செல்பேசி ==> கணினி ==> செல்பேசி

AmazingPhotos


செல்பேசியில்(Mobile Phone) இருந்து கணினிக்கும், கணினியில் இருந்து செல்பேசிக்கும் கோப்புகளைப் பகிர்வதற்கு(File sharing) எத்தனையோ இலவச மென்பொருட்கள் (Freeware Applications) இணையத்தில் வகைதொகையில்லாமல் கொட்டிக்கிடக்கின்றன.

கணினி கைவசம் இருந்தும் இது பற்றித் தெரியாமல், செல்பேசியில் 3GP, AMR, MP3 கோப்புகளைப் பதிவதற்குக் கடைக்காரரிடம் 150 ரூபாய் வரை செலவழித்தான் எனது நண்பன்.

அவனிடம் இந்த இலவச மென்பொருட்களைப் பற்றிச் சொன்னேன். அவன் ‘டேய்!. ஒரு டுபாக்கூர் நோக்கியா 1110i தானேடா உன்னிடம் உள்ளது. உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்?” என்றான்.

"அடடா இங்கே சிட்டியில் இருக்கும் போக்குவரத்துக்கும், செல்பேசித்திருடர்களிடம் இருந்து தப்பிப்பதற்குமே - அந்த நோக்கியா 1110i செல்லை நான் இன்னும் பயன்படுத்துகிறேன். ஆனால் என் துணைவியார் வைத்திருப்பது கொஞ்சம் உயர் ரகம்", என்றேன்.

செல்பேசி ஊடக மாற்றி (Mobile Media Converter)
செல்பேசி 3GP மாற்றி (Mobile 3GP Converter)
செல்பேசி AMR மாற்றி (Mobile AMR Converter)


ஆகிய 3 மென்பொருட்கள் நவீன செல்பேசி வைத்து இருப்பவர்களுக்குப் பயன்படும்.

அது சரி இந்த AMR, 3GP அவற்றின் விரிவு என்ன?

3GP - 3rd Generation Partnership Project

AMR - Adaptive Multi-Rate codec

AAC - Advanced Audio Coding

இணையிறக்கச் சுட்டி இதோ :

http://www.miksoft.net/products.htm
AmazingPhotos

3 comments:

வேலன். said...

ஐயா,
நானும் தங்களைப்போல் இணையஇணைப்புக்கு நோக்கியா3110c-யும், சாதாரண போன் இணைப்புக்கு 1100 ம் பயன் படுத்துகின்றேன்.ஆனால்
3 gp கன்வட்டர் தவிர மற்றவை நான் இதுவரை கேள்விபடாதது. தகவலுக்கு ந்னறி. முயற்சி செய்து பார்க்கின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Jeevan said...

thanks Mr.Tamil. i was searched the 3gp convertor. its really hepful to me . already i have added your blog to my most favorite list.more technical stuff from your blog.once again thanks

வால்பையன் said...

பயனுள்ள தகவல்!

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP