எஸ்.எம்.எஸ். மொழி மாற்றி

AmazingPhotos

உலகம் முழுவதும் எஸ்.எம்.எஸ். (SMS - Short Message Service) எனப்படும் குறுந்தகவல் பறிமாற்றம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 140 எழுத்துகள் மூலம் உலகையே திரும்பிப்பார்க்க வைத்த ட்விட்டரில் (Twitter) எஸ்.எம்.எஸ். மொழி தெரிந்தால் இன்னும் அதிக தகவலைச் சொல்ல முடியும்.

வழமையாக ஆங்கிலத்தில் நாம் தட்டெழுதும் வாக்கியங்களில் எல்லா வார்த்தைகளும் முழுமையாக சரியான ஸ்பெல்லிங் (Spelling) உடன், எல்லா எழுத்துக்களுடன் இருக்கும். ஒரு மிகப் பெரிய பத்தியை (paragraph) 140 எழுத்துகளுக்குள் சுருக்கிவிட முடியுமா?

இந்த நேரத்தில் நமக்கு உதவி செய்வதற்காக Transl8it தளம் உள்ளது. இதில் முழு நீள ஆங்கிலத்தில் அமைந்த வரிகளைக் கொடுத்து Transl8it என அழுத்தினால் அது அனைத்து வார்த்தைகளையும் எஸ்.எம்.எஸ் மொழிக்கு மாற்றிக்கொடுத்துவிடுகிறது.



இதை டிவிட்டர் (Twitter) பயன்படுத்துவபர்களும், அதிகமாக ஆன்லைன் (online) மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். வடிவில் கிடைத்த தகவல்களை உள்ளிட்டு,lingo to english எனத் தேர்வு செய்தால் முழு நீள ஆங்கில வரிகளாகவும் மாற்றிவிடுகிறது. சுருக்கெழுத்து அதாவது எஸ்.எம்.எஸ் மொழியை கற்றுக்கொள்வதற்கு இந்த தளம் பேருதவியாக உள்ளது. மேலும் பிள்ளைகளின் குறுந்தகவல் மொழியை பெற்றோர்கள் அறிந்திடவும் தளம் உதவுகிறது. இதில் இரண்டு செயலிகள் உள்ளன.

அவை. lingo to english & english to lingo

Web site address is here : http://www.transl8it.com/cgi-win/index.pl
AmazingPhotos

10 comments:

ராஜசுப்ரமணியன் S said...

உபயோகமான பதிவு. ஆனால் எஸ் எம்.எஸ் நமது ஆங்கிலவார்த்தைகளைச் சுருக்கி ச்பெல்லிங்க் மறந்துவிடச்செய்யுமோ என்று பயமாக இருக்கிறது.செய்தியை எழுதிச்சுருக்குவதைவிட சுருக்கமாக யோசித்து அனுப்பினால் அனுப்புபவருக்கும் பெறுபவருக்கும் காலம் மிச்சமாகுமே?

தமிழ்நெஞ்சம் said...

Your idea is great dear : ராஜசுப்ரமணியன் S

முனைவர்.இரா.குணசீலன் said...

அட ரொம்ப நல்லாருக்கே...

கனககோபி said...

//மேலும் பிள்ளைகளின் குறுந்தகவல் மொழியை பெற்றோர்கள் அறிந்திடவும் தளம் உதவுகிறது//
Aen intha kolai veri???

//ஆனால் எஸ் எம்.எஸ் நமது ஆங்கிலவார்த்தைகளைச் சுருக்கி ச்பெல்லிங்க் மறந்துவிடச்செய்யுமோ என்று பயமாக இருக்கிறது//
I'm suffering with the same problem.

G.R said...

நல்ல பதிவு..

//மேலும் பிள்ளைகளின் குறுந்தகவல் மொழியை பெற்றோர்கள் அறிந்திடவும் தளம் உதவுகிறது//

அப்பாவாகி விட்டீர்களே!!!..
எந்த பதிவாளரின் பக்கத்திற்கு சென்றாலும் தாங்களின் பின்னோட்டம் இருக்கு.. எப்படிங்க?..தாங்களின் தளத்திற்கு தினமும் வருகிறேன்..பின்னோட்டம் இட்ட தில்லை..இனி அப்படி இருக்க போவதில்லை..
நன்றி..

G.R..

தமிழ்நெஞ்சம் said...

Thanks to : முனைவர்.இரா.குணசீலன், கனககோபி, G.R

தமிழ்நெஞ்சம் said...

Thank you so much.


//.தாங்களின் தளத்திற்கு தினமும் வருகிறேன்..பின்னோட்டம் இட்ட தில்லை..இனி அப்படி இருக்க போவதில்லை..
நன்றி..

G.R..

மதுரை பொறுக்கி said...

You are really doing a very good job. I am reading your blog daily.

ஆ.ஞானசேகரன் said...

//ஆங்கிலவார்த்தைகளைச் சுருக்கி ச்பெல்லிங்க் மறந்துவிடச்செய்யுமோ என்று பயமாக இருக்கிறது.செய்தியை எழுதிச்சுருக்குவதைவிட சுருக்கமாக யோசித்து அனுப்பினால் அனுப்புபவருக்கும் பெறுபவருக்கும் காலம் மிச்சமாகுமே?//

ரிபீட்ட்ட்ட்ட்ட்

beermohamedblogger.com said...

englishil iurupathu pola tamill irukuma but english sari patu varuma
nama onu anupa athu onu poe sara poguthu
beermohamedtamilgroup@blogspot.com

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP