
ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறோம்.
ஒவ்வொரு முறையும் ஜிமெயில் கணக்கை உலவி வாயிலாகத் திறந்து மின்னஞ்சல் ஏதேனும் வந்திருக்கிறதா? எனச் சோதிக்கும் பழக்கத்திலேயே இருப்பவர்கள் ஏராளம்.
Outlook போன்றவை வாயிலாக Gmail மின்னஞ்சல்களைப் படிப்போரும் இருக்கிறோம்.
புதிய ஜி-மெயில் மின்னஞ்சல் வந்தவுடன் நினைவூட்டுவதற்காகவே ஒரு சிறிய மென்பொருளை கூகிள் நிறுவனம் வழங்குகிறது.
இது நமது Task Managerன் System Trayல் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கும். எப்போது புதிய மின்னஞ்சல் உங்கள் Gmailக்கு வருகிறதொ - உடனே உங்களுக்கு ஒரு சமிக்ஞை கொடுத்துவிடும்.
என்ன தலைப்பில், யாரிடம் இருந்து மின்னஞ்சல் வந்துள்ளது என்பதையும் தெரிவித்துவிடும்.
gTalk பயன்பாட்டை ஏற்கனவே நிறுவியிருப்பவர்களுக்கு இந்த நினைவூட்டல் மென்பொருளின் வேலையையும் gTalk தானாகவே செய்துவிடும்.
gTalk மென்பொருளை நிறுவாதவர்களுக்கே இந்தப் பயன்பாடு.
மென்பொருள் சுட்டி : http://toolbar.google.com/gmail-helper/notifier_windows.html
ஒரு சிறு தகவல் :
ஜிமெயில் கணக்கை அவுட்லுக்கின் வாயிலாக பெறுவது எப்படி?
அதற்கு இந்தச் சுட்டிகள் பயன்படும்.
http://email.about.com/od/outlooktips/qt/et_get_gmail.htm
http://email.about.com/od/outlooktips/qt/et040605.htm
மேலும் ஒரு குறுந்தகவல் (கவிதைப் பிரியர்களுக்காக) :
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதைகள் பாட்காஸ்ட் பதிவுகளாக எம்பி3 வடிவில் ஏற்றிவைத்துள்ளேன். இணையிறக்கியோ, நேரடியாகவோ கேட்டு மகிழலாம்.
அதற்கு இங்கே சொடுக்கவும் : http://www.4shared.com/dir/6486660/a3909286/VairamuthuKavidhaigal.html
5 comments:
நண்பரே,
தங்கள் பதிவை பார்த்தேன். புதிய மின்னஞ்சல் வந்ததும் நினைவூட்டுதல்
அருமையான சாப்ட்வேர் தொகு்ப்பாகும்.
வைரமுத்துவின் கவிதைகளை தரவிறக்கம் செய்ய உள்ளேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
உபயோகமான தகவலை தந்ததற்கு மிக்க நன்றிகள்.
நன்றிகள் திரு. வேலன் மற்றும் ச. இலங்கேஸ்வரன் அவர்களே.
வைரமுத்து அவர்களின் கவிதைகள் எம்பி3 வடிவில்......wow Fantastic...thank you thamiznenjam,
anbudan aruna
ஜி டாக் போல தானே!
வேறன்ன புதிய வசதிகள்?
Post a Comment