இந்தியர் சபீர்பாட்டியாவின் hotmail சேவையை microsoft நிறுவனம் பலகோடிகளைக் கொடுத்து கையகப்படுத்தியது தெரிந்ததே.
உங்கள்பெயர்@ஹாட்மெயில்.காம் (yourname@hotmail.com) என்றுதான் இதுவரையில் இருந்தது.
இணைய உலகில் புத்தாக்கம் என்று கூறுவார்கள் (Innovation). குளிர்ந்த மின்னஞ்சலை சூடாகக் கொடுப்பதும் ஒரு புதிய புத்தாக்கம்தான். இதைச் சிலர் பழைய கள்ளை புதிய மொந்தையில் கொடுப்பது என்றெல்லாம் கூடச் சொல்லுகின்றனர்.
உங்களுக்கு yourname@hotmail.cpm என்கிற சங்கதி பிடிக்காமல் இருந்தால் நீங்கள் hotmail பக்கம் செல்லமாட்டீர்கள் தானே? உங்களை வசியப்படுத்துவதற்காகவே microsoft இந்த வசதியைத் தருகிறது.
உதாரணமாக எனக்கு தமிழ்நெஞ்சம்@பெங்களூர்ராக்ஸ்.இன் (tamilnenjam@bangalorerocks.in) என்கிற முகவரி பிடித்தமாக இருக்கிறது. நான் நேராக http://www.coolhotmail.com/ தளத்தில் மின்னஞ்சல் கணக்கைத் துவங்கி அதில் எனது பெயரையும் bangalorerocks.in ஐயும் தேர்ந்து எடுத்தேன்.
ஒவ்வொரு முறையும் எனது மின்னஞ்சல்களைப் பார்வையிடுவதற்கு hotmail.com வழியாக நுழைந்து இந்தப் புதிய innovated e-mail @ மின்னஞ்சல் முகவரியான tamilnenjam@bangalorerocks.in க் கொடுத்துத்தான் பார்வையிடுகிறேன். இது எப்படி இருக்கு?
http://www.coolhotmail.com/















