பயன்பாட்டை கற்பது மிக எளிது. படிப்படியாக சொல்லித் தருகிறார்கள். இப்போது என்ன செய்ய வேண்டும்? இதற்கு அடுத்து எதைப் படிக்க வேண்டும் என நல்ல வழிமுறைகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

Adobe Photoshop Tutorial - How to create an Animated gif?



மேலும் இது குறித்த காணொளிகளுக்கு (video) http://www.youtube.com/view_play_list?p=E9806A9DC4A95876 நாடவும். இதுவரை 51 காணொளிகளைப் பதிந்துள்ளனர்.

இதற்காக 11 இணையத்தளங்களை இங்கே தருகிறேன்.

முதல் தளம் தமிழில் அமைந்துள்ளது.

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள் - தொடரை எழுதிக்கொண்டிருப்பவர் திரு. வேலன் அவர்கள்.

மற்ற தளங்கள் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன.

1)You Suck at Photoshop
2)Tutorial9
3)PSDTUTS
4)Good-Tutorials
5)Photoshop Lady
6)Photoshop Tutorials
7)Luxa
8)Photoshop Contest
9)PSHero
10)PSDTop

கணினித் திரையில் மசாலா மணக்கச் செய்ய



விண்டோஸ் இயங்குதளத்தின் ஒரே விதமான திரையை தினசரி பார்த்துப்பார்த்து சலித்துப் போகி இருப்பவர்களே! எப்போது பார்த்தாலும் ஒரே வால்பேப்பர் (wall paper). அதையே பார்த்து போரடிக்கிறதா?

கணினித் திரையின் டெஸ்க்டாப்பில் (desktop) மசாலா மணக்கச் செய்வது எப்படி?

உலகின் மிகப் பிரசித்தமான, புதுமையான, எளிதில் மாற்றியமைக்கக் (easily customizable) கூடிய சில மென்பொருட்கள் உங்களுக்காக இந்த வேலையைச் செய்யும்.

உதாரணமாக கணினித் திரையின் வால்பேப்பரை அதுவே அவ்வப்போது மாற்றும். விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்ட்டா (Windows XP, Vista) பயன்படுத்துபவர்களுக்கு இந்த மென்பொருட்கள் கண்டிப்பாக உதவும்.

யாகூ விஜெட்ஸ் : தட்பவெப்பநிலை, RSS, நாட்காட்டி, நினைவூட்டி (reminder) , கடிகாரம், calculator இன்னும் பல பயன்பாடுகள் உள்ளன.

கூகிள் டெஸ்க்டாப் / கேஜட்ஸ் : உங்கள் கணினியில் உள்ள கோப்புகளைத் தேடித்தரும் வசதி உண்டு. மிக வேகமான முறையில் தேடித்தரும். ஆயிரக்கணக்கான கேஜட்கள் (Gadget) உள்ளன.

வானொலி கேட்பது (online radio), யூட்யூப் (youtube) பார்ப்பது, பண மதிப்பு அறிவது, கிரிக்கெட் ஸ்கோர் அறிவது என இன்னும் இன்னும் - தினமும் புதிய கேஜட்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.

இந்த விஜெட் (widget) /கேஜட்களை இது வரை உபயோகிக்காதவர்கள் குறைந்த பட்சம் ஒருமுறையாவது உபயோகித்துப் பாருங்கள் - மாற்றத்தை உணர்வீர்கள்.

இரண்டு பரிமாண வகையில் அமைந்த டெஸ்க்டாப்பை முப்பரிமாண 3D வடிவில் மாற்றிடலாம். 360 பாகையிலும் உங்கள் desktop ஐ சுற்றி வட்டமடிக்கலாம்.

இது போல இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நீங்களே ஆச்சரியப்படும் அளவில் இத்தனை பயன்பாடுகள் உள்ளன - டெஸ்க்டாப்பை மசாலா மணக்கச் செய்வதற்கு.

மேலும் விபரங்களுக்கு இந்தக் காணொளிகளைப் (Video) பார்க்கவும்.







சுட்டிகள் கீழே:
1. Yahoo Widgets
2. Google Desktop/Gadgets
3. Klipfolio
4. Samurize
5. Rainmeter
6. Real Desktop
7. Dream Scene for XP or Animated Desktop for Vista (or XP)
8. Desktoptopia
9. John’s Background Switcher
10. Wallpaper Shifter
11. 360 Desktop
12. DeskHedron

குறிப்பு : நெடுநாட்களாக ஒரு ஒழுங்கான blog template ஐப் பயன்படுத்தாமல் மாற்றி மாற்றிக்கொண்டே இருந்தேன். இப்போது இந்த வலைப்பூவின் template ஐ மாற்றி வண்ணம் தீட்டியுள்ளேன். இது குறித்து உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

மாத்தி யோசி!


கணினி, இணையம் - இரண்டும் வந்தபின் உலகில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மாற்றம் ஒன்றே நிரந்தரம் என்று கூறுவர். இணையத்தில் அடிக்கடி உச்சரிக்கப்படும் சொல் - மாத்தி யோசி.

இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் ஒரு பாடலில் ‘மாத்தியோசி’ - Think differently என்று ஒரு வரி வரும். கணினி உலகில் அதுவே தாரக மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விண்டோஸ் இயங்குதளத்திற்கே (Windows Operating System) ஒரு மாற்றாக மாத்தி யோசித்ததின் பயனாக நமக்குக் கிடைத்தது - உபுண்டு(ubuntu).

ஒவ்வொரு விண்டோசின் பயன்பாட்டிற்கும் அவற்றைவிட பலமடங்கு சக்தியும், திறனும் கொண்ட ஏராளமான மாற்று இலவசப் பயன்பாடுகள் இணையத்தில் கிடைக்கின்றன. மாத்தியோசித்ததன் விளைவே இது.

இப்படி ஒவ்வொறு மென்பொருளுக்கும் வேறு ஒரு பதிலியைப் பயன்படுத்தி மாத்தியோசித்ததை வெற்றிபெறச் செய்யலாம்.


அல்லது https://shipit.ubuntu.com/ இந்த முகவரியில் உங்கள் முகவரியைப் பதிந்தால் உங்கள் வீடுதேடி உபுண்டு லினக்ஸ் (Ubuntu Linux)ன் இலவச சிடி அனுப்பி வைக்கப்படும்.

பதிவு மிகவும் நீளமாக உள்ளதால் ஒரு சிறிய இடைவெளி. சில வித்தியாசமான தளங்களின் முகவரிகளைத் தருகிறேன். இந்தத் தளங்களை உலவிப் பாருங்கள்.

1) http://www.antipodr.com/?addr=singapore&x=0&y=0
இங்கே நாம் வசிக்கும் இடத்தின் பெயரை உள்ளிட்டால், அப்பகுதியின் நேர் எதிர் பக்கத்தில் எந்த இடம் இருக்கிறது என்பதை படம் வரைந்து காண்பிக்கிறது. நான் கொடுத்துப் பார்த்த பகுதிகளின் எதிர்ப்பகுதிகள் எல்லாமே கடல்பகுதிகளாக அமைந்துள்ளன. நீங்கள் முயற்சித்துச் சொல்லுங்கள்.

2) http://caseconverter.com/
ஆங்கிலப் பத்திகளை (paragraph) இந்தத் தளத்தில் உள்ளிட்டால், தளமானது பெரிய எழுத்து, சிறிய எழுத்து என பல விதங்களில் பத்தியை மாற்றித் தருகிறது. எளிய ஜாவாஸ்க்ரிப்ட் (javascript)ஐப் பயன்படுத்தியிருப்பார்கள்.

3) http://scanner.novirusthanks.org/ உங்களிடம் உள்ள ஏதேனும் கோப்பு (file) ஒன்றில் வைரசு இருக்குமோ எனச் சந்தேகித்தால், அந்தக் கோப்பினை இங்கே ஏற்றிப் பாருங்கள். வைரசு (virus)இருக்கா? இல்லையா என்பதை புள்ளிவிவரத்துடன் காண்பிக்கிறது இந்தத் தளம். பல்வேறு ஆண்டிவைரசுகளால் (antivirus) உங்களால் ஏற்றப்பட்ட கோப்பானது சோதிக்கப்பட்டு இறுதி அறிக்கை வெளியிடப்படும்.

4) http://www.text-image.com/convert/
உங்கள் புகைப்படத்தை இந்தத் தளத்தில் ஏற்றினால் அந்தப் படத்தை 0,1 எனப்படும் இரண்டடிமான (binary) எண்களாலோ, ஆஸ்கி (ASCII) வடிவிலோ மாற்றிக் கொடுக்கும். வித்தியாசமான தளம் இது.

5) http://www.oneplusyou.com/bb/death
என் பிறந்த நாளில் யார் யாரெல்லாம் இறந்து போயினர்? பிறந்த மாதம்,தேதி,வருடம் முதலியவற்றை உள்ளீடு செய்தால், எத்தனை பேர் என்னுடைய பிறந்த நாளில் இறந்து போனார்கள்?, வழக்கத்துக்கு மாறாக, இயற்கை மரணம் முதலியவற்றால் எத்தனை பேர் இறந்தார்கள்? என்பன போன்ற தகவல்களைப் பெறலாம்.

பதிவைத் தொடர்கிறேன்.

என்ன இருந்தாலும், எத்தனை இலவச உபுண்டுகள் வந்தாலும் இன்னும் Windows ஐ விட்டு மாறாமல் இருப்பவர்கள் அதிகம்.

அவர்கள் பயன்படுத்தும் Windows Vista, Windows XP இவற்றில் இருக்கும் ஒருங்கிணைந்த (integrated) Start menu, Windows Explorer, Notepad, MS Paint போன்ற பயன்பாடுகளை மட்டுமாவது மாத்தியோசிக்க முயலலாம்.

அதாவது வழக்கமாக இயக்கி வந்த விண்டோசில் இருக்கும் பயன்பாடுகளை விட்டுவிட்டு, அதற்குறிய மாற்றுப்பயன்பாடுகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

Alternatives to Windows applications

விண்டோசின் Start menu - இதற்கான மாற்றுப் பயன்பாடுகள்

http://www.vistastartmenu.com/index.html

http://www.codesector.com/jetstart.php

http://www.sciactive.com/main/shell-enhancements/26-open-menu-156


விண்டோஸின் taskbar க்கான மாற்றுப் பயன்பாடுகள்

http://rocketdock.com/

http://oxyx.oxygen-inc.com/

http://www.stardock.com/products/ObjectDock/downloads.asp

விண்டோசின் explorer க்கான மாற்றுப் பயன்பாடுகள்

http://www.explorerxp.com/

http://www.zabkat.com/x2lite.htm

http://download.cnet.com/Q-Dir/3000-2248_4-10834271.html


http://guti.webcindario.com/static.php?page=XPlorer

http://www.freecommander.com/fc_shots_en.htm

http://www.primitus.us/a43/

http://www.mustangpeak.net/ultraexplorer.html

விண்டோசின் taskmanager க்கான மாற்றுப் பயன்பாடுகள்

http://technet.microsoft.com/en-us/sysinternals/bb896653.aspx

http://mkn-taskexplorer.en.softonic.com/

http://www.codeproject.com/KB/system/Task_Manager_Extension/TaskManagerEx_2_1_sources.zip

விண்டோசில் அன்றாடம் பயன்படுத்தும் Notepad க்கான மாற்றுப் பயன்பாடுகள்

http://notepad-plus.sourceforge.net/uk/site.htm


http://www.flos-freeware.ch/notepad2.html

http://www.pnotepad.org/


http://www.pspad.com/

http://liquidninja.com/metapad/

http://www.gammadyne.com/docpad.htm


http://jsimlo.sk/notepad/

http://akelpad.sourceforge.net/en/index.php

விண்டோசின் Degrament - இதற்கான மாற்றுகள்

http://www.defraggler.com/

http://technet.microsoft.com/hi-in/sysinternals/bb897428(en-us).aspx

http://www.auslogics.com/disk-defrag/index.php

http://www.microsoft.com/technet/sysinternals/FileAndDisk/PageDefrag.mspx


விண்டோசின் RDC - Remote Desktop இதற்கான மாற்றுப் பயன்பாடுகள்

https://secure.logmein.com/home.asp?lang=en

http://www.uvnc.com/

http://www.tightvnc.com/

http://www.crossloop.com/

http://www.teamviewer.com/index.aspx


விண்டோசின் Paint Brush - இதற்கான மாற்றுப் பயன்பாடுகள்

http://www.gimp.org/

http://www.getpaint.net/

http://www.photofiltre.com/

குறிப்பு : ”Think என்பதை கூடவா thing என்று மாற்றி யோசீப்பீர்கள்?” எனப் பிழை திருத்திய அனானிமஸ்க்கு நன்றி. பிழைகள் சரிசெய்யப்பட்டுவிட்டன. பெயருடன் பின்னூட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நான் இத்தனை லின்க்குகளும் சரியாக இயங்குகிறதா என்பதிலேயே நேரத்தைச் செலவழித்துவிட்டேன். மேலும் 6 முறை மின்சாரத்தடை ஏற்பட்டது. இப்போது தவறு சரிசெய்யப்பட்டு விட்டது நண்பர் அனானிமஸ் அவர்களே!

கண்ணுக்குக் குளிர்ச்சியான கணினித்திரையைப் பெற


நள்ளிரவு வரை கணினியே கதியென்று இருப்பவர்கள் தங்களது கண்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, கணினித்திரையின் ஒளியின் அளவை அவ்வப்போது கூட்டி / குறைக்கும் வழக்கமுடையவர்களாக இருப்போம்.

Contrast, Brightness என்று சொல்வார்கள். அந்த விசைகளை கணினித் திரையான LCD / CRT Monitor ல் அவ்வப்போது சரிசெய்வோம்.

பல நேரங்களில் வேலையின் ஆதிக்கத்தில் மெய்மறந்து கண் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? இந்த நிரலை எப்படியாவது எழுதிவிட வேண்டுமென்று கூகிளைத் துணைக்கு அழைத்து போராட்டத்தைத் தொடர்வோம்.

இப்படி சதா சர்வகாலமும் கணினியுடன் போராடும், மிகுந்த வேலைப்பளுவில் (stress) இருப்பவர்களின் கண்களைப் பாதுகாப்பதற்கு ஒரு எளிய மென்பொருள் உள்ளது.


இந்த மென்பொருளின் பெயர் F.lux

பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளிச்ச அமைப்பானது ஒவ்வொரு நாட்டுக்கும், நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடும். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி நேர வித்தியாசங்கள் - சூரிய உதயம் / அஸ்தமனம் இருக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளை இயக்கி, நாம் எங்கே வசிக்கிறோம் - நமது இருப்பிடத்தின் latitude, மற்றும் longitude ஆகியவற்றின் மதிப்பைக் கொடுத்தால் தானியங்கித்தனமாக நமது கணினித் திரையின் ஒளியின் அளவை இந்த மென்பொருள் அவ்வப்போது மாற்றிவிடும். நமது கண்களையும் பாதுகாக்கும்.

உங்களது இருப்பிடத்திற்கான latitude, மற்றும் longitude ன் மதிப்பு தெரியவில்லை எனில், http://stereopsis.com/flux/map.html தளத்தை நாடவும். அங்கே உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல்களைக் கொடுக்கவும். அந்த தளம் கொடுக்கும் மதிப்புகளை F.lux பயன்பாட்டில் ஒட்டவும் (paste).

முதன் முதலில் இந்த பயன்பாட்டை இயக்கும்போது கண்களுக்குப் பழக்கமில்லாத ஒரு அந்நியத்தன்மை இருக்கும். ஆனால் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தால் வித்தியாசத்தை உணரலாம்.

மேலும் விபரங்களுக்கும், மென்பொருள் தரவிறக்கத்துக்கும் இந்தச் சுட்டியை அழுத்தவும் : http://www.stereopsis.com/flux/

பெங்களூர் 2 சத்யம் சினிமாஸ், சென்னை


இந்தியாவில் தரைவழிப் போக்குவரத்துக்கான வழித்தடங்களை அறிவதற்கு கூகிள் மேப் தளத்தை நாடலாம்.

உதாரணமாக பெங்களூர், இந்திராநகரில் இருந்து சத்யம் சினிமாஸ், சென்னைக்கு காரில் செல்வதற்கான வழித்தடத்தை கூகிள் மேப் வழியாகக் காண்பது எவ்வாறு? (A - Source, B- Destination)

How to Get Directions on Google Maps

1) http://maps.google.com/ தளத்தைத் திறந்து கொள்ளவும்.

2) இடதுபுறம் Get Directions லிங்கை அழுத்தவும்

3) A - பகுதியில் Bangalore, Indiranagar கொடுக்கவும்.

4) B - பகுதியில் Sathyam Cinemas, Chennai தட்டெழுதவும்.

5) Get Directions பட்டனை அழுத்தவும்

6) Did you mean என்கிற பகுதியில் முதலில் இருக்கும் 1. Sathyam Cinema என்பதைத் தெரிவு செய்க.

7) உங்கள் கணினித் திரையில் வழித்தடத்திற்கான பாதை தெளிவாகக் காட்சியளிப்பதுடன், இடதுபுறம் உள்ள Driving Directions To Sathyam cinema பகுதியில் 10 படிநிலைகளில் ஒவ்வொரு படியாக எங்கே சென்று, எப்படித் திரும்ப வேண்டும் என்பதெல்லாம் விளக்கமாகக் காட்சியளிக்கும்.


8) ஒவ்வொரு திசையிலும் எவ்வளவு தூரம் பயணம் செய்யவேண்டியுள்ளது என்பதை அறியலாம்.


9) உதாரணமாக பெங்களூர், இந்திராநகரில் இருந்து சத்யம் சினிமாஸ், சென்னைக்குச் செல்வதற்கு 5 மணி நேரம் 39 நிமிடம் ஆகலாம், 325 கிலோமீட்டர் தொலைவு பயணப்பட வேண்டியிருக்கும் என புள்ளி விவரத்தையும் Google Maps தெரிவிக்கிறது.

மேலும் விபரங்களுக்கு இந்த காணொளியை (video) பார்க்கவும்.



குறிப்பு :
ரொம்பவே தமிழ் படுத்திப் படுத்தீட்டங்க. கொஞ்சம் ஆங்கிலம் கலந்து எழுதி இருக்கலாம். குறிப்பாக கலைச்சொற்கள் பயன்படுத்தும்போது புரியமாட்டேங்குது. என நண்பர் க்ருஷ் முந்தைய பதிவான ’எங்கிருந்தும் இயக்க - இலவச இணைய இயங்குதளம்’ ல் பின்னூட்டியிருந்தார்.

அவரது ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் வண்ணம் - நிறைய இடங்களில் ஆங்கிலப்பதத்தை அப்படியே தெளித்திருக்கிறேன். இந்தப் பதிவுக்கு க்ருஷ் எப்படிப் பின்னூட்டுகிறார் என்பதை பார்ப்போம்.

மேலும் கடந்த பதிவானது, அளவுக்கு அதிகமாக நீண்டுவிட்டது. அதைப் படித்த அன்புடன் அருணா அவர்கள் - பாதியிலேயே எஸ்கேப்பாகிட்டாங்க. அதனால் இந்தப் பதிவில் இடையிடையே படங்களைப் போட்டு நீண்ட பதிவை சின்னதாக்கிட்டேன்.

ஆனந்த அதிர்ச்சி :
இந்தப் பதிவு இன்றைய இளமை விகடனில் Good Blogs பகுதியில் தேர்வாகி உள்ளது. விகடனார்க்கு நன்றி.

எங்கிருந்தும் இயக்க - இலவச இணைய இயங்குதளம்


எந்த ஒரு இயங்குதளத்தையும் நமது கணினியில் நிறுவிய பிறகே இயக்கிப் பார்க்க இயலும். உதாரணமாக விண்டோஸ், லினக்ஸ், ஆப்பிள் மேக் போன்றவை.

ஒரு புதிய இணைய இயங்குதளமான iCloud பற்றி இங்கே காண்போம். இது ஒரு ஆன்லைன் இயங்குதளம் என்பதை வாசகர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.


iCloud ஐ உங்கள் கணினியின் உலவியில் இருந்தபடியே இயக்கலாம். தனியாக வேறு எந்த மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பமான RIA வின் சாதனை இது.

இது ஒரு இலவச இணைய இயங்குதளம். இதற்கு iCloud Web Operating System (இணைய இயங்குதளம்) என்று பெயர். விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 ஆகியவற்றைப் போன்ற பணிச்சூழல் கொண்டுள்ளது.

வீட்டுக்கணினியை அலுவலகத்தில் இயக்க வேண்டும் என்றால் அதற்காக டீம்வியூவர் முதலிய மென்பொருட்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இரண்டு கணினிகளும் இணைப்பில் இருந்தால்தான் டீம்வியூவரைப் பயன்படுத்த இயலும்.

ஆனால் இந்த iCloud என்கிற இணைய இயங்குதளத்தை நீங்கள் உலகின் எந்த ஒரு இடத்தில் இருந்தும் உலவியின் மூலம் ஓட்டிப் பார்க்கலாம்.

வழமையான அலுவலகப் பயன்பாடுகளில் உள்ள பிரச்சினை என்னவெனில், குறிப்பிட்ட கோப்பு ஒன்றை அதற்காக உள்ள பிரத்தியேகப் பயன்பாட்டின் மூலமே திறக்க இயலும்.

லினக்ஸ் வழியாக உருவாக்கிய குறிப்பிட்ட கோப்பினை, விண்டோஸிலோ, ஆப்பிள் மேக்கிலோ திறந்து பார்க்க வேண்டும் என்றால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

ஒவ்வொரு இயங்குதளமும், ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருப்பதே காரணம். இவற்றிற்கான அலுவலகப் பயன்பாடுகளும் ஒன்றையொன்று எதிரியாகவே பாவிக்கின்றன.

ஆனால் இந்த iCloud என்பது ஒரே இணைய இயங்குதளமாக இருப்பதால் ஓரிடத்தில் உருவாக்கிய கோப்பினை, வேறிடத்தில் எந்தவிதமான சிக்கலுமின்றிப் பெற்றிடலாம்.

இப்போது பீட்டா வடிவில் உள்ளது. மாய இயங்குதளம் என்று இதைக் கூறலாம். இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலவி வழியாக இயக்கலாம். நெருப்பு நரி என்று செல்லமாக அழைக்கப்படும் Firefox உலவி வழியாக இதை இயக்குவதில் உள்ள சிறுசிறு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த iCloudல் நிறையப் பயன்பாடுகள் உள்ளன. படம் பார்க்க, பாட்டுக் கேட்க, யூட்யூப் காணொளிகளைக் காண்பதற்கு என தனித்தனி பயன்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

iCloudல் 50 GB இலவச இடவசதி அளிக்கப்படுகிறது. மின்னஞ்சல், அரட்டை, புகைப்பட எடிட்டர், நாட்காட்டி, விளையாட்டுகள் எனப் பல அம்சங்களையும் உள்ளடக்கியது.

மைக்ரோசாப்ட் வேர்ட் மென்பொருளைப் போன்ற ஒரு அலுவலகப் பயன்பாட்டைத் தன்னகத்தே கொண்டுள்ளது இந்த iCloud. கணினி நிரல்களை எழுதுவதற்கான IDE, மற்றும் XML எடிட்டர் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இது பீட்டா வடிவிலேயே இருந்தாலும் தெளிவான அம்சங்களுடன் விளங்குவதால் எதிர்காலத்தில் கணினி உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. http://icloud.com/en/register இந்தத் தளத்தில் உங்களுக்கான பயனர்கணக்கைத் துவக்கி அதன் மூலமாக உள் நுழைந்து பாருங்கள். ஒரு வித்தியாசத்தை உணர்வீர்கள்.

iCloudக்குப் போட்டியாக eyeOS உள்ளது.

இணையத்திலேயே இயங்குதளம் என்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல் யாதெனில் ஒவ்வொரு உலவியிலும் சிக்கலில்லாமல் பயன்படுத்த வழிவகை செய்வதுதான்.

தள முகவரி : http://icloud.com/en/landing

ஒளிக்களஞ்சியம் : iCloud குறித்த காணொளிகள் - வீடியோக்கள் - பார்வையிட இங்கே சொடுக்கவும்.

கலைச்சொற்கள்:
இயங்குதளம் - Operating System
விண்டோஸ்,லினக்ஸ்,ஆப்பிள் மேக் - Windows, Linux, Apple Mac
இணைய இயங்குதளம் - Web Operating System
உலவி - Web Browser
நிறுவுதல் - Installation
RIA - Rich Internet Application
விண்டோஸ் விஸ்டா - Windows Vista
பணிச்சூழல் - Working Environment
டீம்வியூவர் - Team viewer
அலுவலகப் பயன்பாடு - Office Application like MS word
கோப்பு - File
முரண்பாடு - incompatible
மாய - Virtual
பீட்டா - Beta
இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் - IE - Internet Explorer
காணொளி - Video

நீளமான பதிவு முகவரிகளைப் பெற



பதிவின் முகவரியை இன்னும் பெரிதாக்க

http://www.tinyurl.com, http://snipurl.com முதலிய தளங்களில் நமது பதிவின் முகவரியை (URL) உள்ளிட்டு சிறிய முகவரியாகப் பெற்று அதை twitter முதலிய தளங்களில் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் ட்விட்டரில் 140 எழுத்துகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.

மிக நீளமான பதிவின் முகவரியை, சுட்டியின் முழு நீள முகவரியை அப்படியே சுருக்கி சிறிய முகவரியாக (small URL) மாற்றுவதே இந்தத் தளங்களின் நோக்கம்.

இதை அப்படியே மாற்றி யோசித்துப் பார்ப்போம்.

சுட்டியின் முகவரி மிகச் சிறியதாக இருந்தால் அவற்றை அளவில் பெரிய, நீளமான முகவரியாக மாற்றுவதற்கு என்ன செய்வது?

இப்படிச் செய்வதற்கு ஏதேனும் தளங்கள் உள்ளனவா?

How to Enlarge Your blog post's URL?

http://www.hugeurl.com/ என்கிற தளத்தில் உங்களது சுட்டி முகவரியை / பதிவின் முகவரியை உள்ளிட்டுப் பாருங்கள். அது மிக நீளமான படிக்க இயலாத ஒரு முகவரியைத் தரும். அதை அடுத்த நபருடன் பகிர்வது மிகக் கடினம். முடியவே முடியாது. (இப்படி ஒரு தளம்! - உண்மையிலேயே உக்காந்துதான் யோசிச்சுருக்காங்க)

http://www.longr.us/ இந்தத் தளத்தில் உள்ளிட்டுப் பார்க்கவும். இனம்புரியாத எண்களால் ஆன பதிவின் முகவரியைக் கூட இந்தத் தளமானது நல்ல விளக்கமான முகவரியாக மாற்றித் தருகிறது.

பழைய முகவரி : http://vijaybalajithecitizen.blogspot.com/2009/04/what-is-pc-to-phone-voip.html

புதிய முகவரி:
http://longr.us/vijaybalajithecitizen.blogspot.com/what-is-pc-to-phone-voip

இன்னும் நீளமாக :
http://longr.us/vijaybalajithecitizen.blogspot.com/what-is-pc-to-phone-voip/a-blog-for-technology-sharepoint-c-sql-asp.net-techvideos-fun-news-mail-etc.-labels-get-everything-done-amazing-photos-electronic-commerce-health-care-the-great-asp.net-the-great-sql-the-great-what-is-pc-to-phone-voip-what-…

தொடர்புடைய பதிவு : நீளமான இணைய முகவரிகளைச் சுருக்குவது எப்படி?

ஒன்பது கிரகங்களிலும் உங்கள் வயது,எடையை அறிவதற்கு


Animated Revolution - Earth

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. ஒவ்வொரு கிரகங்களுக்கும் அவற்றிற்கான நீள்வட்டப்பாதை (axis) உண்டு. அவையனைத்தும் அந்தப் பாதையில் பயணிக்கின்றன.

பூமியானது (Earth) தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வருவதற்கு (Revolution) தேவைப்படும் கால அவகாசத்தை ஒரு நாள் என்கிறோம். சூரியனை(Sun) ஒரு முறை வலம் வருவதற்குத் தேவைப்படும் காலத்தை ஒரு முழு வருடம் என்கிறோம்.

அதே கணக்கின்படி பார்த்தால் வியாழன் (Jupiter) கிரகமானது தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 10 மணி நேரமும், சூரியனைச் சுற்றுவதற்கு 243 நாட்களும் ஆகின்றது.

ப்ளூட்டோ ( Pluto) கிரகமானது சூரியனைச் சுற்றும் கால அவகாசம் 248.59 ஆண்டுகள்.

ஒவ்வொரு கிரகங்களிலும் நமது வயது என்னவாக இருக்கும்?
Your Age on other worlds

Age Calculation

இதைக் கண்டறிவதற்கு http://www.exploratorium.edu/ronh/age/ தளத்தைத் திறந்து, அங்கே உங்கள் பிறந்த தேதியை உள்ளிட்டு Calculate அழுத்தினால் இது வரையில்,
1) எத்தனை நாட்கள் வாழ்ந்திருக்கிறோம்,
2) எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்,
3) அடுத்த பிறந்த நாள் எப்போது வரவிருக்கிறது என்பனவற்றை ஒவ்வொரு கிரகங்கள் வாரியாக அறியலாம்.

Your Weight On Other Worlds
இதேபோல ஒன்பது கிரகங்களிலும் உங்கள் எடையை அறிய இந்த சுட்டி உதவும். http://www.exploratorium.edu/ronh/weight/index.html

Weight Calculation

தொடர்புடைய பதிவாக நான் கருதுவது :
சாவுற நாள் தெரிஞ்சுட்டா, வாழுற நாள் நரகமாயிடுமா என்ன?

ஒளிக்களஞ்சியம் : இணையற்ற பாடகர் கிருஷ்ணமூர்த்தியின் அற்புதமான பாடல்- சங்கீதஜாதி முல்லை : Airtel Super Singer 2008 -- Krishnamoorthy's Amazing Performance

மைக்ரோசாப்ட் லைவ் தேடுபொறியில் அல்ஜீப்ரா கணக்குகள்


கூகிள் தேடுபொறியைப் பயன்படுத்தி சிறுசிறு கணக்குகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்போம்.

உதாரணமாக 120*32 என உள்ளிட்டால், 120 * 32 = 3840 விடையைத் திரையில் காணலாம்.

ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பதற்கு 1$ in inr என தட்டினால் உடனே, 1 US$ = 49.4804552 Indian rupees என திரையில் மலர்கிறது.

இதெல்லாம் எல்லோரும் அறிந்ததே. இவை சிலருக்குப் புதிய செய்தியாக இருக்கக்கூடும்.

கணிதச் சமன்பாட்டிற்கான விடை காணவும், மாறியின் மதிப்பை அறியவும், அல்ஜீப்ரா கணக்குகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கும் மைக்ரோசாப்டின் லைவ் தேடுபொறியில் ஒரு புதுமையைப் புகுத்தியுள்ளனர். இந்த வசதி கூகிளின் தேடுபொறியில் இல்லை.

உதாரணமாக 3x=18 என உள்ளிட்டேன். 3x=18 : x=6 என திரையில் காண்பித்தது.
x+(x*8)=256 எனக்கொடுத்தால், x+( x*8)=256 : x=28.444444 இப்படி xன் மதிப்பை அறியத் தருகிறது.

ஒவ்வொரு தேடுபொறியும், அவற்றிற்கான சிறப்பியல்புகளைப் பெற்றிருக்கின்றன என்பதை மறுக்க இயலாது.

கலைச்சொற்கள்:
தேடுபொறி - Search Engine
உள்ளீடு - Input
கணிதச் சமன்பாடு - Mathematical Equation
மாறி - Variable
மைக்ரோசாப்டின் லைவ் - Microsoft Live

குறுகிய ஆயுள் கொண்ட மின்னஞ்சல் முகவரிகள்



இணையம் என்னும் கடலில் தினமும் எதையாவது தேடுவதை வழக்கமாகக் கொண்டிருப்போம். குறிப்பிட்ட மென்பொருளைத் தரவிறக்கம் (download) செய்ய முற்படுவோம்.

அந்த மென்பொருளைத் (application) தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி(download link) வேண்டுமென்றாலும், அதைப் பயன்படுத்துவதற்கான குறிச்சொல்லைப்(activation code) பெற வேண்டும் என்றாலும் உங்கள் மின்னஞ்சலை அங்கே உள்ளீடு செய்ய வேண்டி வரும்.

உதாரணமாக Kapersky தளத்திலிருந்து, இணையப் பாதுகாப்பு மென்பொருளைத்(Internet Security) தரவிறக்கம் செய்ய முற்படுவதாகக் கொள்வோம். அங்கே நமது மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டி வரும். ஆனால் ஒவ்வொரு முறை தரவிறக்கம் செய்யும்போதும் நாம் வேறு வேறு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அதை உள்ளிட இயலுமா?

ஏதேனும் இணையக் குழுமங்களில் (Forums) திடீரென்று பார்வையிட உள் நுழைவீர்கள். நுழைவு வாயிலிலேயே உங்களுக்கான உறுப்பினர் பற்றிய தகவல்களைக் (login details) கேட்டு வழி மறிக்கும். அங்கே நமது மின்னஞ்சல் முகவரியைப் பதிந்து நமது ரகசியத் தன்மையை, பெயரை வெளியிட விரும்பாதவர்கள் அதிகம்.

இப்படி ஏதேனும் ஒரு பெயர் தெரியாத, அறிமுகம் இல்லாத தளத்தில் நமது மின்னஞ்சலைப் பதியலாமா? என சந்தேகம் வருவது மனித இயல்பு.

இணையத்தில் பாதுகாப்பான உலவலுக்காக குறுகிய ஆயுள் கொண்ட மின்னஞ்சல் முகவரிகளைப் (Use and Throw Emails) பயன்படுத்தலாம். எவ்வாறு?

அந்த நேரங்களில் எல்லாம் இந்த தற்காலிக மின்னஞ்சல் முகவரி - ஒரு முறை பயன்படுத்தித் தூக்கி எறியும் வகையில் அமைந்த சேவையைப் பயன்படுத்தலாம்.

இச்சேவையைப் பயன்படுத்துவதால் உங்களது மெயில்பாக்ஸானது (Mail Box) தேவையற்ற குப்பை மெயில்களால் (Junk Mails) நிரப்பப்படுவதை தடுத்துவிடலாம்.

இந்த தற்காலிக மின்னஞ்சலில் ஆயுட்காலத்தை 3 முதல் 24 நேரம் வரை எவ்வளவு நேரம் என்பதை நீங்களே தெரிவு செய்யலாம்.

கீழ்க்கண்ட தளங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.

http://www.yopmail.com/en/

http://www.filzmail.com/

http://www.mintemail.com/

http://meltmail.com/

குழந்தைகளுக்கான இலவச இயங்குதளம்




நம் வீட்டுக்கணினிகளில் நமது குழந்தைகளை விளையாட அனுமதிக்கலமா?

ரகசியத் தகவல்கள் அடங்கிய கோப்புகள், ஆவணங்கள் எல்லாவற்றையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இயங்குதளத்தில் குறிப்பாக விண்டோஸ், லினக்ஸ் போன்றவற்றில் பதிந்திருப்போம்.

இதே கணினியை குழந்தைகள் விளையாடுவதற்கு அனுமதித்தால் அவர்களது குறும்புத்தனத்தால் நமது கோப்புகளுக்கு ஏதேனும் ஆபத்து நிகழலாம்.

அவர்களது திறமையை வளர்ப்பதற்காகவும், அச்சமின்றி பாதுகாப்பு உணர்வுடன் கணினியை குழந்தைகள் வசம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியுடன் இருக்க என்ன வழி?

மழலைகளுக்காகவே ஒரு இலவச இயங்குதளம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெயர் Qimo

Qimo மென்பொருள் மிக இலகுவானது. சிடி, பென் டிரைவ் இவற்றில் Qimo வை ஏற்றி பிறகு கணினியில் நிறுவிப் பயன்படுத்தலாம்.

மிகக் குறைந்த திறன் கொண்ட கணினியிலும் நல்ல முறையில் இயங்க வல்லது( 400 MHz மைக்ரோப்ராசசர், 256 MB நினைவகம், 6GB வன்வட்டு )

வழக்கமான கணினித் திரையில் இயங்குதளத்தில் கண் முன் தெரியும் ஐகான்கள் எல்லாவற்றையும் விட இந்த Qimo வில் அளவில் பெரிய ஐகான்களாகத் தெரியும்.

TuxPaint, eToys, Gcompris ஆகிய பயன்பாடுகளை உள்ளடக்கியது.

பழைய மடிக்கணினிகள், ஒன்றுக்கும் உதவாது எனத் தூக்கிப்போடும் நிலையில் உள்ள பழைய கணினிகளில் இந்த Qimo வை நிறுவினால் அவற்றை இன்னும் பல காலம் பயன்படுத்தலாம்.

3 வயது குழந்தைகளும் பயன்படுத்தும் வண்ணம் மிக எளிமையான முகப்பையும்,நிறைய கணினி விளையாட்டுகளையும் உடைய இயங்குதளம் இது. இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்தால் 700 MB அளவுள்ள ஒரு ISO கோப்பாகக் கிடைக்கும்.

அதை ஒரு சிடி / டிவிடியில் எரிக்க வேண்டும். பின்பு அந்த சிடி / டிவிடி வழியாகக் கணினியை பூட் செய்து Qimo வை நிறுவலாம்.

ISO கோப்பினை சிடி / டிவிடியில் ஏற்றுவதற்கு ISO Recorder மென்பொருள் உதவும்.

உங்கள் ரகசியக் கோப்பு, ஆவணங்களை தனி இயங்குதளத்திலும், குழந்தைகளுக்கான பயிற்சிகளை, விளையாட்டுகளை இந்த Qimo விலும் என தனியாகப் பிரித்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் நிகழாது.

மேலும் பழைய கணினிகள் வீட்டில் பயன்படுத்தாது இருப்பின் அதில் இந்த Qimoவை நிறுவி அதை சிறுவர்களிடம் தைரியமாகக் கொடுத்துவிட்டு நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்.

சுட்டி : http://www.qimo4kids.com/


தொடர்புடைய பிற பதிவுகளாக நான் நினைப்பவை:

குழந்தைகளுக்கான இணைய உலவி

வண்ணம் தீட்டி மகிழ ஒரு அருமையான இணையத்தளம் - மழலைகளுக்காகவே

சிறு குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள எளிய நடைமுறை - பத்துக் கட்டளைகள்


கலைச்சொற்கள் :
வீட்டுக்கணினி : Home PC
மடிக்கணினி : Laptop
கோப்புகள் - Files
ஆவணங்கள் - Documents
இயங்குதளம் - Operating System
நிறுவுதல் - Installation
ஐகான் - Icon
பயன்பாடுகள் - Software Applications
ISO - An ISO image is an archive file (a.k.a. disk image) of an optical disc using a conventional ISO (International Organization for Standardization
தரவிறக்கம் - Download
சிடியில் எரித்தல் - CD Burning
பூட் - Boot - Startup
நினைவகம் - memory (RAM)
வன்வட்டு - Hard disk
மைக்ரோப்ராசசர் - Micro Processor
பென் டிரைவ் - Pen Drive

தமிழ்மணத்தில் நட்சத்திரமாக உங்கள் தமிழ்நெஞ்சம்



வலையுலக வாசக நண்பர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்த இனிய நேரத்தில் தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராகி உள்ளேன்.

முன்னர் ஆங்கிலத்தில் தட்டச்சு கற்றிருந்தேன். தமிழில் தட்டெழுதத் தெரியாமல் இருந்தேன். அந்த நேரத்தில் தமிழில் தட்டெழுதக் கற்றுக் கொடுத்தவர் அருமை நண்பர் திரு. மஞ்சூர் ராசா அவர்கள். இந்த நேரத்தில் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அவர் கற்றுக்கொடுத்த ஒருங்குறியில் (Unicode) தமிழ் பற்றிய அறிவே எனக்குள் வலைப்பதியும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

முத்தமிழ் குழுமத்திலும், முத்தமிழ்மன்றம், மற்றும் தமிழ்மன்றம் Forum களிலும் அவ்வப்போது எழுதினேன்.

நண்பர். திரு. பிகேபி அவர்களது வலைப்பதிவைப் படிக்கும் வாசகனாக இருந்தேன். அவ்வப்போது எனக்குக் கிடைக்கும், இணையத்தில் நான் கண்ட மென்புத்தகங்களை அவருக்குப் பின்னூட்டமிட்டேன். அவரும் அவற்றை அவரது பதிவுகளில் இடுவார்.எனக்குள் இருந்த ஆர்வத்தை அரங்கேற்றும் நாளும் வந்தது. 2007ம் ஆண்டின் டிசம்பர் திங்களில் தமிழ்2000 என வலைப்பதிவில் எழுத ஆரம்பித்தேன்.

04/12/2007 அன்று தமிழ்மணத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். மிகக் குறுகிய காலத்தில் நட்சத்திரப்பதிவர் தகுதி கிடைத்தது குறித்து மகிழ்வடைகிறேன்.

ஆரம்பத்தில் எதை எழுதுவது? எப்படி எழுதுவது? - வலைப்பதிவின் இலக்கணம் என்ன? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆங்கிலத்தில் வெளியான சுயமுன்னேற்ற நூல்களில் இருக்கும் சிறுசிறு குட்டிக் கதைகளை எனது நடையில் மொழிபெயர்த்து வலையேற்றினேன்.

அதற்கெல்லாம் எந்த அளவு வரவேற்பு கிடைத்தது என்பதெல்லாம் இன்னும் நினைவில் உள்ளது. தொழில்நுட்பம் சம்பந்தமான ஆங்கில வலைப்பூக்கள், தளங்களில் கருத்தைச் செலுத்தி அவற்றில் பிடித்த கட்டுரைகளை எனது நடையில் தமிழில் எழுத ஆரம்பித்தேன்.

நல்ல வரவேற்பு கிடைத்தது. அவ்வப்போது மின்னஞ்சலில் நண்பர்கள் அனுப்பும் ஆங்கிலச் சிறுகதைகளை அப்படியே மொழிபெயர்த்து வலையேற்றினேன்.

மென்பொருள் முகவரி தரும் தமிழ்நெஞ்சம் என 4tamilmedia.com தளத்தில் அறிமுகம் செய்திருந்தார்கள். அதன் பிறகு தொழில்நுட்பப் பதிவுகளை எழுதுவதில் அதிக அக்கரை காட்ட ஆரம்பித்தேன். எனது பாதையை சீர் செய்து வழியமைத்துக் கொடுத்ததில் 4tamilmedia.com செய்த உதவி மறுக்க இயலாது.

சிலகாலம் தொடர்ந்த பிறகு http://www.tamilkurinji.com தளத்தினரிடம் இருந்து ஒரு பின்னூட்டம். தமிழ்குறிஞ்சி தளத்தினராலும் அறிமுகம் செய்யப்பட்டேன். எனக்கு உற்சாகம் அளித்த இவர்களை மறக்க இயலாது.


எளிய தமிழில் SQL என தரவுத்தளம் சார்ந்த தொடரை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி திரு. செந்தழல் ரவி அவர்கள் வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ் பதிவில் அறிமுகம் செய்தார். திரு. செந்தழல் ரவி அவர்களுக்கு நன்றி.


ஆனந்த அதிர்ச்சியாக ஆனந்தவிகடனின் இளமைவிகடன் தளத்தில் எனது 4 பதிவுகளை குட் ப்ளாக் பிரிவில் அங்கீகரித்திருக்கிறார்கள்.

அவை :

சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் - அசாதாரணம்

எவ்விதமான கோப்புகளையும் திறந்து பார்ப்பதற்கு - இயக்குவதற்கு

டூப்ளிகேட் பிரியர் விகடனாருக்கு நன்றி

தமிழில் தட்டச்சு பயில்வதற்கு

இப்படி இருக்கும்போது கடந்த மாதம் நண்பர் திரு. பிகேபி. அவர்கள் தனது
ஐந்து ஆண்டுகள் பதிவில் எனது தமிழ்நெஞ்சம் தளத்தைப் பற்றி எழுதி எனக்கு மீண்டும் மீண்டும் உற்சாகம் கொடுத்தார். அதன் பிறகு எனது தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவருக்கு எனது நன்றி.

இப்போது தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவர் அங்கீகாரம். தமிழ்மணம் திரட்டிக்கு நன்றி.

பல்வேறு நண்பர்களும் தங்களது வலைப்பூவில் எனது தமிழ்நெஞ்சம் தளத்திற்கான blog feed ஐ இணைத்து திரட்டி வருகிறீர்கள். எனது தளத்திற்கான பார்வையாளர் பற்றிய புள்ளி விவரங்களில் அவற்றை அறிகிறேன். அனைவருக்கும் எனது நன்றிகள்.

தமிழில் தட்டச்சு பயில்வதற்கு


”உங்களது தட்டச்சு வேகத்தை அளவிடுவது எப்படி?” - என்கிற எனது பதிவு ஒன்றில், தமிழில் தட்டச்சு பயில்வதற்கான இலவச மென்பொருள் உள்ளதா என திரு. Kumaravel கேட்டிருந்தார்.

சிலகாலம் இணையத்தில் தேடியதில், இன்று எனது கண்ணில் பட்ட ஒரு மென்பொருள் அவரது கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

தமிழில் தட்டச்சு செய்வதற்கு நிறைய இலவசப் பயன்பாடுகள் இணையத்தில் உலா வருகின்றன. ஆனால் தட்டச்சு கற்றுக்கொள்வதற்காக பிரத்தியேகமாக உள்ள மென்பொருட்கள் மிகக் குறைவே.

How to learn typewriting in Tamil / English?

இந்த மென்பொருளின் பெயர் - தட்டச்சு ஆசான்

தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளுக்கும் ஏற்புடையதாக அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு.

இயக்கும் முறை :
முதலில் உங்களுக்குத் தேவையான தட்டச்சு பலகையைத் தேர்ந்தெடுக்கவும். (தமிழ்நெட்99 இயல்பாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும்)

பின்பு திட்டத்தில் தங்களுக்கு விருப்பமானதைத் (பாடத்திட்டம், தேர்வு,விளையாட்டு) தேர்ந்தெடுத்து பயிற்சியினைத் துவங்குங்கள்.

மாற்றுப் பாடத்தில் எண்விசை, சிறப்பெழுத்துப் பயிற்சிகளுக்குத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் விபரங்களுக்கு : http://www.ildc.in/Tamil/GIST/htm/ck-kbd.htm

How to practice?
Choose your Typing Layout first.
(By default English mode is chosen).

Choose your 'Scheme'(Lessons, Test, Games)
and begin your exercise.

Choose 'Special Lessons' for learning Numeric and Special Characters.


தரவிறக்கம் செய்ய : http://www.ildc.in/Tamil/GIST/CK/TypTutor.zip

இந்தியாவிற்குள் இலவச குறுந்தகவல் அனுப்ப



இந்தியாவில் இருந்தபடி தேசிய அளவில் (national) குறுஞ்செய்தித் தகவல்களை (SMS) நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இலவசமாக அனுப்புவதற்கு உதவும் 12 தளங்களை இங்கே தருகிறேன்.

நாம் யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி (Short Message Service) அனுப்பியிருக்கிறோம் என்பதை தனி தரவுத்தளத்தில் (Database) பதிந்திருக்கிறார்கள். அதனால் அவற்றை நாம் கையாள்வது (customize) எளிமையாக்கப்பட்டுள்ளது.

Send Free SMS All over India!

http://www.atrochatro.com/

http://www.mycantos.com/

http://www.jaxtr.com/

http://www.mysmsindia.com/

http://wwwh.way2sms.com/content/index.html

http://isms.ibibo.com/

http://www.jakasoffers.com/sign-in.php

http://www.smslife.in/

http://www.160by2.com/

http://gizmosms.com/

http://www.vakow.com/

http://www.smsgupshup.com/

மிஸ்டர். பீன்’ஸ் நகைச்சுவைக் காணொளிகள்


Mr.Bean’s Comedy Videos







Laugh at Loud


Young Dancing Girl



Facebook comedy




Mr. Bean is a British comedy television series of 14 half-hour episodes starring Rowan Atkinson as the title character. Different episodes were written by Rowan Atkinson, Robin Driscoll, Richard Curtis and one by Ben Elton.

The self-titled first episode was broadcast on ITV on 1 January 1990, with the final episode, Goodnight, Mr. Bean, on 31 October 1995.

ஒரே சொடுக்கில் 12 தளங்களில் கோப்புகளை ஏற்றுவதற்கு



நாம் தினமும் பல்வேறு கோப்புகளை Rapidshare தளத்தில் இருந்து இறக்கிப் பயன்பெற்றுள்ளோம்.

அங்கே யாரோ ஒரு நண்பர் இந்தக் கோப்புகளை ஏற்கனவே ஏற்றி வைத்துள்ளதால் நம்மால் அதைப் பயன்படுத்த முடிகிறது.

நாமும் நமது கோப்புகளை Rapidshare போன்ற கோப்புப்பகிர்வான் தளங்களில் (File Hosting Sites) ஏற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

இதற்கு ஒரு எளிய விடை : http://www.uploadmirrors.com/ தளத்தை நாடுவதே.

இந்தத் தளத்தின் வீட்டுப்பக்கத்தைத் (home page) திறந்து, எந்தக் கோப்பினை (file) ஏற்ற விரும்புகிறோமோ அதை தேர்வு செய்து Upload ஐ சொடுக்க வேண்டும்.

ஒரே சொடுக்கில் 12 தளங்களிலும் உங்களது கோப்பு ஏற்றப்பட்டு (upload) அவற்றிற்குரிய தரவிறக்கச் சுட்டி (download links) உங்களுக்குக் கிடைத்துவிடும்.

அந்தச் சுட்டிகளை (links) தனியாகக் குறித்துக்கொண்டு அவற்றை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டால் அவர்கள் எளிதாக தரவிறக்கம் செய்ய இயலும்.

ஒவ்வொரு தளத்திற்கும் தனியாக பயனர் கணக்கு (user account) உருவாக்க வேண்டிய அவசியம் கிடையாது.

தள முகவரி : http://www.uploadmirrors.com/

ஒளி அவலம் : பிழைக்கச் செல்லும் தமிழனை அடித்து விரட்டுவது போதாதென்று இப்படிக் கொன்று குவிக்கவும் வேண்டுமோ? பிஞ்சு மழலை என்ன செய்தாள்(ன்)?

நீண்ட நாட்களாக விடுமுறையில் இருந்து திரும்பிய நண்பரை வரவேற்க புது ஐடியா.





நீண்ட நாட்களாக விடுமுறையில் இருந்து திரும்பிய நண்பரை வரவேற்பது எப்படி?
அடுத்தவரின் விசைப்பலகையில் புல் வளர்ப்பது எப்படி?
கண்ணா பின்னான்னு யோசிப்பவர்கள் சங்கம் சார்பாக வெளியிட்ட video இது.

How To Grow Grass in Someone's Keyboard

Planting a little lawn in a coworker's keyboard is a nice way to welcome him back from vacation.

ஒளியோவியம் : இந்த விவசாயத்தின் விளைவு - புல் முளைச்சிருச்சுங்கோ - இங்கே பார்க்கவும்.

செல்போன் பைத்தியங்கள் - உஷார் மாக்கான்



Cellular & Mobile Phones: Stupid Things To Try With Your Phone


செல்போனை வைத்து என்ன ஒரு காமெடி பண்றார் பாருங்க

Step 1:
Open your car
Step 2:
Check for a faulty microwave
Step 3:
Mobile phone throwing


ஒளியோவியம்: இந்த video வுக்கே இப்படின்னா Broken Apple Iphone 3G படங்களைப் பார்த்தால் என்ன சொல்வீங்களோ. மன திடம் உள்ளவர்கள் மட்டும் பார்வையிடவும் (:-

இணையத்தில் அதிக நேரம் செலவிடும் ஆளா நீங்கள்?


Do You Spend Too Much Time on the Internet?



ஒளியோவியம் : விண்டோஸ் 1.0 முதல் விண்டோஸ் 7 வரை - அனைத்தும் ஒரே இடத்தில்

குறும்பு விலங்குகளின் சேட்டை : வீடியோப் பதிவு


Youtube தளத்தில் 18,908,793 முறை பார்க்கப்பட்ட காணொளிப் பதிவு. 16,413 மக்கள் மறுமொழியிட்டிருக்கிறார்கள். அசத்தலான குறும்பு விலங்குகளின் சேட்டை - காணொளியாக




funny animal clips!

18,908,793 views
16,413 Comments

ஒளிக்களஞ்சியம் - Amazing Video of 101 Photoshop Tips - போட்டோஷாப் 101 நுட்பங்கள் - உங்களுக்காகவே

பாராளுமன்றத் தேர்தலும் கூகிளின் புதிய சேவையும்



உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பதினைந்தாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறப் போகும் இவ்வேளையில் தேர்தல் களப்பணியில் கூகிள் நிறுவனமும் இணைகிறது.

பொதுத்துறை செய்தி நிறுவனங்கள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள் (Television channels) ஆகியவை ஏற்கனவே முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் தனியாகக் கருத்துக்கணிப்புகளை (Election Surveys) நடத்திக் கொண்டிருக்கின்றன.

06-ஏப்ரல்-2009 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் (Hindustan Times) நட்புறவுடன் கூகிள் நிறுவனத்தின் இந்தியத் தேர்தல்மையம் (Google India Elections Center) ஆரம்பமானது. இந்தியத் தேர்தல் வரலாற்றில் இது ஒரு மைல்கல்.

இந்தக் Google நிறுவனத்தின் தேர்தல் மையத்தில் என்ன சேவைகள் வழங்கப்படுகின்றன? என்ன என்ன தேவைகளுக்காக இந்த மையத்தை நாடலாம்?

1. ஒரு வாக்காளரானவர் தான் எங்கே எந்தப் பகுதியில் (polling location) ஓட்டளிக்கப் போகிறோம் என்பதைக் காண்பதற்காக

2. அவரது தொகுதியின் மேப் வரைபடம் (Map) ஆகியவற்றைக் கண்ணுறவதற்காக

3. தொகுதி தொடர்புடைய மேலதிகத் தகவல்கள் -வலைப்பூக்கள் (blogs), காணொளிகள்(videos), மேற்கோள்கள் (quotes) ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள

4. தான் வாக்களிக்கப் போகிற தொகுதியின் முன்னேற்ற நடவடிக்கைகள் பற்றி அறிந்துகொள்ள

5. தற்போதைய நடப்பு MP மற்றும் அதே தொகுதியின் முந்தைய MPகள் ஆகியவர்களின் விபரங்களைப் பெற

6. பாராளுமன்ற உறுப்பினர் குறித்த தகவல்கள், தொகுதி நிலவரங்கள், வாக்களிக்கும் இடங்கள் ஆகியவற்றைக் காண இயலும்.

7. மூத்த அரசியல்வாதிகள் எந்த தேதிகளில் என்ன சொன்னார்கள் (quotes) - அவர்களது வாக்குமூலங்கள் யாவை? என்பன குறித்து அறியலாம்.

பாராளுமன்றத் தொகுதியின் பெயரை உள்ளிட்டால் (input), தொகுதி பற்றிய அனைத்துத் தகவல்களும் நொடியினில் திரையில் மலர்கிறது.

இந்தத் தளமானது ஆங்கிலம் மற்றும் இந்தி - இரு மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

சுட்டி முகவரி : http://www.google.co.in/intl/en/landing/loksabha2009/


ஒளியோவியம் : Information Technology துறையினர் பற்றிய கார்ட்டூன் படங்கள்.

இணையத்தில் உலவும்போது கேடு விளைவிக்கும் தளங்களைக் கண்டறிய



இணையத் தளங்களில் உலா (surfing) வரும்போது எவையெல்லாம் நல்ல தளங்கள், எவை கேடு விளைவிப்பவை என்பதை நாம் அறியோம்.

ஏதேனும் தெரிந்திராத, அறிந்திராத (unknown) தளத்தைப் பார்வையிடும்போது எப்போதுமே ஒரு பாதுகாப்பில்லாத தன்மையை உணர்ந்திருப்போம்.

ஆயிரக்கணக்கான இணைய தளங்கள் நமது பார்வைக்கு நல்ல தளங்களாகத் தெரிகின்றன. ஆனாலும் அவற்றின் உள்ளே குறும்புசெய்யும் விசமத்தனமான, கேடு விளைக்கக் கூடிய நிரல்களை எழுதிப் பொதிந்திருப்பார்கள்.

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை குற்றம் செய்வபவர்கள் சாதகமாகப் பயன்படுத்துவார்கள். அதே போல உலவியின் நிரலில் உள்ள பிழைகளை அறிந்திருப்பவர்கள் (hackers), அதனை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதற்கேற்ற எதிர்நிரல் (malicious code) ஒன்றை எழுதி அதை இணையத் தளத்தில் கோர்த்திருப்பார்கள்.

அந்த குறிப்பிட்ட சில தளங்களில் நாம் உலா வரும் வேலையில், அவை நமது கணினியில் பாதகம் விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கும். ஏதேனும் குற்றச் செயல்களில் அந்த நிரல்கள் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் அதன் செயல்பாடுகளை நாம் அறியோம்.

நம்மிடம் நல்ல வைரசு எதிர்ப்புத் தொகுப்பான் (anti virusl) இருந்திருக்கும். நாமும் அதை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருப்போம். எனினும் சில நேரங்களில் அதுவும் கையை விரித்துவிடும்.

உலாவரும்போது பாதுகாப்புத் தன்மையை (security) அதிகரிப்பதற்காகவே சிறப்புக் கருவிகள் (tools) சிலவற்றை இங்கே காண்போம்.

மிகப் பயங்கரமான தளங்களை நாம் உலவ முயற்சித்தால் இந்தக் கருவிகள் நமக்கு எச்சரிக்கை விடுத்து இப்போது தளத்தைப் பார்வையிடலாகாது - அதில் கேடுவிளைவிக்கக் கூடிய ஆபத்து உள்ளது என சிவப்பு அறிக்கை (red alert) விடும்.

நல்ல தளங்கள் எவை? கெட்ட தளங்கள் எவை - என்பதை இதன் மூலம் எளிதாக அறிந்திடலாம்.

நம்பகமான உலாவலுக்கு இவற்றை நாளும் பயன்படுத்தலாம்.

உலவியில் தள முகவரியைத் தட்டி Enter அழுத்திய உடனேயே எச்சரிக்கை செய்திடும் கருவிகள் இவை.

இந்தக் கருவிகள் பற்றிய மேலதிக விபரங்களை கீழ்க்கண்ட சுட்டிகளை அழுத்தித் தெரிந்துகொள்ளவும்.

McAfee Site Advisor

LinkScanner Online

Norton Safe Web

Anti-malware tool by Google

Web Of Trust

தொடர்புடைய சுட்டி :
WOT (Web Of Truest) பற்றி மேலதிக தகவல்களுக்கு இந்த Firefox உலவியின் பாதுக்காப்புத்தன்மையை மேலும் அதிகரிக்க பதிவைக் காண்க.

ஒளிக்களஞ்சியம் :
Windows Vista Vs Ubuntu Linux

உபுண்டு லினக்ஸ் - நிறுவுவது எப்படி? செயல் முறை விளக்கம்


How to Install Ubuntu Linux?



Installing Ubuntu with Windows Dual-Boot


ஸ்கைப் - பயன்படுத்துவது எவ்வாறு?


ஸ்கைப் எனப்படும் ஒரு எளிய மென்பொருள் இன்றைய தொலைதொடர்பு யுகத்தில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த மென்பொருளானது VoIP எனப்படும் நவீனத் தொழில்நுட்பத்தைக் கையாள்கிறது.

நடைமுறையில் நாம் பயன்படுத்தும் தொலைபேசிக் கருவிகளை விட அதி நவீன வசதிகளைக் கொண்டதாக இருந்தாலும், பயன்படுத்தும் செலவுடன் ஒப்பு நோக்கும்போது மிக மிக மலிவானது.

நமது மடிக்கணினியில் ஸ்கைப் மென்பொருளை நிறுவி இருந்தால், நாம் எங்கெங்கு பயணம் செய்கிறோமோ, அங்கெல்லாம் ஸ்கைப் பயன்படுத்தலாம்.

இதைப் பயன்படுத்துவதற்காக உங்களிடம் ஒரு கணினி, வேகமான இணைய இணைப்பு, ஒலிப்பானுடன் கூடிய ஒலிவாங்கி, மேலும் ஒரு வெப்கேமரா தேவைப்படும்.

ஸ்கைப் இணையதளத்தில் இருந்து இந்த இலவச மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவ வேண்டும்.

ஸ்கைப் உடன் ஒரு பயனர் கணக்கைத் துவங்க வேண்டும்.

இதில் பல்வேறு இலவச சேவைகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

மேலும் ஸ்கைப்பில் உள்ளே / வெளியே என இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன.
அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும் எனில் பயனர் கணக்கை உருவாக்கும்போது உங்கள் கடனட்டை பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

பேபால் தளம் மூலமாகவும் உங்களது ஸ்கைப் பயனர் கணக்கில் பணம் செலுத்தலாம்.

உங்களது பெயர், மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு உங்களுக்கான கணக்கைத் துவங்கிய பிறகு மற்ற நண்பர்களது முகவரிகளை உள்ளிட்டு அவர்களை உங்களுடன் இணைத்துக்கொள்ளவும்.

இந்தச் செயல்பாட்டுக்கு நீங்கள் எதுவும் பணம் செலுத்தத் தேவையில்லை.

ஸ்கைப் வெளியே எனப்படும் சிறப்பைப் பயன்படுத்தி செல்பேசி, வீட்டுத் தொலைபேசிகளுக்குப் பேசி மகிழலாம்.

வெகுதொலைவில் உள்ளவர்களுடனும், வெளிநாட்டில் உள்ளவர்களுடனும் தொடர்புகொள்வதற்கு பணம் செலுத்த வேண்டி வரும். ஆனால் இது வழக்கத்தில் உள்ள விட்டுத் தொலைபேசி, செல்பேசிக் கட்டணங்களுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவானதாக உள்ளது.

ஸ்கைப் உள்ளே என்கிற சிறப்பியல்பைப் பயன்படுத்தும்போது ஒரு வருடத்திற்கு எவ்வளவு சந்தாத்தொகையோ அதை ஸ்கைப் நிறுவனத்திற்குச் செலுத்தி விடவேண்டும்.

நிறுவனமானது உங்களுக்காக ஒரு தனிப்பட்ட தொலைபேசி எண்ணைக் கொடுப்பார்கள். அதை நீங்கள் வெளிநாடு வாழ் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் உங்களுடன் இலவசமாக பேசி மகிழ இது ஒரு வாய்ப்பு.

உங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு பணம் செலவாகாது. ஏனெனில் நீங்கள் ஸ்கைப்பிற்கு வருடச்சந்தா செலுத்திவிட்டீர்கள். இதுவே ஸ்கைப் உள்ளே என்கிற அம்சம்.

வாய்ஸ் மெயில் வசதியும் இதில் உண்டு. ஆனால் அதற்காக மேலதிகப் பணம் செலுத்த வேண்டும்.

நீங்கள் கணினியில் இணைய இணைப்பின்றி இருக்கும்போது யாரேனும் உங்களுக்கு வாய்ஸ் மெயில் அனுப்பி இருந்தால், அதை எப்போது இணையத்துடன் இணைகிறீர்களோ அப்போதே பெற்றுக்கொள்ளலாம்.

கையடக்கக் கணினிகளுக்காகவும் தனிப்பட்ட ஸ்கைப் மென்பொருள் அதே தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அது தேவையெனில் அதையும் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.

குறைந்த செலவில் அதிக நேரம் வெளி நாட்டு நபர்களுடன் பேசி மகிழ அருமையான பயன்பாடு இது.

மேலதிக விவரங்களுக்கும், மென்பொருள் தரவிறக்கத்துக்கும் நீங்கள் நாடவேண்டிய தளம் : http://www.skype.com

தொடர்புடைய சுட்டி : VoIP - இணையத் தொலைபேசி

கலைச்சொற்கள் :
ஸ்கைப் - Skype
மடிக்கணினி - Laptop
வேகமான இணைய இணைப்பு - Fast Internet Connection
ஒலிப்பான்+ஒலிவாங்கி - Head phone with Mic
வெப்கேமரா - Web camera
மென்பொருள் - Software Application
தரவிறக்கம் - Download
பயனர் கணக்கு - User Account
ஸ்கைப் உள்ளே / வெளியே - Skype In / Skype Out
கடனட்டை - Credit Card
பேபால் - Paypal
வீட்டுத் தொலைபேசி - Home based Fixed Wired / Wireless phone
செல்பேசி - Mobile / cell phone
வருடச் சந்தா - Yearly fee
வாய்ஸ் மெயில் - Voice Mail
கையடக்கக் கணினி, கருவிகள் - PDA - Personal Digital Assistant, Hand held devices

உங்களது தட்டச்சு வேகத்தை அளவிடுவது எப்படி?


பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தனியாக தட்டச்சு நிலையங்கள் (Type writing institutes) இருந்தன. அவற்றில் பல்வேறு காரணங்களுக்காக (!) ஆண்களும், பெண்களும் கூட்டம் கூட்டமாக அலை மோதுவர்.

மோகன் நடித்த 'விதி' படத்தில் அவர் தட்டச்சு பயில்வதற்காக, மனோரமா நடத்தி வந்த தட்டச்சுப்பயிலகத்தில் சேர்ந்து அடித்த லூட்டியை எல்லோரும் அறிவோம்.

ஆனால் இப்போது வீட்டுக்கு வீடு கணினி மயமாகி விட்டது. அதனால் நாம் கணினியிலேயே தட்டச்சுப் பயிலலாம்.

உங்களது தட்டெழுதும் வேகத்தை உடனடியாக அறிவதற்காக ஒரு இணையத்தளம் உள்ளது.

தள முகவரி : http://speedtest.10-fast-fingers.com/

அந்தத் தளத்தில் திரையில் தெரியும் வரிகளை அதன் கீழ் உள்ள text box ல் type செய்ய வேண்டும். சரியாக ஒரு நிமிடம் முடிந்தவுடன் அறிக்கை(result) வெளிவரும். அதில் நிமிடத்தில் எத்தனை வார்த்தைகளை தட்டும் வல்லமை பெற்றுள்ளீர்கள் என அறியலாம்.

எனக்கு 60 வார்த்தைகள் / நிமிடம் இருப்பதாக அந்தத் தளத்தின் அறிக்கை முடிவு காண்பித்தது. அதைத்தான் நீங்கள் கீழே காண்கிறீர்கள்.

60 words
சிறு குறிப்பு :
உங்களது தட்டெழுதும் வேகத்தை அதிகரிக்கவோ / புதிதாகத் தட்டெழுத்துப் பயிலவோ இந்த மென்பொருளைத் தரவிறக்கி கணினியில் நிறுவிப் பயன்படுத்தவும்.

ஒளிக்களஞ்சியம் :
கணினியில் தொடர்ந்தாற்போல் வேலை செய்வபர்களுக்கு வரும் ஒரு புதிய நோய் குறித்த காணொளி. நோயின் பெயர் carpal tunnel syndrome

நகர் படங்களை (.gif) வலைப்பூவில் காண்பிப்பது எப்படி?


Photobucket

நகர் படங்கள் என்றால் அசையக் கூடிய விதத்தில் அமைந்துள்ள animated .gif கோப்புகளைக் குறிக்கிறது.

அசையாத நிழற்படங்களை .jpg, .png என்ற வடிவங்களில் சேமித்திருப்போம்.

ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான .jpg படங்களை அடுத்தடுத்து இணைத்து உருவாக்கப்பட்டதே .gif எனப்படும் புதிய நுட்பம் ஆகும்.

இந்த .gif கோப்புகளை உருவாக்க

http://www.benetonfilms.com/bmg.zip

http://www.whitsoftdev.com/files/unfreez.zip

போன்ற இலவச மென்பொருட்களைத் துணைக்கு அழைக்கலாம்.

சரி விசயத்திற்கு வருகிறேன்.

எப்படியோ நான் ஒரு அசையும் / நகர்படத்தை உருவாக்கிவிட்டேன். அல்லது இணையத்தில் இருந்து இறக்கிவிட்டேன்.

அதை வலைப்பூவில் பொதிய வலைப்பூவின் எடிட்டரில் Add Image என்னும் பட்டனைக் க்ளிக் செய்து எனது .gif கோப்பை picasa வில் ஏற்றினேன்.

அது தந்த Coding எனப்படும் சிறிய html நிரலானது வலைப்பூவின் எடிட்டரில் தானாக அமர்ந்தது. இது வரை சரிதான். ஆனால் எனது கணினியில் நான் ஓட்டிப் பார்த்து மகிழ்ந்த .gif ன் அனிமேசன் வலைப்பக்கத்தில் வரவில்லை. அது அசையாத ஸ்டாட்டிக் படமாகக் காட்சியளித்தது.

இதற்கு என்ன தீர்வு. அசை படத்தை அப்படியே வலைப்பக்கத்தில் காட்டுவதற்கு என்ன வழி?

தீர்வு :

.gif எனப்படும் அசைபடங்களை Picasaவில் வேண்டாம். அதற்கு மாற்றாக
Photobucket என்னும் சிறப்புத் தளத்தில் ஒரு பயனர் கணக்கை ஆரம்பித்து அங்கே ஏற்றுங்கள். அங்கே ஒரு சிறிய html நிரலினைக் கொடுப்பார்கள். அதைக் காப்பி செய்து bloggerன் Edit html என்கிற பகுதியில் paste செய்துவிடுங்கள்.

செயல்முறை விளக்கம் - படங்களுடன் :

1: Photobucket தளத்தில் உள் நுழையவும்
2. உங்கள் கணினியில் இருக்கும் .gif கோப்பினை ஏற்றவும்.
3. ஏற்றப்பட்ட படத்தின் மேலேயுள்ள share சுட்டியை அழுத்தவும்

4. அந்தத் தளத்தில் கிடைக்கும் html நிரலைக் காப்பி செய்யவும்.
5. உங்கள் வலைப்பூவின் எடிட்டரில் Edit Html ஐ அழுத்தி அங்கே Paste செய்யவும்.
இப்படிச் செய்ததால் கிடைத்த fire heart என்னும் அசைபடத்தையே இந்தப் பதிவின் ஆரம்ப வரிகளுக்கு மேல் காண்கிறீர்கள்.
Photobucket ல் இருந்து கிடைத்த நிரல் கீழே :

VoIP - இணையத் தொலைபேசி



மிகக் குறைந்த செலவில் எண்ணிக்கையில் அடங்காத அளவில் சர்வதேச நகரங்களுக்கு தொலைபேசுவதற்கு VoIP எனப்படும் நவீனத் தொழில்நுட்பம் உதவுகிறது.

இடையூறு இல்லாத நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இது சாத்தியமாகிறது.

VoIP என்பதன் விரிவு - Voice Over Internet Protocol

பழைய நுட்பத்தில் ஒலியை கம்பி வழியாகக் கடத்தினார்கள், சிலகாலத்திற்கு முன்பு செல்பேசி (cellphone) வந்தது. இப்போது VoIP தொலைபேசி.

VoIP நுட்பத்தில் ஒலியை அதிவேக அகலப்பட்டை (broadband)யுடன் கூடிய இணையத்தில் கடத்துவார்கள்.

நமது வீட்டில் இருக்கும் தொலைபேசிக் கருவியைப் பயன்படுத்தாமல், அதற்கு மாற்றாக இணையத் தொலைபேசியைப் பயன்படுத்துவது இதன் முக்கிய அம்சம்.

இதற்கு internet telephony என்றும் பெயருண்டு.

நாம் பேசும் பேச்சின் ஒலியை சிறு சிறு பொட்டலங்களாக (SIP) மாற்றி அவற்றை இணையம் மூலமாக அனுப்பி அடுத்த முனையில் இருப்பவரது கணினிக்கு அனுப்புவதே இந்த நுட்பமாகும்.

சிறப்பம்சங்கள் :

1) மிகக்குறைந்த செலவில் அதிக நேரம் பேசி மகிழலாம்.
2)மிக எளிமையாகக் கையாள இயலும்
3) பழங்காலத்து PABX (Private Automatic Branch Exchange) எனப்படும் நுட்பத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்தன. இதில் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு நவீனத்துவம் பெற்றிருக்கிறது.
4) மின்னஞ்சலை எவ்வாறு எந்தக் கணினியிலும் அனுப்ப / படிக்க முடிகிறதோ, அதேபோல VoIP தொலைபேசுவதை எந்தக் கணினியில் இருந்தும் மேற்கொள்ளலாம்.
5) Call forwarding, call waiting, voice mail, caller ID ஆகிய வசதிகளும் இதில் உண்டு.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP