உண்மை கண்டறிதல் சோதனை : Skype உரையாடலில்

AmazingPhotos

Skype மென்பொருளைப் பயன்படுத்தி உலகெங்கும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், நாள் தோறும் இலவச இணைய அரட்டை (Voice conference) அடிக்கிறார்கள். அதில் எத்தனை பேர் உண்மை பேசுகிறார்கள்? என்பது கேள்விக்குறியே.

பொய் பேசுபவர்கள் யார்? என்பதை அறிவதற்கு ராணுவம், காவல்துறையினர் லைடிடக்டர் @ Lie Detector என்கிற கருவியைப் பயன்படுத்துவார்கள். பொய் பேசுபவர்களுக்கு இயல்பாகவே மன அழுத்தம் @ Stress அதிகமாக இருக்கும். அவர்களுடைய ஸ்ட்ரெஸ் அதிகரித்து நாடித்துடிப்பிலிருந்து, இதயத்துடிப்பு (heart beat) வரை அதிகரித்திருக்கும். அதன் அலைவரிசையை ஒரு படமாக (chart) வரைந்தால் அது காட்டிக்கொடுத்துவிடும்.

குரல் நாண்களில் இருந்து வெளிப்படும் ஒலியை இந்த மென்பொருள் கண்டறிந்து ஒருவர் பொய் பேசுகிறாரா? என்பதை அறியத் தருகிறது.

Skype மென்பொருளையும் , இந்த உண்மை கண்டறிவதற்கான மென்பொருளையும் நிறுவிவிட வேண்டும்.

ஸ்கைப் வாயிலாக உரையாடல் நிகழும்போது, முதல் 10 வினாடிகளில் இந்த மென்பொருள் சில நடவடிக்கைகளை எடுக்கும். எதிர்முனையில் இருந்து பேசுபவரின் மன அழுத்தம் @ Stressஸை கணக்கில் கொண்டு கணினியின் திரையில் ஒரு மீட்டர் காண்பிக்கப்படும். அதில் தெரியும் Pointer ஆனது ஒருவர் பொய் பேசுகிறாரா? உண்மை பேசுகிறாரா? என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.

Voice Stress Analyser for Detecting Lies Download Now

AmazingPhotos

6 comments:

Subash said...

பீலா விட்டு இமேஜ கூட்டரது சாட் லதான். அட இங்கயும் இப்படி பண்ணிணா எங்க போய் எங்களப்பத்தி பீலா விடுறது.

ஆனாலும் புதிய நல்ல தகவல்.
நன்றிகள் தமிழ்

Subash said...

test

தமிழ் said...

நல்ல கருத்து அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் மென்மேலும் நல்ல கருத்துக்கள் எழுத வாழ்த்துகள்

மொபைல் போனிலிருந்து SKYPE TO SKYPE கதைப்பதற்கு நெட்வேர்க் இல்லாது இடங்களில் இருந்து கதைப்பதற்கு SKYPE வேலைசெய்யுமா

மதி வேங்கை said...

வணக்கம் தமிழ் நெஞ்சம் அவர்களே ,
இனி Skype-லேயும் ஒன்றும் வாசிக்க முடியாது என்று தெரிந்துவிட்டது.பதிவிட்டு அறிவித்ததற்கு நன்றி .எப்படி ஐயா அனைத்து பதிவுமே அருமையாய் எழுதுகிறீர் ?
பின் குறிப்பு :என்னை பதிவுலகில் வரவேற்ற தொழில்நுட்ப வல்லுனருக்கு மிக்க நன்றி

நட்புடன் ஜமால் said...

புதுத்தகவல் பயண் தரும் வகையில்

பகிர்வுக்கு நன்றி ...

பிரேம்ஜி said...

Quite Intresting. Thanks for the info.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP