iPod கருவியானது அதற்கு ஏற்ற சிறப்பு கோப்பு வடிவங்களை (file formats) மட்டுமே ஏற்றுக்கொண்டு, அவற்றை மட்டுமே திரையில் ஓட்டிக் காண்பிக்கும்.

கணினியில் இயங்கும் பல்வேறு கோப்பு வடிவங்களை அது புரிந்துகொள்ளாது. இதற்காக சில பிரத்தியேகெ மென்பொருட்கள் உள்ளன. இந்த மென்பொருட்களின் உதவியுடன், பல்வேறுவிதமான கோப்புவடிவங்களை நாம் ஐபாடில் இயங்கும் அதற்குரிய சிறப்பு வடிவிற்கு எளிதில் மாற்றி விட முடியும்.
iPod Video Converter இதற்கு உதவுகிறது. இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானதும் (freeware), எந்தவிதமான கெடுதி விளைவிக்கும் malware எதுவும் இல்லாததாகவும் உள்ளது. மிக விரைவான இயக்கம் கொண்டது. ஒரே நேரத்தில் ஏகப்பட்ட கோப்புகளை மாற்றிடலாம்.

இந்த மென்பொருளை கணினியில் நிறுவுவதும், நீக்குவதும் மிக எளிது.
DVD/VCD and AVI, MPEG, WMV, RM, RMVB, DivX, ASF, VOB வடிவங்களை இதன் மூலம் மாற்றிடலாம்.
http://www.ipod-video-converter.org/downloads.html
13 comments:
தமிழ்நெஞ்சம்,
வகைகளில் ஏன் மொக்கை எண்டு போட்டிருக்கிறீங்கள்.
இந்த மென்பொருளை நம்பி இறக்கலாமா.. :(
தொழில்நுட்பம் என்று மட்டும் போட்டால் 'தமிழ்மணம்த்தின்' ஹோம் பேஜில் இடம் பிடிக்காது. அங்கே ஒரு க்ளிக் செய்து ஒரு போஸ்ட்பேக் ஆன பிறகுதான் 'தொழில்நுட்பம்' தெரியும்.
தமிழ்மணத்தில் முதலாவதாக இருப்பது 'நகைச்சுவை / நையாண்டி / மொக்கை' - பதிவின் பிரிவில் மொக்கை என்று போட்டால், தமிழ்மணத்தில் கூடுதலாக சிறிது நேரம் பதிவு முகப்பில் இருக்கும். எனக்கு சற்று அதிக விசிட்டர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்காக இதை ஒரு ஆறு மாதகாலமாய் செய்து வருகிறேன்.
மொக்கையை முதலில் வைத்து, 'தொழில்நுட்பத்தை' மறைத்து வைத்த தமிழ்மணம் வாழ்க.
//தமிழ்நெஞ்சம்,
வகைகளில் ஏன் மொக்கை எண்டு போட்டிருக்கிறீங்கள்.இந்த மென்பொருளை நம்பி இறக்கலாமா.. :(
இதை இவ்வளவு நாளும் யாரும் என்னிடம் ஏன் என்று கேட்கவில்லை. முதன்முதலாக நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். நன்றி. சில நேரங்களில் பதிவில் மொக்கை என்று போட்டு, தமிழ்மணத்தில் வந்தவுடன், பதிவில் சென்று கரெக்ட் செய்து திருத்துவேன். பல நேரங்களில் அப்படியே விட்டுவிடுவேன். (!)
தங்கள் விசாரணைக்கு நன்றி மதுவதனன் மௌ.
// தமிழ்நெஞ்சம் said...
இதை இவ்வளவு நாளும் யாரும் என்னிடம் ஏன் என்று கேட்கவில்லை. முதன்முதலாக நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். நன்றி. சில நேரங்களில் பதிவில் மொக்கை என்று போட்டு, தமிழ்மணத்தில் வந்தவுடன், பதிவில் சென்று கரெக்ட் செய்து திருத்துவேன். பல நேரங்களில் அப்படியே விட்டுவிடுவேன். (!)//
இப்படியுமா?
//இந்த மென்பொருளை கணினியில் நிறுவுவதும், நீக்குவதும் மிக எளிது.//
முயற்சித்து பார்க்கின்றேன்
Thanks boss.
ஆ.ஞானசேகரன் said...
//இந்த மென்பொருளை கணினியில் நிறுவுவதும், நீக்குவதும் மிக எளிது.//
முயற்சித்து பார்க்கின்றேன்
அப்போ, இந்த மேரி ஒன்னு வாங்கி வெச்சி கீனு சோக்கு, சினிமா அல்லாம் பாக்கலாம் இன்னு சொல்லு , ஆமா , இந்த தமிலேர்ஸ் இன்னு ஒன்னு கீதே அதுக்கு நீதா ஒநரு இன்னு
இந்த வார தமிழன் சொல்றாரே இன்னா கதை வாஜாரே ?
//தமிழிஷ் பட்டையில் வாக்களியுங்கள்.//
இந்த பட்ட எங்க கீது ?? உங்க பிளாக்குல காணோமே !
தமிழிஷ் பட்டையில் வாக்களியுங்கள். -- Please vote for me in Tamilish site's vote bar. Its there in Tamilish.com site. Howzzat?
Adadaa. Ippave kannaik kattudhee..
Now I am closing my eyes.
//, ஆமா , இந்த தமிலேர்ஸ் இன்னு ஒன்னு கீதே அதுக்கு நீதா ஒநரு இன்னு
இந்த வார தமிழன் சொல்றாரே இன்னா கதை வாஜாரே ?
நோக்கியா மொபைல் போன் N95 8gb யில் இணைய உலாவி மூலம் தமிழ் (யுனிகோடு) பக்கங்கள் (செய்தி தாள், பிளாக், ஈமெயில்) எல்லாம் திறந்தால் எழுத்துக்கள் எல்லாம் கட்டம் கட்டமாக காட்சி தருகிறது. தமிழ் எழுத்துக்கள் சரி வர தெரிய செய்ய அதில் நிறுவதற்கு software ஏதும் கிடைக்கிறதா. அறிய தரவும்
அன்புடன்
இஸ்மாயில் கனி
Please read this post by TVS50.
மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க
///தமிழ் எழுத்துக்கள் சரி வர தெரிய செய்ய அதில் நிறுவதற்கு software ஏதும் கிடைக்கிறதா. அறிய தரவும்
அன்புடன்
இஸ்மாயில் கனி
"Please read this post by TVS50.
மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க"
பார்த்தேன்.நன்றி.
அன்புடன்
இஸ்மாயில் கனி
Post a Comment