ஃப்ளாஷ் டிரைவே தேவையில்லை - நீதான் என்...


கோப்புப்பகிர்வான் தளங்களில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கோப்புகளையே பதிவு செய்திட இயலும். ஆனால் அந்தத் தளத்தின் வாயிலாக புதிய கோப்புகளை உருவாக்கிட வசதி இருக்காது.

அலுவலகக் கோப்புகளை உருவாக்கிட மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வதற்கு எத்தனையோ வழிகளைப் பின்பற்றுகிறோம். ஒரு கணினியில் இருக்கும் கோப்புகளை வேறு கணினிக்கு மாற்றுவதற்கு ஃப்ளாஷ் டிரைவ்களையெல்லாம் பயன்படுத்துகிறோம்.

கோப்புப்பகிர்வான் தளங்களின் அடுத்த தலைமுறை வடிவம்தான் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ்.

இதன் சிறப்பம்சங்கள் :
1) கோப்புகளை எந்தக் கணினியிலும், எந்த உலவி வழியாகவும் பார்ப்பதற்கு இயலும்

2) Flash Drive தேவையின்றி, எந்தக்கோப்பு எங்கே தேவைப்படுகிறதோ அங்கே பயன்படுத்திக்கொள்ளலாம்.

3) பகிரப்பட்ட கோப்புகளின் பாதுகாப்புத்தன்மையை கடவுச்சொல்லின் மூலம் உறுதி செய்யலாம்.

4) உங்கள் கோப்புகளை அடுத்தவர் பார்க்கவோ, மாற்றியமைக்கவோ அனுமதி அளிக்கலாம் / மறுக்கலாம்.

5) ஒரு குறிப்பிட்ட கோப்பினை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மாற்றியமைக்கும் வசதியுண்டு.


6) ஆயிரக்கணக்கான கோப்புகளை ஒரே இடத்தில் பதிவுசெய்யும் வசதி

7) மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பு வாயிலாக உருவாக்கப்பட்ட கோப்புகளை, வெறும் உலாவி வாயிலாகவே மாற்றியமைக்கவோ, கண்ணுறவோ வாய்ப்பளிக்கிறது.

தள முகவரி : http://workspace.officelive.com/

குறிப்பு :
இதற்காக நீங்கள் உங்களது லைவ் மின்னஞ்சல் வாயிலாக உள் நுழைந்திருத்தல் வேண்டும்.

கலைச்சொற்கள்

கோப்புப்பகிர்வான் - File Sharing
கோப்பு - File
மைக்ரோசாப்ட் ஆபீஸ் - Microsoft Office
ஃப்ளாஷ் டிரைவ் - Flash Drive

லைவ் - Live
உலவி - Browser
பகிரப்பட்ட கோப்புகள் - Shared Files
கடவுச்சொல் - Password

பார்க்க - Read
மாற்றியமைக்க - Edit
அனுமதி - Permission

உலகின் மிகப் பயங்கரமான சாலைப் போக்குவரத்துகள்











அகத்தின் அழகு முகத்திலா தெரிகிறது?








ஒலிக்களஞ்சியம் : தீக்குளித்து மறைந்த திரு. முத்துக்குமார் பற்றிய Podcast பதிவு

Thanks to : 'Binary' Tools for Deconstruction

உங்கள் கடவுச்சொல்லின் வலிமையை அறிவதற்கு


இணையம் மூலமாக பணம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கும், பல்வேறுவிதமான தளங்களைப் பார்வையிடவும் ஒரு துருப்புச்சீட்டாக கடவுச்சொல் பயன்படுகிறது.

பெரும்பாலான மக்கள் அவர்களுக்குப் பிடித்தமானவர்களின் பெயர்களையே கடவுச்சொல்லாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இப்படி ஒருவரின் பெயரையே கடவுச்சொல்லாகப் பயன்படுத்துவது ஏற்புடையதன்று.

ஒரு வலிமையான சொல்லை உருவாக்கவதே சிறந்த செயல்.

இணையத் திருடர்களிடம் இருந்து நமது தனிமனித உரிமையைப் பாதுகாக்கவேண்டும் எனில் மிகவும் கடினமான கடவுச்சொல்லையே பயன்படுத்த வேண்டும்.


இப்படி உருவாக்கிய சொல்லின் வலிமையைச் சோதிப்பதற்காகவே ஒரு கருவியைக் கண்டேன்.

விதிமுறைகள் :

உங்கள் கடவுச்சொல்லில் குறைந்தபட்சம் ஒரு எண்ணும், ஒரு பெரிய எழுத்தும், ஒரு சிறிய எழுத்தும், ஒரு அடையாளக் குறிச்சொல்லும் கண்டிப்பாக இருக்கவேண்டும். குறைந்தபட்ச எழுத்துகளின் எண்ணிக்கை 8.

இதன் மூலம் 100% வலிமையான ஒரு சொல்லை உருவாக்கி அதையே பயன்படுத்துங்கள்.

இந்தக் கருவிக்கு The Password Meter என்று பெயர்.

நான் உருவாக்கிய ஒரு password : I'mG0dBala#1

I am God Bala Number 1 (நான் கடவுள் பாலா நம்பர் 1)
O எழுத்துக்குப் பதிலாக 0 (zero - பூஜ்யம் ) பயன்படுத்தி இப்படி ஒரு கடவுச்சொல்லை உருவாக்கினேன். இதற்கு 100% கிடைத்தது.

தள முகவரி : http://www.passwordmeter.com/

கலைச்சொற்கள்:
பணம் கொடுக்கல் வாங்கல் - Money Transaction
துருப்புச்சீட்டு - key resource
கடவுச்சொல் - Password
வலிமையான - Strength
இணையத் திருடர்கள் - hackers
தனிமனித உரிமை - Privacy
அடையாளக் குறிச்சொல் - Special symbol
கருவி - Tool

சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் - அசாதாரணம்



Extraordinary Paintings on walls













பழைய கணினிகளில் பயன்படுத்த 10 இலவச மென்பொருட்கள்


பழைய கணினிகளைத் தூக்கித் தூரப்போட்டுவிட்டு புதிதாக மாறுபவர்கள் எத்தனை பேர் இருந்தாலும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காக 5 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய கணினியையே இன்னும் பயன்படுத்தும் மக்களும், நண்பர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்தப் பதிவு.

இன்றைய நவீனக் கணினி உலகில் நாம் பயன்படுத்தும் மென்பொருட்களை யெல்லாம் அந்தப் பழைய கணினிகளில் பயன்படுத்த இயலாது. வேக ஓட்டம் சீராக இருக்காது. சுத்தமாக அந்தப் பழைய கணினியானது செத்துச் செத்து விழும். இருப்பினும் அவர்களுடைய கணினியின் குறைந்தபட்சத் திறனை வைத்துக்கொண்டே அதிகபட்சச் செயல்பாட்டை அனுபவிக்கக் கீழ்க்கண்ட மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்.

1) குறைந்த கணினித்திறனையும், நினைவகத்தையும் உபயோகித்து PDF கோப்புகளைப் படிக்க Sumatra PDF பயன்படுத்தலாம். ( Adobe Reader ஐ பழைய கணினியில் நிறுவிப் பாருங்கள். கண்டிப்பாக நிறுவுவதற்கே நிறைய நேரம் பிடிக்கும். பின்பு PDF கோப்பைத் திறந்து பார்ப்பதற்கு இன்னும் அதிக நேரம் பிடிக்கும். )

2) MS Word க்கு மாற்றாக AbiWord பயன்படுத்தலாம். இலவசமாகக் கிடைக்கும் ஒரு Word prorcessing பயன்பாடு இது. 16 MB நினைவகம் கூட இந்தப் பயன்பாட்டின் செயல்பாட்டிற்கு மிக நல்ல வேகத்தை அளிக்கும்.

3) Photo Editing ன் அடிப்படைத் தேவைகளைச் செய்வதற்கு IrFanView பயன்படுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட படங்களின் நீள,அகலத்தை மாற்றுவதற்கு இதைப் பயன்படுத்துபவர்கள் ஏராளம்.

4) குறைந்த நினைவகம், கணினித் திறனைப் பயன்படுத்தக் கூடிய நிரல் எழுதும் பயன்பாட்டிற்கு NoteTab Light பயன்படுத்தலாம்.

5) நவீன மின்னஞ்சல் யுகத்தில் பயன்படுத்தும் Ajax போன்றவற்றைப் பயன்படுத்தும் மின்னஞ்சல் பயன்பாடுகளை Popcorn பயன்படுத்தி ஓரங்கட்டலாம்.

6) 32 MB நினைவகமும், 486 processor, Windows 95ம் கொண்ட பழைய கணினியில் இணைய உலவுதலுக்காக K-Meleon பயன்படுத்தலாம். உலகின் மிக வேகமான browser எனப் பெயரெடுத்தது இது.

7) Pentium முதலாம் தலைமுறைக் கணினிகளில் ஒளிப்படங்களைக் காணொளிகளைக் காண்பதற்கு VLC Media Player பயன்படுத்தலாம். DVDs, MP3 போன்றவற்றை இயக்குவதற்கு இது ஒரு அருமையான மென்பொருள்.

8)கணினியின் தேவையற்ற குப்பைக் கோப்புகளை அழித்து நிறையக் காலியிடங்களை hard disk (வன்வட்டு)ல் உருவாக்க CCleaner பயன்படுத்தலாம்.

9)Google, yahoo, MSN என ஒவ்வொரு அரட்டை அரங்கங்களுக்கும் தனித்தனியாக IM - Instant Messaging பயன்பாடுகளை நிறுவுவதற்குப் பதிலாக Pidgin என்னும் ஒரேயொரு பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.

10) பழைய கணினியில் USB - Universal Serial Bus இணைப்பதற்கான வழிவகை இல்லாவிடில் அதற்கான ஒரு Card வாங்கிச் செருகி USB ஐக் கையாளலாம்.2010ல் USB 3.0 வருகிறதாம். அதையும் ஒரு கை பார்ப்போம்.

ஒளிக்களஞ்சியம் : ஹரிஹரன், சுஜாதாவின் குரலில் காதல்வேதம்

உங்கள் வலைப்பூவின் விலைமதிப்பு எவ்வளவு?

ஒரு வலைப்பூ, இணையத்தளம் போன்றவற்றின் மதிப்பினை அறிவதற்காக ஒரு சிறப்பு இணையத்தளம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட தளத்தின் தளமுகவரியை இங்கே உள்ளிட்டால் சில கணக்கீடுகளின் இறுதியாக இத்தனை $கள் என விலைமதிப்பை நாம் அறியத் தருகிறது.

ஒரு தளம் / வலைப்பூவின் popularity ஐ இதன்மூலம் அறிய இயலும். உங்கள் தளத்திற்கு இருக்கும் back links, மற்றும் referral sites போன்றவையே இந்த விலைமதிப்பை நிர்ணயிக்கின்றன. எத்தனை பார்வையாளர்கள் தினம்தோறும் வருகின்றனர் போன்றவையும்தான்.

SEO எனப்படும் Search Engine Optimizationஐ ஒழுங்காகச் செய்துவருபவர்களுக்கு இதன் மதிப்பு மிக அதிகமாக இருக்கும்.

இந்த http://www.tamilnenjam.org ன் முகவரியை உள்ளிட்டேன். 754$ வந்தது. கடந்த ஜனவரி 4ல் தான் புது domain ல் பதிந்ததால் இதன் மதிப்பு இப்போது இவ்வளவு.

இதன் பழைய முகவரியான http://tamizh2000.blogspot.com க்கான மதிப்பு $1,660
புதிய domain க்கு மாறியதால் google page rank 3 ல் இருந்து 0 ஆக மாறிவிட்டது. அதுவே காரணம்.

உங்கள் தளம் / வலைப்பூ முகவரியை உள்ளிட்டுச் சோதித்துப்பாருங்கள்.

தள முகவரி : http://www.stimator.com/

ஒரு தளத்தின் Page Rank ஐக் காண்பதற்கு http://www.prchecker.info/check_page_rank.php முகவரி உதவும்.

ஒளிக்களஞ்சியம் : முதல் பத்து ஆண்டுகளில் கூகிளின் வளர்ச்சி பற்றிய சாதனை விளக்கப்படம்

இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள்


நம்மில் பலரும் இணையத்தில் உலவும்போதோ, கணினியில் விளையாடும்போதோ, வலைப்பதியும்போதோ இணைய வானொலி (internet radio) நிகழ்ச்சிகளைக் கேட்கும் வழக்கமுடையவர்களே.

பல நேரங்களில் தொடர்ச்சியான பாடல்களைக் கேட்பதுகூட வெறுமையளிக்கும். அப்போது இணையவானொலியில் அறிவிப்பாளர்களின் குரலைக் கேட்பது மனதுக்கு இதமளிக்கும்.

இந்த நிகழ்ச்சிகளை கணினியில் download (தரவிறக்கம் - இணையிறக்கம்) செய்து மீண்டும் மீண்டும் கேட்டுமகிழ உதவக்கூடிய இலவசமென்பொருட்களை இங்கே தருகிறேன்.

1) Screamer Radio : இந்த மென்பொருள் வாயிலாக ஏராளமான இணைய வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கும் அவற்றைக் கணினியில் பதிவதற்கும் நல்ல வாய்ப்பு. எந்த channelன் நிகழ்ச்சியைப் பதிவு செய்ய (record) விரும்புகிறீர்களோ அதை நீங்கள் தேர்வு செய்யவேண்டும். MP3, OGG, AAC, WMA ஆகிய கோப்பு வடிவங்களில் (file format) பதிவு செய்து மீண்டும் மீண்டும் கேட்டு மகிழலாம்.

2) XstreamRadio :
ஆயிரக்கணக்கான தேசிய, உலகலாவிய (National, International) இணையவானொலிகளைக் கேட்டும், அவற்றைக் கணினியில் பதிந்தும் மகிழ அருமையான மென்பொருள்


3) Nexus Radio :

எட்டாயிரத்துக்கும் அதிகமான வானொலி நிலையங்கள் மற்றும் 15 மில்லியன் பாடல்கள் இவற்றை இணைய வாயிலாக இலவசமாகக் கேட்டுமகிழ உதவுகிறது. iPod, iPhone அல்லது வேறுவிதமான கருவிகளில் பதிந்து கேட்டு மகிழலாம்.


4) Free Sound Recorder : MP3, WMA or WAV கோப்புகளாகப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது.கணினியின் sound card ஐப் பயன்படுத்தி இசை, பாடல், குரலொலி போன்றவற்றைப் பதிவுசெய்ய எளிமையான மென்பொருள்.

5) Freecorder Toolbar : 100% இலவசமான மென்பொருள் இது. ஒலிப்பதிவு செய்ய ஏற்றதாகவும், உலவியிலிருந்தபடியே (browser) இதை இயக்கலாம்.

ஒளிக்களஞ்சியம் : ஒரு மாறுதலுக்காக மனிதனைக் குரங்காய் மாற்றுவோம் வாங்க - Charles Darwin 200வது பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த video

வினோதமான வாகனங்கள் 12



Shoe Modeled
Different Bike
Classic Bike




Motor Bikes - Creatively Designed Amazing Bikes, Two wheelers



ஒளிக்களஞ்சியம் : ஒரு தமிழ் மீனவரைப் பற்றிய குறும்படம் - தவிப்பு

கணினி இணைப்பில்லாமல் இணைய வானொலி


Logitech Squeezebox ன் மூலம் உங்கள் கணினியில் உள்ள பாடல், இசையை கேட்டு மகிழலாம். Wi-Fi தொழில்நுட்பம் மூலம் இது சாத்தியப்பட்டுள்ளது.

உங்கள் பகுதிகளில் Wi-Fi எனப்படும் கம்பியில்லா சேவை (Wireless network) இல்லாதிருப்பின் நீங்கள் cables பயன்படுத்தி இந்தக் கருவியை இயக்கலாம்.

கணினியின் இசைத்தொகுப்புகளைக் கேட்டுக்கேட்டு வெறுமையடைந்தவர்களுக்கு (bored) கணக்கிலடங்காத இணைய வானொலிகளின் (Internet Streaming Radio) அலைவரிசையைக் கேட்டு மகிழ அருமையான வரப்பிரசாதம் இந்தக் கருவியே.

இதன் மூலம் அலைவரிசையை tune செய்வது மிக எளிது.

கணினியை அணைத்துவிட்டு இணைய வானொலி கேட்பதற்கு Logitech Squeezebox ன் 802.11g மற்றும் Ethernet Port அம்சங்கள் உள்ளன.

Windows, Mac, Linux என அனைத்து இயங்குதளங்களுடனும் (Operating System) ஒத்திசைவு கொண்டது இந்தக் கருவி.

உங்கள் கணினியின் பாடல்களை இணையத்தில் எங்கேனும் ஏற்றிவிட்டு, அதை Logitech Squeezebox வாயிலாகக் கேட்டு ரசிக்க ஒரு நல்ல வாய்ப்பு.

அழுத்திச் சுருக்கப்பட்ட (Compressed) / சுருக்கப்படாத இசைக்கோப்புகளை அருமையாகக் கையாள்கிறது.

http://www.logitech.com/index.cfm/speakers_audio/wireless_music_systems/devices/881&cl=roeu,en

ஒளிக்களஞ்சியம் : ராஜராஜசோழனின் வரலாறு - ஆவணப்படம்

வண்ணம் தீட்டி மகிழ ஒரு அருமையான இணையத்தளம் - மழலைகளுக்காகவே

சிறு குழந்தைகள் ஓவியம்தீட்டி மகிழவோ, கோட்டுச்சித்திரங்களில் வண்ணம் தீட்டுவதிலோ மிக்க ஆர்வம் உடையவராக இருப்பார்கள்.

அவர்களுடைய ஆர்வத்தை மேலும் வளர்க்க உதவும் வகையில் கருப்புவெள்ளைப் படங்களில் - கோட்டோவியங்களில் வண்ணம் தீட்டி அழகுக்கு அழகு சேர்த்து மகிழ ஒரு இணையத்தளம் உள்ளது.

80+ வகையான பிரிவுகளில், ஆயிரக்கணக்கான படங்களை வண்ணமயமாக மாற்றி இன்புறலாம்.

பிறந்தநாள், மிருகங்களின் சேட்டைகள், பூங்காக்கள், circus போன்றவை சில உதாரணங்கள்.

மிக எளிதானதாகவும், வண்ணம் தீட்டிமுடிந்ததும் அச்செடுக்கும் (Print) வசதியும் இந்தத்தளத்தில் உண்டு.

இதற்காக இந்தத்தளத்தில் Java, Flash போன்றவற்றைப் பயன்படுத்தவில்லை. ஆதலால் இணையப்பக்கங்கள் (web pages) விரைவாக இயங்குகிறது.

தள முகவரி : http://www.thecolor.com/

ஐபாட், ஐபோன் இவற்றை டிவியுடன் இணைப்பது எப்படி?


நீங்கள் பயன்படுத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் பல்லூடகக் கையடக்கக் கருவியானது (Multimedia handhelds) அதற்கு உரிய சிறிய திரைக்கான வடிவமைப்பில் சிறந்ததே.

ஆனால் அதில் நீங்கள் ஏராளமான புகைப்படங்கள், காணொளிகள் (Video) போன்றவற்றைப் பதிந்து இருப்பீர்கள். சிறியதிரையில் பார்த்துப் பழகிய நமக்கு ஒரு மாறுதலுக்காக இந்தப் படங்களை, வீடியோக்களை பெரிய TV திரையில் நல்ல தரத்துடனும் காண்பதற்கான ஒரு கருவியைப் பற்றி இங்கே காணப்போகிறோம்

ஆரடி நீளமுள்ள ஒரு showTIME என்றழைக்கப்படக்கூடிய AV Cable தான் அது.

கார்களில் பயன்படுத்தக்கூடிய உயர்தரமான ஒலிக்கருவிகளைத் தயாரிப்பதில் முன்னனி வகிக்கும் Scosche நிறுவனம் சமீபத்தில் iPhone மற்றும் iPod Touchக்கான AV cableஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் iPhone, iPod போன்றவற்றின் ஒலி / ஒளியை TV யில் கண்டு / கேட்டு மகிழலாம்.

iPod touch Gen2, iPod nano Gen 4, iPod touch, iPod nano Gen3, iPhone, iPhone 3G and iPod with video போன்ற கருவிகளுடன் இந்த AV cable ஒத்திசைவு கொண்டுள்ளது.

உயர்தரமான கருவியாகவும், எந்தவிதமான திறனிழப்பும்(no signal loss) ஏற்படாத வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது

Schosche கடைகளில் இது 39.99$ மதிப்பில் கிடைக்கிறது.

முகவரி :

http://www.scosche.com/products/sfID1/210/sfID2/321/productID/1622

ஒளிக்களஞ்சியம் : I’m a PC - Microsoft வெளியிட்ட சமீபத்திய விளம்பரங்கள்

உபுந்து லினக்ஸுக்கான 10 இலவச வீடியோ எடிட்டர்கள்


இதற்கு முந்தைய பதிவில் 20 இலவச புகைப்படங்களை மெருகூட்டும் மென்பொருட்களை (Image Editing) வழங்கும் தள முகவரி கொடுத்திருந்தேன். அதே போல உபுந்து Linux பயன்பாட்டாளர்களுக்கு உபயோகமான வகையில் 10 விதமான இலவச Video Editor பயன்பாடுகளை வழங்கும் தளங்களின் முகவரிகளை இங்கே கொடுக்கிறேன்.


1. AvideMux

2. CinePaint

3. Cinelerra

4. Kino

5. Jahshaka

6. Slideshow Creator

7. LiVES

8. Vivia

9. KDEnLive

10. FFmpeg


ஒளிக்களஞ்சியம் : AR. Rahman Wins BAFTA Best Music Award for Slumdog Millionaire - Video

புகைப்படங்களை மெருகூட்ட 20 இலவச மென்பொருட்கள்

Image Editing செய்வதற்காக எத்தனையோ வணிகரீதியிலான மென்பொருட்கள் இருக்கின்றன. இருப்பினும் இலவசமாகக் கிடைக்கும் புகைப்படங்களை மெருகூட்ட உதவும் மென்பொருட்களின் தரமும் அற்புதமாக உள்ளன.

அந்த வகையில் Image Editing செய்வதற்குப் பயன்படும் அருமையான இலவசமென்பொருட்களை வழங்கும் இருபது இணையத் தளங்களை அறிமுகப்படுத்துகிறேன்.

இந்தத் தளங்கள் வழங்கும் பல பயன்பாடுகளை நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தியிருக்கலாம். இருப்பினும் புதியவர்களுக்குப் பயன்படுமே என்பதற்காகவே வழங்குகிறேன்.


1. Paint.NET

2. GIMP

3. Art Rage

4. InkScape

5. XnView

6. Google Picasa

7. Resource Hacker

8. IrfanView

9. ImageForge

10. Blender

11. PhotoFiltre

12. Pivot StickFigure Animator

13. Ultimate Paint

14. DrawPlus

15. Formati

16. Pixlr

17. Phoenix

18. Splashup

19. FotoFlexer

20. SumoPaint

ஒளிக்களஞ்சியம் : திரைக்கலைஞர்களின் பார்வையில் நான் கடவுள்

கணினியின் இயக்கத்தை எப்போது நிறுத்துவது?


கணினியின் இயக்கத்தை நிறுத்துவதற்கு Shut down அழுத்தியே பழக்கப்பட்டிருக்கிறோம்.

ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக அதை இன்னும் 6 மணி நேரம் கழித்துத் தானாகவே நிறுத்திவைக்க உத்தேசிக்கிறோம். அதற்காக ஏதேனும் scheduler எழுதலாம். இந்தமாதிரி நேரங்களில் நமக்கு உதவுவதற்காகவே Shutter எனப்படும் ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

பயன்பாட்டுக்கு எளிதாகவும், குறைந்த நினைவகத்தை ஆக்கிரமிப்பதாகவும் உள்ளது இந்த மென்பொருள்.

நிறுத்திவைக்க (shutdown), மறுபடி துவக்க(reboot), வேறு பயனருக்கு மாற(logoff), திரையை மட்டும் அணைக்க (monitor turn off ) எனப் பல செயல்களை இதன் மூலம் செய்ய இயலும்.

http://den4b.com/downloads.php?project=Shutter

ஒளிக்களஞ்சியம் : உயர் இரத்த அழுத்தம் (Hypertension)ஏற்படுவதற்கான காரணங்களும், தீர்வுகளும் - தமிழில்

மெகாவீடியோ ஒளிக்கோப்புகளைத் தரவிறக்க


Megavideo தளத்தில் உள்ள காணொளிக் காட்சிகளை, இணையிறக்கி உங்கள் கணினி, iPod,iPhone, செல்பேசிகளில் பதிவு செய்வதற்கு இந்த இலவச மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

AVI, MPEG, FLV, WMV ஆகிய வடிவங்களில் பதிவுசெய்துகொள்ளலாம். Megavideo வின் காணொளியின் முகவரியை (URL - Uniform Resource Locator) இந்தப் பயன்பாட்டில் உள்ளீடு செய்தால் போதும். உங்கள் கணினியில் ஒரு குறிப்பிட்ட folderல் நீங்கள் தேர்வுசெய்த கோப்புவடிவில் (Fileformat) பதிவாகிவிடும்.

மிகச் சிறிய, எளிதான, பயனும் திறனும் மிக்க மென்பொருள் இது. எளிய முகப்பை உடையது.

Windows 95 முதல் Windows Vista வரை அனைத்து Windows இயங்குதளங்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.

http://www.downloadtoolz.com/files/megavideo_d_setup.exe

இதே செயலைச் செய்வதற்கு உதவக்கூடிய FireFoxன் ஒரு Add on (நீட்சி)

http://www.downloadhelper.net/install.php

இந்த FireFox நீட்சியைப் பற்றித் தகவல் தந்து உதவியவர் திரு : வடுவூர் குமார் அவர்கள்.

ஒளிக்களஞ்சியம் : சே-குவேரா (Che-Guevara) பற்றிய 3 ஆவணப்படங்கள்

பிரபல மேதைகள் அனைவரும் ஒரே சித்திரத்தில்

படத்தில் Click செய்து Zoom செய்து பார்க்கவும்.

இவள் எப்போது மேலேயுள்ள படத்தில் இடம் பிடிப்பா? So Cute Angel


ஒளிக்களஞ்சியம் : நண்பர் கவிஞர். நிந்தவூர் ஷிப்லியின் பேட்டி - ரூபவாகினியில் ஒளிபரப்பானது

கணினி வரைகலைப் பணியாளர்களுக்கு உதவ ஒரு இணையத்தளம்


கணினி உலக வரைகலைப் பணியாளர்களாக (Web Graphics Designer) நமது நண்பர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஒரு உதாரணம் நண்பர் ஜிம்ஷா. அவர்தான் இங்கே மேலே தெரியும் தமிழ்நெஞ்சம் என்கிற ஒரு logo வை உருவாக்கி மின்னஞ்சலில் தந்தார்.

அவரைப்போன்ற Web Designerகளுக்கு உதவுவதற்கான ஒரு இணையத்தளம் ஒன்றைக் கண்டேன்.

Adobe Flash,
Action Script,
Illustrator,
Fireworks,
Dream Weaver,
XML,
PHP,
CSS,
Javascript,
Photoshop,
After Effects,
Indesign

முதலிய மென்பொருட்களைக் கற்றுக்கொள்வதற்கு உதவும் சுட்டிகளையும், அவைகளுக்கான புத்தகங்களை வாங்குவதற்கான Amazon தளச்சுட்டிகளையும் கொடுத்திருக்கிறார்கள்.



தளமுகவரி : http://www.thelearnlist.com

தகவலை வழங்கியவர் : திரு. கார்த்திகேயன், திருப்பூர்

என்ன ஒரு சிகையலங்காரம். எல்லையற்ற நவீனம்









எப்படித்தான் இந்த ஓவியத்தை வரைந்தார்களோ. நவீனத்தின் உச்சக்கட்டம் இதுதானோ?

வண்ண மயமான கணினி மவுசின் படங்கள்






Colorful Computer Mouse

FireFoxன் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க

”யாமறிந்த உலவிகளிலே FireFoxஐப் போல எங்கு கண்டோம்” என்று பாரதியே பாடியிருப்பார் - இப்போது உயிருடனிருந்தால்.

இருப்பினும் நம்மில் பலருக்கு - அதுவும் குறிப்பாக Browsing Center களை அதிகம் நாடுபவர்களுக்குப் பயன்படும் ஒரு தொழில்நுட்பத்தை இங்கே விவரிக்கிறேன். ஒரு சிறிய செயல்முறை விளக்கம்.

ஏதேனும் ஒரு இணையத்தளத்திற்குள் செல்லும்போது பயனர்கணக்கு, கடவுச்சொல் முதலியவற்றைக் கேட்கிறது. உதாரணம் : GMail வாயிலாக மின்னஞ்சலைப் படிக்க ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் GMail தளத்தினுல் நுழையும் முன்னரே உங்களது User Name, Password போன்றவற்றைக் கொடுத்துவிட்டுத்தான் செல்கிறீர்கள். சில நேரங்களில் அவற்றை Save செய்யவா என FireFox கேட்கும். வழங்கம்போல Yes எனத் தலையாட்டிவிட்டு அதையும் சொடுக்கிவிடுகிறோம்.

ஆனால் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்படுகிறது - அவசர அவசரமாக உலவியின் cookies, cache, சேகரிக்கப்பட்ட Password போன்றவற்றை அழிக்க நினைக்கிறீர்கள். அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். ஆனால் ஒரு சிறிய Custom Settings ஒன்றை FireFox உலவியில் செய்துவிட்டால், உலவியை மூடும்போதே அனைத்து தனிப்பட்ட ரகசியத்தகவல்களையும் தானாகவே அழித்துவிடும்.

எப்போதெல்லாம் நாம் உலவியதோ, நம்முடைய தனிப்பட்ட ரகசியங்களோ அடுத்தவருக்குத் தெரியக்கூடாது - ரகசியம் பரம ரகசியம் - எனக் கருதுகிறீர்களோ அப்போதெல்லாம் இந்த Setting ஐ FireFox ல் செய்துவிடுங்கள். சும்மா உலவியை close செய்தாலே அனைத்துத் தகவல்களும் அதுவாகவே அழிக்கப்பட்டுவிடும்.

1) முதலில் FireFoxஐ திறந்துகொள்ளுங்கள்.
2) Tools Menu வில், Options... ல் Click செய்யவும்.
3) இப்போது கிடைக்கும் Dialog boxல் Privacy Tab ஐக் Click செய்யவும்
4) உடன் கண்ணெதிரே தெரியக்கூடிய Private Data பகுதியில் Settings... buttonஐ அழுத்தவும்.
5) உடன் கண்முன்னே தெரியக்கூடிய Dialog box (உரையாடல் பெட்டியில்) இருக்கும் அனைத்து Checkbox களையும் தேர்வுசெய்துவிடுங்கள்.6) OK அழுத்திவிட்டு, Private Data பகுதியில் Always Clear My Private Data when I close FireFox என்கிற Check boxஐயும் தேர்வு செய்துவிடுங்கள்.
அவ்வளவுதான்.

இனி ஒவ்வொரு முறையும் FireFoxஐ சும்மா close செய்தாலே, அனைத்துத் தகவல்கள் - Secret Passwords - Cookies - அனைத்தும் Automatic ஆக அழிந்துவிடும்.

தொடர்புடைய பதிவு :
நெருப்பு நரி(FF) உலவியின் பாதுக்காப்புத்தன்மையை மேலும் அதிகரிக்க WOT நீட்சி

உக்காந்து யோசிக்க இத்தனை இருக்கைகளா?

உட்காந்து யோசிப்போர் சங்கத்துக்காக உதவுவதற்காகவே :

எனக்குப்பிடிச்சது

Orchid அசத்தல்

நல்லா இருந்த நாற்காலியை உடைச்சுப்புட்டாங்க. ஆனா இப்போ அதுதான் Fashion!
நல்லா enjoy பண்ணுறாங்க.. ஹ்ம்ம்ம்
உக்காந்து யோசிப்போர்களே! எதாவது சொல்லுங்கப்பா!
ஒருபுறம் எளிய தமிழில் SQL தொடரில் busy ஆக இருப்பதால், இப்படி photos போட்டுக்கொண்டிருக்கிறேன். ரொம்ப மொக்கையாக இருப்பின் கூறுங்கள். வேறு ஏதும் யோசிப்பதற்கு இந்த இருக்கைகளைப் பயன்படுத்திக்கொள்ளவும். LOL

கண்ணால் காண்பதும் பொய்யா?

லிஃப்ட்டா? குடியிருப்பா?
மேற்பாகத்தில் ஒரு பிரமிட் இருப்பது தெரியுதா?



செயற்கையாக வானவில் (படத்தில் சொடுக்கிப் பெரிதாகப் பார்க்கவும்)



Illusion Pictures மேலே.

கணினிகளின் வித்தியாசமான CPUs


நடமாடும் computer

கூகிள், ஃபயர்ஃபாக்ஸ்க்கான மாடல் பெண்கள்

எவ்வளவு பெரிய Progress bar (உண்மையிலேயே பெரிய BAR தான்)


மப்பு ஓவரானா இப்படித்தானோ? Computerக்கு ஓவரா?இல்லை இந்த மனிதனுக்கு ஓவரா?

இதுக்கு மேலேயும் Internet Explorer ஐ உபயோகிக்கிறீங்களா?


Escape விசையானது ஒரு வழியாக Escape ஆகிறது
எல்லாத்தையும் அடிச்சுக் காலிபண்ணியாச்சு. அறையில் இடம் வேற இல்லை. இதில் Laptop ஐ எங்கே வைப்பது?
என் நண்பி இம்மாம்பெரிய Floppy Diskஐக் கொடுத்தாள். அதை இந்த Laptopல எங்கே செருகுவது? யாராச்சும் சொல்லுங்களேன்.





FireFoxக்கான Model பெண்

Google க்கான Model பெண்

கணினி உலக நகைச்சுவைக் கேலிப் படங்கள்

விண்டோஸின் சமீபத்திய service pack 3.0
உறங்கும்போதும் உன் முகமே!
ரொம்ப busy!. CPU என்ன ஆனாலும் பரவாயில்லை. வேலை முடிஞ்சா சரி
எப்படியோ இன்னும் வேலை ஓடுது!
என் laptopக்கு சின்ன mouse பத்தாது. இதுதான் சரிப்பட்டு வரும்!
இவன் ரொம்ப நேரமா நெட்டை மேயுறான். எனக்கும் பசிக்குது. யாராவது சொல்லுங்களேன். - செல்லப்பூனையின் கருத்து

வீட்டிலிருந்து பணிபுரிகிறார் - தள்ளாத வயதில்

கணினித்திரையை சுத்தம் செய்யப் புதிய அணுகுமுறை







கணினித் திரையைச் சுத்தப்படுத்த மனித முயற்சியின்றி என்ன வழி? தீர்வு இங்கே.
How to Clean your Monitor without human effort? Here is the solution
என்ன அழகு. எத்தனை அழகு.

CPU - எக்கச்சக்கமா சூடேறிப்போச்சு : அதை வைச்சு என்ன செய்யலாம்?

CPU - எக்கச்சக்கமா சூடேறிப்போச்சு : அதை வைச்சு என்ன செய்யலாம்?
இவ்வளவு பெரிய காத்தாடியா?

கறி வறுவல் செய்யலாமா?

ரொம்ப ஓவராத்தான் உருகிப்போச்சோ?
ரொம்ப Busy தலைவர் : எங்கே உக்காரப்போறாரு பாருங்க
விளையாட்டுப்பிள்ளை : ராணுவவீரன்

Mechanical Engineer தயாரித்த CPU பெட்டி
உச்சா போயிடாத ப்ளீஸ்.
ஹ்ம்ம். இது திருந்தாத கேசு. என்னத்தைச் சொன்னாலும் கேக்கவா போகுது.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP