
குறிப்பிட்ட நாடுகளில் சில இணையத்தளங்களைத் தடைசெய்து இருப்பார்கள். அவற்றின் தன்மை கருதியோ / வேறேதும் காரணங்களுக்காகவோ அந்தக் குறிப்பிட்ட சில இணையத்தளங்களைப் பார்வையிட இயலாது. அது அந்த நாடு முழுமைக்கும் பொருந்தும்.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு குறிப்பிட்ட ஐ.பி. முகவரிதான். நமது கணினியின் ஐ.பி. முகவரியுடன் நமது நாட்டின் ஐபி முகவரியும் உடன் ஒட்டியிருக்கும். அந்த நாடு முழுமைக்கும் இந்த ஐபி. முகவரி வடிகட்டுதல் முறையின்படிதான் இணையத்தளத் தடை செய்திருப்பார்கள்.
நமது கணினியின் ஐ.பி முகவரியை மாற்றி, வேறொரு நாட்டின் ஐ.பி. முகவரியைத் தற்காலிகமாகக் கொடுத்துத் தடைசெய்யப்பட்ட தளங்களைப் பார்வையிட இயலும்.
இதற்கு UltraSurf என்கிற மென்பொருள் பயன்படுகிறது. UltraSurf பயன்பாட்டைத் தரவிறக்கம் செய்வதற்கு : http://www.ultrareach.com/
முதலில் இதை இயக்குவதற்கு முன் : http://www.whatismyip.com/ தளம் மூலம் உங்கள் நடப்பு ஐ.பி. முகவரியைப் பார்க்கவும்.
பின்னர் UltraSurf பயன்பாட்டை இயக்கி, பின்னர் உங்கள் தற்போதைய ஐபி. முகவரியைக் காணவும். வேறுபாட்டை நீங்களே உணர்வீர்கள்.
குறிப்பு : இதன் மூலம் உங்கள் கணினியின் நடப்பில் உள்ள ஐ.பி. முகவரி மாற்றப்படுவது தற்காலிகமாகத்தான். UltraSurf பயன்பாட்டை சில Internet Security applications ஆகியவை malware எனக் கருதி இயக்குவதற்கு அனுமதியளிக்காது.
மேலும் விபரங்களுக்கு : http://www.ultrareach.com/
5 comments:
தமிழாக்கம் செய்ததுக்கு நன்றி
பிடிபட்டா
இதே பயன்பாட்டுக்காக நான் உபோயகப்படுத்துவது Hot Spot Shield என்ற மென்பொருள்.
ஒவ்வொருபக்கத்தின் மேல் பகுதியில் விளம்பரப்பட்டை வரும். இருப்பினும், சுலபமாக உபயோகப்படுத்தலாம்.
ஆட்காட்டி said...
பிடிபட்டா
அப்புறம் டபடப்பா தான்...
சிக்குனா சங்கு தான்னு நினைக்கிறேன் :-))
Post a Comment